Tuesday, November 1, 2011

என் முன்னாள் காதலி சாட்டிங் செய்கிறாள்.....!!!

கொஞ்சநாளா நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சி பல்பு வாங்காமல், நேத்தைக்கு கெரகம் பிடிச்சு ஆட்டுருச்சு ஹி ஹி, ஒரு பெண் [[ஆணா தெரியாது]] சாட்டிங்க்ல வந்து பண்ணுன அலப்பறையை பாருங்க, நான் பச்சை புள்ளைன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்தானே என்னை இப்பிடி கதறவச்சுட்டாங்க, ஆனால் ஒன்னுய்யா கடைசிவரை அவள்[ன்] உண்மையை சொல்லவே இல்லை......ஏன் எனக்கு மட்டும் இப்பிடி...???!!!! பேரு ஜெயஜோதி'யாம் இனி நாங்கள் பேசியதை படியுங்கள்.


jaya:  hai mama...

 jaya:  hollo mama... nalamaaaaaaaa

 me:  நலம் நீங்க?

jaya:  enna mama ippati kedutinga...

me:  யோவ் நீங்க ஆணா பொண்ணான்னே தெரியலை இப்பிடி நிறைய பல்பு வாங்கிருக்கேன் அதான் கேட்டேன் நீங்க யாரு..?

 jaya:  enna mama ippati kedutinga..

me:  ஆஹா.....

 jaya:  naan roma kovama irukkam... enna poi thriyalenu sollitinga...

me:  ஹேய் சொல்லுங்கப்பா நீங்க யாரு..? ஸாரிங்கோ சிபி மேல சத்தியமா தெரியலைங்கோ..


 me:  ஹலோ...
ஸாரி..

 jaya:  தெரியலன்னு சொல்லிட்ட பிறகு நான் என்னத்த பேச...
இந்த ஆம்பளங்க ஏன் இப்படி இருக்காங்களோ...

 jaya:  இந்தியாவில் இருந்து போன பிறகு எங்க ஞாபகம் எப்படியிருக்கும்...?


 me:  ஆஹா மனோ இன்னைக்கு பல்போ பல்புதான் போ...
இந்தியாவுக்கு திரும்பி வருவேனே..

 jaya:  உனக்கு பல்பு தெரியிற அளவுக்கு மனசு புரியமாட்டேங்குதே மனு.

 me:  இது ஆம்பிளையா பொம்பளையா தெரியலையே ஆண்டவா, வாயை குடுத்து மாட்டிக்காம காப்பாத்து..

 jaya:  என்னைப்பத்தி நானே சொல்லனுன்னா எப்படி அப்ப என் நினைப்பு கொஞ்சம் கூட இல்லை..சரி.. சரி... நீயாவது எல்லாத்தையும் மறந்து நல்லாயிரு.

me:  அடப்பாவமே.....!!!

jaya:  உன்னுடைய ஜே-வை தெரியல..
அப்ப நம்முடைய பழக்கம்... பார்வை... நட்பு.. எல்லாமே பொய்யா மனு...

 me:  என்னாது பழக்கமா பார்வையா அய்யய்யோ கொல்லுரங்க....

 jaya:  இப்படியெல்லாம் சொல்லாதே மனோ...சரி அப்படின்னா நான் போறேன்..
இனி நீ என்கிட்டே பேசாதே...

 me:  அடப்பாவமே யாருன்னு சொல்லாம இப்பிடி கோவிச்சுட்டு போனா எப்பிடி அவ்வ்வ்வ்வ்...

 jaya:  i name is jaya...

me:  ஜெயானுதான் பேர் இருக்கு ஆனால் நீங்க யாருங்கோ...?

 jaya:  அப்புறம் என் பூர்விகம் ஜாதகம் எல்லாத்தையும் அனுப்பட்டுமா...?

