Showing posts with label நகைசுவை. Show all posts
Showing posts with label நகைசுவை. Show all posts

Thursday, July 10, 2014

போலீஸின் கொசு மருந்தடித்தல் !

ம்ம்ம் இன்னைக்கு "கும்கி" படம் பார்த்தேன்....செங்கோவி ஸ்டைல்ல படத்தை உரிச்சா...

கிளைமாக்ஸ்ல யானை செத்துரும்ன்னு யானை லாரியை விட்டு இறங்க மறுக்குறப்பவே  தெள்ள தெளிவா தெரிஞ்சிருது.

எங்கப்பனை குடிக்க வச்சே கொன்னது நீதானென்னு சொன்னதில் இருந்தே தம்பி ராமய்யாவின் காமெடி அவுட்டே.

ஹீரோ எப்பவுமே சீரியஸாவே இருக்கார், அந்த கேரக்டராகவே மாறி இருக்கார் விக்ரம் பிரபு.

ஹை பண்ணு மாதிரி பொண்ணு.... [[கதாநாயகி]] கொஞ்சம் நடிக்கவும் செய்யுது.

"அய்யய்யோ" பாட்டு செம மெலடி ரொம்ப நாளைக்கு பிறகு காதுக்கு இனிமை.
காமெரா சான்சே இல்லை கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி, அதுவும் அந்த அருவியின் மேலிருந்து கேமரா...எனக்கே தலை சுற்ற அப்பப்பா !

மூன்று வில்லன், ஒன்று காட்டு யானை அடுத்து அந்த கிராம தலைவரும் கிராமமும், இன்னொன்னு ஃபாரஸ்ட் அதிகாரிகள்.

ஆக மொத்தத்தில் காதல் தோல்வி [[கிளைமாக்ஸ் சொதப்பல்தான், காதலர்களை பாரம்பரியத்தை மீறி கிராமத்தை காத்த யானைக்காகவும், ஹீரோவின் நண்பன் மற்றும் மாமாவுக்காக அனாதையான ஹீரோவுக்கு ஊர் தலைவரின் பொண்ணை சேர்த்து வைத்திருக்கலாம், ம்ஹும் அதானே நம்ம சினிமா பண்பாடு ?]]

விமர்சனம் சிம்பிள்...."யானை"
---------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே போனா எப்பிடி இதையும் படிச்சுட்டு போங்க...


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போலீஸ், உளவுத்துறை போன்றவைகள் குற்றவாளிகளை வலைவீசி பிடிக்கும் விதத்தின் பெயர் என்ன தெரியுமா ?
"கொசு மருந்தடித்தல்"

தெருவுல மருந்தடிச்சா கொசு வீட்டுக்குள்ளே வந்து ஒளித்துக் கொள்ளும், வீட்டுக்குள்ளே மருந்தடித்தால் கொசு வெளியே ஓடிவிடும் !

அப்படிதான் இவர்களும் பத்திரிக்கைகளுக்கு நியூஸ் கொடுப்பார்கள், பெரும் குற்றம் செய்தவன் எவனும் பத்திரிக்கை பார்க்காமல் இருக்க மாட்டான் இல்லையா ?

"இதோ குற்றவாளியை சுற்றி வளைத்து விட்டோம் [[புரளிதான்]] என்றால் குற்றவாளி கலங்கிய குளத்தின் மீனாவான், ஒரே அமுக்கு...
அப்புறம்...

குற்றவாளி தன் முகத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டான் அவனை கண்டு பிடிக்க மிக சிரமமாக இருக்கிறது என்றால், குற்றவாளி பக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம், அவனும் சந்தோஷமாக வெளியே வருவான் ஒரே அமுக்கு...

அப்புறம்...?

அப்புறம் என்ன அப்புறம் ? என்கவுண்டர்தான் அப்புறம் !
கூட்டி கழிச்சு பாருங்க நான் சொல்றது சரியான்னு ?

ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ ஆபீசர் அவ்வ்வ்வ்....

Tuesday, June 26, 2012

ஏடாகூடா பிறப்பே நான் தமிழ் தலீவன் செப்புகிறேன் கேள்...!


நான்காம் தேதி கலைஞரின் பழம் ச்சே ச்சீ பலம் தெரிந்துவிடும்.....!!!
---------------------------------------------------------------------------------------
இவிங்க மனசுக்குள்ளே இன்னா நினைக்குறாங்கன்னா...?

பழகிரி : உள்ளே போனால் களி கூட ஸ்லோ பாய்சன் வச்சாலும் வச்சிருவானுங்க அதனால முதல்நாளே அஞ்சாநெஞ்சனுக்கு நெஞ்சி வலின்னு ஆஸ்பிட்டல் போயிற வேண்டியதுதான்.
பழம் மொழி : நாம உள்ளே போனால்......அப்பிடியே மறுபடியும் பூலான்தேவி சகாக்கள் கூட திகார்ல போட்டுருவாங்க....அதனால ஐயோ என் பையனுக்கு ஸ்கூல் தொடங்கிருச்சு'ன்னு சொல்லிருவோம்.

