Sunday, October 21, 2012

சிலர் நலம் வாழ நாம் ஏணிப்படி ஆவதில் தப்பில்லை...!

என்னோடு எங்கள் ஹோட்டலில் ஏசி மெக்கானிக் வித் எலக்ட்ரீஷியன் வேலை செய்யும் ஒரு சேட்டன், நான் புதிய ஸ்டாஃப் அவனோ நான்கு வருஷமாக இங்கே வேலை செய்கிறான், அவன் ஊருக்கு போன் செய்வதையும் பேசுவதையும் அடிக்கடி கேட்டுருக்கிறேன், மிகுந்த கடனில் இருப்பது நன்றாகவே புரிந்தது.
ஒருநாள் ஸ்டாஃப் ரூமில் சற்று ரிலாக்ஸாக இருக்கும் போது உள்ளே வந்தவனை சற்று கிளறினேன், குடும்ப மேட்டரை சொல்லி கண்ணீர் விட்டுவிட்டான், எனக்கு என்னடா எதுக்குடா கேட்டோம்னு ஆகிருச்சு, நான்கு வருடங்கள் ஒரே சம்பளத்தில் [[ரொம்ப குறைவு]] வேலை செய்வதாக சொன்னான் [[உண்மைதான்]] அதன் பின்னணி வேறு.
"யோவ் அப்பிடின்னா வேறே இடங்களுக்கு போயி வேலை செய்யலாமே உனக்குத்தான் கையில் தொழில் இருக்கே, தைரியமா போயி வேலை தேடுய்யா....நீ இப்போ வேலை பார்க்கும் ஹோட்டல் பெயரை சொன்னாலே உடனே உனக்கு வேலை கிடைக்குமே..? அதுவும் நான்கு வருட அனுபவம் இருக்கு போய்யா போயி வேறே வேலை தேடு."
"சேட்டா, வேற நல்ல இடத்துக்குப் போகணும்னா நம்ம ஹோட்டல் சர்டிபிக்கேட் கேக்குறாங்க, நான் மானேஜர்கிட்டே சர்டிபிக்கேட் கேட்டதுக்கு எங்கே நான் போயிருவேனொன்னு நினச்சி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க சேட்டா..."

"ஸோ, சும்மா நம்ம ஹோட்டல் சிம்பல் வச்சு நீயா ஒரு சர்டிபிக்கேட் ரெடி பண்ணிறவேண்டியதுதானே..? உங்காளுங்களுக்கு இது புதுசா என்ன...?"
"இல்லை சேட்டா, நம்ம ஹோட்டல் ஒரிஜினல் லெட்டர் பேட்'தான் வேணும், புது இடத்தில் அந்த லெட்டர் பேடின் தரம் மற்றும் தன்மை சோதிக்கப்படும் [[அதாவது டூப்பிளிகட் பணம் செக் செய்யும் மிஷின்]] அதனால ஒன்னுமே செய்யமுடியலை."

"இத்தனை வருஷமா இங்கே இருக்கே, எப்பிடியாவது அந்த பேப்பரை தூக்கி இருக்கலாமே...?"

"இல்லை சேட்டா, ஒருத்தனும் என்னை சீண்டிக்கூட பார்க்கவே இல்லை, என் கவலையும் அவர்களுக்குப் புரியவும் இல்லை...!"
"சரி அந்த லேட்டர்பேட் எங்கே இருக்கு தெரியுமா...?"

"உங்ககிட்டேதான் சார் [[சேட்டன் ஸ்லாங் மாறி இப்போ சார்]] இருக்கு...!"

"என்னாது என்கிட்டே இருக்கா [[ஹி ஹி]]....?"

"ஆமா சார் உங்க ஆபீஸ் ஃபைலில்தான் இருக்கு...!"

[[அடங்கொன்னியா எனக்குத் தெரியாமப் போச்சே]]

"ஸோ....?"

"அனுக்கிரகம் பண்ணவேண்டும்....."