சரி நான் விக்கி மாமா பிரியா இருக்காறான்னு பார்க்கிறேன்..

me:  என்னமோ நடக்குது, கண்ணை மட்டும் கட்டுது எனக்கு இப்பமே...

 jaya:  அப்புறம் இதை பதிவா போட்டு மானத்தை வாங்காதே.. அப்புறம் அம்புட்டுத்தான்... சொல்லிப்புட்டேன்.... எனக்கு என்னை விட பதிவுதான் முக்கியம்...

 me:  நாளைக்கு பதிவு போட மண்டையில சரக்கு இல்லையேன்னு கவலையா இருந்தேன், இதோ மாட்டிக்கிச்சி..

 jaya:  இதை பதிவா போட்ட பெயரிலி மாமாகிட்டே சொல்லி உன்னுடைய பிளாக்கை ஹாக் பன்னிடுவேன் அவ்வளவுதான்...

 me:  ஹா ஹா ஹா ஹா நடக்குறதை சொல்லுங்க, நாளை பதிவு பதிவுதான்...

 jaya:  அப்படின்னா மகனே அருவா.. அருவா தான்...
போங்க மனோ நீங்க ரொம்ப மோசம்... என்னை யாருன்னு கண்டுபிடிக்காம பதிவைப்பத்தி பேசிகிட்டு இருக்கீங்க...

 me:  நீங்க யாருன்னு கண்டுபிடிக்க நான் என்ன ஜேம்ஸ்பாண்டா...

 jaya:  அந்த நினைப்பு வேறையா...அவளைப்பத்தி பதிவுல போட்டிங்கிளாம் என்னைப்பத்தி நம்ம நட்பைப்பத்தியும் பரபரப்பாக ஒரு பதிவு போடலாம் இல்லையா... 
நம்புடையது அப்படியா...

me:  எலேய் அருவாளுக்கு வேலை வருதே....

 jaya:  மரணம் அது உன்கையால் நான் ஏற்றுக் கொள்கிறேன்...உன் அருவாள் அன்பானர்களை ஒன்றும் செய்யாதுன்னு எனக்கு தெரியும்....
அன்பா நாலு வார்தை பேசு மாமா...

 me:  அன்பு அன்பு அன்பு அன்பு நாலு வார்த்தை போதுமா..

 jaya:  மனம் குளிர்கிறது மனோ...அந்த கடற்க்கரை சம்பவம் ஞாபகம் இருக்கிறது..ஐஸ்கிரீம்...
அப்புறம் அந்த ரோஜா...

me:  எந்த ரோஜா...?? செல்வமணி கொல்லப்போறாரு...

 jaya:  அதோ அந்த பறவைப்போல வாழ வேண்டும்... அந்த பாடல்கூட ஞாபகம் இல்லையா..?

 me:  ஐயோ ஐயோ ஓடிபோய் மலையில இருந்து குதிக்கனும் போல இருக்கு...

 jaya:  ஏன் மனோ கோவப்படுறீங்க...

me:  கோவம் இல்லை கண்ணை கட்டுது..

 jaya:  கண்ணைகட்டுனா என்ன செய்யனும் நான் சொன்னது ஞாபகம் இல்லையா..அப்படியே கண்ணைமூடி மழையை நினைச்சுங்க மனோ..ஒரு நாள் அப்படித்தானே... நீயும் நானும்... மழையில் நனைந்தோம்...

me:  என்னாது மழையில நனைஞ்சமா அவ்வ்வ்வ்.

 jaya:  பாரின் போனதும் பள்ளி நினைவுகளை மறக்க மாட்டேன்னு சொன்ன ஆனா உன்னுடைய மனதில் பள்ளி பருவ நினைவுகள் ஏதும் இருக்கிற மாதிரி தெரியல...

me:  யப்பா யாரோ செமையா மாட்டி விடுறீங்கன்னு நினைக்கிறேன்...

 jaya:  மாட்டிவிடுறதுக்கு என்ன இருக்கு மனோ...

 me:  பல்பு குடுத்தது போதும் வாங்க வெளிச்சத்துக்கு...

 jaya:  நான் வெளிச்சத்தில் தான் இருக்கிறேன் மனோ...
நீங்கதான் வெளிச்சத்திற்க்கு வரனும்..
ஏன் லேட்டாகுது.. வேற யாராவது சாட்ல இருக்காங்கலா..? [[ம்க்கும் இது வேற]]

 jaya:  hollo mono ennatchi...அந்த கவிதையாவது ஒரு முறை சொல்லிடு மனோ நான் சந்தோஷமா கிளம்பிடுறேன்...எனக்கு அழுகை அழுகையா வருது.

