Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, July 9, 2013

கறுப்பு பணத்தில் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் திட்டம்...!

ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...
- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில்    கொள்ளா இருப்பு...
- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் 
   பணமும் கோடிகளில்...
- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...

இப்படி நாள்தோறும் பெருகிவரும் கோடிகள்தான் எத்தனை எத்தனை.

- இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 103 கோடி.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்க்கை வாழ்பவர்கள் 25 கோடி.
- ஒருவேளை கஞ்சிக்கும் இல்லாதார் 30 கோடி. 

என்ன முரண்பாடு...? 
மக்களுக்கு என்ன அடிப்படைத் தேவை ?.  இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை கற்க கல்வி, சுகாதரமான வாழ்விடம் ஆகியவை.

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடக்கிறோம். தனக்கென வாழ்விடம் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை கோடி?. ஒருவேளை உணவுக்கும் நாயாய், பேயாய் அலைந்து, உழைத்து உண்ணும் மக்கள் எத்தனை கோடி?.

அடிப்படை வசதியில்லாத - சுகாதாரச் சீர்கேட்டுடன் வாழும் மக்கள்தான் எத்தனை கோடி...? இது தனி மனித கோளாறு என்று புறந்தள்ளிவிடல் கூடாது ; முடியாது.

ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளாய் கறுப்புப் பணம் புழங்குவதும்... ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளில் லஞ்சம் தாண்டவமாடுவதும்... ஒரு பக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் இவ்வளவு என்று புள்ளி விபரம் கூறுவதும்...  என்ன ஐந்தாண்டு திட்டம்... என்ன அதன் வளர்ச்சி?.

 இத்தனைக் கோடி கறுப்புப் பணம், லஞ்சப் பணத்திலிருந்தே வறுமையில் வாடும் வேலையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், கல்வியறிவு அற்றோர்க்கு என நலவாழ்வுக்கு குறைந்த பட்சம் ஒரு குடிமகனுக்கு (இல்லாதோருக்கு) ஒரு கோடி திட்டத்தில் அவனது வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட முடியாதா? என்பதே நம்முன் எழும் கேள்வி.
உதாரணமாக :

ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி திட்டம் என்ற வகையில் அவர்கள் வாழ ஒரு இடம், இல்லம் அமைத்து தந்து அதனை விற்கவோ ,அடமானத்துக்கு வைக்கவோ, வாடகைக்கு விடவோ அனுமதிக்காமல் அவை அவர்களில் வாரிசுதாரருக்கு, வாரிசு அல்லாத பட்சத்தில் உறவுகளுக்கு மட்டுமே என்று வரையறை தந்தும்... கட்டாய வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப உருவக்கி தொழில் அல்லது பணி தந்தும்... கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்தி வறுமையில் வாடும் குடும்பத்தினர்க்கு வழிகாட்டி வாழ்வாதாரத்துக்கு அடிப்படை திட்டம் தீட்டினால்தான் என்ன...? இது சாத்தியம் தானே...?

திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் வருவாயிலிருந்து இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி தரலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கறுப்பு பணம் - லஞ்சப் பணம் - தனிமனித சொத்துக் குவிப்பு இவைகளை கொண்டே மக்கள் நலதிட்டங்களுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உருவாக்கிவிடலாமே... இதில் என்ன தயக்கம் இங்கு ஆளும் அரசியலர்க்கு. மேலும், ஒரு அரசு என்று ஏன் இருக்கிறது ? எதற்கு இருக்கிறது ?.

மக்களாக பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வாழ ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெய்யிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை காத்துக்கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது.  அத்தியாவசியமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் குடுபத்தின் கடமைகளை நிறைவேற்றவும் தனக்கென ஒரு வேலையினை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தவிர்த்து தன்னுடைய இனம், சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமை ஓவ்வொருவருக்கும் உண்டு.

பலர் கூடி வாழுகிற சமூகத்தை, அவர்களது பல நற்செயல்களில் இடையூறு இல்லாமல் சமூகம் முழுவதும் நலம் பெறும் வகையில்  சீராக வைத்திருக்க வேண்டும் இப்படி செய்வது ஓர் அரசின் கடமை. 
இதனை தவிர்த்து... தங்கள் சுய நலத்துக்காக சமூக வளர்ச்சி என்ற பெயரில் ஆலைகள் சமைப்பதும், அணைகள் கட்டுவதும், நாற்சக்கர சாலைகள் அமைப்பதும்... விண்ணில் உலா வர வழி செய்வதும் சரியான மக்கள் நல வளர்ச்சித் திட்டம் என்று சொல்லிவிட முடியுமா ?.

