Wednesday, October 23, 2013

ஆஹா வடை போச்சே......!

உங்கள் "நாஞ்சில்மனோ" வலைத்தளம் பற்றி எங்கள் பத்திரிகையில் தெரிவிக்கப் போகிறோம், உங்கள் போட்டோ மற்றும் உங்களைப் பற்றிய விபரங்கள் தெரிவிக்கவும் என்று தினமணி பத்திரிக்கை எனக்கு மெயில் அனுப்ப.....

எல்லா நாளும் மெயில் ஒப்பன் பண்ணி பாக்குற நானு, ஒரு ஆறு நாட்கள் பாக்காம விட்டதால சான்ஸ் போயிருச்சு, நீங்க உடனே ரிப்ளை தராததால வேறே ஆளை செலக்ட் பண்ணிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.

எங்க அப்பா ஒரு கதை சொன்னது இப்போது நியாபகம் வருகிறது, ஒரு பரம ஏழை ஒருவன் தினமும் கடவுளிடம், என்னை பணக்காரன் ஆக்கிவிடு என்று பலநாள் வேண்டியும், கேட்காத கடவுள்...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளச்சி, என்னங்க அவன் உங்கள் முரட்டு பக்தன்தானே? ஏதாவது செய்யப்புடாதான்னு கேக்க...சரி இப்பபாரு என்று சொல்லிவிட்டு...

பக்தன் நடந்து வரும் பாதையில் ஒரு ஐந்துகிலோ தங்கத்தைப் போடுகிறார் கடவுள்.
சரியாக தங்கம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தவனுக்கு "அப்ப"தான் தோனுச்சு, கண்ணில்லாதவர்கள் எப்படி நடந்து போகிறார்கள், கொஞ்சம் கண்ணை மூடி நடப்பமேன்னு நடக்க....தங்கம் போச்சு...

அப்பத்தான் கடவுள், கடவுளச்சிகிட்டே சொன்னாரு, பார்த்தியா எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும் புரிஞ்சுதா ?

நீதி : தினமும் மெயில் ஒப்பன் செய்து செக் செய்யவும், யோகம் எப்ப வந்து கதவை தட்டும்னு தெரியாம டரியல் ஆகாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா.
------------------------------------------------------------------------------------

'என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்': ராகுல் பூந்தி திடீர் அலறல்//

யப்பா சாமீ.....அப்பிடியாவது சீக்கிரமா போயி சேருங்கடே....மக்கள் பாவம்....!


28 comments:

 1. ஆகா அருமையான சூடான வடை போயிடுச்சே

  ReplyDelete
 2. அருமையான வாய்ப்பை இழந்திட்டீங்களே நாஞ்சில் மனோ....ஆனா மற்றவங்களுக்கு நல்ல அறிவுரைதான்....

  ReplyDelete
 3. ஆஹா எங்களுக்கும் வடை போச்சே....

  ReplyDelete
 4. அடடா வடை போச்சே.....

  வாய்ப்பு மீண்டும் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 5. வடை போச்சே.....

  வாய்ப்பு மீண்டும் கிடைத்திட வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. கவலை வேண்டாம் மனோ... கண்டிப்பாக அடுத்த வாய்ப்பு தங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 7. இப்படியா இருப்பீர்கள்...?

  மறுபடியும் விளக்கத்தை அவர்களுக்கு தகவல் அனுப்பவும்... வடை (கொடுப்பினை) கிடைக்கலாம்...!

  ReplyDelete
 8. அண்ணே, தப்பா எடுத்துக்க வேண்டாம்.."தினமணி"ல வந்துதான் நீங்க பாப்புலர் ஆகனும்னு இல்லையே.. இப்பவே நீங்க ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு பேமஸோட தானே இருக்கீங்க.. ஒரு நாள் உங்க காலை வணக்கம் வரலேன்னா எங்கே எங்கேன்னு தவிச்சு போயிடுறோம்.. ஒரு நாள் உங்க ஆபிஸ் அப்ப்டேட்ஸ் வரலேன்னா நாளே ஓட மாட்டீங்கது..

  இப்படி தினமும் மக்கள் மனசுல மணியா நிறைஞ்சிருக்கிற உங்க பேர் தினமணில வரலேன்னு நான் கவலையே படல அண்ணே!!

  ReplyDelete
 9. இதுதான் நேரங்கறது . போனா போகுது வட போனா பஜ்ஜி கிடைக்கும்

  ReplyDelete
 10. அடடா.....கட்டிங் போச்சே...எவ்ளோ நாள் தான் அதையே சொல்றது....

  ReplyDelete
 11. ச்சா..............என்னங்க நீங்க?இப்புடியா'கோட்டை(?!)' விடுவாங்க?

  ReplyDelete
 12. உங்க ஊரு ஆளுங்க தப்பிச்சுட்டாங்க!!

  ReplyDelete
 13. வருவாங்கண்ணே..கவலைப்படாதீங்க.எல்லாம் அந்த மொராக்காக்காரியால வந்தது!

  ReplyDelete
  Replies
  1. செங்கோவி அண்ணே யார் அந்த மொராக்கோ காரி... கொஞ்சம் விபரமா சொன்னீங்கன்னா நான் பொது அறிவ வளர்த்த்த்துக்க வசதியா இருக்கும்

   Delete
 14. தினமணி உங்கள கவனிச்சு இருக்கு அத நீங்க கவனிக்கல...உலகம் உருண்டைதான் திரும்ப வருவாங்க.

  ReplyDelete
 15. விடுங்க அண்ணே சன் டீவி சூரிய வணக்கத்தில் உங்களை எதிர் பாக்குறேன்

  ReplyDelete
 16. அட... இப்படிக் கிடைச்சதை நழுவ விட்டுட்டீங்களே...

  அவங்களுக்கு எழுதிக்கேட்டா ஒத்துக்குமாட்டாங்களோ...

  முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 17. வட போயிடிச்சே.... ஏமாற்றம் தான்...

  ReplyDelete
 18. அட! நல்ல வாய்ப்பை மிஸ் செய்து விட்டீர்களே! கடைசி கமெண்ட் கலக்கல்!

  ReplyDelete
 19. You will be there. Do not worry.

  ReplyDelete
 20. விடுங்க அண்ணே இந்த வாய்ப்பு மறுமுறையும் கதவை தட்டும்..

  ReplyDelete
 21. உங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு மறுபடியும் வந்து கதவைத் தட்டும்!!

  ReplyDelete
 22. விடுங்க மனோ, இதைவிட நல்ல வாய்ப்பெல்லாம் நம்மைத்தேடி வரும்.

  ReplyDelete
 23. ’அதை’ விட ‘இது’ என்ன பெரிசா! ஒருநாள் லீவு எடுத்துட்டு என்சாய் பண்ன விட மாட்டேங்கறாங்களே!

  ReplyDelete
 24. இதைவிட இனியதொரு வாய்ப்பு கிடைக்கும் அண்ணா...
  கவலையை விடுங்க...

  ReplyDelete
 25. நம்ம மனோவுக்கு வந்த நல்ல ஒரு சான்சும் பூடிசே..........எல்லாம் அந்த மொராக்கோ குட்டியால வந்தது.இனிமேலாவது கவனமா இருக்கோணும் மனோ.ரெண்டுமே பாவப்பட்ட புள்ளீங்க. இல்ல மனோ ???

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!