ஸ்பாலின் : எனக்கு மெட்ராஸ் ஐ வந்துருக்கு அதனால நான் எங்கும் வரமுடியாது, என்னையும் எவனும் பார்க்க வராதீக'ன்னு சொல்லிருவோம்.

கடி பிரதர்ஸ் : நாங்க உடன்பிறப்புகளுக்காக உலக சுற்றுலாவில் இருப்பதால்....அப்பிடின்னு சொல்லிருவோம், கொய்யால நம்மையும் குண்டாவுல உள்ளே தூக்கி போட்டுரப்போராணுக.

கலீஞர் : பாசமிகு உடன்பிறப்பே......என் குடும்பத்தார் யாவரும் பாய்சன் புகுந்துரும்னு ச்சே ச்சீ உடல் நிலை சரியில்லாததால் அவர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் கண்மணிகளே, நீங்கள்தான் கட்சியின் தூண்கள் வேணுமானால் ஆ ராசாவை அனுப்புகிறேன் அவன் என் உயிர் தம்பி [[கொய்யால]]

உளவுத்துறை டிஸ்கி : உள்ளே [[ஜெயிலுக்கு]] போறவங்களுக்கு சாப்பாட்டுல ஸ்லோ பாய்சனும், கலீஞரை போல கட்டுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடும்ப 'கட்'டுபாடும் பண்ண சிறை நிர்வாகம் தயாராகிறது, அப்புறம் சிறைக்கு செல்லும் தண்ணீர் பைப் எல்லாம் கட் பண்ண சொல்லி உத்தரவு வந்துள்ளது [[நாறி சாவுங்கடா வெண்ணைங்களா....]]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அந்நாட்டு அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சரப்ஜித் சிங் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாதி அபு ஜுண்டாலுக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சருமான பவுசியா கான் தெரிவித்துள்ளார்.

# நான் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் [[http://nanjilmano.blogspot.com/2012/05/blog-post_15.html]] மும்பை தாக்குதலில் நம் நாட்டு அரசியல் நாதாரிங்க சிலபேர் இருக்காங்கன்னு இப்போ புரியுதா எங்கே நெறி கட்டினால் எங்கே வலிக்குதுன்னு...? சவூதி தப்பிச்சிடுச்சு அம்புட்டுதேன்...!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொது வாழ்வில் எனது பணி தொடரும் என தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிரணாப் முகர்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

#உன்னையெல்லாம் அமெரிக்காகாரன் கோவணத்தோடு இமிக்கிரேஷனில் நிக்க வச்சாலும் சூடு சுரனை இருக்காதுடா ஏன்னா உன் தலைமை அப்பிடிபட்டது....!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல்வாதிகள் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிக்க
ஆவணங்களோடு அரசியல் கட்டிடங்களும் சேர்ந்து தீ குளிக்கின்றன...!

# நான் ரசித்து, கோமதி நடராஜன் அக்கா பேஸ்புக் வாலில் சுட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------

மலையாளியின் இன்னும் ஒரு சதி திட்டம் .
வெளிநாடு வாழ் மக்களின் நீண்ட கனவு மதுரை சர்வதேச விமான நிலையம் வேண்டும் என்று ,அது இப்போது பகல் கனவு ஆகிவிடும் என்ற அளவிற்கு மலையாளி சதி திட்டம் தீட்டிஉள்ளான் .ஆம் மதுரை விமானநிலையம் வந்து விட்டால் திருவன ந்த புரம் மற்றும் கொச்சின் விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும் . ஏனெறால் தென் தமிழகத்தின் மக்கள் எல்லோரும் அந்த வழியாகத்தான் வருகிறார்கள் .இதை தடுக்க மலையாளி திட்டம் தீட்டி அதற்க்கு திறப்பு விழாவும் செய்துவிட்டான் .ஆம் கொச்சின் to மதுரைக்கு connecting flight விடுகிறான் .இது ஊரில் இருபவர்களுக்கு connecting flight தானே விடட்டும் என்று நினைப்பார்கள் .ஆனால் அதுதான் இல்லை .மதுரை வரவேண்டிய அனைத்து விமானங்களையும் கொச்சி வரவைத்து விட்டு விட்டார்கள் .அங்கிருந்து மதுரைக்கு flight பிடித்து வந்தால் அவனது வருமானம் பெருகும் ,மேலும் சுற்றுலா வருபவர்கள் நேரடியாக மதுரைக்கு வரமாட்டார்கள் .இதனால் மதுரையின் வருமானம் குறையும் .இந்த பிரச்சனையை ஊரில் அரசியல் பேசும் மக்களுக்கும், மந்திரியின் காதில் விழுகுமா !!!!!!!!!


