எனது முந்தய பயணம்....
மஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....!!!
கார் ஜென்னத் ஹோட்டலை அடைந்ததும், திவானந்தா சுவாமிகள் உடனே வேலையில் பிசி ஆகிவிட்டார், ஆபிசரின் சில பல ஆர்டர்கள் பறக்க, ஆபிசரின் சைக்கிள் ஸாரி பைக் கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தது சன்முகப்பாண்டி.ஹோட்டலில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, சரி கிளம்புவோம்னு நானும் விஜயனும் கிளம்ப, ஆபீசர் பஸ்நிலையம் என் வீட்டு பக்கத்தில்தான் இருக்கு வாங்க அப்படியே வீட்டுக்கு வந்துட்டு அப்புறமா நானே உங்க ரெண்டு பேரையும் பஸ்நிலையம் கொண்டு சேர்க்கிறேன்ன்னு சொல்லவும் கிளம்பினோம்.
அழகான அமைதியான இடம் ஆபீசர் வசிக்கும் இடம், அவர் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் நெல்லை புதிய பஸ் நிலையம் அழகாக தெரிகிறது [[நமக்கு வேண்டப்படாதவர்கள் யாராவது நெல்லை வந்தால் ஆபீசர் வீட்டு மாடியில் இருந்தே சுட்டு விடலாம் ஹி ஹி எலேய் விக்கி நோட் பண்ணிக்கோ]]
ஆபீசர் வீட்டு முன்னே அழாகாக பூத்து குலுங்கும் ஒருவித மஞ்சள் கலர் பூ பூக்கும் செடி படுகவர்ச்சியாக இருந்தது, நானும் விஜயனும் ரசித்து பார்த்து கொண்டிருந்தோம், அப்போது எங்கள் கண்ணுதான் பட்டுச்சோ என்னமோ இரண்டு வயதான பெண்கள் வந்து அந்த பூக்களை நோக நோக பறித்து சென்றாகள். ஆபீசருக்கும் எங்களுக்கும்தான் அந்த பூக்களின் வேதனை தெரிந்தது மனதில்....
ஆபீசர் அவர்களை மிரட்டி அனுப்பவும் இல்லை பார்த்து கொண்டேதான் இருந்தார், ஓ பெண்களும் பூக்கள்தானே'ன்னு நினைச்சுட்டார் போல.........துளசி செடியும் நிறைய வளர்த்து வருகிறார் மிகவும் அழகாக இருந்தது....!!!
வீட்டுக்குள் நுழைந்ததும் ஆபிசரின் மனைவியும், மகள் பிருந்தா'வும் அன்பாக வரவேற்றார்கள், ஆபீசர் வீட்டை எல்லாம் சுற்றி சுற்றி காட்டினார், ஒழுங்காக பிளான் பண்ணி ரசித்து கட்டப்பட்டவீடு அழகு....!!
மறுபடியும் ஹாலில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம், பிருந்தாவின் அறையில் இருந்து ஒற்றை நாணயம் பாடல் கல்யாண கனவுகளுடன் கசிந்து கொண்டிருந்தது மனதுக்கு பரவசமாக இருந்தது...!
விஜயன் வந்தவேலை முடிந்து விட்டது சரி, உடனே எனக்கு மும்பைக்கு டிக்கெட் புக் பண்ணிருங்க நான் கிளம்புறேன்னு சொன்னதும் தேதி சொல்லுங்கன்னு சொன்னதும் டேட் சொன்னதும் குறித்து கொண்டார் [[இப்பவும் நான் குடும்பத்தோடு நாகர்கோவில் வர டிக்கெட் எடுத்து மும்பைக்கு போஸ்ட் செய்ததும் அவர்தான், நன்றி மக்கா]]
அப்புறமா ஆபீசர் வீட்டு ஹாலில் கொஞ்சம் மெயிண்டணன்ஸ் வேலை இருந்தபடியால் பணியாளர்கள் வரவும் ஆபிசரின் வீட்டு ஆபீசில் அமர்ந்து நாங்கள் எடுத்த போட்டோக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டோம்.
