Monday, December 26, 2011

பேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....!!!

நெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான், பழக்கமில்லாதவர்கள் முன்பு அமர்ந்து சாப்பிடுவது எனக்கு சாங்கோஜமா இருக்கும்.என் சொந்த அக்கா வீட்டில் கூட மச்சானுக்கு முன்பிருந்து சாப்பிட ஒரு மாதிரிதான் இருக்கும், மும்பையில் விருந்துகாரங்க வீட்டுல போயி சாப்பிட நான் படுற பாடு இருக்கே ஹி ஹி என் மனைவி சொல்லி சொல்லி சிரிப்பாள்....


பஹ்ரைன்ல கொலவரம் [[கலவரம்]] தொடங்கியதில் இருந்து ஹோட்டல் ஃபீல்ட் அவுட் ஆகிருச்சு, எத்தனையோ ஹோட்டல் நடத்துன எங்க கம்பெனிக்கு இருப்பது இப்போது ஒரே ஒரு ஹோட்டல்தான்...!!!


நான் லீவில் ஊரில் இருக்கும் போதுதான் இந்த ஹோட்டலை எடுத்து உள்ளார்கள், நான் பஹ்ரைன் வந்ததும் அங்கேயே வேலைக்கு அமர்த்தினார்கள், ஆபீசில் இருந்து சாப்பிட சாங்கோஜமா இருந்ததினால் ஏதாவது ஒரு ரூம் சாவியை எடுத்துகொண்டு,ஹோட்டல் ரூமில் தனியாக இருந்து சாப்பிடுவதுண்டு....!!!


அப்படி ஒரு குறிப்பிட்ட ரூமுக்கு போகும் போது, ஒரு நாள் எதோ [[யாரோ]] உள்ளே இருப்பது போன்ற பிரமை போல தோணும் எனக்கு, கொஞ்சம் பயமாக இருந்தாலும் போயி ஜன்னல் ஸ்கிரீனை எல்லாம் திறந்து [[பயத்தை பாருங்க]] வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாலும் என்னருகில் யாரோ இருப்பது போன்ற உணர்வு...!!!


இது பலநாள் தொடர்கதையா இருந்தது இதை நான் யாரிடமும் சொல்லவில்லை, நான் அந்த ரூமுக்கு சாப்பிடப்போனதும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கும் ஒரு ஆளுடைய சஞ்சாரம் நல்லாவே புரியும்....!!!


இப்படி இருக்க ஒரு பத்து நாட்களுக்கு முன்பு, எங்கள் ஹோட்டலில் டாக்சி ஓட்டும் பங்காளி, கார் பார்க்கிங்கில் இடம் இல்லாததால், எங்கள் ஹோட்டல் பக்கத்தில் [[அருகில்]] உள்ள பங்களா [[வில்லா]] முன்பு காரை பார்க் செய்து விட்டு காரையும் லாக் பண்ணி விட்டு காரில் அமர்ந்து தூங்க, ஒரு மணி இரவு.......


திடீரென ஒரு முரட்டு கறுத்த மனிதன் காருக்குள் புகுந்து பங்காளி கழுத்தை நெறிக்க, இவன் அலறியும் விடாத கருப்பு ஸாரி கருப்பன்....முக்கி முனகி அலறியபடி எழும்பி இருக்கான், லாக் செய்யப்பட்ட கார் ஓப்பனாக இருந்துள்ளது...


கார் முழுவதும் துர் நாற்றம் [[அதாவது அழுகிய மீன் நாற்றம்]] கார் முழுவதும் ஒரே வைப்ரேஷன் ஆகி இருக்கிறது, வண்டியில் பொருத்தி வைத்து இருந்த மொபைல் போன் கட கட என கிடந்தது ஆடியிருந்தது...


அலறி வெளியே ஓடி வந்து நைட் ஷிஃப்டில் இருந்தவர்களிடம் அவன் வந்து சொல்ல, ஆத்தே அதுக்கு பிறகுதான் விஷயமே தெரிஞ்சது அவ்வ்வ்வ்வ்வ்வ், எங்கள் ஹோட்டல் பக்கத்தில் இருப்பது பேய் பங்க்ளாவாம்.....!!!


