Sunday, June 17, 2012

நாட்டு நடப்புகளும், வேதனைகளும், சந்தோஷங்களும்...!

நாட்டு நடப்புகளும் வேதனைகளும், சந்தோசங்களும்...

# போலீஸ் வாகனத்துக்கே பாதுகாப்பு இல்லை, இரும்பு ஜாலிகளால் பின்னப்பட்ட வாகனங்களில் ரோந்து போகிறார்கள், அப்பிடின்னா மக்களுக்கு என்னய்யா பாதுகாப்பு...?


# என் மகனோடு படித்த [[மும்பை]] நான்கு மாணவிகள் பத்தாவது வகுப்பில் தோற்றுப்போனதினால், பெற்றோர் வீடு திரும்புமுன் தற்கொலை - இன்னும் கூடுதலான கவுன்சிலிங் தேவை, மற்றும் அல்லாது இந்த முறை மகாராஷ்ட்ரா பரீட்சை தேர்வு மிகவும் கெடுபிடியாக நடந்துள்ளதாக குற்றசாட்டு வந்துள்ளது....!!!


# பஹ்ரைனில் கார்பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட எட்டு கார்களை ஒரே நேரத்தில் கொளுத்திய நரகாசுரனை அரசாங்கம் வெளியே காட்டவுமில்லை, மீடியாவின் வாயையும் பூட்டி விட்டது....!!!


# நாம் அமைதியாக இருந்தாலும், நாம் பயந்துவிட்டோம் என்று எண்ணி மிரட்டிய ஒரு சேட்டனை பத்தே நிமிஷத்தில் ரூமை செக் அவுட் பண்ணிய வேகத்தை பார்த்து மிரண்டு போன எங்கள் ஜெனரல் மேனேஜர், அவனையும் இம்புட்டு நாள் பயங்காட்டி வச்சி இருந்துருக்கான் அந்த சேட்டன், பொறுமைக்கும் அளவு உண்டா இல்லையா ஹி ஹி...!!!


# பழசையே போட்டு போட்டு மாவரைத்து லைக் போட சொல்லி மிரட்டும் பேஸ்புக் நண்பர்கள் [[நான் விக்கியை சொல்லலை]]


# நிறைய பேசும் கலைஞரை பேசாம சனாதிபதி ஆக்கினால் என்ன...? தொல்லை அதோடு ஒழியுமே...!!! ஓ அங்கேயும் நாலு குடும்ப வாரிசும் மல்லுக்கு போயிருமோ ஹா ஹா ஹா ஹா...!!!


# சாட்டிங்கில் வந்து, மனோ நலமா'ன்னு கேட்டுட்டு, நான் இன்னைக்கு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு சொல்லி லிங்கை கொடுத்து கமெண்ட்ஸ் போடசொல்றாங்கோ, அதானே பார்த்தேன் கொய்யால ஒரு நாளும் வராத பயபுள்ளை இன்னைக்கு சாட்டிங்க்ல வருதேன்னு டேய் இதை முதல்லயே சொல்லவேண்டியதுதானே..?!!!


#  எப்போ ஸ்கைப்ல பேசுனாலும், ஒன் கப் ஆஃப் டீ அன்ட் புட் சம் ஹாட் வாட்டர்னு ஸ்டெனோவுக்கு ஆர்டர் குடுக்குறாப்ல பில்டப் கொடுக்குறானே ஒரு மூதேவி அது என்னையும் ஆபீசரையும் விஜயனையும் கடுப்பேத்தவா அல்லது டுபாக்கூரா தெரியலையே.....!


# எண்ணெய் தேச்சி சீயக்காய் ஷாம்பூ போட்டு குளிச்சாலும் கூட, எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் அப்பிடியேதானே இருக்கு, அப்புறம் எதுக்கு குளிக்கணும் ஹி ஹி...# பதிவுலகின் சூப்பர் டூப்பர்ஸ்டார் சத்தமில்லாமல் ஒதுங்கிட்டானே என்னாச்சுய்யா அவனுக்கு யாராவது கேட்டீங்களா...?


# ஈரோடுல எத்தனையோ பதிவர்கள் இருந்தும் [[பேஸ்புக் இத்யாதி உட்பட]] காவிரி ஆற்றில் கூவம் கலந்து நாறுதே யாராவது சவுண்டே [[சென்னிமலை அண்ணன் உட்பட]] விடக்காணோம்...???!!! [[என்ன ஊர் பக்தியா இருக்குமோ...?]] அந்த பக்கம் ரயில்ல போறவங்க அந்த நாத்தத்தை கடந்துதான் போவோணும்....!!!

# ரொம்ப லொள்ளு பண்ணுற நம்ம நித்தியை பேசாம சனாதிபதி ஆக்கிட்டா என்ன, ஏன்னா நம்ம ஊரும் தப்பிச்சிரும் இல்லையா, அய்யாவும் சும்மா கனடா, எகிப்து, ஈரான், ஈராக், மொரோக்கா......................[[எவம்லேய் அங்கே முழிச்சி பாக்குறது பிச்சிபுடுவேன் பிச்சி]] லண்டன், சிறீ லங்கா, ரஷ்யா, சைனா இப்பிடி வெரைட்டிசா பாக்க வெளியே ஓடிருவார்ல [[ஜிஞ்சிதா மன்னிச்சு]] அமெரிக்காகாரன் சோதனை போடவும் முடியாது ஹி ஹி ஏன்னா அய்யா கோவணம்தான் கட்டுவாரு, அடிக்கிற கப்புல அமெரிக்கா நாறிப்போகும்...!


