Sunday, August 4, 2013

சமையலில் பெண்கள் சிங்கம்தாம்டே ஒத்துக்குறேன்...!


முந்தய நாள் எங்கள் ஹோட்டல் முதலாளி சந்தோஷத்தில் 20 ஆடுகளை பலிபோட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு பலவிதமாக சமைத்து கொடுக்க சொன்னார்.

ஸ்பெஷலாக ஏமன் நாட்டு சமையல்காரர்களை வரவைத்து பல வெரைட்டிகள் செய்து தர உத்தரவு.

எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் இருந்ததால் அவரவர் நண்பர்களுக்கோ அல்லது வீட்டுக்கோ கொண்டு செல்லலாம் என்றதும் நானும் மட்டன் திக்கா என்று சொல்லப்படும் [[அதாவது கரி அடுப்பில் சுட்டது]] அயிட்டத்தை பார்சல் எடுத்து வந்து ரூமில்  ஃபிரிட்ஜில் வைத்துவிட்டேன்.

மறுநாள் போயி ஃபிரிட்ஜில் இருந்து அதை வெளியே எடுத்தேன், "ங்கே" என்று முழித்தேன் பின்னே.......எப்பிடி சூடு பண்றதுன்னு புரியல, சட்டியில வச்சி சூடு பண்ணா சட்டியும் கரிஞ்சி போகும் மட்டனும் சூடாகாது எல்லாமே பெரிய பெரிய சைஸ் வேற.

என்னடா பண்றதுன்னு யோசிச்ச உடன் வீட்டம்மா நியாபகம் வர, போனைப் போட்டேன், நாலு திட்டு கிடச்சுது ஹி ஹி [[சரி சரி விடுடா மனோ நமக்கு இதெல்லாம் புதுசா என்ன]]

அப்புறம்தான் சூப்பர் ஐடியா சொல்லித் தந்தாள் என் செல்லம்.

ஒரு பெரிய சட்டியை எடுத்து அதில் அரை சட்டி நிறைய தண்ணீர் ஊற்றி, அந்த பெரிய சட்டிக்குள் அடங்கும் ஒரு கிண்ணம் எடுத்து தண்ணீர் மீது படாத வண்ணம் வைத்து அதன் மீது மட்டனை வையுங்க, அப்புறம் அதை இன்னொரு மூடி கொண்டு மூடவும், அப்பிடியே மிதமாக சூடாகும் படி அடுப்பில் நெருப்பை எரிய விடுங்க, நன்றாக சூடானதும் எடுத்து சாப்பிடுங்க என்றாள்.

ஆஹ்ஹா அப்பிடியே செய்தேன்....சூப்பர் டேஸ்ட் மக்கா...! நாங்களும் சமைப்போம்ல ஹி ஹி....!

சமையலில் பெண்கள் புலி, சிங்கம்தாம்டே ஒத்துக்குறேன்...! 

------------------------------------------------------------------------- 
சீவலப்பேரி பாண்டியை என்கவுண்டர் பண்ண கொண்டு சென்றபோது, எஸ் பி'யாக இருந்து மரித்துப்போன பிரேம்குமரைதான் சுட சொன்னார்களாம், நான் சுடவே மாட்டேன் என்று மறுப்பு சொல்லிவிட்டாராம் பிரேம்குமார்.

அப்புறம் மற்றொரு அதிகாரிதான் சுட்டாராம், உடலை போலீஸ் வேனில் போட்டாலும் சீவலப்பேரி பாண்டியின் உயிர் பிரியாமல்தான் இருந்துள்ளது, உயிர் பிரியும்வரை வேனில் சுற்றிக் கொண்டே இருந்தார்களாம்...!
உடல் எரியூட்டபட்ட பின் யாருமில்லாத சமயத்தில் போயி சாம்பலை அள்ளி  ஆற்றில் கரைத்தது பிரேம்குமார்....!
சங்கரமடம் ஜெயேந்திரரை கைது செய்த அதே பிரேம்குமார்"தான்....!
விகடன் பிரசுரம் "சீவலப்பேரி பாண்டி" புஸ்தகத்தில் இருந்து எப்பவோ வாசித்தது நியாபகம்...!