வளர்முக நாடுகளில், நவீன இந்தியாவில் அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் எத்தனை நன்மைகள் வளர்ச்சிகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வான - அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு சமூகம், வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது என சொல்வது என்ன பம்மாத்துத்தனம்.

 இந்தியாவின் பாதுகாப்புக்கென காவலர்களையும், நீதி மன்றங்களையும் வளர்த்து கோடிக்கணக்கில் செலவிடுவதும் தேவைதான். எனினும் ஆளும் அரசுகள் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், அரசின் பணிகள், திட்டங்கள் பணம் பண்ணும் தொழிலாக ஆக்காமல், அடிப்படை வசதியற்ற மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே வறுமையைப் போக்கும் வழியாகும்.
அரசுகள் தங்கள் சாதனைகளை வெளிச்சமிட்டுக்காட்ட செலவுகள்தான் எத்தனை கோடிகள்... மாநாடுகள், அரசு விழாக்கள், அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள், அவை புறக்கணிப்பு என்ற பெயரில் விரயமாகும் கோடிகள் எத்தனை... இந்தக் கோடிகளில் வறுமையால் வடும், அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு சில கோடிகளை ஒதுக்கினால் என்ன...?

அடிப்படை வசதிகள் அற்ற எந்த தேசத்துக்கும், அரசுக்கும் பேரிடியாய், பேரிடராய் உருவாகுவதே தீவிரவாதம் - நக்சல்கள் என்பதை அரசு எப்போது உணருகிறதோ - வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறதோ அப்போதே ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும்.

அப்படி ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால்தான் பல்வேறு நிறத்தவராய், இனத்தவராய், மொழியினராய், கலாச்சார பண்பாடுடையவராய் வாழும் இத்திருத் தேசத்தை வளம்பெற செய்ய முடியும் என்பதை உணர்வோம்.

நன்றி : கோ . எழில் முத்து மற்றும் நக்கீரன் 


Tuesday, November 20, 2012

அப்பாடா இம்புட்டுதான்ய்யா மருத்துவம்...!

சேனா தலைவர் பால்தாக்கரேயை பலர் தம் தம் பிளாக்கில் போட்டுத்தாக்கினாலும், ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய காரியமும் உண்டு அது...?

நிழல் உலக தாதாவின் ஆட்சி மும்பையில் படராமல், வேர்விடாமல் தடுத்ததில் பால்தாக்கரேக்கு அதிகமான  பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை, இல்லைன்னா நம்ம டாக்டர் அப்துல்கலாம் இந்தியா 2020ல்  வல்லரசு ஆகி இருக்கும் என்று சொல்லிருக்கமுடியாது, இந்தியா "பல்லரசு" ஆகி பல்லை காட்டியிருக்கும்....அதாவது மும்பை முற்றும் நிழல் உலக கும்பல் கைகளின் கக்கத்துக்குள் போயிருக்கும்...!

@பண முதலைகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும், நிழல் உலகத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும், ஆளாதவர்க்கத்திர்க்கும் தீராத தலைவலியாக மாறியிருப்பது சமூக இணையத்தளங்கதானாம்...!

@நஷ்டம்...நஷ்டம் என்று அலறும் விஜய் மல்லையா, மான்யமாக பெறப்போகும் பணம் யாருடையது..? காங்கிரஸ் கட்சியின் "@#$%%^" சம்பாதிச்சு வைத்ததா? மக்களின் பணம்ய்யா மக்களின் பணம்...!

@திடீரென குளிகாலம் ஆரம்பித்ததால் பஹ்ரைனில் ஸ்வெட்டர்களின் விலை தாருமாறாகிவிட்டது மலையாளி சேட்டன்களின் புண்ணியத்தில், ஒரே பிராண்ட் கடைக்கு கடை விலையை மாத்தி மாத்தி சொல்லி விக்குரானுக...!!!