"அதெல்லாம் முடியாது....ஜி எம்'முக்கு  தெரிஞ்சா என் வேலை போயிரும் ஆளை விடுய்யா...."
"சார் சார் பிளீஸ் இதை வெளியே யாருகிட்டேயும் சொல்லி என்னை மாட்டிவிட்டுறாதீங்க சார் பிளீஸ்...."

"நான் என்ன உங்க ஊர்காரன்னு நினைச்சியா போய்யா..."

அதுக்கப்புறம் எனக்கு மனசு கேக்கவேயில்லை, இவனின் சம்பளக்குறைவும், குடும்பபாரமும் மனசை குடைய ஆரம்பிச்சுது, நாமளும்தான் குடும்பபாரம் சுமக்கிறோமே நமக்குத் தெரியாதா என்ன...? கவலையாக சிலநாள் கழிந்தன, என்னை பார்க்கும் நேரமெல்லாம் பயந்து ஒதுங்க ஆரம்பித்தான் அவன், ஒருநாள்.....

எங்கள் ரிஷப்சன் ஏசி பழுதடையவே, இவர்களின் டிப்பார்ட்மெண்டை வயர்லஸ்ல் அழைத்தேன் அப்போது டியூட்டியில் இருந்தவன் இந்த சேட்டன், ஏசியை சரி செய்வதற்கு இவன் மட்டுமே தனியாக வந்தான், நானும் ரிஷப்சனில் அப்போது தனியாக இருந்தேன்.

ஏசி வேலை செய்துகொண்டிருந்தவனை பார்த்து என் மனசுக்குள் அவன் நிலைமையை நினைத்துப்பார்த்து வேதனை அடைந்தவனாக........அந்த லேட்டர்பேட் இருந்த டிராயரை ஒப்பன் பண்ணி காட்டினேன்...

"இங்கே பாருய்யா நீ சொன்ன லேட்டர்பேட் இதுதானே...?"

"ஆமாம் சார்...!"

"ஓ சரி, அப்போ இது இந்த டிராயரில் இருக்கு, வேணும்னா உனக்கு பத்து நிமிஷம் டைம் தருகிறேன், நான் கெஸ்ட் கூடப் பேசிட்டு இருக்கும்போது, எனக்கே தெரியாமல் இதை நீ லவட்டிக்கொண்டு போகவேண்டும் முடியும்னா எடுத்துக்கொள் அப்புறம் உன் இஷ்டம்"ன்னு  சொல்லிட்டு நான் ஃபிரன்ட் ஆபீஸ் வந்துவிட்டேன்...[[சேட்டன்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன]]

சிலநாள் கழித்து கேள்விப்பட்டேன் சேட்டன் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாகவும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டதாகவும் அறிந்தேன்....மனதில் சந்தோசம்.....அன்று நிம்மதியாக தூங்கினேன்...!

இது நியாயமா...? தர்மமா...? என்றால் என்னிடம் பதில் இல்லை......எனக்கு அவனின் கண்ணீரும் கம்பலையுமே கண்ணின் முன் நின்றது...! [[எங்கள் ஸ்தாபனத்தில்  பலருக்கு அவர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்லை என்பதும் உண்மையே...!]] 

அவனவன் வேதனையும் வலியும் படும் அவனவனுக்குதான் தெரியும் இல்லையா....!

டிஸ்கி : மேலே இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் நானும் குப்பை கொட்டுகிறேன், ஆனால் அது எந்த ஹோட்டல்'னு காட்டமாட்டேன், என் முக்கிய நண்பர்களுக்கு தெரியும் ஹி ஹி....
------------------------------------------------------------------------------------------
ஒரு ஜோக்...

"இவரு நல்லா பாடுவாருன்னு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"

"அப்புறம் என்னாச்சு...?"

"எழும்பி மைக்கை பிடிச்சு பாட ஆரம்பிச்சுட்டார்"

"அய்யய்யோ அப்புறம்...?"

"அப்புறம் என்ன...பொதுவா மேடைக்கு கீழே இருக்குறவனுகதான் சாவானுங்கன்னு பார்த்தா....கொய்யால அவனுக ஓடி தப்பிச்சுட்டாணுவ....."