வாடகைக்கு என்று போர்ட் வைத்தும் ஒருத்தரும் அதை வாங்கவில்லை பாழடைந்து போயி கிடக்கிறது, அக்கம் பக்கம் விசாரித்தால் திகில் கதையாக சொல்கிறார்கள், நான் சாப்பிடப்போன அந்த ரூம் இருக்கே, நான் ஜன்னலை திறப்பேன் என்று சொன்னேனே அங்கேதான் இந்த பங்களா இருக்கு...


அதே ரூமில் முன்பு ஒருநாள் ஒரு பேமிலி வந்து தங்கி இருந்த போது, ரிஷப்சனுக்கு போன் வந்துள்ளது,  இங்கே ரூமில் என்னோடு வேற யாரோ இருக்கிறார்கள் என்று, ஆக என்னமோ நடந்துட்டு இருக்குன்னு இப்போல்லாம் மனசு பக் பக்குன்னு இருக்கு...


சொன்னா நம்புங்க அதாவது அந்த ரூமில் போனதும் வாட்டசாட்டமா ஒரு ஆள் உள்ளே இருக்குற மாதிரியே இருக்கும், எப்பா இனி அந்த பக்கம் போவே போவே போவே........


அந்த பங்களாவை போட்டோ எடுத்து போடணும்னு தொணினாலும், காஞ்சனா படம் ரேஞ்சுக்கு பேய் கம்பியூட்டர்ல வந்து விளையாடிறப்புடாதே என்ற நல்ல எண்ணத்தில் [[ஹி ஹி]] படம் எடுக்கவில்லை....!!!

83 comments:

 1. எங்கள் ஹோட்டல் பக்கத்தில் இருப்பது பேய் பங்க்ளாவாம்.....!!!
  // என்னது பேய் பங்களாவா?

  ReplyDelete
 2. ஒரு ஆளுடைய சஞ்சாரம் நல்லாவே புரியும்....!!!/? மக்கா உண்மையா?

  ReplyDelete
 3. சொன்னா நம்புங்க அதாவது அந்த ரூமில் போனதும் வாட்டசாட்டமா ஒரு ஆள் உள்ளே இருக்குற மாதிரியே இருக்கும்,// நம்ம சிபி மாதிரி இருப்பாரோ?

  இல்லை தமிழ்வாசி மாதிரியா?

  ReplyDelete
 4. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஐயையோ பேயா?//

  ஆமாய்யா வாத்தி...

  ReplyDelete
 5. வேடந்தாங்கல் - கருன் *! said...
  எங்கள் ஹோட்டல் பக்கத்தில் இருப்பது பேய் பங்க்ளாவாம்.....!!!
  // என்னது பேய் பங்களாவா?//

  எதுக்கு வாத்தி இப்பிடி கத்துறீங்க...!!

  ReplyDelete
 6. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஒரு ஆளுடைய சஞ்சாரம் நல்லாவே புரியும்....!!!/? மக்கா உண்மையா?//

  நிஜம் என் அனுபவம்...!!!

  ReplyDelete
 7. வேடந்தாங்கல் - கருன் *! said...
  சொன்னா நம்புங்க அதாவது அந்த ரூமில் போனதும் வாட்டசாட்டமா ஒரு ஆள் உள்ளே இருக்குற மாதிரியே இருக்கும்,// நம்ம சிபி மாதிரி இருப்பாரோ?

  இல்லை தமிழ்வாசி மாதிரியா?//

  அவனுக பாசக்கார பசங்களாச்சே...

  ReplyDelete
 8. அய்ய்ய்ய்யோ.... பேயா..

  மனோ.! நீங்க ஒரு டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதானே.. என் சந்தேகத்த தீர்த்து வைப்பீகளா..

  பேய் இருக்கா?. இல்லையா.. பார்த்து இருக்காங்களா?. இல்லையா.. நம்பலாமா?. நம்ப்படாதா... ஹிஹிஹிஹிஹி..

  ReplyDelete
 9. மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.

  ReplyDelete
 10. என்ன மக்கா ஒரே திகிலா இருக்கு. பீலா விடலையே... நம்புறதா? நீ சொன்னா நிசமாத்தான் இருக்குமோனு தோணுது...அவ்வ்வ்...

  ReplyDelete
 11. எனக்கு என்னமோ அது பொம்பள பேய்தான் இருக்கனும்

  ReplyDelete
 12. மனோவுடன் மல்லுக்கட்டும் மர்மப்பேய்..... திடுக்கிடும் தகவல்! ஆவ்வ்வ்வ்.......