@முகரம் பண்டிகையால் பஹ்ரைனுக்கு வரும் சுற்றுலா பயணிகள்[!!!] எண்ணிக்கை ககககககணிசமாக குறைந்துள்ளது. [[கலவரம் காரணம் அல்லது பயம்]]

@போன வருஷம் பிளாக் எழுதிய கணிசமான பிளாக்கர்ஸ் இந்த வருஷம் அட்ரஸே இல்லாமல் போனதன் மர்மமும் புரியவில்லை, ஏனென்றும் விளங்கவில்லை...!

@இந்தியன் முஜ்ராக்களில் நேப்பாள் பெண்களின் வருகை அதிகமாக இருக்கிறது, இருபது வயசுக்குட்ப்பட்ட பெண்கள், பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது [[பஹ்ரைன்]]


@தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

நன்றி : சிவகுமார் சித்தமருத்துவம்

@வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

@தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகி[கனா]யாகவே இருக்கலாம்.


நன்றி : பாட்டி வைத்தியம்.

Tuesday, January 3, 2012

மக்களின் நியாபக மறதிக்கு நாம் கொடுக்கும் விலை...!!!



தனுஷின் கொலைவெறி பாட்டுக்கு எதிர்பாட்டு [[நண்பன் சத்ரியன் எனக்கு அனுப்பினது]]
---------------------------------------------------------------------------------

காமன்வெல்த் ஊழலை மறந்துட்டோம்...!!!

மும்பை குண்டு வெடிப்பை மறந்துட்டோம்...!!!



மும்பை தீவிரவாதிகள் தாக்குதலை மறந்துட்டோம்...!!!

ஆதார்ஸ் குடியிருப்பு ஊழலை மறந்துட்டோம்...!!!



"பழம்"மொழியை மறந்துட்டோம்...!!!

இலவசங்களை ஏத்துகிட்டோம்....!!!



விலையேற்றத்தையும் சகிச்சுகிட்டோம்...!!!

அணுமின்நிலையம் போராட்டம்தனை கண்டுக்காமல் இருக்கிறோம்...!!



முல்லைப்பெரியார் விஷயத்துல கொஞ்சமே கொஞ்சம் விழித்துகொண்டோம்...!!!

திகார்ல இருந்து மன்னன் வெளியே வந்தாலும் செண்டை மேளத்தோட வரவேற்க ஆயத்தம் ஆயாச்சு...!!


ஹிந்தி, ஆங்கிலம் பேசி, உரிமைகளை பெற்று தராத ஆட்களை ஜெயிக்க வச்சி அமைச்சர் ஆக்கி இருக்கோம்...!!!

ஓட்டு இல்லாதவன் கூட கிண்டல் பேச கேட்டுட்டு இருக்கோம்...!!!



புயல் மழையை சகித்து சகஜ நிலைக்கு வந்துட்டு இருக்கோம்...!!!

கொலைவெறி பாட்டை தலையில் வச்சி கொண்டாடிட்டு இருக்கோம் [[பொரதமர் உட்பட]]...!!!



முல்லைப்பெரியாருக்காக ஒரு துரும்பை கூட எடுக்காத, மொங்காத்தா, இன்ஜின், சூலாயுதம், பத்தாம் அறிவை எல்லாம் தலையில வச்சி ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுறோம்...!!!

இந்திய வெளியுறவு துறையில் அநேகம் மலையாளிகளினிமித்தம், பாகிஸ்தானும், சைனாவும் இந்தியாவின் கண்ணுக்குள்ளே விரலை அல்ல காலையே விட்டு ஆட்டிகிட்டு இருக்குது...!!!



வெளிநாட்டுல போயி, இந்திய தேசியப்பாடலுக்கு பதிலாக, மறந்து அந்த நாட்டு பாட்டை பாடி அசத்திய [[த்தூ]] அமைச்சர்...!!!

அமெரிக்காவால் துகுலுரியப்பட்டு நொந்த முன்னாள் சனாதிபதி, அமேரிக்கா சும்மா ஜஸ்ட் லைக் தாட் மன்னிப்பு கேட்டு போனது...!!!



தமிழ்மக்களின் நம்பிக்கை இழந்த பாரம்பரிய பத்திரிக்கை பொணமலர்....!!!

நக்கீரனிடம் இருந்து தப்பிச்சு எஸ்கேப் ஆன விக்கி [[பொன்னம்பலம்]] என்னும் தக்காளி...!!!