"அப்புறம் என்னாச்சுய்யா...?"

"என்ன நொன்னே ஆகும்...? மேடையில இருந்த தலைவனுக ஓடமுடியாம மண்டையை பூட்டானுக..."

ஆஹா இப்பிடியும் ஒரு ஐடியா இருக்கா...? எலேய் விக்கி அண்ணே, இது என் சொந்த சரக்கு அதனால இது பாடத்துல வரனும், அண்ணனுக்கு தஞ்சாவூர் கோவில்ல சேலை ச்சே செலை வச்சி கல்வெட்டுல எழுதனும் சொல்லிப்பூட்டேன் ஆமா...!

13 comments:

  1. உதவிய உள்ளத்துக்கு என் நன்றி.

    ReplyDelete
  2. சேட்டேன் எப்பாவது சந்தித்து ,நன்றி வணக்கம் எதாவது தெரிவித்தார அல்லது தெரியாது மாதிரி நீ யாரோ நான் யாரோ என்று போகிறார -உதவி பண்ணினவர்களை மறப்பது நடைமுறை -அதிகம் அதினால் தான் கேட்டேன்

    ReplyDelete
  3. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை.

    ReplyDelete
  4. அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே..............

    ReplyDelete
  5. வாழ்வில் ஏணிப்படியாகவாது இருக்க வேண்டும்... உங்களுக்கு ஒரு சல்யூட்... சேட்டனை மறந்து விடுவது நல்லது...

    நல்ல ஜோக்ஸ்..

    நன்றி...

    ReplyDelete
  6. மணோ...இதெல்லாம் அங்கு சாதாரனம். நான் நிறை பேருக்கு இப்படி செய்ததுண்டு பாகிஸ்தானிகள், பெங்காலிகள் மற்றும் நம் நாட்டவர் என்று. வேறு இடத்துக்கு போனபின்னும் அவர்கள் என்னிடம் காட்டும் அந்த நட்பு சிறப்பான ஒன்று. ரம்ஜான், ஹஜ் போன்ற விடுமுறை நாட்களில் என்னை காண வந்தால் சூப்பர் மார்க்கெட்டில் கண்டவைகளையும் வாங்கிக்கொண்டு ஒரு கூட்டமே வந்துவிடும். நல்ல மனசுதான்யா உனக்கு.

    ReplyDelete
  7. அதுசரி, நீறு வேலை செய்யும் அந்த ஹோட்டல் எதுன்னு எனக்குதேரியுமே!
    அட கிறுக்கு, சில பல பதிவுகளுக்கு முன்பே வேலை செய்யும் ஹோட்டலின் படத்தையும் போட்டாகிவிட்டது.
    மறந்து போச்சா???? :)))))))))))

    ReplyDelete
  8. இது நியாயமா...? தர்மமா...? என்றால் என்னிடம் பதில் இல்லை..//
    ரத்தம் உறிஞ்சும் சில அட்டை பூச்சிகளிடம் சிலருக்கு நல்லது செய்ய இப்படி நடந்து கொள்வதில் கண்டிப்பாக தவறேதும் இல்லை நண்பரே. என்ன ஒன்னு ஒங்க மொதலாளிக்கு தெரியாம பார்த்துக்கங்க, இல்லாட்டி நம்மளுக்கு யாரோட உதவியாவது தேவைப்படும்.(ஏன்னா நம்மளுக்கு நடந்தது அப்படி!!!!)

    ReplyDelete
  9. தக்க நேரத்தில் செய்த உதவி. நல்லா இருக்கட்டும். மனப்பூர்வ நன்றி உங்களையும் உங்களின் குடும்பத்தையும் மறைமுகமாக காக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! ஜோக் சூப்பர்!

    ReplyDelete
  11. தப்பில்லை. நீங்க மாட்டாத வரை!

    ReplyDelete
  12. ஆஹா.... அவ்ளோ நல்லவரா நீங்க பாஸ் :)))

    ReplyDelete
  13. ஹோட்டல் புகைப்படங்கள் செமையா இருக்கு :)))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!