Monday, December 6, 2010

ஜட்ஜ்மென்ட்

நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர், பஞ்சை எலிகள் நாசமாக்கி விடுவதால் அவற்றை பிடித்து தின்ன ஒரு பூனை வளர்த்தனர்,பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்கு தங்க மோதிரம், சங்கிலி என போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்த காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணையில் பஞ்சை நனைத்து காட்டு போட்டார், அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம் பட்ட காலில் தீ பிடித்து கொள்கிறது, தன் காலில் தீயை பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கொடாவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது, அதற்கு நஷ்ட ஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எறிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்கு தொடுத்தனர், ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது எப்படி????? யோசிச்சு சொல்லுங்க......?

2 comments:

  1. மற்ற மூன்றுகால்களாலும் தான் அந்த பூனை கொடவுனுக்குள் ஓடியதால் பஞ்சு பொதிகள் எரிந்து நாசமானது!
    அந்த மூன்று கால்களின் உரிமையாளர்கள் தான் மற்றவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்.
    என்ன சரிதானே?

    ReplyDelete
  2. கக்கு'ன்னா சும்மாவா...
    சூப்பர்..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!