  ReplyDelete
 13. தமிழ்வாசி பிரகாஷ் said... ]

  மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.
  >>>>
  ஒரு ஆளுக்கு எத்தனை தரம்தான் கல்யாணம் கட்டி வைப்பீங்க? கருன் பொண்டாட்டி இதை படிச்சா கருன் முதுகுல டின் தான். தமிழ்வாசி கூட சேருவியா? சேருவியான்னு...,

  ReplyDelete
 14. மர்ம பேயா இருந்தா பரவால்ல... கில்லமா பேயா இருந்து தொலச்சிடப்போகுது....

  ReplyDelete
 15. பாஸ்! அந்த பங்களா படம் போடுங்க! அட்லீஸ்ட் உங்க ஹோட்டலின் அந்த அறையையாவது படம் எடுத்துப்போடுங்க பாஸ்!
  நீங்க யார் பாஸ்...உங்க வீரம் உங்களுக்குத் தெரியல! சும்மா பின்னுங்க பாஸ்! :-)

  ReplyDelete
 16. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  அய்ய்ய்ய்யோ.... பேயா..
  மனோ.! நீங்க ஒரு
  டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதானே
  .. என் சந்தேகத்த தீர்த்து வைப்பீகளா..
  ///////


  அவருக்கே பேய்ன்னா டர்ர்ர்ர்ர்ர்ர்ர் போல.......

  ReplyDelete
 17. ஜீ... said...

  பாஸ்! அந்த பங்களா படம் போடுங்க! அட்லீஸ்ட் உங்க ஹோட்டலின் அந்த அறையையாவது படம் எடுத்துப்போடுங்க பாஸ்!
  நீங்க யார் பாஸ்...உங்க வீரம் உங்களுக்குத் தெரியல! சும்மா பின்னுங்க பாஸ்! :-)
  >>>
  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அண்ணான் சோலியை முடிச்சுடுவீங்க போல இருக்கே

  ReplyDelete
 18. அண்ணே உங்க ரூமுல பேயா? பாவம் அந்த பேய்...

  ReplyDelete
 19. வாசிக்கவே த்ரில்லா இருக்கு..படங்கள் வேறு..பயங்கரம்..


  அன்போடு அழைக்கிறேன்..

  நாட்கள் போதவில்லை

  ReplyDelete
 20. நல்லா கவனிங்க சார் கணிணி முன்னாடி உட்கார்ந்திருக்குர இந்த நேரத்தில கூட உங்க பக்கத்தில ஒரு கருப்பு உட்க்கர்ந்திக்க போகுது...
  http://vethakannan.blogspot.com/2011/12/4.html

  ReplyDelete
 21. நீங்க பேய பார்த்து பயந்தது எல்லாம் சொன்னீங்க ஆனா பேய் உங்களை பார்த்து பயந்ததை சொல்லலியே !!?

  ReplyDelete
 22. பாத்து மக்களே பாத்து ...
  பேய் பங்களாவை என்னாமா வர்ணிசிருகீங்க..
  ஒரு மோகினிப் பேய் மட்டும் முன்னாடி வந்தா
  அவ்வளோதான்..
  ஹா ஹா
  இரண்டு மூன்று பதிவுக்கு ஆகும்.

  ReplyDelete
 23. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  அய்ய்ய்ய்யோ.... பேயா..

  மனோ.! நீங்க ஒரு டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதானே.. என் சந்தேகத்த தீர்த்து வைப்பீகளா..

  பேய் இருக்கா?. இல்லையா.. பார்த்து இருக்காங்களா?. இல்லையா.. நம்பலாமா?. நம்ப்படாதா... ஹிஹிஹிஹிஹி..//

  வித்தியாசமா இருக்குராப்ல ஒரு அலர்ஜி எப்பிடி வார்த்தையில விளக்குறதுன்னு புரியலை....இது என் அனுபவம் மட்டுமே...

  ReplyDelete
 24. ராஜி said...
  தமிழ்வாசி பிரகாஷ் said... ]

  மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.
  >>>>
  ஒரு ஆளுக்கு எத்தனை தரம்தான் கல்யாணம் கட்டி வைப்பீங்க? கருன் பொண்டாட்டி இதை படிச்சா கருன் முதுகுல டின் தான். தமிழ்வாசி கூட சேருவியா? சேருவியான்னு...,///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 25. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.//

  ஏன் அம்புட்டு அநியாயம் பண்ணுறாரா...?