கில்மா படங்களை தவிர்த்து நல்லவன் ஆனான் ஒரு மூதேவி....!!


கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் பங்கேற்ற மாநாட்டில் குண்டு மிரட்டல் - தினமலர் செய்தி....!!!


[[ஹா ஹா ஹா ஹா என்னய்யா உங்க ஜோக்குக்கு ஒரு அளவே இல்லையா எளவெடுத்தவனுகளா]] பயிற்சி போதாதோ தினமலருக்கு...?

டிஸ்கி : மக்களுக்கு இருக்கும் இம்புட்டு நியாபக மறதிதான் மேலே சொன்னவர்களின் பலம், அதை அவர்களும் நன்றாக அறிவார்கள்....!!! [[என்ன பொழப்புடா இது விக்கி...? சீக்கிரம் வா நாம இனி களத்துல இறங்கிருவோம்]]



Saturday, November 5, 2011

இன்றைய நாட்டு நடப்பு....!!!


புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்த ஜி- 20 மாநாட்டை முடித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங் தாயகம் திரும்புகிறார். பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே எழுந்துள்ளது.

[[கொய்யால நிம்மதியா ஊர் சுத்திபாக்க விடமாட்டேங்குராணுவ நாசமாபோகட்டும் பெட்ரோல் விலை, அடுத்து எங்கே பயணம் கிளம்புரதுன்னு யோசிக்கணும்...!!!]]

சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

[[இது நமக்கு புதுசா என்ன, கோயம்பேடு பஸ் நிலையமே மாறினாலும் ஆச்சர்யபாடுறதுக்கு இல்லை, அம்மா'ன்னா சும்மாவா...???]]

கடலூர் மாவட்டத்தில் குறுநில மன்னர்களாக இருந்த மாநில இணைச் செயலர் வேல்முருகன், துணைத் தலைவர் திருமால்வளவன், நகரச் செயலர் ஆனந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். குறுநில மன்னர்கள் ஆதிக்கத்திலிருந்து மாவட்ட பா.ம.க.,வை மீட்டுக் கொடுத்த நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, பா.ம.க., தலைவர் மணி ஆகியோருக்கு, மாவட்ட பா.ம.க., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 


[[உங்க கட்சியே அட்ரஸ் இல்லாமல் இருக்கு போங்க போயி வலை வீசி தேடுங்க, உங்களை நினைச்சா சிப்பு சிப்பா வருது...!!!]]



[[ஹா ஹா ஹா ஹா இப்பவாவது கண்டுபிடிச்சாரே, இனி கருப்பு பணம் எல்லாம் வெளியே வந்துரும் போங்க...]]


[[நீங்க வெளியேறின அடுத்த நிமிஷமே திமுக'வும் வெளியேறும், உளவுத்துறை தகவல்...!!!]]

புதுடில்லி:பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், மீண்டும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அப்படி விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என, நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.


[[கோர்ட்'டுங்க எல்லாம் கூடி அம்மாவை கும்மி அடிக்கிறதை பார்த்தால் ஹி ஹி சந்தோஷமாதான் இருக்கு...!!!]]

பெட்ரோல் விலை பத்து முறை ஏறியதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிர்ரென ஏறும் நிலை உருவாகும் என்பதால், நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் வயிற்றில் தற்போதே "புளி'யை கரைக்கிறது. 


[[காங்கிரஸ் ஆட்சி நாசமாபோகட்டும்]]]

கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் உடல்களை தானம் செய்ய இருக்கிறார்கள்...!!!


[[உருப்படியான செயல்கள் பாராட்டுக்கள்..!!!]]

புதுடில்லி: 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி எம்.பி., ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். அவருடன் கலைஞர் டி.வி., நிர்வாகி சரத்குமார், ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.


[[கடல்லையே அந்த ஜா'மீன் இல்லையாமே....!!!]]

தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களுக்கு ஆதரவாக, இடிந்தகரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை உண்ணாவிரதத்தை துவக்கினார்.


[[மக்கள் போராட்டத்துக்கு முதலாவது கை கொடுப்பது வைகோ அண்ணன்தான் வாழ்க வாழ்க இன்குலாப் ஜிந்தாபாத்...!!!]]