இதுல ஒரு காமெடி என்னான்னா விஜயன் எடுத்த போட்டோ எல்லாம் அவர் கேமராவில் ஏதோ வைரஸ் புகுந்து திங்க ஹே ஹே ஹே ஹே நான் டவுன்லோட் பண்ணி வச்சிகிட்டது எனக்கு வசதியா போச்சு. அவர் போட்டோ எல்லாம் போட்டு நிறைய பதிவை அழகாக தேற்றிவிட்டேன்....!!!
டீ கொண்டு தந்தார்கள் ஆபிசரின் மனைவி, அந்த டீ தாயன்போடு பரிமாறப்பட்டதாலோ என்னவோ அம்புட்டு இனிப்பும் அன்பும், ஆபீசருக்கு ஏற்ற அதே அன்புள்ளம்தான் அவர்களுக்கும், நல்ல ஜோடி பொருத்தம், அந்த டீ'யின் இனிப்பு இப்போதும் எங்கள் நாவிலும் மனதிலும் இனித்து கொண்டிருக்கிறது....!!!
அய்யய்யோ விஜயன் ஆபிசரின் மருமகன் வரும் நேரமாகி விட்டது வாங்க உடனே கிளம்புவோம்னு விஜயனுக்கு கண்ணை காட்டியதும், ஐயோ ஆமால்ல என்று மெய்மறந்திருந்த விஜயன் நிமிர்ந்தார்.
ஆபீசர் வீட்டில் எல்லாரிடமும் விடை பெற்று கிளம்ப, ஆபிசரின் பைக்கில் ஒவ்வொருவராக பஸ்நிலையம் [[அருகில்தானே]] கொண்டு செல்ல ஏற்பாடு ஆனது முதலில் நான், பைக்கில் ஏறப்போனால் அங்கே காலை அங்கிட்டு இங்கிட்டு போடமுடியாமல் ஒரு பாக்ஸ் இருந்து தொலைக்க.....
பெண்கள் அமர்வதைப்போல அமரவேண்டி வர ஆபீசரை கட்டி பிடித்து கொண்டு பெண்கள் போல அமர, மேலே ஆபீசர் வீட்டுக்காரங்க எல்லாம் சிரித்து உருள, சரி இப்பிடியே விட்டுருவாங்கன்னு பார்த்தால், ஆபீசர் விஜயனை கூப்பிட்டு போட்டோ எடுக்க வைத்து விட்டார் [[ஆஹா மாட்டுனியா மக்கா]] ஆனால் அந்த போட்டோ எங்கே போச்சுன்னே தெரியலை ஹி ஹி....
என்னை கொண்டுபோயி பஸ்நிலையம் நிறுத்தி விட்டு விஜயனை தூக்கி வரப்போனார் ஆபீசர், நான் பெண் மாதிரி இருந்ததை போட்டோ எடுத்த ராசா நீரும் அப்பிடித்தானே வருவீர் ராஸ்கல் போட்டோ எடுக்கிறேன்னு கேமராவை ரெடி செய்தேன், ஆனால் உஷாரான விஜயன், காலை அங்கிட்டும் இங்கிட்டுமாக போட்டு ஜம்முன்னு வர........ ச்சே வடை போயி போச்சு போங்க...[[அந்த போட்டோவும் காணமல் போனது தனிக்கதை]]
வண்டியை நிறுத்திவிட்டு ஆபீசரும் பஸ் நிலையம் நுழைய, விஜயன் தடுத்தார் நீங்க போங்க ஆபீசர் விருந்தாளிங்க வீட்டுக்கு வாராங்களேன்னு சொல்ல இல்லை இப்பதான் போன் வந்துச்சு அவங்க வர கொஞ்சம் லேட்டாகும்னு அதான் உங்களை பஸ் ஏற்றி விட்டே போகிறேன்னு சொல்லி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களை பஸ் விட்டு பஸ் மாற்றி ஏறவைத்து டாட்டா காட்டி அன்போடு அனுப்பி வைத்தார்...!
