Monday, December 6, 2010

இதை எழுதிய நண்பருக்கு நன்றி

நாட்டில் எது நடந்தாலும், அதை காமெடியாக்கி குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு, அமெரிக்காவில் கூட ஒபாமா ஜோக்ஸ் மிக பிரசித்தம், அண்மையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் மாட்டிய நித்யானந்தா, பராசக்தி நீதி மன்ற காட்சியின் வசனத்தை உல்டா செய்து பேசுவது போன்ற மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.

             இது சிரிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல

 நீதிமன்றம்...விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை  சந்தித்திருக்கிறது, புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..... ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல...... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல...
                   ஊருக்கு உபதேசம் செய்தேன்..........
                  கதவை திற காற்று வரட்டும் என்றேன்......
                  நடிகைகளை எனது காலை பிடித்து விடும் படி கூறினேன்......
                  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்......
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று.... இல்லை, நிச்சயமாக இல்லை....
                   கதவை திற காற்று வரட்டும் என்றேன்..... ஏன்??? காற்று வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை.... அந்த நடிகை ஈசியாக ரூமுக்குள் வரவேண்டும் என்பதற்காக....
                          நான் சந்நியாசி என்று கூறி ஊரை நம்ப வைத்தேன் ஏன்???  மக்களை ஏமாற்ற வேண்டும்  என்பதற்காகவா??? இல்லை.... மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கை மேலும் வளர வேண்டும் என்பதற்காக........
   உனக்கேன் இவ்வளவு அக்கறை??? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்....
                                நான் நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்....
                               நான் பாடசாலைக்கு கூட போனதில்லை ஆனால் ஆன்மீகப் புத்தகம் படித்திருக்கிறேன்..... நான் நல்ல சந்நியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்....
                      கேளுங்கள் என் கதையை..............................
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலி சாமியார்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
                                       தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஓடோடி வந்தேன்.
ஜாதகம் என்னை நீஒரு மதபோதகம் என்றது
என் பெயரோ நித்யானந்தா, நியூசில் கேட்டு கேட்டு புளித்து போன பெயர்'
                                       நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,
                                      ஆனால் அதைதான் விரும்ம்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மேட்டரில் என் படத்தை போட்டு எரித்தார்கள்....... ஓடினேன்....... நான் ஒருவன் மாட்டியவுடன், மற்றவனெல்லாம் யோக்கியன் போல் பேசினான்...... ஓடினேன்........ நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை நெட்டிலும் போட்டான்....................
ஓடினேன்................................... ஓடினேன்....................................... ஓடினேன்.................. கேரளாவுக்கு ஓடினேன் கர்நாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்................ ஹரித்துவாருக்கும் ஓடினேன்......
                                          ஓடினேன் ஓடினேன்............................ இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்.............. எனது பக்தர்களின் கொலை வெறி தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்துவிட்டேன்.....
                                       என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை நெட்டிலிருந்து நீக்கி இருக்க வேண்டும், என்னை தப்பி ஓட கதவை திறந்து விட்டிருக்க வேண்டும் இதோ இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்................
                                          செய்தார்களா??? தப்பி ஓட விட்டார்களா??? இந்த நித்யானந்தாவை,
என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்???
 எனது குற்றமா???
என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா????
[[ இப்பவே  கண்ணை கட்டுதேண்ணே, யப்பாஆஆஅ]]

No comments:

Post a Comment

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!