Tuesday, November 20, 2012

அப்பாடா இம்புட்டுதான்ய்யா மருத்துவம்...!

சேனா தலைவர் பால்தாக்கரேயை பலர் தம் தம் பிளாக்கில் போட்டுத்தாக்கினாலும், ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய காரியமும் உண்டு அது...?

நிழல் உலக தாதாவின் ஆட்சி மும்பையில் படராமல், வேர்விடாமல் தடுத்ததில் பால்தாக்கரேக்கு அதிகமான  பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை, இல்லைன்னா நம்ம டாக்டர் அப்துல்கலாம் இந்தியா 2020ல்  வல்லரசு ஆகி இருக்கும் என்று சொல்லிருக்கமுடியாது, இந்தியா "பல்லரசு" ஆகி பல்லை காட்டியிருக்கும்....அதாவது மும்பை முற்றும் நிழல் உலக கும்பல் கைகளின் கக்கத்துக்குள் போயிருக்கும்...!

@பண முதலைகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும், நிழல் உலகத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும், ஆளாதவர்க்கத்திர்க்கும் தீராத தலைவலியாக மாறியிருப்பது சமூக இணையத்தளங்கதானாம்...!

@நஷ்டம்...நஷ்டம் என்று அலறும் விஜய் மல்லையா, மான்யமாக பெறப்போகும் பணம் யாருடையது..? காங்கிரஸ் கட்சியின் "@#$%%^" சம்பாதிச்சு வைத்ததா? மக்களின் பணம்ய்யா மக்களின் பணம்...!

@திடீரென குளிகாலம் ஆரம்பித்ததால் பஹ்ரைனில் ஸ்வெட்டர்களின் விலை தாருமாறாகிவிட்டது மலையாளி சேட்டன்களின் புண்ணியத்தில், ஒரே பிராண்ட் கடைக்கு கடை விலையை மாத்தி மாத்தி சொல்லி விக்குரானுக...!!!

@முகரம் பண்டிகையால் பஹ்ரைனுக்கு வரும் சுற்றுலா பயணிகள்[!!!] எண்ணிக்கை ககககககணிசமாக குறைந்துள்ளது. [[கலவரம் காரணம் அல்லது பயம்]]

@போன வருஷம் பிளாக் எழுதிய கணிசமான பிளாக்கர்ஸ் இந்த வருஷம் அட்ரஸே இல்லாமல் போனதன் மர்மமும் புரியவில்லை, ஏனென்றும் விளங்கவில்லை...!

@இந்தியன் முஜ்ராக்களில் நேப்பாள் பெண்களின் வருகை அதிகமாக இருக்கிறது, இருபது வயசுக்குட்ப்பட்ட பெண்கள், பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது [[பஹ்ரைன்]]


@தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

நன்றி : சிவகுமார் சித்தமருத்துவம்

@வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

@தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகி[கனா]யாகவே இருக்கலாம்.


நன்றி : பாட்டி வைத்தியம்.

12 comments:

 1. பயன் தரும் தகவலும் அருமை... நன்றி...

  ReplyDelete
 2. கொத்து கறி அருமை....இடுப்பழகன் ஆகனும்னா(!) இவரப்பாருங்க...கொளுத்தி போட்டாச்சி...

  ReplyDelete
 3. அண்ணன் சும்மா ஜம்முன்னு ஸ்லிம் ஆகிட்டேன், நடக்கும்போது என்னா ஜாலியா இருக்குதெரியுமா?

  ReplyDelete

 4. //நன்றி : சிவகுமார் சித்தமருத்துவம் //

  நன்றி. நன்றி.

  ReplyDelete
 5. இம்புட்டுதானா.... ஐ

  ReplyDelete
 6. மனோஜ் சித்தவைத்திய சாலை சேலம்!
  வேறு எங்கும் கிளைகள் கிடையாது..!

  இப்படிக்கு

  பன்னிக்குட்டி!

  :)))

  ReplyDelete
 7. நான் இந்த பதிவை படித்தேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 8. பல்வகைக் குறிப்புகள் பயனுள்ளன நன்றி.

  ReplyDelete
 9. உபதேசம் ஊருக்கு மட்டும் தானா ?உங்க இடுப்ப பாத்தீங்களா ?

  ReplyDelete
 10. இஞ்சி,தக்காளி,நெல்லிக்காய்,வெந்தயம்,பீட்ரூட்,கேரட் அப்படி இப்படின்னு பச்சையாக ஜூஸ் செய்து சாப்பிடுவது கிட்னிக்கு எதுவும் பிரச்சனையாகாதான்னு முதலில் விசாரிக்கணும்.

  ரோஸ்ட் தோசை கிட்னிக்கு ரொம்ப நல்லதாமே???

  ReplyDelete
 11. இனித் தக்காளிதான் !

  ஒரு வெறியோடு பிளாக் எழுதி வந்த நானே முகப்புத்தகத்தில கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேனே....ஆனாலும் உருப்படியா ஏதும் எழுதிறமாதிரி இல்லை.மத்தவங்களும் அப்பிடித்தான்போல மனோ!

  ReplyDelete
 12. // முஜ்ராக்களில் //

  அப்படினா?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!