Sunday, December 12, 2010

நகைசுவை

கணவன் : கமலா ஒரு கப் காபி........!??
மனைவி : என்னது....?!
கணவன் : உனக்கு காபி தரட்டுமான்னு கேட்டேன்....!!
மனைவி : அதானே பார்த்தேன் ! [[ஆத்தி.... என்னா வில்லத்தனம்!]]

அரசியல் தத்துவம்:-
என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் சொட்டை  மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு....... [[அப்படி போடு அருவாளை]]

காதலியின் கண்ணசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள்........
ஆனால் நண்பனின் கண்ணசைவுக்கு ஒரே அர்த்தம்
"மச்சான் சூப்பர் பிகர் வருது டக்குன்னு திரும்பி பாரு" [[பின்னே இனம் இனத்தோடதானே சேரும்]]

ஒருவர் : இருந்தாலும் அந்த மேஸ்திரி ரொம்ப மோசம்
மற்றவர் : ஏன் அப்படி சொல்றீங்க??
ஒருவர் : ரோடு ரோலர் பன்சர்னு சொல்லி  ஐநூறு ரூபா கணக்குல எழுதிட்டாரு....! [[நல்ல வேளை ரோடே பன்சர்னு எழுதாம விட்டாரே]]

பேஷன்ட் : டாக்டர், ஆபரேஷனை தவிர வேற வழியே இல்லையா...?
டாக்டர் : ஓ...! இருக்கே, "தற்கொலை" பண்ணிக்கலாம்!  [[யப்பா]]
கணவன் : எதுக்கு குப்பை தொட்டியை கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிற...?
மனைவி : மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்ட போறேன்னு சொன்னீங்களே..... [[ ம்ம்ம்ம் பொண்டாட்டிகிட்டே கூட மனசுல உள்ளதை கொட்டப் பூடாதப்பு..]]

என்னதான் பூமி சூரியனை சுற்றி சுற்றி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது...    [[ உன் பிகர் கை மாறிடிச்சோ...?]]

காதல் கல்யாணத்துக்கும் அரேனஜ்மென் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
நாமளா கிணத்துல விழுந்தா அது காதல் கல்யாணம்.........., பத்து பேர் தள்ளிவிட்டால் அது அரேனஜ் மென்ட் கல்யாணம் [[ஹோ.. கிளம்பிட்டாய்ங்கப்போ]]

இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம்,  பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?? [[ஆத்து மண்ணுல கிடந்தது உருண்டு உருண்டு யோசிப்பாய்ங்க போல]]

பரம்பரைக்கு உக்காந்திருந்து சாப்பிட பணம் இருந்தாலும், பாஸ்ட்பூட் கடையில நின்னுகிட்டுதான் சாப்பிடனும்!!....  [[எதை பணத்தையா?]]

லைப்ல ஒன்னும் இல்லைனா போர் அடிக்கும்,   தலையில ஒன்னும்  இல்லைனா டார் அடிக்கும் [[ஏ யப்பா..... என்னா ஒரு கண்டுபிடிப்பு]]
பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுப்பாங்க....., இட்லி, தோசைக்கும் குடுப்பாங்களா....? [[வாடி, ஸ்கூலுக்கு ஆட்டைய போடப் போறேன்னு புரியுது]]

தேள் கொட்டினா வலிக்கும்,  பாம்பு கொட்டினா வலிக்கும்,   "முடி கொட்டினா வலிக்குமா?"  [[நீ வாடி என் முன்னால அப்புறம் காட்றேன்]]

நாய்க்கு நாலு call  இருக்கலாம்...., ஆனா அதால லோக்கல் call  , எஸ்டிடி call , ஐஎஸ்டி call , ஏன் மிஸ் call  கூட பண்ணமுடியாது.... [[ஓ அவனா நீ?]]

நெட்டில் சுட்டது,

7 comments:

 1. அண்ணா வடை எனக்கு தான்...
  செல்வா கேட்டனு திருப்ப கேட்டிங்க???

  //சொட்டை மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு......
  என்னதான் பூமி சூரியனை சுற்றி சுற்றி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது... [[ உன் பிகர் கை மாறிடிச்சோ...?//
  ஹி ஹி ஹி ஹி

  நாய்க்கு நாலு call இருக்கலாம்...., ஆனா அதால லோக்கல் call , எஸ்டிடி call , ஐஎஸ்டி call , ஏன் மிஸ் call கூட பண்ணமுடியாது.... [[ஓ அவனா நீ?]]//
  இதே மாதிரி ஒருத்தர் face book ல எழுதுவரே

  ReplyDelete
 2. ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?

  ReplyDelete
 3. >>> //என்னதான் பூமி சூரியனை சுற்றி சுற்றி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது.// உண்மைதான்....மனோ அவர்களே, இன்று முதல் தங்களை Follow செய்பவர்கள் பட்டியலில் நான் இணைவதில் மகிழ்ச்சி! நான் திரியும் இடங்கள் nanbendaa.blogspot.com & madrasbhavan.blogspot.com. நேரம் இருந்தா ஒரு எட்டு வந்துட்டு போங்க!

  ReplyDelete
 4. //இதே மாதிரி ஒருத்தர் face book ல எழுதுவரே //
  மொக்கையனை எனக்கு தெரியவே தெரியாது...:]]]

  ReplyDelete
 5. //ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?//


  நெட்ல சுட்டது'ங்கனா...

  ReplyDelete
 6. //நேரம் இருந்தா ஒரு எட்டு வந்துட்டு போங்க//
  ஒரு எட்டு என்ன ஒரு எட்டு,
  ஆயிரம் எட்டு வருவேனாக்கும்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!