 jaya:  நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை...
உன்னை மறப்பதுமில்லை...
மனோ சே..  மனோ சே...

 jaya:  mama...
hollo... mono.... come...

me:  ஹல்லோ
இருக்கேன் சொல்லுங்க  என்ன பைபிள் வேர்ட்ஸ் எல்லாம் சொன்னாமாதிரி இருக்கே...?

 jaya:  எனக்காக ஒரு கவிதை எழுதினிங்களே அதை மட்டும் ஒரு முறை சொல்லுங்க மனோ.. நான் போயிடுறேன்...வேற யாரு சாட்ல இருக்கிறது..? [[கொன்னேபுடுவேன்]]

 jaya:  நான் கோவமா கிளம்புறேன் மாமா...
அப்புறம் பார்க்கலாம்...

 me:  யாருன்னு சொல்லிட்டு கிளம்புங்க...

டிஸ்கி : கடைசி வரை உண்மையான முகத்தை காட்டாமல் எஸ்கேப் ஆகிருச்சே பாவிகளா இப்பிடியா பல்பு குடுப்பீங்க....!!! நல்ல காலம் சிபி மாதிரி நான் போன் நம்பர் போட்டுவைக்கலை, போட்டுருந்தா செத்தேன்.

டிஸ்கி : இது யாருடைய சதி, விக்கியின் சதியா...? வேடந்தாங்கல் சதியா..? சரித்திர பாண்டியன் ஸாரி சவுந்திர பாண்டியன் சதியா...? சிபி பன்னாடையின் சதியா...? நாய்+நக்ஸ்சின் சதியா...? பன்னிகுட்டியின் சதியா...? காட்டான்'னின் சதியா...? பாட்டு ரசிகையின் சதியா...? உளவுத்துறை விசாரணை நடத்தி, பொறுப்பை திவானந்தா சாமியிடம் ஒப்படைக்கும் என்பது தலைப்பு செய்தி...!!!

78 comments:

 1. நல்லா கருப்பா இருந்து கிட்டு பச்ச புள்ளன்னு புளுகிரத பாரு...
  அண்ணா, ஆமா யாருன்னே அந்த புள்ள? என்ன பாசமா இருக்கு உங்க மேல?

  ReplyDelete
 2. என்னாது பாசமா,,,,??? வீட்டுல சோத்தாப்பை அடி வாங்க வச்சிராதீங்கய்யா....

  ReplyDelete
 3. //
  கடைசி வரை உண்மையான முகத்தை காட்டாமல் எஸ்கேப் ஆகிருச்சே பாவிகளா இப்பிடியா பல்பு குடுப்பீங்க.

  //
  பல்பு வாங்குறது நமக்கு புதுசா என்ன ?

  ReplyDelete
 4. //
  நல்லா கருப்பா இருந்து கிட்டு பச்ச புள்ளன்னு புளுகிரத பாரு...
  அண்ணா, ஆமா யாருன்னே அந்த புள்ள? என்ன பாசமா இருக்கு உங்க மேல?

  November 1, 2011 10:36 PM
  Blogger MANO நாஞ்சில் மனோ said...

  என்னாது பாசமா,,,,??? வீட்டுல சோத்தாப்பை அடி வாங்க வச்சிராதீங்கய்யா....//

  இப்ப மட்டும் அடிவாங்காத மாதிரி சொல்றிங்க ?

  ReplyDelete
 5. யோவ் PERSONAL ஆ பேசியத இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுற....

  ReplyDelete
 6. இந்த வேலை எல்லாம் நடக்குதா

  ReplyDelete
 7. அண்ணே இது நிச்சயம் உங்களுக்கு பல்ப்பு கொடுக்க யாரோ செய்த சதி..நம்ம பதிவர்களில் ஓருவராகவோ இல்லை நண்பர்கள் ஒருவாராகவோ இருக்கும்

  ReplyDelete
 8. என்ன லாட்ஜ் போட்டு யோசிப்பிங்களா? இல்லை லார்ஜ் போட்டு யோசிப்பிங்களா?