# கன்டினியூவா சரக்கடிச்சுட்டு திடீர்னு நிப்பாட்டினாலும் சும்மா சரக்கடிச்ச மாதிரி [[குறிப்பிட்ட நேரத்தில்]] தெம்பாதான்யா இருக்கு - நண்பனின் சந்தோசம்...!


#  நான் மட்டும் மரம் நட்டால் ஏன் அந்த செடி செத்து போகிறது...? என்னாது கைராசியா..? எங்க அண்ணன் ஜோதிராஜ்'கிட்டே சொல்லி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....

# பங்களாதேசிகளின் வருகையால் பஹ்ரைன் நிரம்பி வழிகிறது, ஆனாலும் மலையாளி போக மாட்டேங்குறான் [[அப்போ நீ]]


# இனி எந்த இந்திய சனாதிபதியை அமெரிக்காகாரன் துகிலுறிஞ்சி [[சோதனை [[கலாம்]]] பாக்கப்போறானோ, எதுக்கும் கோவணம் கட்டிட்டு போக சொல்லுங்க அதான் லங்கோட்டி லங்கோட்டி....!!!


# பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!! 

# நான் உடுத்தும் ஆடைகளை ரசித்தும், வெறுப்பாகவும் நேரிடையாக விமர்சிக்கும் என் சில அண்ணிகள், சில அக்காக்கள், நண்பிகள், நண்பர்கள் விஜயன், ராஜகுமார், கிருஷ்ணா, ராபர்ட் மற்றும் பலர்....இதுக்கும் ஒரு தைரியம் வேணுமப்பா என்னால அப்பிடி முடியிறதில்ல....!!!

உலகிலேயே பீர் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது........வியட்னாம்.....!!! [[அதானே பார்த்தேன் ஏண்டா விக்கி இப்பிடி ஊதிப்போயி இருக்கானேன்னு...!கடைசியாக.......

# அடுத்த பிரதமரா நரேந்திரமோடிதான் வரணும் வருவார்.....!!!

22 comments:

 1. சும்மா புகுந்து விளையாடுங்க மக்கா

  ReplyDelete
 2. சும்மா புகுந்து விளையாடுங்க மக்கா

  ReplyDelete
 3. அருமையான கருத்துக்கள்!

  ReplyDelete
 4. ம்ம்ம்ம்.....

  நடத்துங்க......

  ReplyDelete
 5. அந்த சூப்பர் டுப்பர் ஸ்டார் நான்தானே...??????????

  ReplyDelete
 6. பல்சுவை தொகுப்பு சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !

  ReplyDelete
 7. //வெளங்காதவன்™
  சும்மா புகுந்து விளையாடுங்க மக்கா//


  யோவ் மாடு சொந்தமா யோசிங்கப்பு

  ReplyDelete
 8. விளையாடுங்க தூள் கிளப்புங்க!சூப்பர்

  ReplyDelete
 9. //# பழசையே போட்டு போட்டு மாவரைத்து லைக் போட சொல்லி மிரட்டும் பேஸ்புக் நண்பர்கள் [[நான் விக்கியை சொல்லலை]]

  //

  ஆமா அது விக்கினு நானும் சொல்லல

  ReplyDelete
 10. ரொம்ப நாள் கழிச்சு மனோ தன் பாணியில் ஒரு பதிவு.....

  ReplyDelete
 11. நலமா மனோ .விடுமுறையில் இருந்து மீண்டும் ஊர் வந்தாச்சா சகோ .
  அனைத்தும் கலக்கல் தொகுப்புகள் .
  ஜனாதிபதி :)))))))))) நோ சான்ஸ் .நிறைய வெளிநாட்டு பயணம்லாம்
  செய்ய வேண்டி வரும்

  ReplyDelete
 12. படங்களுடன் கமெண்ட்களும்
  வழக்கம்போல அற்புதம்
  அடிக்கடி பதிவுகள் தர வேண்டுகிறேன்
  தங்கள் பதிவுகள் இல்லாமல் பதிவு உலகம்
  டல்லடித்துக்கிடக்கிறது

  ReplyDelete
 13. கலந்து கட்டி கலக்கிட்டிங்க...
  கடைசியா சொன்னது நடந்தா சந்தோஷமே...

  ReplyDelete
 14. லைக் படம் தேடி கொண்டிருந்தேன் இந்த பதிவிற்காக இங்கே லைக் போட கொஞ்சம் தெளிஞ்சப்பதான் புரியுது இது பேஸ்புக் இல்லை என்று

  ReplyDelete
 15. நல்லா இருக்கு..

  //பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!! //

  உண்மை!

  ReplyDelete
 16. பதிவுலகின் சூப்பர் டூப்பர்ஸ்டார் சத்தமில்லாமல் ஒதுங்கிட்டானே என்னாச்சுய்யா அவனுக்கு யாராவது கேட்டீங்களா...?//உள்குத்து அதிகம் போல மக்கா!ஹீ

  ReplyDelete
 17. மோடி வந்தால் தாடி எடுக்கணுமே அமெரிக்கா போக!ஹீஹாஅ

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!