நம்மாளுங்களுக்கு கோவம் வந்தால் எப்பிடியெல்லாம் திட்டுவாங்கன்னு கொஞ்சம் ரிலாக்ஸா பார்ப்போமா...??? [[சீரியசா பார்க்கப்புடாது]]
டெய்லர் - கொய்யால பிரிச்சி பிரிச்சி தைச்சிப்புடுவேன்.
பனை தொழிலாளி : சும்மா ஏறு ஏறுன்னு ஏறிப்புடுவேன் ஜாக்கிரதை.
செருப்பு தொழிலாளி : சும்மா பிய்யி பிய்யின்னு பிச்சிபுடுவேன்.
டிரைவர் : ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிப்புடுவேன் பேமானி.
ஆசாரி : சும்மா தேயி தேயின்னு தேச்சுபுடுவேன் தேச்சி.
கொத்தனார் : செங்கலை கொத்துற மாதிரி கொத்திபுடுவேன் கொத்தி.
ஆட்டோ டிரைவர் : சும்மா டர்ர்ர் டர்ர்ர்ன்னு ஓட்டிருவேன்.
கம்பியூட்டர் இஞ்சினியர் : வைரஸை அனுப்பி உன்னை பார்ட் பார்ட்டா பிரிச்சிருவேன் பிரிச்சி.
பிளாக்கர் [[சிபி அல்ல]] : உன்னை ஹேக் பண்ணி இப்பவே தூக்குறேன் பாரு.
டவுண் பஸ் டிரைவர் : உன்னை சுத்தி சுத்தி அடிக்கலை என் பேரை மாத்திக்கேறேன்.
போலீஸ் : முட்டிக்கு முட்டி பேத்துருவேன் [[இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே]]
முதலாளி : இப்பவே தூக்கிருவேன்.
கலெக்டர் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமா..? [[எல்லாமே ஒன்னுதாம்டி]]
அரசியல்வாதி : இப்பவே உன்னை குண்டாஸ்ல தூக்கி போடல நான் எம் எல் ஏ இல்லைடா.
அடகு கடை செட் : நான் வச்சிக்கிறேன்டா உன்னை.
அக்கவுண்ட்டன்ட் : இப்பவே உன் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு கணக்கு வச்சிருக்கேன்.
மிலிட்டரி [[விக்கி அல்ல]] : சுட்டுபுடுவேன் சுட்டு.
வாத்தியார் : பிரம்பால விளாசிப்புடுவேன் விளாசி.
ஆபீசர் : எலேய் பெல்டை உருவினேன் ரத்த விளார் ஆகிருவே ஜாக்கிரதை.
போஸ்ட் மேன் : வீசிப்புடுவேன் வீசி.
பட்டறைகாரர் : சூடு பண்ணி அடி அடின்னு அடிச்சி நிமித்திருவேன்.
கேஷியர் : எண்ணி எண்ணி அடிப்பேன்.
டீக்கடை : மூஞ்சில வெண்ணியை ஊத்திருவேன்.
சலூன் அண்ணாச்சி : சும்மா வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புடுவேன்.
ஒயின் ஷாப்காரன் : உன் வாயில பினாயில ஊத்திப்புடுவேன்.
மீனவன் : உன்னை இப்பவே கடிச்சி துப்பிருவேன்.
வேட்டைக்காரன் [[விஜய் அல்ல]] : உன்னை வலை விரிச்சி பிடிக்கலைன்னா பார்த்துக்கோ.
மளிகை கடைக்காரன் : இருடி உன்னை இப்பவே பார்சல் பண்ணுறேன்.
திருடன் : இப்பவே உன்னை உடைக்கிறேன் பாரு.
ரயில் ஓட்டுனர் : உன்னை டக்கு புக்குன்னு இப்பவே ஊதல பாரு கொய்யா.
பாக்கு வியாபாரி : இப்பவே உன்னை கடிச்சி குதப்பி துப்பிருவேன்.
டாக்டர் : பிடிச்சி வச்சி குத்து குத்துன்னு குத்திப்புடுவேன்.
கடைசியாக.......
மன்மோகன் சிங் கோவம் வந்தா என்ன சொல்வாரு...?
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் [[காது கேட்டாதானே]] தீர விசாரிப்பதும் பொய், சோனியா அம்மா சொல்வதே மெய், அய் எனக்கு கோவம் வராதே வராதே வராதே.....!!!
டிஸ்கி : படங்கள் சும்மா உங்கள் ரசனைக்காக [[வேதனை]]...!
ஹி.ஹி.ஹி.ஹி.......
ReplyDeleteநான் கூட ஏதோ ஒரு மேட்டர் சொல்லப் போறீங்கனு பார்த்தா கடைசியில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சூப்பர்
மனோ! நீங்க எங்கியோ போயிட்டிங்க......!!!அங்கயே இருங்க திரும்பி வராதிங்க......!!!
ReplyDeleteயோவ் நக்கீரன் ஒரு போனை போடுய்யா...!
சூப்பர் ஆய்வு..:)))
ReplyDeleteஅண்ணே கிழி கிழின்னு கிளிச்சிட்டீங்க
ReplyDeleteயோவ் மக்கா நீர் பாட்டுக்கு படங்களை போட்டு மனசை கொதி கொதின்னு கொதிக்க வச்சிபுட்டீர்.
ReplyDeleteகையில மாட்டுனீறு நற நறன்னு பிராண்டி புடுவேன் பிராண்டி ஜாக்ரதை
மனோவுக்குக் கோபம் வந்தால்?
ReplyDeleteமனோவுக்குக் கோபம் வந்தால்? அருவாளை தேயதேய தீட்டிபுடுவேன் மக்கா..
ReplyDeleteநல்லா ரசனைதாம்யா உம்மது...
ReplyDeleteஇப்படி எல்லாவற்றையும் புட்டு புட்டு வைச்சிட்டீங்க !
ReplyDeleteநல்ல வேளை... முன்னாடிடே சொன்னனால சீரியஸ் ஆகலை.. இல்லன்னா??
ReplyDeleteநல்ல ரசனை மக்கா உங்களுக்கு! :)
ReplyDeleteநான் கேட்க நினைச்சதை, சென்னை பித்தன் ஐயா கேட்டுட்டாரு! பதில் சொல்லிடுங்க!
படங்கள் சிரிப்பு ஒருபுறம் என்றால் கற்பனை அதைவிட சிரிப்பு!ஹீ
ReplyDeleteபாக்குப் போல குதப்பி ஹீ பிடித்த சிரிப்பு!
ReplyDeleteசரவெடி :D
ReplyDeleteஇதுவும் நல்லாத்தான் இருக்கு/
ReplyDeleteகலக்கலா களை கட்டுது இப்போல்லாம் உங்க வலைப்பூ
ReplyDeleteஅருமையான படங்களின் நகைச்சுவை தொகுப்பு நண்பனுக்கு நன்றி
ReplyDelete