  ReplyDelete
 26. மனசாட்சி said...
  என்ன மக்கா ஒரே திகிலா இருக்கு. பீலா விடலையே... நம்புறதா? நீ சொன்னா நிசமாத்தான் இருக்குமோனு தோணுது...அவ்வ்வ்...//

  இனி அந்தபக்கம் போகமாட்டேன் ஹி ஹி...

  ReplyDelete
 27. மனசாட்சி said...
  எனக்கு என்னமோ அது பொம்பள பேய்தான் இருக்கனும்//

  பேய்ல இப்பிடியும் இருக்கா ஆனாலும் பேய் பேய்தான் அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 28. சரியில்ல....... said...
  மனோவுடன் மல்லுக்கட்டும் மர்மப்பேய்..... திடுக்கிடும் தகவல்! ஆவ்வ்வ்வ்.....//

  இன்றைய தலைப்பு செய்தி ஹி ஹி...

  ReplyDelete
 29. ராஜி said...
  தமிழ்வாசி பிரகாஷ் said... ]

  மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.
  >>>>
  ஒரு ஆளுக்கு எத்தனை தரம்தான் கல்யாணம் கட்டி வைப்பீங்க? கருன் பொண்டாட்டி இதை படிச்சா கருன் முதுகுல டின் தான். தமிழ்வாசி கூட சேருவியா? சேருவியான்னு...,//

  மாமியார் கிட்டேயும் டின் வாங்கவேண்டி வரும் ஹி ஹி...

  ReplyDelete
 30. சரியில்ல....... said...
  மர்ம பேயா இருந்தா பரவால்ல... கில்லமா பேயா இருந்து தொலச்சிடப்போகுது....//

  கில்லர் பேயா இருக்கும் போல ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 31. ஜீ... said...
  பாஸ்! அந்த பங்களா படம் போடுங்க! அட்லீஸ்ட் உங்க ஹோட்டலின் அந்த அறையையாவது படம் எடுத்துப்போடுங்க பாஸ்!
  நீங்க யார் பாஸ்...உங்க வீரம் உங்களுக்குத் தெரியல! சும்மா பின்னுங்க பாஸ்! :-)//

  ஆஹா முதுகை புண்ணாக்கும் முயற்சி நடக்குது மனோ சூதானமா இரு....

  ReplyDelete
 32. சரியில்ல....... said...
  Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  அய்ய்ய்ய்யோ.... பேயா..
  மனோ.! நீங்க ஒரு
  டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதானே
  .. என் சந்தேகத்த தீர்த்து வைப்பீகளா..
  ///////


  அவருக்கே பேய்ன்னா டர்ர்ர்ர்ர்ர்ர்ர் போல....//

  அதுக்காக இன்னொருக்கா அந்த ரூமுக்கு போக சொல்றீங்களா அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 33. ராஜி said...
  ஜீ... said...

  பாஸ்! அந்த பங்களா படம் போடுங்க! அட்லீஸ்ட் உங்க ஹோட்டலின் அந்த அறையையாவது படம் எடுத்துப்போடுங்க பாஸ்!
  நீங்க யார் பாஸ்...உங்க வீரம் உங்களுக்குத் தெரியல! சும்மா பின்னுங்க பாஸ்! :-)
  >>>
  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அண்ணான் சோலியை முடிச்சுடுவீங்க போல இருக்கே//

  ம்ஹும் பாருங்க தங்கச்சி, நானே பயந்துபோயி இருக்கேன், இப்பிடி உசுப்பேத்துறாங்க...

  ReplyDelete
 34. ராஜி said...
  அண்ணே உங்க ரூமுல பேயா? பாவம் அந்த பேய்...//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 35. மதுமதி said...
  வாசிக்கவே த்ரில்லா இருக்கு..படங்கள் வேறு..பயங்கரம்..//

  ஏ யப்பா முடியலை பயத்துல ஹி ஹி...

  ReplyDelete
 36. வேதகண்ணன் said...
  நல்லா கவனிங்க சார் கணிணி முன்னாடி உட்கார்ந்திருக்குர இந்த நேரத்தில கூட உங்க பக்கத்தில ஒரு கருப்பு உட்க்கர்ந்திக்க போகுது...//

  பச்சை பிள்ளையை இப்பிடி பயன்காட்டாதீன்கப்பு....