பஸ்சில் ஏறியதும் ஸாரி புறப்பட்டதும் எனக்கும் விஜயனுக்கும் சண்டை யார் டிக்கெட் எடுப்பது என்று, எப்போ பார்த்தாலும் எங்கே போனாலும் அவர்தான் பணம் கொடுத்துட்டு வாரார் என்று கடுப்பானேன் [[அன்பாதேன்]] சரிய்யா குடுத்து தொலையும்னு ஒதுங்கிட்டார் ஹி ஹி..
அப்புறம் பஸ்சில் பல விஷயங்கள் பேசி மகிழ்ந்தாலும், நாங்கள் டவேரா காரில் கேட்ட ஒரு பாடல் எங்கள் வாயை முணுமுணுக்க வைத்ததை நினைத்து பாடகி லதா மங்கேஷ்கரை புகழ்ந்து தள்ளினோம். அந்தப்பாடல் "காலை தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" உயர்ந்த உள்ளம், கமல், அம்பிகா நடித்தது...!!!
மும்பை செல்ல ஆயத்தமான நாள், நாகர்கோவில் டூ மும்பை செல்ல நண்பன் ராஜகுமார் ரயில்வே கொண்டு சேர்த்தான், ஆபீசர் என்னை பார்க்க நெல்லை ரயில் நிலையம் வந்திருப்பதாக சொன்னார், சொன்னது போல வந்தும் விட்டார் உதவியாளரையும் கூட்டிக்கொண்டு.....
எனக்கு காலை உணவும், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர் [[மிக்க நன்றி ஆபீசர்]]
ஆபீசர் சொன்ன ஒரு அல்வா சாப்பிடும் டிப்ஸ் என்னான்னா, அல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம் இருட்டுக்கடை அல்வாவை ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாமாம், ஆபீசர் தந்த அல்வா இன்னும் சாப்பிட்டு முடியவில்லை....!!
டிஸ்கி : கடைசி இரண்டு படம் ஆபீசர் எடுத்தது ஆனால் நான் சுட்டது கௌசல்யா பேஸ்புக் போட்டோ செலக்சனில்.....நன்றி.....
பயணம் முற்றும்.
அடேய் உன்னயெல்லாம்....ஸ் ஸ் அபா!
ReplyDeleteஅந்த கடைசி போட்டோவ இன்னும் எத்தன தடவ போட்டு கொல்லுவ..கொய்யால!
ReplyDeleteஅடுத்து ஆபீசர் வீட்டு கல்யாண பதிவு ஆரம்பம்...எலேய் எல்லாம் ஓடுங்கலேய்!
ReplyDeleteஅந்த 7வது போட்டவ போட்டு நாய் நக்ஸ பெருமைபடுத்தியதுக்கு நன்றி!
ReplyDeleteavvvvvvvvvvvvvvvvvvvvvvv
ReplyDeleterascal, y dont u inform me wen u cross erode?
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஅடேய் உன்னயெல்லாம்....ஸ் ஸ் அபா!//
அடங்கோ......
விக்கியுலகம் said...
ReplyDeleteஅந்த கடைசி போட்டோவ இன்னும் எத்தன தடவ போட்டு கொல்லுவ..கொய்யால!//
டேய் அது ஆபீசர் எடுத்த போட்டோடா கொய்யால.
நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு,மெய் சிலிர்க்குது மனோ!இருட்டுக்கடை அல்வா பத்தி படிச்சிக்கிட்டும் படத்திலேயும்தான் பார்க்கிறேன்,யாராவது ஒருவராவது அனுப்பிவைக்கமாட்டிங்களோ????
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஅடுத்து ஆபீசர் வீட்டு கல்யாண பதிவு ஆரம்பம்...எலேய் எல்லாம் ஓடுங்கலேய்!//
பதிவர்கள் எல்லாம் எப்படி எப்படி இருந்தார்கள், அவர்கள் எழுதுவது உண்மையா, அவர்கள் எழுத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை கிரிமினல் [[அண்டர்]] விசாரணை செய்து வெளியிடுவேன் அப்போ இன்ட்ரஸ்டா இருக்குமா இருக்காதா...?
விக்கியுலகம் said...
