Tuesday, June 26, 2012

ஏடாகூடா பிறப்பே நான் தமிழ் தலீவன் செப்புகிறேன் கேள்...!


நான்காம் தேதி கலைஞரின் பழம் ச்சே ச்சீ பலம் தெரிந்துவிடும்.....!!!
---------------------------------------------------------------------------------------
இவிங்க மனசுக்குள்ளே இன்னா நினைக்குறாங்கன்னா...?

பழகிரி : உள்ளே போனால் களி கூட ஸ்லோ பாய்சன் வச்சாலும் வச்சிருவானுங்க அதனால முதல்நாளே அஞ்சாநெஞ்சனுக்கு நெஞ்சி வலின்னு ஆஸ்பிட்டல் போயிற வேண்டியதுதான்.
பழம் மொழி : நாம உள்ளே போனால்......அப்பிடியே மறுபடியும் பூலான்தேவி சகாக்கள் கூட திகார்ல போட்டுருவாங்க....அதனால ஐயோ என் பையனுக்கு ஸ்கூல் தொடங்கிருச்சு'ன்னு சொல்லிருவோம்.

ஸ்பாலின் : எனக்கு மெட்ராஸ் ஐ வந்துருக்கு அதனால நான் எங்கும் வரமுடியாது, என்னையும் எவனும் பார்க்க வராதீக'ன்னு சொல்லிருவோம்.

கடி பிரதர்ஸ் : நாங்க உடன்பிறப்புகளுக்காக உலக சுற்றுலாவில் இருப்பதால்....அப்பிடின்னு சொல்லிருவோம், கொய்யால நம்மையும் குண்டாவுல உள்ளே தூக்கி போட்டுரப்போராணுக.

கலீஞர் : பாசமிகு உடன்பிறப்பே......என் குடும்பத்தார் யாவரும் பாய்சன் புகுந்துரும்னு ச்சே ச்சீ உடல் நிலை சரியில்லாததால் அவர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் கண்மணிகளே, நீங்கள்தான் கட்சியின் தூண்கள் வேணுமானால் ஆ ராசாவை அனுப்புகிறேன் அவன் என் உயிர் தம்பி [[கொய்யால]]

உளவுத்துறை டிஸ்கி : உள்ளே [[ஜெயிலுக்கு]] போறவங்களுக்கு சாப்பாட்டுல ஸ்லோ பாய்சனும், கலீஞரை போல கட்டுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடும்ப 'கட்'டுபாடும் பண்ண சிறை நிர்வாகம் தயாராகிறது, அப்புறம் சிறைக்கு செல்லும் தண்ணீர் பைப் எல்லாம் கட் பண்ண சொல்லி உத்தரவு வந்துள்ளது [[நாறி சாவுங்கடா வெண்ணைங்களா....]]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அந்நாட்டு அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சரப்ஜித் சிங் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாதி அபு ஜுண்டாலுக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சருமான பவுசியா கான் தெரிவித்துள்ளார்.

# நான் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் [[http://nanjilmano.blogspot.com/2012/05/blog-post_15.html]] மும்பை தாக்குதலில் நம் நாட்டு அரசியல் நாதாரிங்க சிலபேர் இருக்காங்கன்னு இப்போ புரியுதா எங்கே நெறி கட்டினால் எங்கே வலிக்குதுன்னு...? சவூதி தப்பிச்சிடுச்சு அம்புட்டுதேன்...!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொது வாழ்வில் எனது பணி தொடரும் என தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிரணாப் முகர்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

#உன்னையெல்லாம் அமெரிக்காகாரன் கோவணத்தோடு இமிக்கிரேஷனில் நிக்க வச்சாலும் சூடு சுரனை இருக்காதுடா ஏன்னா உன் தலைமை அப்பிடிபட்டது....!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல்வாதிகள் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிக்க
ஆவணங்களோடு அரசியல் கட்டிடங்களும் சேர்ந்து தீ குளிக்கின்றன...!

