நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்பிடின்னு சொல்லிதரட்டுமா சிம்பிள்தான், ஒருகிலோ நெல்லிக்காய் வாங்கி வந்து நன்றாக சட்டியில் போட்டு தண்ணீரில் கழுவவேண்டும்.
"ஒரு கவிதை சொல்லுய்யா பார்ப்போம்...?"
அப்புறம் நல்ல தண்ணீர் சட்டியில் ஊற்றி நெல்லிக்காயை சற்று சூடு பண்ண வேண்டும், உப்பு கொஞ்சம் தாரளமாக போடவேண்டும், தண்ணீர் கொதிக்க கூடாது, கொஞ்சம் வெள்ளைப்பூண்டு, ஒரு பத்து பீஸ் மிளகாயும் உள்ளே போடவும் [[சட்டிக்குள்ளே]]
சற்று சூடாகியதும் அடுப்பை அணைத்து விடவும், நன்றாக சூடு ஆறியதும் கொஞ்சூண்டு வினிகர் ஊற்றி ஒரு பெரிய பாட்டலில் அடைத்து ஃபிரிஜில் வைக்கவும், ரெண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்புட்டுப் பாருங்க கண்ணு தெளியுறது நல்லாவே தெரியும்...!
ஒரு கோவா'க்கார நண்பன் சொல்லித்தந்தது, நெல்லிக்காய் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி இப்படி செய்து நான் சாப்பிடுவது வழக்கம்...!
------------------------------------------------------------------
எங்கள் ஹோட்டலுக்கு வந்த ஒரு நண்பனிடம்...
"அண்ணே மூடுல இருந்தாதான் அது வரும், நான் போயிட்டு வரும்போது சொல்லவா...?" [[பார்"க்கு]]
"சரி"
திரும்பி வரும்போது...
"அண்ணே நீங்க கேட்டதை இதுல எழுதி இருக்கேன் லல்லா இழுக்கா பால்து லொல்லுங்க" [[சொல்லுங்க]]
# கலங்களில் அவாள் வாசந்தம்
காலைகளிலே ஆவாள் வாவியம்
மதங்களில் அவாள் மால்கழி
மாலர்களிலே ஆவாள் மெல்லிகை...
"அண்ணே அரகா இழுக்கா...?"
எடுத்தேன் பாருங்க ஓட்டம், எங்கேயும் நின்னு திரும்பிக் கூட பாக்கலியே...
இவனெல்லாம் கம்பியூட்டர் இஞ்சினியராம் டேய்....!
--------------------------------------------------------------------
சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன்,கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது
.அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.
-------------------------------------------------------------------
திருநெல்வேலியும் பாளையங்கோட்டை யும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
-------------------------------------------------------------------
வீட்டுக்குப் போறவனை நிப்பாட்டி வச்சி எங்கே போறேன்னு கேட்டுட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லும் ஃபிகர்கள், சொல்லவருவது என்ன...?
[[யாருலேய் அங்கே குனிஞ்சி கல்லைத் தேடுறது?]]
டிஸ்கி : புறநானூறு மற்றும் பாளையங்கோட்டை தகவலுக்கு "விக்கிபீடியா"வுக்கு நன்றி.
விக்கி....பீடியாவுக்கு நன்றி!
ReplyDelete//விக்கி....பீடியாவுக்கு நன்றி//ஹா ஹா ஹ யோ ,எப்பவுமே இப்படிதானா !!
ReplyDeleteநெல்லிக்காய்.... படம் பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கு! :))
ReplyDeleteநல்ல பகிர்வு மனோ.
கூகிள் Transliteration பயன்படுத்தும்போது கொஞ்சம் கவனமா இல்லன்னா கவிதை இப்படி ஆயிடறது உண்டு,
ReplyDeleteபொண்ணுங்க ஒன்று சொன்னா நாம தட்டாம கேட்கிற ஆள்களாச்சே அதனால நீங்க ஸ்வீட் ட்ரீம்ஸ் கண்டு இருப்பிங்க ஆனா பதிவுல நீங்க கண்ட ஸ்வீட் ட்ரீம்ஸ் பத்தி சொல்லவே இல்லியே???????
ReplyDeleteவீட்டுக்குப் போறவனை நிப்பாட்டி வச்சி எங்கே போறேன்னு கேட்டுட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லும் ஃபிகர்கள், சொல்லவருவது என்ன...?
ReplyDelete/////////////////////////////
நீர் நெல்லிக்காய் ஊறுகாய் போடத்தான் லாயக்கு அப்படின்னு சொல்றாய்ங்க.....!அவ்வ்வ்
முதல் முதல் வந்து பாக்கவே இப்பிடி வெருட்டுறீங்கள்.
ReplyDeleteFOOD NELLAI said...
ReplyDeleteமுதல் போணி நான் பண்ணிருக்கேன். பார்க்கலாம்.//
வாங்க ஆபீசர், ஒரு நெல்லிக்காய் சாப்புட்டுட்டு போங்க.
விக்கியுலகம் said...
ReplyDeleteவிக்கி....பீடியாவுக்கு நன்றி!//
அடேய் நீயும் சிபி நாதாரி மாதிரி கிளம்பிட்டியாக்கும்?
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநெல்லிக்காய்.... படம் பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கு! :))
நல்ல பகிர்வு மனோ.//
வீட்டுக்கு உடனே போயி எனக்கும் சாப்பிடனும் போல இருக்குய்யா...!