# தமிழர்களே உஷாரா இருங்கோ....!

Thursday, December 8, 2011

பிரபலங்களா பிராப்ளங்களா காமெடி கும்மி...!!!

போன் ரிங்கடிக்க பதட்டத்துடன் எடுத்து பார்க்கிறான் சிபி, பட தயாரிப்பாளர்கள் கொலை மிரட்டல் போனா இருக்கப்போகுதுன்னு நினைச்சு பயந்து போன் நம்பரை பார்த்தால் நம்பர் இல்லாமல் போன் ரிங்குகிறது...



என்னடா எப்பவும் நம்பரோடு வந்து மிரட்டுனவனுங்க இப்போ நம்பர் இல்லாமல் வாரனுகளேன்னு போனை பயத்துடன் எடுக்கிறான்...

சிபி : ஹலோ யார் பேசுறது...? அட நாயே நீயா, நானும் நம்பர் இல்லாமல் வந்ததும் பயந்துட்டேன், என்னடா விஷேசம் சொல்லு...


விக்கி : டேய் நான் உன்னை தாக்கி போட்டுருந்த பதிவு எப்பிடி ரசனையா இருந்துச்சா..?

சிபி : பன்னாடை பரதேசி என்னை போட்டு தாளிக்கனும்னே உங்க ரெண்டு பேரையும் ஆண்டவன் படச்சிருக்கான் போல..

விக்கி : அது யாருடா இன்னொருத்தன்...?


சிபி : அந்த நாய் பேரை சொல்லவேண்டாம் விடு...

விக்கி : டேய் அது மனோ'தானே..? ஹா ஹா ஹா ஹா மாட்டிக்கிட்டியா...?

சிபி : போச்சுடா அவன் பேரை சொல்லிட்டியா, வேண்ணா பாரு இப்போ லைன்ல வருவான் பாரு...


விக்கி : அண்ணே எங்க ஊர்ல பை எலக்ஷன் வரப்போகுது அதான் [[நல்ல]] ஓட்டு போட வரலாம்னு இருக்கேன், அப்பிடியே உன்னையும் மனோவையும் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.

சிபி : நீ ஓகே, மனோ பஹ்ரைன்ல அல்லவா இருக்கான் அவனை எப்பிடி பார்ப்பே...?

விக்கி : அட அண்ணன் ஊர்போய் பத்து நாளாச்சு சொல்லலையா...?


சிபி : என்னங்கடா கழுதைகளா விளையாடுறீங்களா...?

விக்கி : ஆமாண்டா அண்ணா, மனோவை எம் எல் ஏ'வுக்கு வேட்பாளரா நிறுத்தப்போறேன் அதான் யாருகிட்டேயும் சொல்லாமல் ஊருக்கு போக சொன்னேன் ஹி ஹி..


சிபி : டேய் அந்த நாதாரி எம் எல் ஏ ஆனாமுன்னா தமிழ்நாடே உருப்படாதேடா, நல்லா யோசிச்சியா...?

விக்கி : பல்லை பேத்துருவேன்னு சொல்லி வச்சிருக்கேன், நான்கு கோடி ரூவா தருவேன் அதில் இருவது சதவீதம் நீ எடுத்துகிட்டு, மீதியை தேர்தல் செலவுக்கு வச்சுக்கன்னு சொல்லி இருக்கேன், அவன் நம்ம பயலாச்சே அண்ணே, பிழச்சி போகட்டும்.


சிபி : எனக்கு இப்பவே கண்ணை கட்டுதுடா, சாதாரணமா இருந்தாலே டெரர் மாதிரி ட்ரீட் பண்ணுவான், இவன் எம் எல் ஏ ஆனால் என்னவாகும் என் கதி, ஆ ஊன்னா உடனே அல்லைக்கைகளை கூட்டிட்டு என் ஆபீசுக்குள்ளே புகுந்துருவானே..?

விக்கி : கவலைப்படாதே, இப்பிடிபட்டவனுகளை ஜெயிக்க வச்சி அனுப்பிட்டோம்னு வை பதிவுலகம் நிம்மதி அடையும், சரிதானப்பா, அதுக்கு அப்புறம் அவன் பிளாக்கும் எழுதமாட்டான், வாசிக்கவும் மாட்டான் என்ன ஜாலிதானே...??


சிபி : டேய் தம்பி நீ அந்த ஆங்கிள்ல திங் பண்ணுறியா, அமெரிக்கன் டாலர் சம்பளம் வாங்குறவன் மண்டையோ மண்டைதான், நான் மூளையை சொன்னேன்.

