Tuesday, August 6, 2013

நடு மண்டையில சும்மா நச்சுன்னு வந்து உக்காந்துடுச்சு...!


டிடிங் டிடிங்...

டிடிங் டிடிங்....

"ஹலோ..."

" ஹலோ அத்தான் எப்பிடி இருக்கீங்க ?"

"நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா பிள்ள..?"

"நல்லா இருக்கோம், காலையிலே இருந்து ஒரே மழை தூத்திகிட்டே இருக்கு..மழையில குளிக்கனும்னா வாங்க செமையா பெஞ்சிகிட்டு இருக்கு"

"நான் மழையில குளிக்க அந்த மழைக்கு கொடுப்பினை இல்லைன்னு சொல்லிரு..."

"காலையிலேயே ஆரம்பிச்சாச்சா..."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்...."

"என்ன அவ்வ்வ்வ்....? உங்க மகன் உங்ககிட்டே பேசனுமாம்"

[[பயபுள்ள லேசுல லைன்ல வரமாட்டானே ? ஆஹா....]]

"குடு குடு.."

"ஹலோ டாடி நல்லா இருக்கீங்களா ?

"நல்லா இருக்கேன் மக்ளே நீ நல்லா இருக்கியா ? சொல்லு என்ன விஷேசம்னு.."

"டாடி என் போன் பழசாகிருச்சு, எனக்கு ஒரு புது போன் வேணும்..."

"வாங்கிட்டா  போச்சு டோன்ட் ஒர்ரி..."

"நில்லுங்க நில்லுங்க..."

"சொல்லு சொல்லு..."

"20000 ரூபாய்ல இருக்கு 25000 ரூபாய்ல இருக்கு 30000 ரூபாய்ல இருக்கு நான் எதை செலக்ட் பண்ணனும்னு சொல்லுங்க..?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்....."

"என்ன டாடி அவ்வ்வவ்வ்வா....? [[வீட்டம்மாவின் கலகல சிரிப்பு சத்தம் கேக்குது]]

"ஹலோ ஹலோ ஹலோ ஹல்லல்லோ....." [[லைன் கட்டாகிருச்சோ ஹா ஹா ஹா ஹா ஆத்தீ..... ஊருக்கு போகும்போது நல்லா காஸ்ட்லியா ஒன்னு வாங்கிட்டு போகனும் செல்லத்திற்கு]]

எப்பிடி இப்பிடி கூலா கேக்க முடியுது பாருங்க இப்போ உள்ள பிள்ளைகளிடம், நான் எங்க அப்பாகிட்டே 25 பைசா கேட்க நூறு தரம் ஒத்திகை பார்ப்பதுண்டு...! ஹி ஹி...
------------------------------------------------------------------------------------

வெளிநாட்டு வாழ்க்கையில் எம்புட்டுதான் ஊதியங்கள் உயர்ந்தாலும் அதற்க்கான தேவைகளும் வந்து நடு மண்டையில் நச்சென்று உட்கார்ந்து விடுகிறது.

பணமிருப்பவர்களுக்கு நாடில்லை, நாடிருப்பவர்களுக்கு பணமில்லை, வீடிருப்பவனுக்கு  நாடில்லை, நாடிருப்பவனுக்கு வீடில்லை.

பணமிருப்பவனுக்கும் நோயுண்டு பணம் இல்லாதவனுக்கும் நோயுண்டு, இதுவும் ஒரு பெரிய ஆச்சர்யம்தான், பணக்காரர்களுக்கு வரும் நோயும் இப்போது ஏழைகளை வந்தடைந்து விட்டது.

கொள்ளையடிப்பவன் கொட்டுகிறான், ஏழையோ இன்னும் வறண்டு போகிறான்.

இப்போதெல்லாம் மழை என்றாலே பயமாகி கொண்டே போகிறது, வந்தால் மொத்தமாக வந்து உயிர்களை பலி வாங்கி செல்கிறது இல்லையேல் எட்டி கூடப் பார்ப்பதில்லை. எலேய் மரம் வெட்டிகளா கொஞ்சம் ரோசியுங்க.