  ReplyDelete
 37. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நீங்க பேய பார்த்து பயந்தது எல்லாம் சொன்னீங்க ஆனா பேய் உங்களை பார்த்து பயந்ததை சொல்லலியே !!?//

  ஹா ஹா ஹா ஹா இனி பேயைதான் பதிவு எழுத சொல்லணும்...

  ReplyDelete
 38. மகேந்திரன் said...
  பாத்து மக்களே பாத்து ...
  பேய் பங்களாவை என்னாமா வர்ணிசிருகீங்க..
  ஒரு மோகினிப் பேய் மட்டும் முன்னாடி வந்தா
  அவ்வளோதான்..
  ஹா ஹா
  இரண்டு மூன்று பதிவுக்கு ஆகும்.//

  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 39. தமிழ்வாசி பிரகாஷ் said...
  ராஜி said...
  தமிழ்வாசி பிரகாஷ் said... ]

  மக்கா..... நல்ல பிகர் பேய் இருக்கா? நம்ம கருனுக்கு கட்டி வைக்கலாம்.
  >>>>
  ஒரு ஆளுக்கு எத்தனை தரம்தான் கல்யாணம் கட்டி வைப்பீங்க? கருன் பொண்டாட்டி இதை படிச்சா கருன் முதுகுல டின் தான். தமிழ்வாசி கூட சேருவியா? சேருவியான்னு...,///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

  இன்னும் அடிக்கவே இல்லை அதுக்குள்ளே அழுராரூ ஹி ஹி ஹி..

  ReplyDelete
 40. பய புள்ள சரக்கடிச்சிட்டு மல்லாக்க படுத்திட்டு என்னமா பேசுதுய்யா!

  ReplyDelete
 41. இப்படில்லாம் பேய்க்கதை சொல்லி சின்னபுள்ளைங்களை அழவைக்கப்பிடாது.

  ReplyDelete
 42. ஆனாலும் திரில் அனுபவம்தான்.

  ReplyDelete
 43. இப்படி எல்லோரும் சேர்ந்து கருணைக் கோர்த்து விட்டுட்டீங்களே!

  ReplyDelete
 44. அந்த பேய்கூட போட்ட ஆட்டத்துனதாலதான் தம்பி ரெண்டு நாளைக்கு நெட்டு பக்கமே வரலியா? பேயுடன் மனோ போட்ட குத்தாட்டம். குற்றம் நடந்தது என்ன?

  ReplyDelete
 45. உண்மையாதான் சொல்றிங்களா? பேயா?

  ReplyDelete
 46. Yowwwwwww
  mano
  kanadiya
  roomba nalukku
  appuram
  parthirukka pola.....

  ReplyDelete
 47. நாய்நக்ஸ் போட்டாவை அந்த ரூம்ல மாட்டுங்க....பேயாவது வருவதாவது...கொய்யால....

  ReplyDelete
 48. விக்கியுலகம் said...
  பய புள்ள சரக்கடிச்சிட்டு மல்லாக்க படுத்திட்டு என்னமா பேசுதுய்யா!//

  பாருங்கய்யா ஒரு சரக்கு பீப்பாயே சரக்கு பற்றி பேசுது....

  ReplyDelete
 49. FOOD NELLAI said...
  இப்படில்லாம் பேய்க்கதை சொல்லி சின்னபுள்ளைங்களை அழவைக்கப்பிடாது.//

  புது அனுபவங்களை சொல்லி பிள்ளைங்களை கொஞ்சம் பீதியாவே இருக்க வைக்கிறேனாம் ஹி ஹி...

  ReplyDelete
 50. FOOD NELLAI said...
  ஆனாலும் திரில் அனுபவம்தான்.//

  யப்பா முடியல ஆபீசர், இப்போ நினைச்சாலும் உடம்பு புல்லரிக்குது...!!!

  ReplyDelete
 51. FOOD NELLAI said...
  இப்படி எல்லோரும் சேர்ந்து கருணைக் கோர்த்து விட்டுட்டீங்களே!//

  ஹா ஹா ஹா ஹா வாத்தி பாவம்....