விக்கி : நீயும் அவன் கூடமாட நின்னு அவனை எப்பிடியாவது ஜெயிக்க வச்சிரு, ஏன்னா எனக்கு இந்தியாவுல ரெண்டே நாள்தான் இருக்கமுடியும், எனக்கு என் பி ஏ ஃபிகர்கள் இல்லைன்னா கண்ணை கட்டிரும் அதான் உடனே திரும்பிடுவேன்.

சிபி : டேய் நில்லு நில்லு, சொன்னேனே, அந்த நாய் போன் இப்போ வந்துரும்னு, இதோ என் இன்னொரு போன்ல பரதேசி கூப்புடுறான், வெயிட்..ஹலோ சொல்லுடா தம்பி...

மனோ : டேய் அண்ணே நான் ஊர் வந்துட்டேனே..

சிபி : தெரியும்டா குரங்கே, விஷயத்தை சொல்லு விக்கியும் லைன்லதான் இருக்கான்...


மனோ : நான் இப்போ நெல்லையில இருக்கேன், தக்காளியை நேரே மதுரை பஸ்டென்ட் ச்சே ஏர்போர்ட் வந்து, நெல்லை வரசொல்லு அப்பிடியே நீயும் சைக்கிள்ள வந்து சேரு...ஹோட்டல் ஜானகிராமன், ஆபீசர் பிஸி'யா இருக்குறதுனால அவரை டிஸ்டப் பண்ணவேணாம்.

சிபி : மனதிற்குள், இந்த மூதேவி எம் எல் ஏ ஆகும் முன்னமே ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு சைக்கிள்ள வரச்சொல்லுறான், இவன் ஜெயிச்சாம்னா என்னல்லாம் பண்ணுவான்.


விக்கி : என்னடா என்ன சொல்றான் மனோ...?

சிபி : டேய் பன்னாடைகளா நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையாடா, என்னை திருநெல்வேலிக்கு சைக்கிள்ள வாடான்னு கூப்புடுறான் அந்த பரதேசி கழுதை...

விக்கி : சரி அண்ணே அழுவாத நான் எதுக்கு இருக்கேன் சும்மா விட்டுருவேனா..? நடந்தே வந்து சேரு...


சிபி : ௭ர௬௭௪ர௪ய்ர௨௭௪ய்த்வெஜ்ப்ந௭ஹ் வ்ப்ட்ஜ்ப்க௩௮வ்க௬ஹ்ப்ஹஸ்ந௬௪௫௬௨வ௯உப்ஹுந்கெஜ்க்ஹொர்ஹ்பூஇபு௩ருப்க்ஹ்வ்ஜ்ஹ்ப்ர்ர்ஹ்க௩ர்.......

விக்கி : டேய் இர்டா இர்டா ஏண்டா இப்பிடி பச்சை பச்சையா திட்டுறே...?


சிபி : டேய் நாயே, நீ அமேரிக்கா'காரனை திட்டிகிட்டே கால்மேல கால்போட்டு டாலர் சம்பாதிக்கிறே, அவன் என்னடான்னா பஹ்ரைன் அரபி முதலாளியை மிரட்டியே தினார் சம்பாதிச்சுட்டு இருக்கான், நீங்க ரெண்டுபேர் மட்டும் பிளேன்ல வருவீங்க நான் மட்டும் நடந்து வரணுமா போங்கடா கொய்யால....


விக்கி : அழாதடா கழுதை, நான் இப்பமே பிளைட் டிக்கெட் அனுப்புறேன், கோவை டூ மதுரை சரியா வந்து சேர்...

சிபி : போனை கட் செய்துவிட்டு, என்னாது இது ஆளாளுக்கு மிரட்டுரானுக ஒருத்தன் சைக்கிள்ள வாங்குறான் ஒருத்தன் நடந்தே வாங்குறான் என்னங்கடா நடக்குது இங்கே...?


திருநெல்வேலி, ஜானகிராமன் ஹோட்டல் ரிஷப்சன்...

விக்கி : ஏண்டா என்னை கூப்பிட ஏர்போர்ட் வரவில்லை...? காலையிலேயே மப்புலையா இருக்கே ராஸ்கல்..


மனோ : என்னாது மப்பா கொய்யால நீ பிளேன்ல இருந்து மப்படிச்சிகிட்டு, பாக்குற எல்லாரையும் மப்புங்குறியா பேத்துருவேன் பேத்து...

சிபி : விடுடா விடுடா, ஏர்போர்ட்ல இருந்தே இவனை தோள்ல தூக்கிப்போட்டுதான் கொண்டு வந்தேன் கொஞ்சம் தூங்குனாம்னா சரியாகிரும் வாங்க...


லிஃப்ட் அருகில் இருந்த ஒரு பெண் சிலையை தடவியவாறு ஆஹா அருமையா இருக்கே என்று சிபி சொல்கிறான், உடனே விக்கி அந்த சிலையை தடவப்போனவன் உஷாராகி நோ, நான் பெண்களை தொடுவதே இல்லை என்று ஓடுகிறான் ரூமை நோக்கி...