  ReplyDelete
 9. ஜெயா பேமஸ் பேரு பி கேர் புல்

  ReplyDelete
 10. மனோ அண்ணே அண்ணிக்கு இந்த பதிவோட லிங்க் அனுப்பவாண்ணே

  ReplyDelete
 11. இது நிச்சயமாக சதி அல்ல. உங்க மேல உண்மையான பாசத்துல இருக்கும் ஒருவரின் அன்பு வெளிப்பாடு. ஜெயாவை கை விட்டுடாதீங்க...

  ReplyDelete
 12. மாப்ள மனோ எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியுமே...

  அதே பொண்ணு என்கூட சாட் ல வந்தாந்தாங்க, உங்களைப்பத்தியும் சொன்னாங்க..

  ஹா.ஹா...

  ( இதுல வேடந்தாங்கல் சதி எதுவும் இல்லை)

  ReplyDelete
 13. ஒரு வேல தலைப்பைப் பார்த்தா அவங்க சொன்னது உண்மையா இருக்குமோ?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  ReplyDelete
 14. ஆஃபீசர் கிட்ட விசயத்தைச் சொல்லிட்டீங்களா?பெல்ட்டைக் கையில எடுத்தார்னா!!

  ReplyDelete
 15. தலைப்பை பார்த்துட்டு “யோவ் எத்தன பேரதான்ய்யா லவ் பண்ணீங்க”ன்னு திட்டலாம்னு நெனச்சேன்...

  ஆனா பாவம் புள்ள இங்கே பல்பு வாங்கி பொலம்பிட்டிருக்கே!!!!


  ஹி...ஹி....ஹி......

  இன்னும் ஒரு வாரத்துக்கு உங்கள தூங்கவிடாம வைக்க யாரோ பண்ற சதி!!!

  ஓடுங்க ஓடுங்க!!

  ReplyDelete
 16. என் ராஜபாட்டை"- ராஜா said... 5 6
  //
  கடைசி வரை உண்மையான முகத்தை காட்டாமல் எஸ்கேப் ஆகிருச்சே பாவிகளா இப்பிடியா பல்பு குடுப்பீங்க.

  //
  பல்பு வாங்குறது நமக்கு புதுசா என்ன ?//

  ஆனாலும் இப்பிடி பல்பு வாங்குனது இதுதான் முத்த முறை...

  ReplyDelete
 17. என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  நல்லா கருப்பா இருந்து கிட்டு பச்ச புள்ளன்னு புளுகிரத பாரு...
  அண்ணா, ஆமா யாருன்னே அந்த புள்ள? என்ன பாசமா இருக்கு உங்க மேல?

  November 1, 2011 10:36 PM
  Blogger MANO நாஞ்சில் மனோ said...

  என்னாது பாசமா,,,,??? வீட்டுல சோத்தாப்பை அடி வாங்க வச்சிராதீங்கய்யா....//

  இப்ப மட்டும் அடிவாங்காத மாதிரி சொல்றிங்க ?//

  ஆஹா கண்டிப்பா அடிவாங்க வச்சிருவாயின்களோ...

  ReplyDelete
 18. சசிகுமார் said...
  யோவ் PERSONAL ஆ பேசியத இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுற..//

  அடப்பாவிங்க என்னைப்படுத்துற பாடு இருக்கே முடியல...

  ReplyDelete
 19. மனசாட்சி said...
  இந்த வேலை எல்லாம் நடக்குதா//

  இது வேலை இல்லை காதல் ஹி ஹி...

  ReplyDelete
 20. K.s.s.Rajh said...
  அண்ணே இது நிச்சயம் உங்களுக்கு பல்ப்பு கொடுக்க யாரோ செய்த சதி..நம்ம பதிவர்களில் ஓருவராகவோ இல்லை நண்பர்கள் ஒருவாராகவோ இருக்கும்//

  அதானே கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் ஹி ஹி...