முன்பு கதை கவிதைகள் எழுதிய எழுத்தாளர்கள் பரம ஏழையாக இருந்தார்கள், இப்போதோ சுவிஸ் வங்கியில் பணத்தை ஒளித்து வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

சிங்களன் செய்தது போர் குற்றமே என்று கூப்பாடு போட்டுக்கொண்டே...பின்பக்கமாக போயி சிங்களனோடு பிசினஸ் டீல் செய்கிறான்.

அட்டகாசமாக பிளான் பண்ணி தன் மகளை எங்கே வைக்கனுமோ அங்கே கொண்டுபோய் வைத்தாயிற்று இனி எவன் ஆத்தோடு காத்தோடு கடலோடு போனா வந்தா செத்தா எனக்கென்னன்னுட்டு கட்டையாகி சேர்ல உக்காந்துட்டு இருக்கான் ஒரு மானமில்லா தலீவன்.

நான்கு பேருக்கு தெரியாமல் கமுக்கமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை சேரன் ஏன் இப்படி கொட்டம்போட்டு ஆடுறார் என்ற ரகசியம் இன்னும் எனக்கு புரியவே இல்லை. மீடியா அந்த பையனின் குடும்பமே ஒழுக்கம் கெட்ட குடும்பம் என்று சொல்கிறது. இனி அந்த குடும்பத்தின் கதி ?
--------------------------------------------------------------------------------------

எங்கள் ஹோட்டலில் பணியில் கடுமையான கடுமை காட்டும் ஒரு டியூட்டி மேனேஜர், ரம்ஜான் லீவுக்கு போய் ஈத் பெருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரவேண்டும் என்ற ஆர்டருடன் சென்றான், ஊருக்கு போனாலும் அவன் நினைவெல்லாம் இங்கேதான்.

எனக்கு மிஸ்கால் பண்ணி பண்ணி அங்கே என்ன நடக்குது இங்கே என்ன நடக்குது என்று என்கொயரி பண்ணிட்டே இருப்பான், "யோவ் கேரளாவுல நல்ல மழை வீட்டை விட்டும் வெளியே போக முடியலன்னு சொல்றே வீட்டம்மா கூட ஜாலியா இருக்குறத விட்டுட்டு எதுக்குய்யா வீணா டென்ஷன் எடுக்குறே ? நீ இங்கே இல்லைன்னா ஹோட்டல் நடக்காதா என்ன" என்று திட்டினேன்.

ஆனாலும் அடங்கவில்லை எப்பம்டா ஐந்தாம் தேதி வரும்னு காத்து இருந்தவன் [[லீவுக்கு போயி 20 நாள்கூட ஆகலை]] எனக்கு போன் பண்ணி பிளேன் நம்பர் மற்றும் நேரம் சொல்லி ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்ப சொன்னான்.

கொஞ்சநேரத்தில் அவன் போன் மறுபடியும்...

"ஹலோ என்ன சேட்டா  இப்பதான் தூங்குனேன் மறுபடியும் என்னாச்சு ?"

"ஜீவிதம் நாய் நக்கி...." என்று சொல்லி நிறுத்தினான் [[ வாழ்கையை நாய் நக்கி விட்டது]]

"என்னாச்சுய்யா...?"

"கொச்சின் ஏர்போர்ட் உள்ளே மழை  தண்ணீர் புகுந்து ஏர்போர்ட்டையே குளோஸ் பண்ணிட்டாங்களாம்..."

நான் சிரிச்ச வெடிச் சிரிப்பை கேட்டு நொந்து போனான்.....விதி வலியது மக்கா, அவன் வரலைன்னதும் மொத்த ஹோட்டல் ஊழியர்களுக்கும் தற்காலிக சந்தோசம், மற்றும் சிரிப்புகள்...!
-------------------------------------------------------------------------------

நன் பயின்ற பள்ளி இதுதான், பேஸ்புக்ல நண்பர் மணிகண்டன் பகிர்ந்து இருந்தார், அவர் எடுத்த போட்டோதான் இது, பள்ளியை பார்த்ததும் மனசுக்கு அழகழகான நினைவுகள்...!