தான் கொண்டு வந்த மது சரக்குகளை வெளியே எடுக்கிறான் விக்கி, பிளாக் லேபில், பக்கார்டி, வோட்கா என பப்பர பரப்பிக்கிறான், டேய் கிளாஸ் சோடா பீடா எல்லாம் ரெடியா. முக்கியமா தக்காளி சாலட் வேணும் எனக்கு...


மூவரும் சண்டை போட்டுக்கொண்டே, சிரித்து கொண்டும், ஜாலியாக இருக்கும் போது, படாரென கதவு திறக்கப்படவும், அதிர்ச்சியாக பார்க்கிறார்கள் அங்கே ஆபீசரும், திவானந்தாவும் கொலைவெறியில் நிற்கிறார்கள்...


மூவரும் கையை நெஞ்சிக்கு குறுக்கே வச்சிட்டு எழும்புகிறார்கள் சேரை விட்டு....வணக்கம் ஆபீசர்....

ஆபீசர் : அருகில் வந்து, ஏண்டா எனக்கு தெரியாம காற்று கூட திருநெல்வேலி எல்லையை தொடமுடியாது தெரியுமா, அட அறிவு கொழுந்தே உங்களை கண்டதும் இந்த ஹோட்டல் ரூம்பாய்க்கு கூட உங்களை தெரியுமே என பெல்டை உருவுகிறார்...


டேபிளை எட்டி பார்த்த ஆபீசர் தாகமாக இருக்கவே, வெள்ளையாக இருக்கும் ஆப்பிள் ஃபெவர் வோட்காவை தண்ணீர் என நினைத்து, பாட்டிலை திறந்து மடமடவென குடித்து, டேய் திவானந்தா இந்த தண்ணி என்ன ஒரு மாதிரி இனிச்சி இருக்குதே...


திவானந்தா : இங்கே கொண்டாங்க அண்ணே பாத்துருவோம் என கையில் வாங்கி குடிக்கிறார், அண்ணே சூப்பரா இருக்கு அண்ணே, வெளிநாட்டு வோட்கா இது அண்ணே...

ஆபீசர் : ஆஹா அப்பிடியா சரக்கா இது, அதான் கிர்ர்ர்ர்ர்ன்னு இருக்கு, டேய் இதை முதல்லயே சொல்லி தொலைக்கப்புடாதா..?


விக்கி : அண்ணே நீங்கதான் கேக்காம குடிச்சிட்டீங்க அண்ணே...

சிபி : ஆபீசர், நான்தான் உங்களுக்கு போன் பண்ண சொன்னேன் ஆனால் இந்த தருதலைதான் வேண்டாம்னு சொல்லுச்சு'ன்னு மனோவை கைகாட்டுகிறான்...


மனோ : டேய் உன்னை சைக்கிள்ள வரவச்சிருந்தாதான் நல்லா இருந்துருக்கும் போட்டு குடுக்குற நாதாரி...

ஆபீசர் கூலாகிறார், ம்ம்ம்ம் இனி எப்போ வந்தாலும் எனக்கு சொல்லாம வரப்புடாது என்ன..?

விக்கி மனோ சிபி : சரிங்கோ ஆபீசர்...

ஆபீசர் : இது என்னமோ வெள்ளையா இனிப்பா, அதை கொஞ்சம் இங்கிட்டு தள்ளு...


திவானந்தா : அண்ணே எனக்கு...


ஆபீசர் : எல்லாமே நம்ம பசங்கதான், என்னவேணுமோ எடுத்து சாப்பிடு, அப்புறமா பிள்ளைகளுக்கு ஆமை குஞ்சு கரி, மான் கரி, முயல் கறி எல்லாம் ஆர்டர் பண்ணு...


விக்கி : போதையில், டேய் எனக்கு ஒரே ஒரு பொண்டாட்டிதான் என சொல்ல சிபி விக்கி வாயிலேயே கும்முகிறான்...


மனோ : நல்லா கும்முடா ராஸ்கல், இந்த ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே மனுஷனுவளை கொல்லுறான் ராஸ்கல்...

பார்ட்டி பார்ட்டி ஆரம்பம் ஆரம்பம்.........

டிஸ்கி : படங்கள் எல்லாம் நெஞ்சில் தேனாய் இனிக்கும் நினைவலைகள்...!!!

டிஸ்கி : தலைப்புக்கு உதவிய பேரிக்காயின் எதிரிக்கு நன்றி...!!!


Thursday, November 3, 2011

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து பரிசு வேணுமா...?

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இந்தியாவில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் எதையாவது வாங்கிக்கொண்டு வா வா வா'ன்னு கேட்டு கொல்பவர்கள் உண்டுதானே அவர்களுக்கு ஒரு ஐடியா சொல்லித்தாறேன்.