  ReplyDelete
 21. மனசாட்சி said...
  என்ன லாட்ஜ் போட்டு யோசிப்பிங்களா? இல்லை லார்ஜ் போட்டு யோசிப்பிங்களா?//

  ஹி ஹி இருக்கிறதே ஹோட்டலில்தானே...

  ReplyDelete
 22. மனசாட்சி said...
  ஜெயா பேமஸ் பேரு பி கேர் புல்//

  ஆமாமா நாள் புல்லாதான் இருக்கேன் ஹி ஹி...

  ReplyDelete
 23. siva said...
  INTERESTING..:)//

  யோவ் நான் போலம்பிட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 24. ஹி ஹிஹி....

  வவுறு வலிக்குது....

  ஹி ஹி ஹி...

  ReplyDelete
 25. ராஜி said...
  மனோ அண்ணே அண்ணிக்கு இந்த பதிவோட லிங்க் அனுப்பவாண்ணே//

  நல்லா இருங்க தங்கச்சி, அண்ணி'கிட்டே அண்ணன் வெளக்குமாறு அடி வாங்குறதை விரும்பும் என் தங்கச்சி வாழ்க ம்ஹும்....

  ReplyDelete
 26. பாலா said...
  இது நிச்சயமாக சதி அல்ல. உங்க மேல உண்மையான பாசத்துல இருக்கும் ஒருவரின் அன்பு வெளிப்பாடு. ஜெயாவை கை விட்டுடாதீங்க...//

  இது நியாயமா, இது நியாயமான்னு கேக்குறேன்....

  ReplyDelete
 27. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள மனோ எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியுமே...

  அதே பொண்ணு என்கூட சாட் ல வந்தாந்தாங்க, உங்களைப்பத்தியும் சொன்னாங்க..

  ஹா.ஹா...

  ( இதுல வேடந்தாங்கல் சதி எதுவும் இல்லை)//

  எலேய் தெரிஞ்சா சொல்லுலேய் வாத்தி, தொடர்ந்து அவள்[ன்] சாட்டுல இருந்து தப்பிச்சிருவேன்...

  ReplyDelete
 28. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஒரு வேல தலைப்பைப் பார்த்தா அவங்க சொன்னது உண்மையா இருக்குமோ?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

  ஆணியே புடுங்கவேண்டாம்....

  ReplyDelete
 29. சென்னை பித்தன் said...
  ஆஃபீசர் கிட்ட விசயத்தைச் சொல்லிட்டீங்களா?பெல்ட்டைக் கையில எடுத்தார்னா!!//

  அதான் உளவுத்துறை விசாரணை நடக்குது ஹி ஹி...

  ReplyDelete
 30. ஆமினா said...
  தலைப்பை பார்த்துட்டு “யோவ் எத்தன பேரதான்ய்யா லவ் பண்ணீங்க”ன்னு திட்டலாம்னு நெனச்சேன்...

  ஆனா பாவம் புள்ள இங்கே பல்பு வாங்கி பொலம்பிட்டிருக்கே!!!!


  ஹி...ஹி....ஹி......

  இன்னும் ஒரு வாரத்துக்கு உங்கள தூங்கவிடாம வைக்க யாரோ பண்ற சதி!!!

  ஓடுங்க ஓடுங்க!!//

  கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா ஐயோ நான் செத்தேன்.....

  ReplyDelete
 31. வெளங்காதவன் said...
  ஹி ஹிஹி....

  வவுறு வலிக்குது....

  ஹி ஹி ஹி...//

  பாரும்ய்யா என்ன அநியாயம் பண்ணி வச்சிருக்காங்கன்னு...!!!

  ReplyDelete
 32. நேத்து ஏதோ ஒரு புதுசா யாரோன்னு சொல்லிப்புட்டு...

  முன்னாள் காதலியா... யோவ் உமக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா...


  ஜெயா அண்ணிக்கிட்டே நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லிபுடுங்க...

  ReplyDelete
 33. கவிதை வீதி... // சௌந்தர் // said... 67 68
  நேத்து ஏதோ ஒரு புதுசா யாரோன்னு சொல்லிப்புட்டு...

  முன்னாள் காதலியா... யோவ் உமக்கு எங்கேயோ மச்சம் இருக்குயா...