புதுடில்லி: ஊழல் தொடர்பாக விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் காங்கிரஸ் தலைவர் சோனியா மவுனம் காப்பது ஏன் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வு குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


[[சோனியா பூந்திக்கு நல்லாவே தெரியும் வாயை திறந்தால் என்ன ஆகும்னு, வாயையே நாறடிக்க ஆளுங்க ரெடியா இருக்காங்க...!!!]]

நன்றி : தினமலர் மற்றும் கூகுள்...

டிஸ்கி : படங்கள் எல்லாம் கூகுளில் இருந்து எடுத்தது.


ஏ யப்பா அபூர்வமான படம் இது, சேலையில் நமீதா....!!!

Wednesday, October 19, 2011

நான் நூறு தடவை சொன்னால்.......!!!!

டப்பா டப்பா வீரப்பா
எப்பம்டா கல்யாணம்

மாசம் பொறக்கட்டும் 
மல்லிகை பூ பூக்கட்டும்

எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை 

குளத்துல கொக்கு
கொலப்பியை நக்கு 
--------------------------------------------------------

மரங்கொத்தி புறாவே
உனக்கென்ன வேலை

காலை எழும்பனும்
பல்லு தேய்க்கணும்

வயலுக்கு போகணும்
நண்டை பிடிக்கணும்

நறநறன்னு கடிக்கனும் 
துறு துறுன்னு பீக்கணும்


-------குழந்தையில் பாடித்திரிந்த பாடல் இன்னும் நினைவில் பசுமையாக--------
----------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும் போது, அவர்களின் அலட்சியம் மக்களை இன்னும் வலுவாக போராடசெய்யும் என்பதை ஏன் எண்ணாமல் போகிறார்கள்...!!!!


பெயரில் மட்டும்தான் காந்தியா...?? செயலில் "நீரோ" மன்னனை நியாபக படுத்துகிறார்கள், இதோ கூடங்குளத்துக்காக, கொல்கத்தாவில் அடையாள உண்ணாவிரதம் நடத்த பட்டிருக்கிறது...!!!

அடுத்ததாக கேரளாவிலும் போராட்டம் நடக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது....??? மக்களுக்காக அரசாங்கமா அல்லது அரசாங்கத்துக்காக மக்களா...???


மமதையோடு இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் இங்கே.....!!!
---------------------------------------------------------------------------------------------------------------------

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பொது மக்களின் நம்பிக்கை இழந்துள்ளோம், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற நிலையில் வலுவான ஸ்திரத்தன்மையுடன் மத்திய அரசு அமைவது மிகவும் முக்கியமாகும். 

ஆனால் இந்த வழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசில் ஏராளமான முறைகேடுகள் மத்திய அரசை பலவீனப்படுத்தி விட்டது. இதனால் நீதித்துறை அரசுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது....!!!!????


இதை சொல்றது யார் தெரியுமா...??  மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்றார். அப்போ அந்த லட்சனத்துலதான் காங்கிரஸ் ஆட்சி நடத்திட்டு இருக்கு...!!!! ஏ யப்பா வெள்ளைக்காரனை தாத்தா [[நேரு]] விரட்டினார், பேரன் வெள்ளைகாரியை இழுத்துட்டு வந்தார் [[நன்றி கே ஆர் விஜயன்]] ராகுல் பூந்தி அமெரிக்கா'காரியை கட்டப்போறாராம்...

ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் நம்ம பிர்ர்ர்ர்தமர், திடீர் திடீர்னு மொட்டைமாடிக்கு ஓடிப்போயி, சத்தமா வாய்விட்டு சிரிக்கிறாராம் தனியாக, வீட்டில் சர்தாரினி நோந்துபோயி, சூன்யா பூந்திக்கு போன் பொட்டு சொல்ல அடுத்த உகாண்டா பயணம் கிளம்புராறாம் நம்ம பிர்ர்ர்ர்தமர்....!!!

----------------------------------------------என்னா ஒரு ரொமாண்டிக் சீன்-------------------------------------------


டிஸ்கி : குப்பனும் சுப்பனும் பாவங்க [[யாரு நம்மதேன்]]

"மனோ"தத்துவம் : எலியை நீ பிடிச்சா எலி காலி, எலி காய்ச்சல் உன்னை பிடிச்சா நீ காலி....