22 comments:

  1. //"ஜீவிதம் நாய் நக்கி...."//

    ஒரு கண்டிப்பான மேனேஜரை ட்யூட்டி பாக்க விடாம பண்ணிடுச்சே இந்த மழை...

    ReplyDelete
  2. உங்க மகனுக்கு ரெண்டாயிரத்துக்கு செல்போன் கிடைக்கலையா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....

    ReplyDelete
  3. விதி வலியது மக்கா, .. ஹா,..ஹா,,,,

    ReplyDelete
  4. அன்பின் மனோ - அன்பு மகள் கேட்டால் 30000 என்ன 300000க்குக் கூட வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே - என்ன யோசனை - சரி - வாங்கி பத்திரமா வையுங்க - ஊருக்குப் போகும் போதோ - அல்லது யாராச்சும் அந்தப் பக்கம் போகும் போதொ - வாட்சும் போகணூம் - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அதே தான் 25 பைசா வாங்க ரெண்டு அடி நாலு திட்டு வாங்கணும்.. :-)

    ReplyDelete
  6. பையனுக்கு செல்போன் வாங்குங்கள்... வாங்கத்தானே வேணும்... இல்லேன்னா ஊருல அவன் அருவா தூக்கிருவானுல்ல...

    விதி வலியது அண்ணா - இது உங்களுக்கு இல்லை கேரளாக்காரனுக்கு...

    ReplyDelete
  7. அண்ணே இப்படிலாம் பிள்ளையை வளார்க்கப்படாது. ஸ்கூல் படிக்கும் பிள்ளைக்கு எதுக்கு 20000, 30000 ல போன்?! அத்தியாவசியத்துக்கும், ஆடம்பரத்துக்கும் வித்தியாசத்தை சொல்லி குடுங்க. அந்த 20000 க்குதான் பொண்டாட்டி புள்ளைங்களை சந்தோசம், துக்கத்தை பிரிஞ்சு பல ஆயிரம் கிமீ தாண்டி ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைக்கிறீங்க!!

    ReplyDelete
    Replies
    1. எடுத்து சொல்லி இருக்கேன், வீடு கட்டனும்...அதற்க்கு பணம் சேர்க்கும் கட்டாயத்தில் அப்பா இருக்கேன்னு....ஓகே சொல்லி இருக்கான்.

      நீங்க சொல்றது மிக்க சரியே.....

      நான்தான் அவனுக்கு காஸ்ட்லி பொருள்களை வாங்கிக் கொடுத்து பழக்கி விட்டேன். காரணம் நமக்கு சின்னபிள்ளையில் கிடைக்காதது எல்லாம் நம்ம பிள்ளைங்களுக்கு கிடைக்கட்டுமே என்ற ஆசைதான்.

      நன்றி.

      Delete
  8. நான் ராஜி சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன். வீண் டம்பதாலும் கர்வத்தாலும் வறட்டு கௌரவத்துக்கும் ஆசைப்பட்டு தகுதிக்கு மீறி செலவு செய்வதும் அவைகளை ஊக்கு வித்து மகிழ்வதும் நாம் செய்யும் மகா முட்டாள் தனம். அவர்கள் ஆசைபட்டால் கூட நாம் சொல்லி நம் தகுதிக்கு ஏற்ப ஆசைப்பட கற்றுத்தரவேண்டும் .இல்லையேல் பின்னாளில் அவர்களின் காலத்தில் மிகவும் சிரமம்.

    ReplyDelete
  9. பையன் கேட்டான்ல... உடனே வாங்கி பத்திரப்படுத்தி வையுங்க மக்கா...