  ReplyDelete
 52. சி.பி.செந்தில்குமார் said...
  அந்த பேய்கூட போட்ட ஆட்டத்துனதாலதான் தம்பி ரெண்டு நாளைக்கு நெட்டு பக்கமே வரலியா? பேயுடன் மனோ போட்ட குத்தாட்டம். குற்றம் நடந்தது என்ன?//

  ஆமாடா அண்ணே, போ போயி தினமலர் முதல் பக்கத்துல போட்டு விடு ஹி ஹி...

  ReplyDelete
 53. எனக்கு பிடித்தவை said...
  உண்மையாதான் சொல்றிங்களா? பேயா?//

  பேயை பார்க்கலை, ஆனால் அந்த பீலிங்...!!!

  ReplyDelete
 54. NAAI-NAKKS said...
  Yowwwwwww
  mano
  kanadiya
  roomba nalukku
  appuram
  parthirukka pola.....//

  யோவ் அண்ணே நான் பயந்து போயிருக்கேன்....

  ReplyDelete
 55. veedu said...
  நாய்நக்ஸ் போட்டாவை அந்த ரூம்ல மாட்டுங்க....பேயாவது வருவதாவது...கொய்யால....//

  அய் இந்த ஐடியா நல்லா இருக்கே....!!!

  ReplyDelete
 56. ஆனாலும் இப்பிடி பயப்பிடக்கூடாது.. நாங்களே ஒரு பிரச்சனைன்னா அருவாவோட நம்மாள் வந்திடுவார்ன்னு தைரியமா இருக்கிறோம். இப்ப போயி இப்பிடி அவுத்து வுடுறிங்களே.. ஹி ஹி !!

  ReplyDelete
 57. தங்களாஇ தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். அண்ணா ஒழுங்ஜா வந்து சேருங்க

  ReplyDelete
 58. தங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். அண்ணா ஒழுங்கா வந்து சேருங்க
  http://rajiyinkanavugal.blogspot.com/2011/12/blog-post_27.html

  ReplyDelete
 59. பாஸ் என்ன பாஸ் சொல்லுறீங்க நான் தலைப்பை பாத்திட்டு ஏதோ மொக்க்கை போட போறீங்கனு பார்த்தா நெசமாத்தான் பேய் கதை சொல்லுறீங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 60. காட்டான் said...
  ஆனாலும் இப்பிடி பயப்பிடக்கூடாது.. நாங்களே ஒரு பிரச்சனைன்னா அருவாவோட நம்மாள் வந்திடுவார்ன்னு தைரியமா இருக்கிறோம். இப்ப போயி இப்பிடி அவுத்து வுடுறிங்களே.. ஹி ஹி !!//

  இனி பயப்படுறதுக்கு என்னய்யா இருக்கு...?? நான்தான் இனி அந்த பக்கமே போகமாட்டேனே ஹி ஹி...

  ReplyDelete
 61. ராஜி said...
  தங்களாஇ தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். அண்ணா ஒழுங்ஜா வந்து சேருங்க//

  நாமதான் எல்லாரையும் மிரட்டுறோம்னா நம்ம கூடப்பிறந்ததுகளும் நம்மை மிரட்டுதே அவ்வ்வ்வ்....

  -----வியாழன் பதிவு போட்டுருதேன் தங்கச்சி------

  ReplyDelete
 62. K.s.s.Rajh said...
  பாஸ் என்ன பாஸ் சொல்லுறீங்க நான் தலைப்பை பாத்திட்டு ஏதோ மொக்க்கை போட போறீங்கனு பார்த்தா நெசமாத்தான் பேய் கதை சொல்லுறீங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  ஹி ஹி லேசா இருட்டுனாலே பயமா இருக்குய்யா...

  ReplyDelete
 63. உங்க பயம்தான் அனாவசியம் மனோ???பேய் பாவம்,உங்க அறைக்குள் உங்களைப்பார்த்தால்,நம்மை விட மோசமான ஒருத்தர்னு,அது தலை தெறிக்க ஓடும்!!!!இதையெல்லாம் சொல்லி,இனி எங்காவது போய் த்ங்கினால், எங்க உறக்கத்துக்கும் சேர்த்து பல்பு கொடுத்திட்டிங்க மனோ???எனக்கு ரொம்ப பயம்லா..இதுவெல்லாம்!!!

  ReplyDelete
 64. அட! பேயாவது பிசாசாவது..!!!

