Sunday, October 6, 2013

அரபியுடன் மல்லுகட்டிய நாட்டாமை...!

எங்க ஹோட்டல் நம்பருக்கும் போலீஸ் ஸ்டேஷன் நம்பருக்கும் ஒரே ஒரு எண்"தான் வித்தியாசம்ன்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லையா....
அப்பிடி போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த அரபி, நம்பர் மாறி எங்க ஹோட்டலுக்கு [[ரிஷப்சன்]] வருது [[இது எப்பவும் வழக்கம்தான்]] போனை எடுத்ததோ நம்ம புதிய டிரைனிங் கேர்ள் மொரோக்கோ...போன் நம்பர் மாற்றம் பொண்ணுக்கு தெரியல போல...

"என்ன...?"

"................................................................"

"சரி நம்பர் சொல்லு"

".............................................................."

"இந்த இடம் இந்த அட்ரஸ்..." [[எங்கள் ஹோட்டல் அட்ரஸ் சொல்கிறாள்]]

"......................................................."

"ஒ இல்லை இல்லை அது இல்லை"

"......................................................"

"நோ நோ...."
என்னமோ விவகாரம்னு நாட்டாமை ஓடி வர.....பொண்ணு உதட்டை பிதுக்கி காமிச்சுட்டு போனை நாட்டாமை கையில் கொடுக்க....

"ஹலோ..."

"என் பி எம் டபள்யூ காரை காணோம் யாரோ களவாண்டுட்டு போயிட்டங்க எங்க அப்பாவுக்கு உடம்புக்கு சரி இல்லையாம் நான் உடனே சவூதி போகணும்... உடனே கண்டுபிடுச்சி தாங்க பிளீஸ்"

ரோகம் என்னான்னு நாட்டாமைக்கு பிடி கிடைக்க....
"ஆக்சு"வலி" நீங்க ராங்க் நம்பர்ல பேசிகிட்டு இருக்கீங்க சார், இது போலீஸ் ஸ்டேஷன் இல்லை இது ஒரு ஹோட்டல்"

"பொய் சொல்லாதே இப்பதானே அந்த லேடி போலீஸ், கார் நம்பர் கேட்டாங்க...கார் இருக்கிற இடத்தின் அட்ரசும் சொன்னாங்க...நீ எதுக்கு பொய் சொல்லுறே ?"

"சார்....." இடைமறிக்குறான்...

"எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு இப்போ என் கார் வேணும் அப்பாவுக்கு சுகமில்லை நான் உடனே சவூதி போகணும் பிளீஸ்"

"ஹலோ...சார்.....இது நீங்க நினைக்குராப்ல போலீஸ் ஸ்டேஷன் இல்லை..."

"அவ்வவ்வ்வ்வ் ம்ம்ம்ம் அவ்வ்வ்வவ்வ்வ் எங்க அப்பாவுக்கு சுகமில்லை எனக்கு உடனே சவூதி போகணும் அதுக்கு கார் வேணும் கண்டுபிடிச்சி குடு ஆஅ ஆஅ வவ்வ்வ்வ் ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்..." அழுவுறான்

நாட்டாமை டபீர் என்று போனை லைனில் அடித்து எறிஞ்சிட்டு மொரோக்கோ பார்ட்டிக்கு ஒரு மிதியும் குடுத்துட்டு [[செல்லமாதான்]] ரூமுக்குள்ளே போயி அழுதுகிட்டு இருக்கான்.

ஏதாவது ஒரு ரூபத்துல வந்து லந்து குடுக்கலைன்னா இவனுகளுக்கு தூக்கமே வராதோ...?

16 comments:

 1. மொத்தத்துல நாட்டாண்மை அழுதுட்டு இருக்காரா?? அது போதும் எனக்கு.. :)

  ReplyDelete
 2. நாட்டாமைக்கு தலைவலி கொடுப்பதே இவங்களுக்கு பொழைப்பா போச்சு.

  ReplyDelete
 3. அந்த லேடி ஃபோட்டோ போட்டாத்தான் நம்புவோம்

  ReplyDelete
  Replies
  1. கொன்னேப்புடுவேன் ராஸ்கல்.....

   Delete
 4. ஆத்தா திட்டும் சந்தைக்குப் போகணும்
  காசு கொடுங்கிற மாதிரி
  திரும்பத் திரும்ப அதையேச் சொன்னா
  நாட்டாமைக்கும் கோபம் வரத்தானே செய்ய்யும் ?

  ReplyDelete
 5. முதல்ல நம்பரை மாத்தி தொலையும் இல்லாட்டி வொயரையாவது வெட்டி விடவும்

  ReplyDelete
  Replies
  1. கோவமா இருந்தாலும் இதுலதானே நமக்கு ரிலாக்ஸ் இருக்கு தங்கச்சி......உருண்டு உருண்டு சிரிப்போம்ல....ஹா ஹா ஹா ஹா...

   Delete
 6. அண்ணே, பேசாம உங்க பி.எம்.டபிள்யூ காரை கொடுத்து அனுப்புங்களேன்...பாவம்!

  ReplyDelete
  Replies
  1. சாமி சைக்கிள்ள போனாராம்...பூசாரி பைக் வரம் கேட்டானாம்...கொன்னேப்புடுவேன் ஆமா...

   Delete
 7. // அண்ணே, பேசாம உங்க பி.எம்.டபிள்யூ காரை கொடுத்து அனுப்புங்களேன்...பாவம்! //
  சென்கோவி

  அந்த வண்டி சாவியத்தான் இது தொலைச்சிட்டு நிக்குதே? வேறு டூப்ளிகேட் சாவி போட்டாதான் உண்டு.

  ReplyDelete
 8. இந்த அரபிங்க லவுசு தாங்க முடியலை சாமீ!

  ReplyDelete
 9. பாவம் நாட்டாமை பேசாமல் அரபிக்கு படையப்பா கார் அனுப்பிவிடுங்க!ஹீ

  ReplyDelete
 10. நாட்டாமை அண்ணாச்சி நம்ம அருவாள் என்னாச்சி....

  ReplyDelete
 11. "அவ்வவ்வ்வ்வ் ம்ம்ம்ம் அவ்வ்வ்வவ்வ்வ் ....அவனுக்கும் தெரிஞ்சதா?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!