# நான் ரசித்து, கோமதி நடராஜன் அக்கா பேஸ்புக் வாலில் சுட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------

மலையாளியின் இன்னும் ஒரு சதி திட்டம் .
வெளிநாடு வாழ் மக்களின் நீண்ட கனவு மதுரை சர்வதேச விமான நிலையம் வேண்டும் என்று ,அது இப்போது பகல் கனவு ஆகிவிடும் என்ற அளவிற்கு மலையாளி சதி திட்டம் தீட்டிஉள்ளான் .ஆம் மதுரை விமானநிலையம் வந்து விட்டால் திருவன ந்த புரம் மற்றும் கொச்சின் விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும் . ஏனெறால் தென் தமிழகத்தின் மக்கள் எல்லோரும் அந்த வழியாகத்தான் வருகிறார்கள் .இதை தடுக்க மலையாளி திட்டம் தீட்டி அதற்க்கு திறப்பு விழாவும் செய்துவிட்டான் .ஆம் கொச்சின் to மதுரைக்கு connecting flight விடுகிறான் .இது ஊரில் இருபவர்களுக்கு connecting flight தானே விடட்டும் என்று நினைப்பார்கள் .ஆனால் அதுதான் இல்லை .மதுரை வரவேண்டிய அனைத்து விமானங்களையும் கொச்சி வரவைத்து விட்டு விட்டார்கள் .அங்கிருந்து மதுரைக்கு flight பிடித்து வந்தால் அவனது வருமானம் பெருகும் ,மேலும் சுற்றுலா வருபவர்கள் நேரடியாக மதுரைக்கு வரமாட்டார்கள் .இதனால் மதுரையின் வருமானம் குறையும் .இந்த பிரச்சனையை ஊரில் அரசியல் பேசும் மக்களுக்கும், மந்திரியின் காதில் விழுகுமா !!!!!!!!!


# தமிழர்களே உஷாரா இருங்கோ....!

16 comments:

 1. ஒரே பதிவில் நிறைய சரக்குகள்.....

  ReplyDelete
 2. சிறை நிரப்புமா...திறை மறைக்குமா...

  என்னவோ போய்யா...மலையாளி எப்படி பிளான் பண்றான் பாரு...நம்மாளுங்க இன்னும் அவுத்து போட்டு நிக்கிற படங்களுக்கு லைக் போடுறத மட்டும் தானே பெருமையா நினைக்கிறானுங்க...அப்புறம் எப்படி உருப்படுவோம்!

  ReplyDelete
 3. நல்ல இருக்கு

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com

  ReplyDelete
 4. வயிற்றெரிச்சல் பல இடங்களில் வார்த்தைகளில் அனல் கக்கியிருக்கு. நாம் அனைவரும் இந்தியர்கள்!!!

  ReplyDelete
 5. ரொம்ப கலாய்க்கிறீங்களே ஞரை.

  ReplyDelete
 6. @ விக்கி மாம்ஸ்

  மாம்ஸ் அந்த அறிவுக்கண்ண தொறந்துட்டீங்க மாம்ஸ்,

  @ மனோ அண்ணே

  கலைஞர் கையால மனோ அண்ணனுக்கு ஒரு விருது குடுக்கனும் அத நான் என் ரெண்டு கண்ணால பாக்கனும், இதுதான் என் வாழ்நாள் லட்சியம்

  ReplyDelete
 7. வெளிநாட்டில் இருந்தாலும் தமிழக, இந்திய அரசியலை உன்னிப்பா கவனிக்கிறீங்க போல

  ReplyDelete
 8. நல்லா நக்கல் பண்ணியிருக்கீங்க! நிறையசெய்திகள் உங்க பாணியில் சிறப்பா எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. என்னா மன்னாரு...???

  ரோம்ப வேகமா இருக்கீறு....???!!!!

  ஆட்டோ டாக்ஸி எல்லாம் வர போகுது...ஜாக்கிரதை...

  ReplyDelete
 10. மக்கா நடத்து மக்கா நடத்து - கலக்றீங்க போங்க.

  ReplyDelete
 11. சரப்ஜித் இல்லை சுர்ஜித் அன்று ப்ளேட்டை மாற்றி விட்டார்கள்.
  காரசாரம்!

  ReplyDelete
 12. கைது நடவடிக்கையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டமாம் .. இவர்கள் சும்மா இருந்தாலே இன்னும் கொஞ்ச நாளுல சிறை முழுவதும் இவர்கள்தான் இருக்க போறாங்க .. அதுக்குள்ள என்ன அவசரம் ?

  ReplyDelete
 13. அரசியல் தூக்கல் பதிவில்!

  ReplyDelete
 14. விக்கிமாம்ஸ் சொல்லுவதும் சரி அண்ணாச்சி இவங்க லைக் போட்டே மலையாளிகள் முனேற வழிவிட்டு விடுவாங்க வாங்கிக்கொண்டு சூட்காஸை ம்ம்ம் கொடுமை நமக்குத் தான்!

  ReplyDelete
 15. கார சாரமாய் ஓர் அடைமழை!.....துன்பத்திலும் ஓர்
  இன்பமா!......நகைச்சுவையாக எழுதப்பட்ட அரசியல் வாதிகளின் எண்ணக் கூற்று அருமை சகோ!.....
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 16. சேலம் கோட்டத்தில் கோவை இணைந்ததே..மீண்டும் கேரளா கோட்டத்தில் .இணைக்க பயங்கர சதி நடக்கின்றது! மதுரை விமான நிலையம் பிரச்சனையும் இப்படி!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!