Tuesday, April 29, 2014

என்று தணியும் இந்த மதவெறி ?

எங்க ஊர்ல சாமி பதி பக்கமா ரொம்ப நாளா ஒரு முஸ்லீம் அண்ணாச்சி டீக்கடை நடத்திட்டு இருந்தார், எனக்கு நியாபகம் தெரிந்த போது, காலையில் தோசையும் சாயங்காலம் பருப்பு வடையும் ரொம்ப பேமஸ் அங்கே சமைப்பதோ அந்த அண்ணாச்சியின் மனைவி, வெளியே முகமே காட்டமாட்டார்கள், நான் சிறுவனாக இரிருந்தபோது ஓடிப்போயி அவர்கள் மடியில் அமர்ந்து கொள்வதுண்டு, தோசை பிய்த்து அவர்கள் வாயில் ஊட்டும் ருசியோ ருசி, அப்பா காலம் தொட்டு இப்போது என் குழந்தைகள் காலம் வரை நாங்க ருசியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி வருவது வழக்கம்.
என் பொண்ணுக்கு அங்கே சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம், தம்பி தூங்கி எழும்புரதுக்கே பத்து மணி ஆகிவிடும் என்பதான் நானும் மகளுமாக போவதுண்டு, அந்த அண்ணாச்சிக்கு ஹிந்தி நல்லா தெரியும் என்பதாலும், நாங்கள் மும்பைவாசிகள் என்பதாலும் என்மீது அவருக்கு சற்றே கரிசனையும் பாசமும் உண்டு.

வாழையிலை போட்டு அதில் சுடு தோசை [[ஒவ்வொன்றாக ]] வைத்து வாழையிலையில் தோசையை திருப்பி திருப்பி போட்டு வாழையிலை மணம் கமகமக்க மகளை சாப்பிட சொல்வார் எவ்வளவு பிசியாக இருந்தாலும்...!
இந்தமுறை ஊருக்கு நான் தனியே சென்றதால், காலையில் பேங்கில் பணம் எடுக்க நண்பன் கூட்டிப் போகும்போது "காசு எடுத்துட்டு ஸாலி அண்ணன் கடையில போயி தோசை சாப்புட்டுட்டு போவோம்டே"ன்னு சொன்னதும் நண்பன் சொன்னான் "அவரு இப்போ அங்கே கடை வைக்க வில்லைலேய் அவங்க முஸ்லீம் குடும்பங்கள் இருக்கும் பக்கத்துல கடை வச்சிருக்காரு"
ஏன்னு கேட்டேன் அவனிடம் பதிலில்லை, "சரி அங்கேயே போ"ன்னு சொல்லி அவர் கடைக்கு போனேன்...

ஆச்சர்யமாக வரவேற்றார், என் பிள்ளையை தேடினார், நான் தனிமையாக வந்திருப்பதை சொன்னேன், "அண்ணே உங்க தோசை சாப்பிட ஆசையா வந்தேன்" என்றதும்..."தோசை இல்லையே மக்ளே இட்லி இருக்கு சாப்புடுதியா ?"

சரி என்று இட்லி சாப்பிட்டேன் ருசியே இல்லை, அண்ணன் வருத்தப்படக் கூடாதேன்னு அமுக்கி உள்ளே தள்ளிட்டேன், நாளைக்கு வாடே பண்ணி வைக்குறேன்னு சொன்னார், அடுத்தநாள் திருவனந்தபுரம் ஆபீசரும், விஜயனும் என்னை கூட்டிப் போனதினால் அடுத்தநாளும் தோசை கிடைக்கவில்லை.

அதற்கடுத்த நாள் போன போது "என்னடே...நேற்றைக்கு தோசை பண்ணி வச்சிருந்தேன் ஆளை காணோம் இன்னைக்கு உனக்கு பிடிக்காத இட்லிதான் இருக்கு" [[அதெப்பிடி எனக்கு பிடிக்காத இட்லின்னு கண்டுபிடிச்சார்!]]
"ரெண்டு டீ மட்டும் தாருங்கள்" என்று சொல்லி ராஜகுமாருக்கு ஒன்றை கொடுத்து விட்டு கடைக்குள் சென்று அவரிடம் கேட்டேன் "எதுக்கு அண்ணே சாமி பதி பக்கத்துல இருந்த கடையை விட்டுட்டு இங்கே வந்தீங்க ? அங்கே பக்தர்கள் கூட்டம் காரணமாக நல்ல வியாபாரம் இருக்கும்ல ?"

அம்புட்டு நாள் அடக்கி வச்சிருந்த வேதனையை கோபமாக என்னிடம் உரிமையாக வெளிக் காட்டினார்..."உன் சொந்தக்காராணுவ எல்லாம் மனுஷனாலேய்...மதவெறி பிடிச்ச மடப்பயலுக, ஹோட்டலுக்குள்ளே வந்து உக்காந்துகிட்டு, எங்க மதத்தை கிண்டலும் கேலியும் எகத்தாளமும் பண்ணுறானுக, எத்தனை காலம்தான் பொறுக்குறது ? உன்னை மாதிரி அப்பன் விரலை பிடிச்சுட்டு இங்கே வந்து சாப்பிட்ட பயலுக எல்லாம் கிண்டல் பண்ணுராங்கலெய் தம்பி...அதான் கஞ்சியா இருந்தாலும் எங்க சனங்க கூடவே இருக்க விரும்பிட்டேன்"ன்னு சொல்லி விசும்பிட்டாரு...