  ஜெயா அண்ணிக்கிட்டே நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லிபுடுங்க...//

  நாசமாபோவ யோவ் நானே புலம்பிட்டு இருக்கேன்ய்யா நீர் வந்து பெட்ரோல் ஊத்துரீராக்கும் பிச்சிபுடுவேன் பிச்சி...

  ReplyDelete
 34. ///////

  டிஸ்கி : இது யாருடைய சதி, விக்கியின் சதியா...? வேடந்தாங்கல் சதியா..? சரித்திர பாண்டியன் ஸாரி சவுந்திர பாண்டியன் சதியா...?

  //////

  மிஸ்டர்.. சாட்ல வந்தா எந்த செளந்தர்ன்னு கேட்குற...

  இது யார்யா..?

  ReplyDelete
 35. யாருன்னு தெரியலன்னா அப்படியோ விட்டுடனும்..

  எதுக்கு இவ்வள நேரம் சாட் செஞ்சிங்க...

  அப்படியே சிக்குதான்னு பார்க்கவா...?

  ReplyDelete
 36. அண்ணே,
  வணக்கம் ,
  நல்லா இருக்கிறீங்களா?

  படிக்கும் போது சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, ஆனால்?

  ReplyDelete
 37. அண்ணன் சிபி மேல சத்தியம் பண்ணியது டூமச் பாஸ்....

  ஹே...ஹே..

  அவரு பாவம் இல்லையா?

  ReplyDelete
 38. அண்ணே ப்ளான் பண்ணி ஏமாத்தி,
  ஒரு சிங்கத்தை சாய்ச்சுப்புடுற அளவிற்கு ஒரு குறூப் திரியிறாங்களா?


  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 39. ஏமாந்தவர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவரா ஜெயா? அவ்வ்வ்வ்.

  ReplyDelete
 40. பலருக்கு இப்படி சொல்ல முடிவதில்லை காரணம் அச்சம்தான் பாராட்டுகள்

  ReplyDelete
 41. //ஹேய் சொல்லுங்கப்பா நீங்க யாரு..? ஸாரிங்கோ சிபி மேல சத்தியமா தெரியலைங்கோ..//

  என்னா கோல வெறி, அண்ணன கொல்றதுக்கு என்னமா பொய் சத்தியம் பண்ணுது..

  ReplyDelete
 42. அப்புறம் யாருங்க அந்த ஜெயா? மனு ன்னு கூப்பிடுது? யாரோ ஒருத்தங்க மட்டும்தான் அப்புடி கூப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்களே?

  ReplyDelete
 43. K.s.s.Rajh said...
  //அண்ணே இது நிச்சயம் உங்களுக்கு பல்ப்பு கொடுக்க யாரோ செய்த சதி..நம்ம பதிவர்களில் ஓருவராகவோ இல்லை நண்பர்கள் ஒருவாராகவோ இருக்கும்//

  சூப்பர் கண்டுபிடிப்புண்ணே, பின்னா இவர கலாய்க்க ஒபாமாவா வருவாரு?

  ReplyDelete
 44. கவிதை வீதி... // சௌந்தர் // said... 71 72
  ///////

  டிஸ்கி : இது யாருடைய சதி, விக்கியின் சதியா...? வேடந்தாங்கல் சதியா..? சரித்திர பாண்டியன் ஸாரி சவுந்திர பாண்டியன் சதியா...?

  //////

  மிஸ்டர்.. சாட்ல வந்தா எந்த செளந்தர்ன்னு கேட்குற...

  இது யார்யா..?//

  பின்னே ஒரு சவுந்தரா இருக்காங்க இந்த பேருல நிறைய நண்பனுங்க சாட் பண்ணுவது உண்டு மை லார்ட்...

  ReplyDelete
 45. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  யாருன்னு தெரியலன்னா அப்படியோ விட்டுடனும்..

  எதுக்கு இவ்வள நேரம் சாட் செஞ்சிங்க...

  அப்படியே சிக்குதான்னு பார்க்கவா...?//

  ச்சே ச்சே அந்த எண்ணமெல்லாம் அறவே கிடையாதுய்யா பெண் என்றாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் எனக்கு....