[[கேரளாவில் வேகமா எலி காய்ச்சல் பரவிகிட்டு இருக்கு]]

நீதி : எலியை கண்டால் தூரவிலகு... 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களே,
                             நண்பர்களா, ஹிட்ஸா? என்று பார்க்கையில், நட்பு மட்டுமே என் நம்பிக்கை.
                               தேர்தல் பணி காரணமாக, உடனடியாக நீக்கிட இயலவில்லை. இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் வலைப்பூவில் இருந்து நீக்கியுள்ளேன்.தகவலுக்காக.

--
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.

உணவுஉலகம்
FOOD SAFETY



ஆபீசர் எனக்கு அனுப்பிய மெயில், "நட்புக்கு மரியாதை" நன்றி ஆபீசர்.....!

---------------------------------------------------மலரும் நினைவுகள் அருவியாக------------------------------------------




Saturday, October 15, 2011

தமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...!!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை கொன்றாய், தாடவையின் கையிலிருக்கும் நீ....!!!



இன்று அடிமடியிலேயே கையை வைத்திருக்கிறாய் தமிழ்நாட்டில், இது என்ன ஸ்பெக்ட்ரம் என நினைத்தாயா சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்ல...?? மக்கள் விட்டுகொண்டிருக்கும் பெருமூச்சிலேயே நீ பொசுங்கி போவாய்...!!!

உனக்கு வெக்கம் இல்லையா, ஈனம் இல்லையா, மானம் இல்லையா, இல்லை ரோஷம்தான் இல்லையா...??? ஊனமுற்ற மாற்று திறனாளிகளை தாக்க, எப்படி மனம் வந்தது...?? அவர்களின் சாபம் உன்னை சும்மா விடுமோ..???


யார் இந்த இளங்கோவன்...?? யார் இந்த தங்கபாலு...?? இவர்களுக்கு மக்களை பற்றி என்ன அக்கறை இருக்கிறது...? சூனியா பூந்தியை குளிர்விக்க இவர்கள் செய்யும் இடும்புகள் கொஞ்சநஞ்சமல்ல...!!!


முதல்வர் அம்மா அவர்கள் குரல் கொடுத்தும், நீ அங்கிருந்து கடிதம் அனுப்பி கொண்டிருக்கிறாய்...!!! இதென்ன பழக்கம்..?? கலைஞர் வழியை பின் பற்றினால் விளைவு, விலாசம் இல்லாமல் போகவேண்டியதுதான்...!!!


முதலில் உங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களை [[இருந்தாதானே]] கூடங்குளத்தில் தங்கி வாழசொல்லுங்கள் பார்க்கலாம்...? கட்சியைவிட்டே ஓடிவிடுவார்கள்...!!!

மக்கள் போராட்டம் வெல்வதுதான் சரித்திரம்!!! ஆனால் நீ காந்தி பாதையை மீறி பல காலமாகிவிட்டது என்பதும் எங்களுக்கு தெரியும், ஆனாலும் கலகம் பிறவாது  நீதி கிடைக்காது என்பதும் உண்மையே...!!!


ஜப்பான் அழிவுகளை கண்முன்னால் கண்டும் நீ, மக்கள் நலம் காக்க முன்வராமல் சாக்குபோக்கு சொல்லிகொண்டிருக்கிறாய். ரஷ்ய ராஜதந்திர உறவு வேணும்தான் ஆனால், மக்களுக்கு அழிவு பீதியை உண்டாக்கும் ராஜதந்திரம், பிஞ்ச செருப்புக்கு சமம்...!!!

உண்ணாவிரதம் நடக்கும் ஸ்தலத்திற்கு போக அனுமதி அளிக்காமல் மக்களை தடுக்கும் போலீஸ், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம்...!!!


காங்கிரசின் அல்லக்கைகள், வெட்டி பேச்சு பேசாமல் தைரியமிருந்தால், மக்கள் மீது அக்கறை இருந்தால், அணுமின் நிலையம் அருகில் மக்களோடு மக்களாக குடியேறுங்கள் பார்ப்போம்...!!!

பாதுகாப்பானது பாதுகாப்பானது என வெறும் வாயை மெல்லுகிற நீங்கள், ஆலை ஆபத்தின் போது மக்கள் எப்படி தப்பவேண்டும், அவர்களின் மறுவாழ்வின் அடிப்படை தேவைகள் என்ன என்பதனை சோதனை செய்து காட்டுனீர்களா...???


