Saturday, December 25, 2010

பெண் ஏன் இப்படி?

என் மலையாளி நண்பன் ஒருவன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இது :
      பெயர் சுபாஷ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பெங்களூரில் படித்து விட்டு அவன் அப்பா இங்கே பஹ்ரைனில் இஞ்சினியர்'ரா வேலை பார்ப்பதால் இங்கே வந்து நான் வேலை பார்க்கும் ஹோட்டலில் கேப்டனாக வேலை செய்து வந்தான் நல்ல பாரம்பரிய மிக்க குடும்பம் என்பது அவன் பேச்சில் தெரிந்தது, அவன் அப்பா ஒரு பெரிய கம்பனியின் பொறியாளர் என்பதால், நல்ல வசதியான குடும்பம்.
எங்களோடு நல்ல நட்பாகி விட்டான்.
    பிறகு இரண்டு வருடம் கழித்து அவனுக்கு கல்யாண ஏற்பாடு நடந்தது, இவன் ஊர் போனான் பெரியோர்கள் முன்னிலையில் பொண்ணுக்கும் இவனை பிடித்ததாக சொன்னாள் இவனுக்கும் அவளை பிடித்து போனது. எனவே இரு வீட்டாரும் நிச்சயம் செய்தார்கள், கல்யாண நாள் குறிக்க பட்டது. எங்களுக்கு போன் செய்தான் சந்தோஷமாக நாங்களும் அவன் சந்தோசத்தில் பங்கு கொண்டு சில பல ஐடியாக்கள் கொடுத்தோம், அதில் ஒன்று, மொபைல் கிஃட் கொடுத்து தினமும் அவளோடு பேசு என்றோம் அவனும் சந்தோஷமாக வாங்கி கொடுத்துள்ளான். நாள்தோறும் பேசி யாருக்கும் தெரியாமல் காபிஷாப், ஐஸ்கிரீம் ஷாப், பூங்காக்கள்'ன்னு சுத்தி திரிந்தார்களாம்,
     முத்தமெல்லாம் பகிர்ந்து கொண்டார்களாம்.
அப்பிடி இப்பிடியா கல்யாண நாளும் வந்தது,  பெரிய குடும்பத்தின் முதல் கல்யாணம் என்பதால் பெரிய ஆடம்பரமாக நடந்துள்ளது. கல்யாணம்  முடிந்து முதலிரவு பெண்ணின் வீட்டில், என பெரியவர்கள் சொல்ல அப்படியே முதலிரவு பொண்ணின் வீட்டில்.....
இனி நடந்ததை என் நண்பன் சொன்னதை அப்பிடியே கீழே.....
     எடா நான் பெட்ரூமில் அவள் வருகைக்காய் பெட்டில் பல ஆசைகளுடன் காத்திருந்தேன், ரூமில் பழங்களும் பழ ரசங்களும் சினிமாவில் பார்ப்பது போலவே அழகாக செய்திருந்தார்கள். பெட்ரூமை சுற்றிலும் கண்ணாடி [[ஆஹா] அருமையாக இருந்தது. ரசிச்சிகொண்டே நான் இருக்கும் போது என் அழகு தேவதை என் வாழ்க்கை துணை தோழிகளுடன் உள்ளே வந்தாள் கையில் பால் சொம்புடன்....
பின்பு ஒரு அம்மச்சி வந்து அவள் தோழிகளை வெளியே விரட்டி விட்டு கதவை பூட்டினாள். எனக்கோ இந்த அழகு தேவதையை கட்டி அணைக்க விரகதாபமுமாய் தவித்து [[அவன் சொன்ன விதம் ஏ ரகமாக்கும்]] கொண்டிருக்கும் வேளையில், அவள் என்  காலில் விழுந்து காலை தொட்டு கும்பிட்டாள், நானும் அவளை தூக்கி  விட்டு அணைக்க முற்பட அவள் திரும்பி  பால் சொம்பை எடுத்து கிளாசில் பாலை ஊற்றி குடிக்க தந்தாள்... நான் பாலை குடித்து கொண்டிருக்கும் போதே அவள் ஓடி போயி கதவை உள்ளே பூட்டினாள் எனக்கோ சந்தோசம் ஆனால் இதற்குள்  இரண்டு மூன்று முறை வெளியே பைக் ஹாரன் சத்தம் கேட்டது. நான் பாலை குடிக்கும் முன் பெட்ரூமின் இன்னொரு கதவை திறந்தாள் [[நான் ஒரு கதவுனுதான் நினைச்சிருந்தேன்]] சர சரவென வெளியே ஓடினாள் எனக்கு ஒன்னுமே புரியலை [[ங்கே]] அங்கே வெளியே அதாவது வீட்டின் பின் புரம் ஒருவன் பைக்கில் நிற்க இவள் ஓடி போயி ஏறிக்கொள்ள பைக் பறந்தே விட்டது. நான் பிரமித்து போயி நிற்க எல்லாமே ஒரு இருபது நிமிஷத்துக்குள் நடந்து விட்டது.
எடா எனக்கு வானமே இடிஞ்சி என் தலையில விழுற மாதிரி இருந்துச்சு நான் ஒன்றுமே சொல்லாமல் பெட்ரூமுக்கு திரும்பி வந்தேன் சற்று நேரம் அமர்ந்து அழுதேன். எத்தனை சினிமா பாத்துருக்கோம் என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சி போச்சு...
இவள் இன்னொருத்தனை காதலித்திருக்க வேண்டும் அதை இவள் வீட்டார் தடுத்திருக்க வேண்டும் அந்த பாவத்துக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்... ஆனால் ஒன்னு மட்டும் புரியவில்லை இவள் கல்யாணத்துக்கு முன்பு என்னோடு சுற்றியது, முத்தங்கள் பகிர்ந்தது எல்லாம் ஏன்? நாசூக்கா சொல்லியிருக்கலாமே நானே முன்னின்று இவர்கள் கல்யாணத்தை நடத்தியிருப்பேனே, ஏன் என்னை இப்படி செய்தாள் என்று அழுதேன்...
அப்புறமா மெதுவா வெளியே போயி விஷயத்தை சொல்ல..... இரண்டு வீட்டாருக்கும் ஆடு புலி ஆட்டம் ஆரம்பிச்சி அடங்கும் போதுதான் இன்னொரு விஷயமும் தெரிஞ்சிருக்கு அது....
அந்த பெண் காதலித்த விஷயம் அவள் வீட்டாருக்கும் தெரியாதாம்!!!
 எனவே வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களே ஜாக்கிரதையும் உஷாருமா இருங்க...
இப்போ அந்த நண்பனுக்கு வேறொரு கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும் சந்தோஷமுமாக இருக்கிறார்கள் இங்கே குடும்பமாய் பஹ்ரைன்'லதான் இருக்கான்.
இப்போ இந்த கதை எங்கள் நண்பர்களிடம் பிரபல ஜோக்காகி விட்டது நண்பனை நண்பர்கள் குளு சேரும்போது செமையாக கலாயிப்போம் அவனும் ரசிப்பான். காரணம் அந்த பெண்ணையே இவன் கட்டியிருந்தால் உன் நிலை என்ன என்று அவனை தேற்றவே இப்படி பேசி பேசியே அது காமெடி ஆகிவிட்டது... அது அப்பிடி அப்பிடி டெவலப் ஆகி இப்போ "ஏ" காமெடி ஆகிவிட்டது...
டிஸ்கி : இன்னைக்கு கிறிஸ்மஸ், அதே நண்பன் எங்கள் பஹ்ரைன் நண்பர்கள் சர்க்கிளை பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்கான்....நண்பேண்டா.