ReplyDeleteஅந்த 7வது போட்டவ போட்டு நாய் நக்ஸ பெருமைபடுத்தியதுக்கு நன்றி!//
நாய் நக்கியின் பெரிய அண்டர்வேர பலவந்தமாக உருவிட்டான் விக்கி.....
இனிமையான அனுபவம் :-)
ReplyDeleteநானும் இருட்டுக்கடைல திருட்டு போயிடுச்சோன்னு ஓடிவந்து பார்த்தா...........
காலங்காத்தாலேயே செம பல்பு!
வாழ்த்துகள் மனோ
உங்கள் நட்பு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteavvvvvvvvvvvvvvvvvvvvvvv//
இது டிரைலர்தான் கண்ணு மெயின் ஸோவ் காட்ட ரெடியா இரு ஹி ஹி....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleterascal, y dont u inform me wen u cross erode?//
பொருய்யா உனக்கு சொல்லாமல் வருவேனா என்ன..?
செல்விகாளிமுத்து said...
ReplyDeleteநண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு,மெய் சிலிர்க்குது மனோ!இருட்டுக்கடை அல்வா பத்தி படிச்சிக்கிட்டும் படத்திலேயும்தான் பார்க்கிறேன்,யாராவது ஒருவராவது அனுப்பிவைக்கமாட்டிங்களோ????//
ஊருக்கு போயி ஆபீசரை மீட் பண்ணுங்க, அல்வா கடையையே தூக்கி குடுத்துருவார்....!
ஆமினா said...
ReplyDeleteஇனிமையான அனுபவம் :-)
நானும் இருட்டுக்கடைல திருட்டு போயிடுச்சோன்னு ஓடிவந்து பார்த்தா...........
காலங்காத்தாலேயே செம பல்பு!
வாழ்த்துகள் மனோ
உங்கள் நட்பு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!//
ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஆமீனா....
அருவாள் மிஸ் ஆகுதே...
ReplyDeleteஒரு கிலோ இருட்டு கடை அல்வா தில்லிக்கு பார்சல்!... :))
ReplyDeleteஎதிர்பதிவு ரெடி..
ReplyDeleteஎனது பலகோடி கி.மீ. பயணத்தில் ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!....
http://goundamanifans.blogspot.in
கோவை நேரம் said...
ReplyDeleteஅருவாள் மிஸ் ஆகுதே...//
அருவாளுக்கு பதில்தான் அல்வா...!
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஒரு கிலோ இருட்டு கடை அல்வா தில்லிக்கு பார்சல்!... :))//
எலேய் சண்முகபாண்டி எட்றா வண்டியை உடனே பார்சல் பண்ணிருவோம்....
goundamanifans said...
ReplyDeleteஎதிர்பதிவு ரெடி..
எனது பலகோடி கி.மீ. பயணத்தில் ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!....//
ராஸ்கல் வந்துட்டான்யா வந்துட்டான்....
நல்லா கிளப்புறாங்கயா பீதியை
ReplyDeleteமனோ நீயும் சிபி மாதிரி திருந்தாத ஜன்மம்....
ReplyDeleteஅது சரி உனக்கு ஆபிசர் கிட்ட என்ன தான் வேணும்???
ReplyDeleteஇப்படி நெஞ்சை நக்குற....????????????
அவ்வ்வ்வோவ்...............
ReplyDeleteகொட்டாவி..விட்டேன்!
ஆபிசர் கொசு தொல்லை தாங்கலை....திருநெல்வேலி நகராட்சிய விட்டு கொசு மருந்து அடிக்க சொல்லுங்க....
கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
ReplyDelete>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?!
அபு சனா said...
ReplyDeleteநல்லா கிளப்புறாங்கயா பீதியை//
ஆமாய்யா ஆமாய்யா......
NAAI-NAKKS said...
ReplyDeleteமனோ நீயும் சிபி மாதிரி திருந்தாத ஜன்மம்....//
அண்ணே நீங்க சொன்னா சரி அண்ணே.....
//NAAI-NAKKS said...
ReplyDeleteஅது சரி உனக்கு ஆபிசர் கிட்ட என்ன தான் வேணும்???
இப்படி நெஞ்சை நக்குற....????????????//
நக்கறதை பத்தி நக்சுக்கே சந்தேகமா?