ஜப்பான், அழிவின் நிறைய விஷயங்களை உலகுக்கு மறைத்து விட்டது அதாவது உங்களுக்கு தெரியுமா சிங்கிடி சாமி...???

பெரும் பொருளாதார மேதை என்று நினைத்த என் நினைப்பில் மண்[ன்] அள்ளிப்போட்டுவிட்டு, சூனியா பூந்தியின் சேலை ஓரத்தை பிடித்து தொங்குவதென்ன, அற்பமான நாற்காலி ஆசைதானே அல்லாமல், மக்கள் நலனுக்கு அல்ல என்பது எப்போதோ உங்களை பற்றி சந்தி சிரிக்க ஆரம்பிச்சாச்சு...!!!


அடுத்து, ஊடகங்கள் பலமாக மூடி மறைக்கும் போக்கு என்னவென்றே புரியவில்லை...!!!???  ஏன் நடுநிலை கொள்கையை தளர்த்தி விட்டார்கள்...?? இதற்க்கு பின்பாக ஏதும் சக்தி இருக்கிறதா..? அது என்ன சக்தி..??

[[நெருங்கிய நண்பர்களுக்கு கூட அணுமின் நிலையத்தின் விபரீதம் தெரியாமல்தான் இருந்தார்கள், இப்போது எல்லாம் எடுத்து விளக்கியபின், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்...!!!]]


இனி உங்களுக்கு ஆயுள் இல்லை என்பது என் சாபம் மட்டுமல்ல, மக்கள் நலம் விரும்பும் நல்லோரின் சாபமும் கூட....கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கேள்வியோடு முடிக்கிறேன், உங்கள் தங்க தானை தலைவி குடும்பம் மட்டும் அங்கே வந்து குடியேறட்டும் பார்ப்போம்...???

--------------------------------------------------------------------------------------


கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
இதற்கு ஊடகங்கள் திரு.உதயகுமார் அவர்களிடம் இவ்வளவு செலவு செய்கிறீர்களே இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு உதயகுமாரும் மக்கள் தான் தந்தார்கள்.வேறு யாரும் எங்களுக்கு தரவில்லை என்று கூறினார்.வெறும் 20 மக்களை(வறுமை கோட்டிற்க்குகீழ் உள்ள மக்களை) கொண்டு இருக்கும் காமநேரி என்ற ஊர் மக்கள் 3500-ரூபாய் தந்தார்கள் எனவும் கூறினார்.

எங்களிடம் கணக்கு வழக்கு கேட்கிறீர்களே.அப்படியென்றால் நீங்கள்உங்களது அணு உலையின் வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள்.என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டார்.ஆனால் ஊடகமோ இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது வருத்தத்தை அளிக்கிறது.
[[நன்றி "வைறை சதீஷ்"]]

ஊடகங்களே கொஞ்சம் மக்கள் நிலையையும், ஏன் உங்கள் நிலைமையையும் யோசித்து நடுநிலைமையாக செயல்படுங்கள், இது உயிர் பிரச்சினை, பாழாய் போன அரசியல் பிரச்சினை இல்லை....

பணம் என்ன பணம், போராட்டத்துக்காக நாங்கள் பணம் அனுப்பவும் தயாராக இருக்கிறோம்...!!

----------------------------------------------------------------------------------
வைறை சதீஷ் பிளாக்.

கவிதை வீதி'சவுந்திரபாண்டியன் பிளாக்.

தம்பி கூடல் பாலா பிளாக், இவர் ஏற்கெனவே உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்..!!!

நண்பன் சூர்யா ஜீவா பிளாக்.

நண்பன் விக்கியின் பிளாக்.

பூவுலகின் நண்பர்கள் பிளாக்.

தமிழ் மீடியா.

பூந்தளிர் பிளாக்.

ஊடறு பிளாக்.
புலவர் இராமாநுசம் அய்யா'வின் பிளாக்.
http://pulavarkural.blogspot.com/2011/10/blog-post_15.html

இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்...!!!

டிஸ்கி : நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது. மனம் தளராமல் போராடும் டாக்டர் . உதயகுமாருக்கும், தம்பி கூடல் பாலா போன்றோருக்கும், இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் "நாஞ்சில் மனோ" தெரிவித்து, தலைவணங்கி ராயல் சல்யூட் செய்கிறேன் நன்றி....

 படங்கள் நன்றி கூகுள்.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!