8 comments:

  1. கல்யாணத்துக்கு முன்பு முத்தம் எதுக்கு கொடுத்தாள் என்று தான் எனக்கு புரியவில்லை.ஒரு வேலை அதுக்கும் மேல் எதும் எதிர்பார்த்து இருக்குமோ?.நம்ம ஆளு டியுப் லையிட்டோ?.படித்தலிருந்து இருந்து எனக்கு பல சந்தேகம்.எது எப்படியோ நம்ம ஆளு தபிச்சுட்டார்.பின்னே! முதல் இரவுக்கு பின் போயிருந்தா நம்ம ஆள் கற்ப்பு போயிறுக்குமே.ஹி..ஹி.ஆணுக்கும் கற்ப்பு உண்டுல.

    ReplyDelete
  2. கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்பது இதுதானோ !

    ReplyDelete
  3. படிக்கும் போதே அந்த ஆளை நினைச்சா பாவமா இருக்கு...இதே அந்த பொண்னை இப்படி செய்திருந்தா இந்நேரம் அந்த ஆளை ஜெயிலில் தள்ளி இருப்பார்கள் ...சோ..சேட்

    ReplyDelete
  4. படிக்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. சே.. எவ்வளவு பெரிய துரோகம் செய்துட்டாள் அந்த பெண். நல்ல வேளை! இப்படியாபட்ட பெண்ணிடம் இருந்து உங்க நண்பர் தப்பியது அவரது அதிர்ஷ்டம்தான். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. //நாசூக்கா சொல்லியிருக்கலாமே நானே முன்னின்று இவர்கள் கல்யாணத்தை நடத்தியிருப்பேனே//

    அட பாவமே , இப்படிஎல்லாமா இருக்காங்க ..?

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு அண்ணா

    ReplyDelete
  7. இந்த மாதிரி பொண்ணுங்கள கொலை பண்ணியே ஆகணும் ... எத்தனை பேரோட வாழ்க்கையை கெடுப்பா...

    பகிர்வுக்கு மிக்க நன்றிங்க சார்

    ReplyDelete
  8. இதே போன்று என் நண்பனுக்கும் நடந்தது. ஆனால், பெண் பார்த்து கல்யாணம் நிச்சயமாகும் சமயம், தனியே பேச வேண்டும் என்று அழைத்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தன் வீட்டில் கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் சொன்னாள். இதை உங்கள் விட்டில் நீயே சொல்லிவிடலாமே என்றால், இல்லை அது முடியாது. அதனால், இவன் தனக்கு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி நிறுத்திவிட்டான். அனைவரும் அந்த பெண்ணை விட்டுவிட்டு இவனை கரித்துக் கொட்ட ஆரம்பித்து விட்டன்ர். பெண் க்ரேட் எஸ்கேப்.

    சரியான சுயநலப் பேய்கள்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!