எனக்கு ரத்தமெல்லாம் சூடாகிப் போச்சு எங்க சொந்த பந்தங்களை நினைத்து, "அண்ணே குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறவனுக்கு உலகம் தெரியாதுண்ணே, நான்கு மாநிலம், நாடு பார்த்தவனுக்குதான் உங்க வலி தெரியும்ண்னே விடுங்க" என்று ஆறுதல் சொல்லிவிட்டு..

"ச்ட்ச்சவ் வ்ர்க்ப்வ்க்ப்வ் வ்க்ப்வ்க் ர்க்ர்வ்க் எட்றா வண்டியை பூலாங்குளத்துக்கு" என்றேன் நண்பன் நடுங்கிப் போனான் அவனும் எனக்கு சொக்காரந்தான், எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் ஹிந்து, கிறிஸ்தவர்கள் எல்லாமே சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிட தக்கது.

என் சொந்த தாய் மாமா பக்கா இந்து அதுவும் சொல்லமாடன்தான்  குலசாமி, அம்மா அப்பா பக்கா கிறிஸ்தவங்க !

எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி வேர்த்து சூடேரியபடியால்தான் குளத்துல போயி குளிக்க கிளம்பினது, எல்லா கோபத்தையும் ராஜகுமார் மேலதான் இறக்கி வச்சேன்.

ஏண்டா இப்பிடி இருக்கீங்க என்று"  "மக்கா இந்த கிழடுங்கதான் இப்பிடி கோணகிழி  பண்ணிட்டு இருக்கானுக, சாமி கோவில் பக்கத்துல இருக்கு இல்லையா அதனால கிழடுகள் இப்பிடி பண்ணுதுக சரி நீ குளிச்சுட்டு வா"

அவன் என்னை "நீ குளிச்சுட்டுவா" என்ற அர்த்தம் புரிந்து குளத்தினுள் பாய்ந்தேன் !

18 comments:

 1. மனிதம் மரித்துதான் விட்டது!

  ReplyDelete
 2. ஏன் இந்த வெறி......

  நீங்கள் சொல்வது போல வெளி மாநிலங்களுக்கு/நாட்டிற்கு வந்து பழகினால் தான் இவர்களுக்குப் புரியும் போல.....

  ReplyDelete
 3. நாம் தலை முழுக வேண்டியது தான் - வேறு வழியில்லை...

  ReplyDelete
 4. இப்போ பேஸ்புக்கில் ஒரு கூட்டம் இதை தானே செய்து கொண்டுள்ளது.. வருந்த வேண்டிய விஷயம்

  ReplyDelete
 5. மக்கா இந்த கிழடுங்கதான் இப்பிடி கோணகிழி பண்ணிட்டு இருக்கானுக// அவங்க மட்டுமா நாசமா போனவீங்க

  ReplyDelete
 6. நீங்கள் சொல்வது போல வெளி மாநிலங்களுக்கு/நாட்டிற்கு வந்து பழகினால் தான் இவர்களுக்குப் புரியும் போல

  ReplyDelete
 7. உண்மை தான் பாஸ். வெளி ஊர்ல இருக்கிறவங்களுக்குதான் அந்த வலி தெரியும், தமிழ் பேசற யாரையாவது பாக்க மாட்டமாங்கிற ஏக்கம்...

  ReplyDelete
 8. இந்த மதப்பேய் பிடிச்சி ஆட்டாத ஆட்களே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. எங்களுடைய இளம் வயது காலங்களில் இப்படியொரு நிலையை எங்கும், குறிப்பாக நம் தமிழகத்தில் கண்டதே இல்லை. இனி என்னவெல்லாம் காண வேண்டியுள்ளதோ தெரியவில்லை.

  ReplyDelete
 9. எந்த மதமாக இருந்தாலும் என்ன அவனவனுக்குப் பிடித்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான் இதற்காக இன்னும் எத்தனை காலங்களுக்குத் தான் மனிதம் மறந்து செயல்படுவார்களோ மத வெறி பிடித்த பெயரிலிகள் ! தங்களின் பகிர்வினைக் கண்டு உள்ளம் கொதிக்கிறது சகோதரா இவர்கள் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 10. இப்படி வெறி பிடித்து அலைபவர்களை என்ன வென்று சொல்லுவது? அவர்களை நாம் தலை முழுக வேண்டியதுதான்!

  ReplyDelete
 11. அருமையான ஆக்கம்!

  ReplyDelete
  Replies
  1. அண்ணாச்சி நலமா பார்த்து ரொம்ப நாளாச்சு!ஹீ சலாம் பாய்!

   Delete
 12. மனிதத்தைத் துறக்கச் சொல்லும் எந்த மதமும் மதமே அல்ல

  ReplyDelete
 13. தமிழகத்திலும் மத நல்லிணக்கம் சிதைந்து வருவது வருத்தத்திற்குரியது.

  ReplyDelete
 14. மதசகிப்பு இல்லாமல் போவது வருத்தம் தரும் விடயம் அண்ணாச்சி! பாய் தோசை தந்தார் அப்புறம்!ஹீ

  ReplyDelete
 15. ஆனால் எல்லாத்துலேயுமே பாதிக்க படுவது நடுத்தர வர்க்கம் தான்.‎

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!