KESAVA PILLAI'GOPS' said...
ReplyDelete//விக்கி....பீடியாவுக்கு நன்றி//
ஹா ஹா ஹ யோ ,எப்பவுமே இப்படிதானா !!//
இப்பிடித்தான் எப்பவுமே...
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteகூகிள் Transliteration பயன்படுத்தும்போது கொஞ்சம் கவனமா இல்லன்னா கவிதை இப்படி ஆயிடறது உண்டு,//
அய்யோ முரளி அவன் எழுதிட்டு வந்தது ஒரு பேப்பர்ல.
Avargal Unmaigal said...
ReplyDeleteபொண்ணுங்க ஒன்று சொன்னா நாம தட்டாம கேட்கிற ஆள்களாச்சே அதனால நீங்க ஸ்வீட் ட்ரீம்ஸ் கண்டு இருப்பிங்க ஆனா பதிவுல நீங்க கண்ட ஸ்வீட் ட்ரீம்ஸ் பத்தி சொல்லவே இல்லியே???????//
அவிங்கதான் கொலைகொலையா முந்திரிக்கா விளையாடி கிண்டல் பண்ணுராயிங்கன்னா நீங்களுமா அவ்வ்வ்வ்...
வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteவீட்டுக்குப் போறவனை நிப்பாட்டி வச்சி எங்கே போறேன்னு கேட்டுட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லும் ஃபிகர்கள், சொல்லவருவது என்ன...?
/////////////////////////////
நீர் நெல்லிக்காய் ஊறுகாய் போடத்தான் லாயக்கு அப்படின்னு சொல்றாய்ங்க.....!அவ்வ்வ்//
ஓஹோ இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கா?
Muhunthan Rajadurai said...
ReplyDeleteமுதல் முதல் வந்து பாக்கவே இப்பிடி வெருட்டுறீங்கள்.//
எல்லாமே பச்சைபுள்ளைங்க பயந்துராதீக ஹி ஹி...
Iyaa
ReplyDeletemano,,,,,,,
intha
pathivil
thaangal
solla
varum
karuththu.....????????
அண்ணே! திடீர்ன்னு கவிதை கடன் வாங்கும் அவசியம் மற்றும் அவசரம் என்ன? எனக்கு ரெண்டாவது அண்ணியை தீபாவளி கிஃப்டா தரப் போறீங்களா?!
ReplyDeleteதாறுமாறாய் தூங்கி பலரையும் பயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பதிவர்.....! அண்ணே இந்த செய்திய போடலையா?
ReplyDeleteபாருக்கு போனா கவிதை எல்லாம் வருமா?
ReplyDeleteஇம்புட்டு காலம் இது தெரியாம போச்சே
நாய் நக்ஸ் said...
ReplyDeleteIyaa
mano,,,,,,,
intha
pathivil
thaangal
solla
varum
karuththu.....????????//
யோவ் அண்ணே, மறுபடியும் கலவரம் உண்டாக்கனுமா என்ன...?
ராஜி said...
ReplyDeleteஅண்ணே! திடீர்ன்னு கவிதை கடன் வாங்கும் அவசியம் மற்றும் அவசரம் என்ன? எனக்கு ரெண்டாவது அண்ணியை தீபாவளி கிஃப்டா தரப் போறீங்களா?!//
உங்க அண்ணிகிட்டே இருந்து சட்டாப்பை அடியும் பூரிக்கட்டை அடியும் வாங்க எனக்கு தெம்பில்லை"ம்மா.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteதாறுமாறாய் தூங்கி பலரையும் பயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பதிவர்.....! அண்ணே இந்த செய்திய போடலையா?//
எது...? ஸ்வீட் ட்ரீம்ஸ் கதையா அவ்வ்வ்வ்....
முத்தரசு said...
ReplyDeleteபாருக்கு போனா கவிதை எல்லாம் வருமா?
இம்புட்டு காலம் இது தெரியாம போச்சே//
பாவமன்னிப்பு படம் பாடலை அம்புட்டு கொலையா கொன்னுருக்கான்ய்யா...
ஒரு கலக்கு கலக்கிட்டீங்க... நல்ல பகிர்வு...
ReplyDeletesimple nellikkaai jeruk. thanks
ReplyDeleteநெல்லிக்காய் ஊறுகா ரெசிப்பி நல்லாருக்கு ..
ReplyDeleteவிரைவில் செய்கிறேன் ..
பாளையங்கோட்டை ... பகிர்வுக்கு நன்றி
என்னைய்யா? போலீஸ்காரன் புடிச்சுக்குவான்னு, சமையல் பதிவு போடுறியா? வெளங்கிரும்...
ReplyDeleteகளஞ்சியம்!
ReplyDeleteவணக்கம் நண்பர் மனோ..
ReplyDeleteநலமா
நீண்ட இடைவெளி ஆகிவிட்டது...
புறநானூற்றுத் தகவலும் பாளையங்கோட்டை தகவலும்
நன்று...
நாங்கல்லாம் நெல்லிக்காயில வேர மாதிரி பண்ணுவோம். இதுவும் நல்லாதா இருக்கு.
ReplyDeleteகம்பியூட்டர் இன்ஜினியர் ஹீ !!///கல்லுவரும் மக்கா!ஹீ
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)