மனோ"தத்துவம் : எல்லாம் தெரியும் என்று சொல்பவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று அர்த்தம்.



18 comments:

  1. ஹா ஹா சூப்பர் அண்ணே... அருமையான ஐடியா சொல்லிருக்காங்க உங்க வீட்டம்மா.... அதுக்கு ஏன் திட்டினாங்க?

    ReplyDelete
    Replies
    1. இது கூட தெரியலையாக்கும் லூசுன்னு ஹி ஹி...

      Delete
  2. திருநெல்வேலி அல்வா வாங்கி வந்தால் இப்படித்தான் சூடு செய்வது வழக்கம்.... இது பெண்களுக்கு மட்டுமல்ல, சில ஆண்களுக்கும் தெரியும் மனோ! :)

    நல்ல மனோ-தத்துவம்!

    ReplyDelete
  3. நமக்கு அடுப்பு பத்த வைக்கவும்
    சுடுதண்ணி போடவும் நன்றாகத் தெரியும்
    அம்புட்டுத்தான்
    அந்த வகையில் நீங்கள்தான் சூப்பர்

    ReplyDelete
  4. இக்கட்டான நேரத்துல யோசிக்க பெண்களால மட்டும்தான் முடியும்ன்னு புரிஞ்சுக்கிட்டீங்களா அண்ணா!?

    ReplyDelete
  5. இப்படி கண்டதையும் வளச்சி தின்ன வேண்டியது அப்புறம் சுகர் ஏறிப்போச்சு , கொலஸ்ட்ரால் கூடிபோசுன்னு டாக்டரிடம் ஓடவேண்டியது. உனக்கு வயசாச்சி ல
    வாயையும் கட்டிகினும். இன்னா ??

    ReplyDelete
  6. திநெவேலி அல்வாவை இந்த முறையில் சூடு செய்து தான் நாங்க சென்னையில் சாப்பிடுவோம்.

    ReplyDelete
  7. ஆஹா நல்ல ஐடியாதான் சொல்லி இருக்காங்க!:))) அருவாள் இருக்குண்ணு மறந்திட்டாங்க போல திட்டும் போது :)))

    ReplyDelete
  8. எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் இருந்ததால் அவரவர் நண்பர்களுக்கோ அல்லது வீட்டுக்கோ கொண்டு செல்லலாம் என்றதும் நானும் மட்டன் திக்கா என்று சொல்லப்படும் [[அதாவது கரி அடுப்பில் சுட்டது]] அயிட்டத்தை பார்சல் எடுத்து வந்து ரூமில் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டேன்...//

    ஹோட்டல்ல வேலை செஞ்சா இப்படியொரு அட்வான்டேஜ் இருக்கு போல. ஆனா இங்கல்லாம அவனுங்களே ஃப்ரிட்ஜில வச்சி அடுத்த நாள் வர்ற கெஸ்ட்டுங்களுக்கு பரிமாறிருவானுங்க!

    ReplyDelete
  9. வீட்டுச் சமையலுக்குப் பெண்கள்!பிரமாண்ட சமையலுக்கு ஆண்கள்!

    ReplyDelete
  10. எங்க வீட்ல ஆறிப் போன காபியை சில சமயம் இப்படித்தான் சூடு செய்வோம்! மனோதத்துவம் சூப்பர்! சீவலப்பேரி தகவல் புதிது! நன்றி!

    ReplyDelete
  11. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

    தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....


    http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

    ReplyDelete
  12. என்னைக்குமே பெண்கள் சமையலில் புலிகள்தான் அண்ணா...
    சீவலப்பேரி தகவல் இன்றுதான் தெரிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  13. நீங்களும் இப்படியே செய்யுங்க அண்ணே சமையல்ல பெரிய புலி ஆகிடலாம்

    ReplyDelete
  14. சீவலப்பேரி தகவல் இன்றுதான் தெரிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  15. தண்ணீர் சுட வைக்கச் சொல்லித் தந்ததுக்கே சிங்கம்னுட்டீங்க....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!