புதிய கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்ததும் எனக்கு கம்பெனி ரூம் தந்தார்கள், அங்கே என்னோடு பணி புரியும் அடுத்த செக்சன் ஆட்களும் தங்கியிருப்பதால், அவர்களில் சிலர் என் ரூமிற்கும் அடிக்கடி வந்துபோவதுண்டு.
அதில் ஹோட்டலில் ஒரு முக்கிய பொஷிசனில் இருக்கும் சேட்டனும் ஒருவர், நான் லேப்டாப்பில் இருந்துகொண்டு பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும், பிளாக்கிலுமாக அளவளாவியது கண்டு அவருக்கும் பேஸ்புக் ஆசை தொற்றிக்கொள்ள...
டியூட்டியில் இருந்துகொண்டே [[டியூட்டியில்]] அவரும் பேஸ்புக் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணி தங்கள் நண்பர்களோடு அளவளாவினார், ஆனால் சேட்டனுக்கு "மலையாளத்தில்" டைப் பண்ணும் மேட்டர் தெரியவில்லை, அதற்காக என்னை அவர் ஆபீசுக்கு அழைத்து, பேஸ்புக்கில் என்னென்ன செய்யலாம் என்று கேட்டதை எல்லாம் எனக்கு தெரிந்தவரை சொல்லிக்கொடுத்தேன்.
அப்படியே மலையாளம் டைப்புவதை சொல்லிக்கொடுத்தும், மலையாளம் ஆஃப்சன் இருப்பதையும் எப்படி டைப் செய்யவேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தேன், அதுதான் எனக்கும் "அன்பான" வினையாக போயிற்று.
அதுவரை டியூட்டியில் பேஸ்புக்கில் விளையாடியவருக்கு, டியூட்டி முடிந்தும் அதில் விளையாட ஆசை வந்துவிட, என் ரூமில் வந்து என் லேப்டாப்பை கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்...!
இவருக்கு ஒரு குணமுண்டு, காலையில் பாத்ரூம் போனதில் இருந்து இவர் உறங்கும்போது காணும் கனவுகள் வரை மனைவியுடன் பெரிய கதையாக சொல்லி அருகில் இருப்பவர்களை ஓடவைப்பது வழக்கம்.[[அவ்வ்வ்வவ்வ்வ்]]
நானும் தெரியாமல் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை காட்டிகொடுத்துவிட, எனக்கு கொலைகொலையா முந்திரிக்கா கதையாகிவிட்டார். நாள்தோறும் என் ரூமிற்கு வந்து அவர் குடும்பத்தோடும் நண்பர்களோடும் வீடியோ சாட்டிங்கில் பேசி, என் உறக்கத்தையும், என் சாட்டிங், பேஸ்புக், டுவிட்டர், பிளாக் விளையாட்டை கெடுக்கத் தொடங்கிவிட்டார், எனக்கோ தர்ம சங்கடமாகப்போனது.
சொல்லவும் முடியவில்லை, வயதுக்கு மூத்தவர் வேறே, நல்லமனுஷனும் கூட....வருத்தப்பட்டுருவாரேன்னு நினச்சி சில நேரங்களில் இவர் டியூட்டி முடியுமுன்னே நான் ரூமுக்கு ஓடிப்போயி கதவை பூட்டிக்கொண்டு விடுவேன்.
ஆனாலும் இவரும் எனக்குமுன்பே ஓடிவர ஆரம்பித்துவிட்டார், அப்புறம்தான் ஒருநாள் சொன்னேன் நீங்களும் ஒரு லேப்டாப் புதுசாக வாங்கினால் என்னவென்று, இல்லை மனோஜ் எனக்கு லேப்டாப் யூஸ் பண்ணத் தெரியாது....ஐயோ சாதா நீங்கள் கம்பியூட்டர் ஆபரேட் பண்ணுவது போலதான் லேப்டாப்பும் என்று சொல்லி விளக்கினேன்.
அம்புட்டுதான்..... சம்பளம் வாங்கியதும் என்னையும் கூட்டிக்கொண்டு லேப்டாப் கடைக்கு போயேவிட்டார், என் நண்பன் விண்ணரசன் எனக்கு லேப்டாப் வாங்கித்தந்த அதே கடைக்குக் கூட்டிப்போயி, hp கம்பெனி லேப்டாப் ஒன்று வாங்கினோம்.