  ReplyDelete
 46. நிரூபன் said...
  அண்ணே,
  வணக்கம் ,
  நல்லா இருக்கிறீங்களா?

  படிக்கும் போது சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, ஆனால்?//

  கேள்வியே பயமா இருக்கு...?

  ReplyDelete
 47. நிரூபன் said...
  அண்ணன் சிபி மேல சத்தியம் பண்ணியது டூமச் பாஸ்....

  ஹே...ஹே..

  அவரு பாவம் இல்லையா?//

  ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா பாவம்தான்...

  ReplyDelete
 48. நிரூபன் said...
  அண்ணே ப்ளான் பண்ணி ஏமாத்தி,
  ஒரு சிங்கத்தை சாய்ச்சுப்புடுற அளவிற்கு ஒரு குறூப் திரியிறாங்களா?


  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  அப்பிடிதான் நினைக்கிறேன் ஹி ஹி...

  ReplyDelete
 49. FOOD said...
  ஏமாந்தவர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவரா ஜெயா? அவ்வ்வ்வ்.//

  அய்யய்யோ விட்டா ஆபீசர் எல்லா மேட்டரையும் புட்டு புட்டு வச்சிருவாரோ...?

  ReplyDelete
 50. மாலதி said...
  பலருக்கு இப்படி சொல்ல முடிவதில்லை காரணம் அச்சம்தான் பாராட்டுகள்//

  மிக்க நன்றி மாலதி....

  ReplyDelete
 51. Dr. Butti Paul said...
  //ஹேய் சொல்லுங்கப்பா நீங்க யாரு..? ஸாரிங்கோ சிபி மேல சத்தியமா தெரியலைங்கோ..//

  என்னா கோல வெறி, அண்ணன கொல்றதுக்கு என்னமா பொய் சத்தியம் பண்ணுது..//

  யோவ் சும்மா இருக்குற சிபி'யை இப்பிடி உசுப்பெத்துரீன்களே.....

  ReplyDelete
 52. Dr. Butti Paul said...
  அப்புறம் யாருங்க அந்த ஜெயா? மனு ன்னு கூப்பிடுது? யாரோ ஒருத்தங்க மட்டும்தான் அப்புடி கூப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்களே?//

  ஐயோ அதுதாம்ய்யா புரியாம குழம்பிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 53. Dr. Butti Paul said...
  K.s.s.Rajh said...
  //அண்ணே இது நிச்சயம் உங்களுக்கு பல்ப்பு கொடுக்க யாரோ செய்த சதி..நம்ம பதிவர்களில் ஓருவராகவோ இல்லை நண்பர்கள் ஒருவாராகவோ இருக்கும்//

  சூப்பர் கண்டுபிடிப்புண்ணே, பின்னா இவர கலாய்க்க ஒபாமாவா வருவாரு?//

  ஒபாமா எனக்கு மச்சானா.....ஹி ஹி....

  ReplyDelete
 54. என்னது பேரு ‘ஜெயஜோதியா’?

  பாத்துங்க மனோ. பேருல ‘ரெண்டு’ வில்லங்கம் இருக்கு.

  மொத வில்லங்கம்: ‘சிவகாசி’ஜெயா.
  ரெண்டாவது : ‘அண்ணாச்சி’யோட ஜீவ-ஜோதி.

  ReplyDelete
 55. அண்ணே யாருன்னே தெரியாம எப்பிடி முன்னாள் காதலின்னு முடிவுக்கு வந்தீங்க. சரி ஒரு பேச்சுக்கு அப்பிடியே வச்சுக்குவோம் அவங்க பேரை எப்படி மறந்தீங்க?

  ReplyDelete
 56. பல்பு வாங்குவது உங்களுக்கு சகஜம் தானே!!!!

  ReplyDelete
 57. சத்ரியன் said... 111 112
  என்னது பேரு ‘ஜெயஜோதியா’?

  பாத்துங்க மனோ. பேருல ‘ரெண்டு’ வில்லங்கம் இருக்கு.