    ReplyDelete
  10. மரம் வெட்டிகள் யோசிப்பதே இல்லை.மழை சென்னையை தவிர எங்கே பார்த்தாலும் ருத்ரதாண்டவம் ஆடுகிறது.

    ReplyDelete
  11. நான்கு பேருக்கு தெரியாமல் கமுக்கமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை சேரன் ஏன் இப்படி கொட்டம்போட்டு ஆடுறார் என்ற ரகசியம் இன்னும் எனக்கு புரியவே இல்லை. மீடியா அந்த பையனின் குடும்பமே ஒழுக்கம் கெட்ட குடும்பம் என்று சொல்கிறது. இனி அந்த குடும்பத்தின் கதி ? //

    அதானே? ஆனா மீடியாவுக்கு சொல்லிக் குடுக்கறது யாரு? சேரனும் அவரோட சகாக்களும்தானே? சரி. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்னுட்டு பொண்ணு அந்த பையனையே கட்டிக்கிட்டிச்சின்னா இவர் எங்க போயி முட்டிக்குவார்? சொல்ல முடியாது அப்படியே பல்டியடிச்சி என் மருமனபோல உண்டான்னு சொன்னாலும் சொல்வார். அப்போ அமீர்தான் பேர மாத்திக்கிட்டு அலைய வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  12. பையன்கள் இப்படித்தான் இந்தக்காலத்தில் நேரடியாக கேட்பார்கள் அந்தநாளில் நாங்க அடிவாங்கணும் காசு கேட்டாள் :))) என்றாலும் அந்த கஸ்ரத்தை எடுத்துச் சொல்லி வளர்த்ததில் தந்தை இன்றும் ஒரு வழிகாட்டிதான் எத்தனை தூரம் சென்றாலும் ஆடம்பரச்செலவுக்கு கட்டுப்பாடு உண்டு ! சேரன் குடும்பமும் இதனால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலையை ஊடகம் உருவாக்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுது!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு.உண்மையில் எங்கள் காலம் வேறு தான்.இப்போ சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது.காலம் அப்படி.பாதுகாப்புக்குக்காக வாங்கிக் கொடுத்தாலும் வில்லங்கமும் உண்டு!பார்த்து............/////சேரன்.......ஹூம் என்னத்தச் சொல்ல?

    ReplyDelete
  15. பசங்க ஆசபட்ட வாங்கி கொடுக்க கேட்டா என்னவேணும்னாலும் நடக்கும்கிறது அந்தக் காலம்..!

    பசங்க ஆசப்பட்டத வாங்கி கொடுக்கலேன்னா என்ன வேணும்னாலும் செய்வாங்கங்கிறது இந்தக் காலம்..!

    ReplyDelete
  16. சுவையான பல தகவல்கள்! பிள்ளைகள் இப்போதெல்லாம் காஸ்ட்லியாகத்தான் கேட்கிறார்கள்! நன்றி!

    ReplyDelete
  17. அப்பாவால வாங்கித்தர முடியும்னு தெரிஞ்சுதான் பையன் கேக்குறான்!

    ReplyDelete
  18. மனோ தல...ஏன்யா என்னையே நோண்டுற....???

    ReplyDelete
  19. வாங்கும் சக்தி பற்றி குழந்தைகளுக்கு தெரிந்து விட்டது.....

    என் மகளும் ஆன்லைனில் பார்த்து சில பொருட்களை கேட்க ஆரம்பித்து இருக்கிறாள்..... ;(

    ReplyDelete
  20. அன்பின் மனோ - //பள்ளியை பார்த்ததும் மனசுக்கு அழகழகான நினைவுகள்...!// ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க வேண்டியது தானே - எல்லாரையும் மாட்டி விடலாமே ! ஆரம்பிக்காட்டி பாம்ப்பேயில ஒருத்தரு அருவாளத் தூக்கிக் கிட்டு சுத்தறாரே - அவர் கனவுல வந்து கண்ணக் குத்திடுவாராம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!