அப்படி அது வேண்டும் இது வேண்டும்னு கேக்கும் போது சம்பந்த பட்டவருக்கு எரிச்சலா இருக்கும்னு சொல்ற நண்பர்களை பார்த்துருக்கிறேன், நானும் சில வேளைகளில் அனுபவிச்சும் இருக்குறேன், ஏன்னா இவங்களுக்கு நம்முடைய கஷ்டங்கள் தெரிவதில்லை, நெருங்கிய நண்பர்களுக்கு நம்ம நிலைமை தெரியும் என்பதால் ஒரு பாட்டலோடு சம்பவம் கிளியராகி விடும்.


என் உறவுக்காரியான ஒரு அக்காளின் மகளிடம் இதை நான் கவனித்தும், விசாரித்தும் அறிந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது, நான் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போதும் என்னையும் அறியாமல் அவளுக்கு ஏதாவது வாங்கி வரத் தவருவது இல்லை.


காரணம், எப்போ எல்லாம் நான் ஊருக்கு வந்துட்டு திரும்புவேனோ அப்போ எல்லாம் எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கித்தர தவறியது இல்லை, இது இப்போதும் தொடர்கிறது....!!!

நான் ஒருநாள் தமாஷாக கேட்டேன், எதுக்கும்மா இதெல்லாம்னு, அவள் சொன்னால் மாமா இப்பிடி நான் உங்களுக்கு கிஃப்ட் வாங்கி தந்ததால்தான் எனக்கு நீங்க மறக்காமல் "ஃபாரின் திங்க்ஸ்" வாங்கிட்டு வாரீங்கன்னு சொன்னாளே பார்க்கணும், என் மனைவியும் நானும் ஆச்சர்யத்தின் உச்சியில்..... ம்ம்ம் ஆக இந்தக்காலத்து பிள்ளைங்க பயங்கர சுமார்ட்'தான் போங்க...!!!

ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும். எங்கே உடனே ஆரம்பிங்க பார்ப்போம். 
------------------------------------------------------------------------------------------------------------

பெங்காலிகளின் [[பங்களாதேஷ்]] ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கை பாருங்க....


மட்டன் + மொட்டன்
சைக்கிள் + ச்சைகிள் 
மச்சி [[மீன்]] + மஸ்சி 
சார் + ஷார் 
அணில் [பெயர்] + ஒனில் 
மனோஜ் [[ஹி ஹி நாந்தேன்]] + மொனோஜ் 
கம்பெனி + கொம்பனி
கானா [[சாப்பாடு]] + கோனா
பில்டிங் + பொல்டிங்
சாவி + ஷாவி [[ச்சேவன் ச்சீரோ டூ [702] க்கா ஷாவி தான்னு என்னை ஒரு பெங்காலி அலற வச்சதும் நடந்தது]]
என்வலோப் + எவன்லோப்
அண்டா [[பாத்திரம்]] + அண்டி [[ஆண்டி அல்ல]]
சிக்கன் + ஷிக்கன் 

இன்னும் நிறைய இருக்கு, இது எல்லாத்தையும் விட இவர்கள் ஹிந்தியில் கெட்டவார்த்தையில் திட்டும்போது பார்க்கணுமே [[ஸ்பெல்லிங் மிஸ்டேக்]] வேடிக்கை சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விடும் அம்புட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக், ஹிந்திகாரன் எவனாவது பக்கத்தில் இருந்தாம்னா செத்தான் அன்றோடு....!!!
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் இல்லையா, அதுபோல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கவும் படவேண்டும், பணத்தை பரிமுதலும் செய்யவேண்டும், இன்று ஜாமீனில் கனிமொழி வெளியே வந்து விடுவார் என டெல்லிக்கு பறந்து சென்ற திமுக தலைவர்களுக்கு, கோர்ட் பெப்பே காட்டிவிட்டது, மக்களும் சந்தோசத்தில் உள்ளனர்...


தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா....!!!








Sunday, December 12, 2010

நகைசுவை

கணவன் : கமலா ஒரு கப் காபி........!??
மனைவி : என்னது....?!
கணவன் : உனக்கு காபி தரட்டுமான்னு கேட்டேன்....!!
மனைவி : அதானே பார்த்தேன் ! [[ஆத்தி.... என்னா வில்லத்தனம்!]]