  ReplyDelete
 65. என் மன வானில் said...
  உங்க பயம்தான் அனாவசியம் மனோ???பேய் பாவம்,உங்க அறைக்குள் உங்களைப்பார்த்தால்,நம்மை விட மோசமான ஒருத்தர்னு,அது தலை தெறிக்க ஓடும்!!!!இதையெல்லாம் சொல்லி,இனி எங்காவது போய் த்ங்கினால், எங்க உறக்கத்துக்கும் சேர்த்து பல்பு கொடுத்திட்டிங்க மனோ???எனக்கு ரொம்ப பயம்லா..இதுவெல்லாம்!!!//

  ஹா ஹா ஹா ஹா அடப்பாவமே எல்லாரும் பேய்க்கு பரிந்து பெசுராங்களே அவ்வவ்...

  ReplyDelete
 66. தங்கம் பழனி said...
  அட! பேயாவது பிசாசாவது..!!!//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 67. லீவு நாள்ல குப்பி குப்பியா ஏத்திக்க வேண்டியது, அடுத்த நாள் இங்க வந்து கொட்டி எங்கள பயமுறுத்த வேண்டியது.தண்ணியடி பார்டின்னா அடுத்த நாள்ல நல்லா குளிக்கணும் மேன்.இனிமேல அந்த பக்கம் கூட பாக்காத மனோ. ஒன்னிய அந்த பங்களா பேயி நல்லாவே பாத்து வெச்சிருக்கு. தனியா இருந்தா வந்த பு...........க அறுத்து உட்டுபுடும். சாகரதையா இருக்கோணும் கண்ணா.

  ReplyDelete
 68. மனோ...உண்மையாவா....ரொம்ப பயமா இருக்கு !

  ReplyDelete
 69. பேயை பார்த்து நீங்க பயந்திங்களா அல்லது உங்கள பார்த்து பேய் பயந்துச்சா??

  ReplyDelete
 70. அது பேயா .... எனக்கு பிகர் மாதிரி தெரியுது..... ஹா ஹா

  ReplyDelete
 71. வணக்கம் அண்ணே,
  ஆச்சரியமாக இருக்கே.
  இப்போ நீங்க அந்த பங்களாவிற்கு அருகாக இல்லைத் தானே..

  ReplyDelete
 72. கக்கு - மாணிக்கம் said...
  லீவு நாள்ல குப்பி குப்பியா ஏத்திக்க வேண்டியது, அடுத்த நாள் இங்க வந்து கொட்டி எங்கள பயமுறுத்த வேண்டியது.தண்ணியடி பார்டின்னா அடுத்த நாள்ல நல்லா குளிக்கணும் மேன்.இனிமேல அந்த பக்கம் கூட பாக்காத மனோ. ஒன்னிய அந்த பங்களா பேயி நல்லாவே பாத்து வெச்சிருக்கு. தனியா இருந்தா வந்த பு...........க அறுத்து உட்டுபுடும். சாகரதையா இருக்கோணும் கண்ணா.//

  ஹி ஹி இப்போ கவனமாதான் இருக்கேன் அண்ணே...

  ReplyDelete
 73. ஹேமா said...
  மனோ...உண்மையாவா....ரொம்ப பயமா இருக்கு !//

  நானே பயந்து போயி கிடக்கேன் நீங்க வேற பயமா இருக்குன்னு சொல்றீங்க அவ்வ்வ்வ்..

  ReplyDelete
 74. S.Menaga said...
  பேயை பார்த்து நீங்க பயந்திங்களா அல்லது உங்கள பார்த்து பேய் பயந்துச்சா??//

  நான் பயந்தது உண்மை, பேய் பயந்துச்சான்னு அது பிளாக் எழுதுனாதான் தெரியும் ஹி ஹி...

  ReplyDelete
 75. துஷ்யந்தன் said...
  அது பேயா .... எனக்கு பிகர் மாதிரி தெரியுது..... ஹா ஹா//

  அடப்பாவி....

  ReplyDelete
 76. நிரூபன் said...
  வணக்கம் அண்ணே,
  ஆச்சரியமாக இருக்கே.
  இப்போ நீங்க அந்த பங்களாவிற்கு அருகாக இல்லைத் தானே..//

  அங்கேதான் இருக்கேன், அதான் படங்களை சூட் பண்ணி போடலை, ஹி ஹி காஞ்சனா பயம்தான்...

  ReplyDelete
 77. தங்களது இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்...

  http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_25.html

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!