Monday, December 6, 2010

ரொம்ப பழசு

என்னய்யா நடக்குது பஹ்ரைனிலும் கத்தரிலும்? பஹ்ரைன் கடல்ல
மண்ணை கொட்டி நிறைத்து கத்தாருக்கு நேரா போறான்!!
கத்தார் காரன் கடல்ல மண்ணை கொட்டி பஹ்ரனுக்கு நேரா வாரான்!!
அப்புறம் என்ன நடக்கும்???
கடல் எங்கே போகும்???
நம்ம வீட்டுக்குள்ளே வருமா வராதா??? ன்னு
பயமா இருக்குண்ணே....!!!
ஊர்ல என்னடான்னா
புதிய சட்டசபைய அவசர அவசரமா கட்டி முடித்து
திறந்து
கின்னசுக்கு காத்து இருப்பதாக கேள்வி[[ம்ம்ம் எவன் பணம்னுல்லாம் கேக்கப்பூடாது]]
மகளிர் மசோதா நிறைவேறுமா? அப்படி நிறைவேறினால் அது
என் பொணம் மேல்தான் நிறைவேரும்ன்னு நம்ம லாலு வேற மெரட்டுராருன்னே!!
[[இவரு பொண்ட்டாட்டிய முதல்வர் ஆக்கினது? அது அப்போ இது இப்போங்க்ராருன்னே]]  தமிழ் நாட்டுல தமிழ் செம்மொழி[[திமுக] மாநாடு நடக்கப்
போகுதுன்னு வேற பயமுறுத்துறாங்க ஆனா
தமிழ் சானல தொறந்தாலே ல ள ழா  ர ற வுக்கு எப்பிடி பேசனுன்னு
கத்து கொடுக்க மாட்டேன்றாங்க!
பின்னே நம்ம சிங்கு அண்ணன் சவூதி போனாருன்னே உருப்படியா ஒண்ணுமே
நடக்கலைன்னு நண்பன் போன் பண்ணினான்! பொறுடா பொறுன்னு சொல்லி வச்சிருக்கேன் எல்லாம் நன்மைக்குதான்னு... நம்ம நிருபமா அம்மா இலங்கை போனாங்க, ராஜபக்சே ரஷ்யா போனான், ரஷ்யா காரன் இந்தியா வந்தான், பாக்கிஸ்தான்காரன் இந்தியா வந்தான் [[ஒண்ணுமே நடக்கல]] மறுபடியும் நிருபமா அமேரிக்கா போறாங்க, ஆஸ்ரேலியாக்காரன் இந்தியா வாரான் இந்தியா காரனை அடிச்சுபுட்டு!! நம்ம அண்ணாச்சி அதாங்க எம்கே "நாரா"யணன் கவர்னர் ஆகிட்டாருல்ல! இனி மலையாளி சேட்டன்மார கையில[சாயா] பிடிக்க முடியாது!!
ஏற்க்கனவே பள்ளிகூட வாத்தியார் கிட்டே துப்பாக்கிய கொடுத்த கதை மாதிரி, ஏகே ஆண்டனி கையில ராணுவத்த கொடுத்துருக்கோம்!!! இன்னொரு மேனன் ஊர்[உலக]ஊராய் சுத்திட்டு இருக்கார்[[சமாதானம் பண்ணவாம்]] இன்னொருவர் விமான எகனாமி கிளாசப் பார்த்து எருமைதான் [சசிதரூர்] அதுல போகும்கிராறு! முக்கியமா நம்ம நடிகர் ஜெயராம்[[கும்ப"கோண" தமிழனாம் அவரே சொன்னது]] தமிழ் பெண்களை கறுத்த எருமைன்னு கிண்டல் பண்றாரு!!![[ ஆப்பு வச்சான்ல சென்னைல]] நம்ம குடிதாங்கி ஐயாவும் பயங்கர[[பென்னாகரம்]] டென்சணுல இருக்காராம்? இப்பல்லாம் நம்ம வடிவேலு, சிங்க முத்துல்லாம் எங்கே இருக்காங்கன்னே தெரியலைண்ணே!!! நித்தியானந்தாவை பிடிக்க கும்ப மேளாவில் சினிமாவில் கூட இல்லாத சேசிங் நடந்துட்டு இருக்காம்!! ரஞ்சிதா கார பூமியில், கேரளாவில், அமெரிக்காவில்னு நம்ம நக்கீரன் வெளுத்து[[வியாபாரம்]]கிட்டு இருக்கார், நம்ம சாரு நிவேதா கூட சாமிக்கு எதிரா அந்தர் பல்டி அடித்தே விட்டார்!!! பி சிதம்பரம் வேற நக்சலைட், மாவோயிஷ்ட் கூட யுத்தம்[[வாயாலதான்]] செய்யுறாரு!! இந்தியா அதி நவீன ராக்கெட்ட சோதனை செய்யுறேன்னு மகா[[தோல்வி]] வெற்றி பெற்றுள்ளது வரவேற்க தக்கதுங்கோவ்..!! தெலுங்கானாவை காங்கிரசே வெறுக்குது!!!  சிங்கு அண்ணன் அடிக்கடி அமேரிக்கா பறக்குறாரே என்ன விஷயம்னு குப்பனும் சுப்பனும் கேக்குறான், இலங்கை, ஈழம்,தாலிபான்,பாகிஸ்தான்,ரஷ்யா,அமேரிக்கா,ஆஸ்ரேலியா,கிரிக்கெட்,பட்ஜெட், தெலுங்கானா, பயங்கர வாதம்,தீவிர வாதம், அட்டாக், முத்தாய்ப்பாக, கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் போய் இறங்கியது, ஐநூறு கோடி ரூபாய் செலவில் புதிய சட்ட சபை கட்டியது, மகளிர் மசோதா!!!! எல்லாம் நடந்தும், இருந்தும்.... ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்த பின்பும்....... பசியால் தமிழ் நாட்டிலே ஒரு தாய் தன் மூன்று  குழந்தைகளையும் கிணற்றிலே வீசி கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாளே........ அதை அறிந்த மாமியாரும் தற்கொலை செய்து கொண்டாளே........ இதற்க்கு என்ன பதில் சொல்லப் போறீர்கள்???!!!!

2 comments:

 1. //தமிழ் சானல தொறந்தாலே ல ள ழா ர ற வுக்கு எப்பிடி பேசனுன்னு
  கத்து கொடுக்க மாட்டேன்றாங்க! //மிகச்சரி.
  கேள்விக்கெல்லாம் என்ன பதில்?ஒண்ணுமே புரியலை உலகத்திலே!

  ReplyDelete
 2. //ஒண்ணுமே புரியலை உலகத்திலே!//

  டென்ஷன் ஆகாதீங்க பாஸ்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!