அரசியல் தத்துவம்:-
என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் சொட்டை  மண்டைல யாராவது கொட்டினா "அம்மான்னு"தான் கத்துவாரு....... [[அப்படி போடு அருவாளை]]

காதலியின் கண்ணசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள்........
ஆனால் நண்பனின் கண்ணசைவுக்கு ஒரே அர்த்தம்
"மச்சான் சூப்பர் பிகர் வருது டக்குன்னு திரும்பி பாரு" [[பின்னே இனம் இனத்தோடதானே சேரும்]]

ஒருவர் : இருந்தாலும் அந்த மேஸ்திரி ரொம்ப மோசம்
மற்றவர் : ஏன் அப்படி சொல்றீங்க??
ஒருவர் : ரோடு ரோலர் பன்சர்னு சொல்லி  ஐநூறு ரூபா கணக்குல எழுதிட்டாரு....! [[நல்ல வேளை ரோடே பன்சர்னு எழுதாம விட்டாரே]]

பேஷன்ட் : டாக்டர், ஆபரேஷனை தவிர வேற வழியே இல்லையா...?
டாக்டர் : ஓ...! இருக்கே, "தற்கொலை" பண்ணிக்கலாம்!  [[யப்பா]]
கணவன் : எதுக்கு குப்பை தொட்டியை கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிற...?
மனைவி : மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்ட போறேன்னு சொன்னீங்களே..... [[ ம்ம்ம்ம் பொண்டாட்டிகிட்டே கூட மனசுல உள்ளதை கொட்டப் பூடாதப்பு..]]

என்னதான் பூமி சூரியனை சுற்றி சுற்றி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது...    [[ உன் பிகர் கை மாறிடிச்சோ...?]]

காதல் கல்யாணத்துக்கும் அரேனஜ்மென் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
நாமளா கிணத்துல விழுந்தா அது காதல் கல்யாணம்.........., பத்து பேர் தள்ளிவிட்டால் அது அரேனஜ் மென்ட் கல்யாணம் [[ஹோ.. கிளம்பிட்டாய்ங்கப்போ]]

இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம்,  பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?? [[ஆத்து மண்ணுல கிடந்தது உருண்டு உருண்டு யோசிப்பாய்ங்க போல]]

பரம்பரைக்கு உக்காந்திருந்து சாப்பிட பணம் இருந்தாலும், பாஸ்ட்பூட் கடையில நின்னுகிட்டுதான் சாப்பிடனும்!!....  [[எதை பணத்தையா?]]

லைப்ல ஒன்னும் இல்லைனா போர் அடிக்கும்,   தலையில ஒன்னும்  இல்லைனா டார் அடிக்கும் [[ஏ யப்பா..... என்னா ஒரு கண்டுபிடிப்பு]]
பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுப்பாங்க....., இட்லி, தோசைக்கும் குடுப்பாங்களா....? [[வாடி, ஸ்கூலுக்கு ஆட்டைய போடப் போறேன்னு புரியுது]]

தேள் கொட்டினா வலிக்கும்,  பாம்பு கொட்டினா வலிக்கும்,   "முடி கொட்டினா வலிக்குமா?"  [[நீ வாடி என் முன்னால அப்புறம் காட்றேன்]]

நாய்க்கு நாலு call  இருக்கலாம்...., ஆனா அதால லோக்கல் call  , எஸ்டிடி call , ஐஎஸ்டி call , ஏன் மிஸ் call  கூட பண்ணமுடியாது.... [[ஓ அவனா நீ?]]

நெட்டில் சுட்டது,

Monday, December 6, 2010

நகைசுவை

இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,
நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???

காதலன் : அன்பே, நம்ம கல்யாணத்த எங்க குடும்பத்துல ஏத்துகிட மாட்டேங்குறாங்க..
காதலி : நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவங்க யாரு ?
காதலன் : என்னோட மனைவியும், மாமியாரும்..........

நாட்டாமை : எண்றா பசுபதி.... ?
பசுபதி :  1 2 3 4  5  6  7 8 9 10 11  12 13  14 15
நாட்டாமை : எண்றா பசுபதி.......???
பசுபதி : அதான் என்ரோமில்ல.........

பறவையெல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து இங்க பறந்து வருது தெரியுமா????
?
?
?
?
?
ஏன்
?
?
?
?
?
?
?
ஏன்னா.... நடந்து வந்தா லேட் ஆகும் அதான்.....திருடன் 1 : ராத்திரி எவ்வளவு திருடினோம் என்று என்னாமலையே, பணத்தை ஒளிச்சி வச்சிட்டோமே.....?
திருடன் 2 : கவலையே படாதே, நாளைக்கு பேப்பர்ல வரும்ல, அப்ப பார்த்துக்கலாம்..

ஸ்டன்ட் மாஸ்டரை கல்யாணம் கட்டிகிட்டது தப்பா போச்சு...
ஏன்???
வீட்டுக்கு வரும் போது கண்ணாடி ஜன்னலை எல்லாம் உடைச்சிட்டு வாராரு....

மும்தாஜின் நினைவார்த்தமாக ஷாஜகான் தாஜ் மகாலை கட்டினாரு,
முட்டாப்பயல், நானா இருந்தா அவள் தங்கச்சிய கட்டியிருப்பேன்....!

அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும்
நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.....

இதை எழுதிய நண்பருக்கு நன்றி

நாட்டில் எது நடந்தாலும், அதை காமெடியாக்கி குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு, அமெரிக்காவில் கூட ஒபாமா ஜோக்ஸ் மிக பிரசித்தம், அண்மையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் மாட்டிய நித்யானந்தா, பராசக்தி நீதி மன்ற காட்சியின் வசனத்தை உல்டா செய்து பேசுவது போன்ற மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.

             இது சிரிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல

 நீதிமன்றம்...விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை  சந்தித்திருக்கிறது, புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..... ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல...... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல...
                   ஊருக்கு உபதேசம் செய்தேன்..........
                  கதவை திற காற்று வரட்டும் என்றேன்......
                  நடிகைகளை எனது காலை பிடித்து விடும் படி கூறினேன்......
                  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்......
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று.... இல்லை, நிச்சயமாக இல்லை....
                   கதவை திற காற்று வரட்டும் என்றேன்..... ஏன்??? காற்று வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை.... அந்த நடிகை ஈசியாக ரூமுக்குள் வரவேண்டும் என்பதற்காக....
                          நான் சந்நியாசி என்று கூறி ஊரை நம்ப வைத்தேன் ஏன்???  மக்களை ஏமாற்ற வேண்டும்  என்பதற்காகவா??? இல்லை.... மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கை மேலும் வளர வேண்டும் என்பதற்காக........
   உனக்கேன் இவ்வளவு அக்கறை??? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்....
                                நான் நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்....
                               நான் பாடசாலைக்கு கூட போனதில்லை ஆனால் ஆன்மீகப் புத்தகம் படித்திருக்கிறேன்..... நான் நல்ல சந்நியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்....
                      கேளுங்கள் என் கதையை..............................
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலி சாமியார்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
                                       தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஓடோடி வந்தேன்.
ஜாதகம் என்னை நீஒரு மதபோதகம் என்றது
என் பெயரோ நித்யானந்தா, நியூசில் கேட்டு கேட்டு புளித்து போன பெயர்'
                                       நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,
                                      ஆனால் அதைதான் விரும்ம்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மேட்டரில் என் படத்தை போட்டு எரித்தார்கள்....... ஓடினேன்....... நான் ஒருவன் மாட்டியவுடன், மற்றவனெல்லாம் யோக்கியன் போல் பேசினான்...... ஓடினேன்........ நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை நெட்டிலும் போட்டான்....................
ஓடினேன்................................... ஓடினேன்....................................... ஓடினேன்.................. கேரளாவுக்கு ஓடினேன் கர்நாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்................ ஹரித்துவாருக்கும் ஓடினேன்......
                                          ஓடினேன் ஓடினேன்............................ இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்.............. எனது பக்தர்களின் கொலை வெறி தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்துவிட்டேன்.....
                                       என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை நெட்டிலிருந்து நீக்கி இருக்க வேண்டும், என்னை தப்பி ஓட கதவை திறந்து விட்டிருக்க வேண்டும் இதோ இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்................
                                          செய்தார்களா??? தப்பி ஓட விட்டார்களா??? இந்த நித்யானந்தாவை,
என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்???
 எனது குற்றமா???
என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா????
[[ இப்பவே  கண்ணை கட்டுதேண்ணே, யப்பாஆஆஅ]]

Monday, November 29, 2010

நகைசுவை

ஒரு ஆங்கிலேயன் காந்தி'கிட்டே கேட்ட கேள்வி இது...
இந்தியர்கள் நீங்க எல்லோரும் ஏன் வித்தியாசமான  கலர்களில் இருக்கிறீர்கள்?
எங்களை பார், நாங்க எல்லோரும் ஒரே கலர்'ல இருக்கிறோம்.....
காந்தி சொன்னார், உயர்தர குதிரைகள் வித்தியாசமான கலர்களில்தான் இருக்கும்.
ஒரே கலரில் இருப்பது கழுதை மட்டுமே.......
 

Friday, November 19, 2010

மலையாளி ஜோக்

கேரளாகாரன் நம்ம ஊர்ல வந்து நம்மாள் ஒருத்தன்ட்ட இங்கே சின்னவீடு கிடைக்குமான்னு கேக்க போக நம்மாளு ஸ்டெப்னி'யதான் சின்னவீடுன்னு கேக்கிறான்னு அடிக்க போக, அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிடித்து விசாரிக்கும் போது கேரளா'காரன் சொன்னானாம், இவன் சம்சாரம்[[ பேச்சு]]  சரியில்லைன்னு... மொத்த கூட்டமும் மொக்கிடிச்சு மொக்கி... ஹா ஹா ஹா.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!