லேப்டாப் வந்தாச்சு சரி, இன்டர் நெட் கனெக்ஷன் வேணுமே..? zain கம்பெனிக்கு போனால் அங்கே இவர் பாஸ்போர்ட் கேட்க, இவரிடம் இல்லை, எங்கள் கம்பெனியிடம் அதற்க்கு அப்ளை செய்தாலே கிடைக்கும்.
பாஸ்போர்ட்டும் நெட் கனெக்ஷன் டிவைசும் கிடைக்க ரெண்டு நாளாகிவிட, என்பாடு பெரிய போராட்டமாகிவிட்டது, டிவைஸை கொண்டுவந்து மாட்டினவர் என்ன செய்தாரோ தெரியல, நெட் கனெக்ஷன் புட்டுகுச்சு.
மறுபடியும் எனக்கு தலைவலி தொடங்க, என்னை தூங்கவிடாமல் படுத்திவிட்டார், நெட் கனெக்ஷன் என்ன பிரசினைன்னு பல நண்பர்கள், எங்கள் ஹோட்டலுக்கு வரும் டெக்னீஷியன்கள் என்று யாரையும் இவர் விடவில்லை, ஒருத்தனும் இவருக்கு சரியானபடி சொல்லி கொடுக்கவில்லை.
நடுவில் என்னையும் போட்டு உருட்ட ஆரம்பித்தார், எனக்கோ மனசு கேக்கவில்லை, அவருக்கு என்ன மனைவி பிள்ளைகள் கூட எப்பவும் பேச ஆசையாக இருக்கிறாரே என்று சொல்லி,
குடும்பத்தை ஊரில் இருந்து கொண்டுவந்து ஒருவாரமே ஆன நண்பன் விண்ணரசனுக்கு [[மனசே இல்லை பாவம் அவன்]] போன் போட்டு விஷயத்தை சொன்னேன், அதுக்கு என்ன அண்ணா நான் நாளை காலையிலேயே உங்க ரூமிற்கு வந்து செய்து கொடுத்துவிடுகிறேன் கவலைவேண்டாம் என்றான்.
ஆனாலும் சேட்டன் நம்பவில்லை, ம்ஹும் நான் பார்க்காத ஆளா, டெக்னீஷியனா..? ஒரு தமிழன் வந்து எனக்கு நெட் கனெக்ஷன் செய்து தருவதா நாங்கள் என்ன அம்புட்டு அறிவில்லாதவர்களா என்ற தொனியில்தான் அவர் பேச்சும் இருந்தது...! நான் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் விண்ணரசன் ஓடோடி வந்தான், லேப்டாப்பை செக் பண்ணினான், டிவைஸை குத்தினான், வேலை செய்யவில்லை, நேரே zain கஸ்டமர் சர்வீசுக்கு போனைப்போட்டான் விசாரித்தான், பத்தே நிமிஷம் நெட் ஒப்பன் ஆனது, அண்ணா நான் கிளம்புறேன்னுட்டு நன்றிகளை எதிர்பார்க்காமல் ஓடிப்போனான் அவன் வீட்டுக்கு...!
சேட்டன் பிளந்த வாயை மூடமுடியாமல் நின்றிருந்தார்....!
"ஹலோ என்னாச்சு சேட்டா?"
"எடே, பல மலையாளி பன்னாடை பரதேசிங்க எல்லாம் பெரிய பெரிய டெக்னீஷியன்னுட்டு பீலா விட்டுட்டுதான் திரியுறானுக போல, ஐந்து நட்சத்திர ஹோட்டல் டெக்னீஷியங்க கூட வந்து பார்த்துட்டு, ஒன்னும் தெரியலைன்னுட்டு போனானுக, இவன் வந்தான் பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் முடிச்சுட்டு போயிட்டானே"ன்னு மூக்கில் விரலை வைக்க....!
நான் ஒன்றும் சொல்லாமல் போயி தூங்கிவிட்டேன்.
நான் டியூட்டியில் இருக்கும்போது [[ரெண்டுபேருக்குமே ஒரே நேரம்தான் வேலையும்]] என்னிடம் வந்தவர் சொன்னார், "உலகத்துலேயே கம்பியூட்டர் கில்லாடிங்க தமிழனுகதான்னு என் கேரளா நண்பர்கள் பலபேர் பலமுறை என்னோடு சொன்னதுண்டு, ஆனால் நான் அதை நம்பவில்லை, இன்றைக்குத்தான் நேரில் பார்த்தேன், எஸ்.... தமிழன் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகளே ஒத்துக்கொள்கிறேன்" என்றாரே பார்க்கலாம்...!