  மொத வில்லங்கம்: ‘சிவகாசி’ஜெயா.
  ரெண்டாவது : ‘அண்ணாச்சி’யோட ஜீவ-ஜோதி.//

  யோவ் எங்கே கொண்டு போயி கோர்த்து விடுறீங்க அழுதுருவேன் ஆமா....

  ReplyDelete
 58. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  அண்ணே யாருன்னே தெரியாம எப்பிடி முன்னாள் காதலின்னு முடிவுக்கு வந்தீங்க. சரி ஒரு பேச்சுக்கு அப்பிடியே வச்சுக்குவோம் அவங்க பேரை எப்படி மறந்தீங்க?//

  ஹி ஹி கண்டிப்பா இது பெண் இல்லைன்னு நல்லா தெரியுது, இது நம்ம நெருங்கிய ஒரு நண்பனின் விளையாட்டு ஆனால் ஆள் தெரியலை அதான் சும்மா ஜாலியா பில்டப்பு கொடுத்தேன் ஹி ஹி...

  ReplyDelete
 59. vanathy said...
  பல்பு வாங்குவது உங்களுக்கு சகஜம் தானே!!!!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 60. Agape Tamil Writer said... 115 116
  அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில்
  பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக
  விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி//

  மிக்க நன்றி...

  ReplyDelete
 61. அங்ககூட அ(இ)தே நிலைமைதானா மனோ....பாவம் நீங்க !

  ReplyDelete
 62. என்ன ..... மக்களே....
  வரவர வரிசையா
  ஒரே பொம்பள புள்ளிக ராமாயணமா இருக்குது,,,,
  எங்கே செல்லும் இந்த பாதை......

  ReplyDelete
 63. குறாலாச் சிங்கத்தை தூங்க விடுங்க சாட்டில் சீட்டிங் செய்யாதீர்கள்!

  ReplyDelete
 64. தம்பி ஹி ஹி குற்றம் நடந்தது என்ன?

  ReplyDelete
 65. யோவ் கைய புடிச்சி இழுத்தியா...உண்மைய சொல்லு...இது எத்தனாவது காதலி ஹிஹி!

  ReplyDelete
 66. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா இது பப்ளிக். தெரியலையா உங்களுக்கு?//

  இது நம்ம நண்பன்தான் யாரோ கலாயிச்சி இருக்காங்க அதான் போட்டுட்டேன் ஹி ஹி....

  ReplyDelete
 67. ஹேமா said...
  அங்ககூட அ(இ)தே நிலைமைதானா மனோ....பாவம் நீங்க !//

  என்னத்தை சொல்ல போங்க....

  ReplyDelete
 68. மகேந்திரன் said...
  என்ன ..... மக்களே....
  வரவர வரிசையா
  ஒரே பொம்பள புள்ளிக ராமாயணமா இருக்குது,,,,
  எங்கே செல்லும் இந்த பாதை......//

  பாதை எல்லாம் சரியாதான் போயிட்டு இருக்கு புலவரே...

  ReplyDelete
 69. தனிமரம் said...
  குறாலாச் சிங்கத்தை தூங்க விடுங்க சாட்டில் சீட்டிங் செய்யாதீர்கள்!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 70. இராஜராஜேஸ்வரி said...
  அருவா.. அருவா தான்.//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 71. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி ஹி ஹி//

  டேய்.....

  ReplyDelete
 72. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி ஹி ஹி குற்றம் நடந்தது என்ன?//

  எலேய் அண்ணா, உங்கள்ல ஒருத்தனுடைய வேலைதான் இது ஹி ஹி....

  ReplyDelete
 73. விக்கியுலகம் said...
  யோவ் கைய புடிச்சி இழுத்தியா...உண்மைய சொல்லு...இது எத்தனாவது காதலி ஹிஹி!//

  எலேய் கடுப்பு கடுப்பா இருக்கேன்....

  ReplyDelete
 74. கடுப்புல எல்லாம் இருக்காதிங்க மனோ,
  ஜாலிய இருங்க.

  ஆனா சில வார்த்தைளை எல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப ஆசை வச்சவங்க எழுதுன மாதிரிதான் இருக்கு.
  பதிவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்திங்க...
  ஆனா சில விஷயங்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கு...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!