அல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம்
ReplyDelete>>>>
டிப்ஸுக்கு நன்றி அண்ணா
NAAI-NAKKS said...
ReplyDeleteஅது சரி உனக்கு ஆபிசர் கிட்ட என்ன தான் வேணும்???
இப்படி நெஞ்சை நக்குற....????????//
ஹே ஹே ஹே ஹே பாசம்ய்யா பாசம், அன்புய்யா அன்பு......
//ராஜி said...
ReplyDeleteகடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?//
பயணப்பதிவை ஒரு வரி விடாம படிச்சி பாஸ் ஆனீங்கன்னா உங்க பங்கு கிடைக்கும்..எப்படி? ஆட்டத்துக்கு ரெடியா?
வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteஅவ்வ்வ்வோவ்...............
கொட்டாவி..விட்டேன்!
ஆபிசர் கொசு தொல்லை தாங்கலை....திருநெல்வேலி நகராட்சிய விட்டு கொசு மருந்து அடிக்க சொல்லுங்க...//
ஐயையோ இது எப்போ இருந்து.....?
//ராஜி said...
ReplyDeleteஅல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம்
>>>>
டிப்ஸுக்கு நன்றி அண்ணா//
நீங்க ஜன்னத்ல வேலை செய்யறீங்களா?
ராஜி said...
ReplyDeleteகடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?!//
ஆபீசர் கல்யாணத்துக்கு வந்துருங்க தங்கச்சி, பங்கு கண்டிப்பா உண்டு......
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவீடு சுரேஸ்குமார் said...
அவ்வ்வ்வோவ்...............
கொட்டாவி..விட்டேன்!
ஆபிசர் கொசு தொல்லை தாங்கலை....திருநெல்வேலி நகராட்சிய விட்டு கொசு மருந்து அடிக்க சொல்லுங்க...//
ஐயையோ இது எப்போ இருந்து.....?//
மூட்டப்பூச்சியை கொல்லும் நவீன மிஷின் நெல்லையில் அறிமுகம்.
goundamanifans said...
ReplyDelete//NAAI-NAKKS said...
அது சரி உனக்கு ஆபிசர் கிட்ட என்ன தான் வேணும்???
இப்படி நெஞ்சை நக்குற....????????????//
நக்கறதை பத்தி நக்சுக்கே சந்தேகமா?//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ.....அதானே.....
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteராஜி said...
கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?!//
ஆபீசர் கல்யாணத்துக்கு வந்துருங்க தங்கச்சி, பங்கு கண்டிப்பா உண்டு......//
நீங்களே பக்கத்து இலையயும் சேத்து பெனஞ்சி அடிக்க போறீங்க...எப்படி பங்கு தருவீங்க??
ராஜி said...
ReplyDeleteஅல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம்
>>>>
டிப்ஸுக்கு நன்றி அண்ணா//
நன்றி ஆபீசருக்கு.......
goundamanifans said...
ReplyDelete//ராஜி said...
கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?//
பயணப்பதிவை ஒரு வரி விடாம படிச்சி பாஸ் ஆனீங்கன்னா உங்க பங்கு கிடைக்கும்..எப்படி? ஆட்டத்துக்கு ரெடியா?//
பங்கு உங்களுக்கும் கிடைச்சுதாக்கும்....?
goundamanifans said...
ReplyDelete//ராஜி said...
அல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம்
>>>>
டிப்ஸுக்கு நன்றி அண்ணா//
நீங்க ஜன்னத்ல வேலை செய்யறீங்களா?//
ஓ இதுக்கு ஜன்னத் ஹோட்டல்ல வேறே வேலை செய்யனுமாக்கும்...?
goundamanifans said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
அவ்வ்வ்வோவ்...............
கொட்டாவி..விட்டேன்!
ஆபிசர் கொசு தொல்லை தாங்கலை....திருநெல்வேலி நகராட்சிய விட்டு கொசு மருந்து அடிக்க சொல்லுங்க...//
ஐயையோ இது எப்போ இருந்து.....?//
மூட்டப்பூச்சியை கொல்லும் நவீன மிஷின் நெல்லையில் அறிமுகம்.//
கொசு தொல்லையே பெரிய தொல்லையா இருக்கு.......