காலரை [[டை கட்டியிருந்தாலும்]] ஒருமுறை தூக்கிவிட்டுக்கொண்டேன்...!
ஸ்பெஷல் நன்றி : விண்ணரசனுக்கு...
தமிழன் டா.....
ReplyDeleteதமிழன் டாடாடாடாடாடாடாடா
ReplyDeleteவணக்கம் சகோ மனோ...
ReplyDeleteநிறைய தொல்லைகள் அனுபவித்தாலும்...
தமிழன் தமிழன்தான் என்று கடைசியில்
சொன்னதும்
அப்பாட..
என்று இருந்தது....
ம்ம் ஓகோ ஓகே ஆகட்டும் ஆகட்டும் எதோ நீங்க தப்பிட்டிங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteவணக்கம் சகோ மனோ...
நிறைய தொல்லைகள் அனுபவித்தாலும்...
தமிழன் தமிழன்தான் என்று கடைசியில்
சொன்னதும்
அப்பாட..
என்று இருந்தது....//
நமக்கு அது ஒன்னு போதுமே புலவரே....!
நெற்கொழுதாசன் said...
ReplyDeleteம்ம் ஓகோ ஓகே ஆகட்டும் ஆகட்டும் எதோ நீங்க தப்பிட்டிங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
தப்பிச்சது மட்டுமா சாதித்தும் காட்டுனோம்ல...!
அதானே பார்த்தேன்... நாமா யாரு... எவ்வளவு உயர போனாலும் பணிவோடு இருப்போமில்லே...
ReplyDeleteபணிவே நமக்கு அழகுய்யா....!
ReplyDeleteMmmm... Super post.
ReplyDelete:)
ReplyDeleteபல வருடங்களுக்கு பிறகு மனோவிடமிருந்து ஒரு அருமையான பதிவு.
ReplyDeleteஉண்மையில் நல்லாவே இருக்கு மனோ. அந்த கேரளா நண்பர் படுத்திய பட்டை மிக அழகாக கையாண்ட விதம் பாராட்டப்படவேண்டும். நானாக இருந்தால் கடுப்பாகிவிடுவேன்.
எனக்கு தெரிந்து அரபு நாடுகளில் கம்ப்யூட்டர் துறைகளில் அதிகம் வேலை செய்பவர்கள் மற்றவர்களை விட தமிழர்களே.
அப்படி போடு
ReplyDeleteதமிழன் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகளே ஒத்துக்கொள்கிறேன்" உண்மைதானே.... நம்ம சேட்டன் இன்னும் கொஞ்ச நாள்ல உங்ககிட்டே வந்து பேஸ்புக்க கண்டுபுடிச்சதே அவரு மாதிரி பேசுவார் பாருங்க!!!!!!
ReplyDelete////எஸ்.... தமிழன் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகளே ஒத்துக்கொள்கிறேன்////
ReplyDeleteநிச்சயமாக நாம் கில்லாடிகள் தான் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளாம்
ReplyDeleteகம்ப்யூட்டர் ஆனாலும் அதில கம்ப்ளைன்ட் ஆனாலும்
கரைச்சு குடிப்பவன் தமிழன் தமிழன் தான் அண்ணே தமிழன் தான்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇதுக்குத்தான் ஊருக்கொரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது.......
ReplyDelete//என்னை அவர் ஆபீசுக்கு அழைத்து, பேஸ்புக்கில் என்னென்ன செய்யலாம் என்று கேட்டதை எல்லாம் எனக்கு தெரிந்தவரை சொல்லிக்கொடுத்தேன்.
ReplyDelete//
அய்யய்யோ...அப்போ அவரும் சன் நியூஸ்ல வருவாரா?
இவ்வளவு பொறுமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு… ஆமாண்ணே…நீங்க தலை நிமிர்ந்த தமிழன் தான். சந்தேகம் இல்லை.
ReplyDeleteஉங்க கூட நான் வேலை பாத்திருக்கலாம் மனோ; இம்புட்டு ஹெல்ப் பண்றீங்க !
ReplyDelete