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஓ இதுக்கு ஜன்னத் ஹோட்டல்ல வேறே வேலை செய்யனுமாக்கும்...?//
கண்டிப்பா. நெல்லை போறப்ப எல்லாம் அன்லிமிடட் மீல்ஸ் ரெண்டு செட்டு சாப்புட்டா ஓனர் கதி என்ன ஆவுறது?
goundamanifans said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ராஜி said...
கடை அடைத்தபின் இருட்டோடே போயி திறக்கவைத்து [[ஹி ஹி முதலாளி ஆபிசரின் நண்பர்தான்]] செண்டிமெண்டாக வாங்கித்தந்து அன்போடு வழி அனுப்பினார் ஆபீசர்
>>>
தங்கச்சி பங்கு எங்கேண்ணா?!//
ஆபீசர் கல்யாணத்துக்கு வந்துருங்க தங்கச்சி, பங்கு கண்டிப்பா உண்டு......//
நீங்களே பக்கத்து இலையயும் சேத்து பெனஞ்சி அடிக்க போறீங்க...எப்படி பங்கு தருவீங்க??//
அய்யய்யோ தங்கச்சிகளுக்கு பங்கு கொடுக்கலைன்னா அடி பின்னிருவாங்க, அதை விட பொண்டாட்டி அடியே பரவாயில்லை....
goundamanifans said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ஓ இதுக்கு ஜன்னத் ஹோட்டல்ல வேறே வேலை செய்யனுமாக்கும்...?//
கண்டிப்பா. நெல்லை போறப்ப எல்லாம் அன்லிமிடட் மீல்ஸ் ரெண்டு செட்டு சாப்புட்டா ஓனர் கதி என்ன ஆவுறது?//
ஓனர் மனசு நிறைஞ்சி போகுதாம்....!!!
/////////அல்வா ரெண்டு நாள் மூன்று நாள் ஆனால் இறுகி விடும் இல்லையா..... அப்படி ஆனால் தண்ணீரை நன்றாக சூடாக்கிவிட்டு நமக்கு சாப்பிட எம்புட்டு வேண்டுமோ அம்புட்டு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் அல்வாவை போட்டு சூடான தண்ணீரில் மிதக்க வைத்தால் அந்த அல்வா சூடாக புதியது போல இருக்குமாம் ////////
ReplyDeleteடிப்ஸ் புதிதாக இருக்கிறது. ஓர் சந்தேகம் .., தண்ணீரில் இடுவதால் இனிப்பு குறைந்துபோக வாய்ப்பு இருக்கிறதா சார்..?
என்னாது பயணம் முற்றுமா????
ReplyDeleteமக்கா, அல்வா முற்றும்... அருவா?? ஹே ஹே ஹே
வாழ்த்துகள் மனோ.
ReplyDeleteவணக்கம் மக்களே...
ReplyDeleteஇந்தமுறை விடுமுறையில் நானும் திருநெல்வேலிக்குப்
போயிருந்தேன்..
இருட்டுக்கடை அல்வாவோட சுவையை நீண்ட நாட்களுக்குப் பின்னர்
ரசித்து சாப்பிட்டேன்.. இன்னும் சுவை நாக்கினில் உரைஞ்சிருக்கு
உம்ம பயணம் முடியுமா முடியாதா.... முடியல.......
ReplyDeleteதிருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா....இருட்லயா அல்வா செய்றாங்க மனோ !
ReplyDeleteபயணக் கட்டுரை அருமை
ReplyDeleteரசித்துப் படித்தேன்
அல்வா குறித்த தகவலும் பயனுள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பயண அனுபவங்கள் சுவையாக இருந்தது.அந்த அல்வா கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க மனோ.
ReplyDeleteஇருட்டுக்கடை அல்வா சுவையே தனி! சஆ இராமாநுசம்
ReplyDeleteஅடுத்த பயணம் எப்போ தொங்குதுலே?
ReplyDeleteஅல்வா கொடுத்திட்டீங்களே!
ReplyDelete