Sunday, June 1, 2014

ரஜினிகாந்தே பயப்படும் போது நாம எங்கிட்டு ?

எழுபத்தெட்டு வயசுகாரர், அவர் தோப்பும் எங்க தோப்பும் கொஞ்சம் அருகருகில், அவரும் பஹ்ரைனில் இருந்தவர்தான்...


ஊரில் அவருக்கு ஏகப்பட்ட நல்ல பெயர் காரணம் அவர் சாராயம் குடிப்பதே கிடையாதாம் ! [[எங்கப்பா அவரை கள்ளப் பய என்று அடிக்கடி குறிப்பிடுவது உண்டு]]


எங்கள் தோப்பருகேதான் டாஸ்மாக் கடையும் இருக்கு, நான் போன லீவுக்கு முந்தின அதற்க்கு முந்தின தடவை ஊருக்கு போன போது ஒருநாள் டாஸ்மாக் பந்த்"தானது, எங்கள் குடிசையின் இரு ரோட்டின் பக்கமும் ஜன்னல் இருப்பதால் லேப்டாப்பில் உங்ககூட பேஸ்புக்ல விளையாடிகிட்டு இருந்தேனா...


காலையில ஒரு பத்து மணி இருக்கும் அண்ணாச்சி வேகமா தோப்பு பக்கமா அருவாளோடு விறைய, சந்தேகமாக நானும் அருவாளை தூக்கி கொண்டு பின்னாடியே போனேன், சீவப்பேரி ஆளு பயந்து போனாள் [[ஹி ஹி]] அவளும் என் பையனும் பின்னாடி ஓடி வர, "ஏ பிள்ளே நான் அந்தாளு என்ன செய்யப்போறார்னு பாக்கத்தான் போறேன் நீங்க வராதீங்க"ன்னு சொல்லிட்டு போனாலும் என் பையன் நானும் வருவேன்னு அடம்பிடிக்க, அவனையும் மிரட்டிவிட்டு வேகமாக நடந்தேன்.


பொதுவாக கிராமங்களில் ஒரு ஆள் போகும் திசையை வைத்து அருவாள் எதற்கு கையில் இருக்கிறது என்பதை கணித்து விடுவார்கள், தோப்புக்கு போயி மரம் செடிகளை லேசாக கொத்தவும், பண்படுத்தவும் அரவங்கள் கடித்து விடாமலிருக்கவும்தான் அந்த அருவாள் !
அதனால் என்னை யாருமே பொருட்படுத்தவில்லை, இங்கே எங்கள் ஊரில் தோப்பை விளை என்று சொல்லுவோம் ஆகவே இனி விளை  என்றே சொல்கிறேன்.


எங்கள் விளையை அவருக்கு தெரியாமல் உள்ளே புகுந்து, சருகு சத்தம் கூட கேட்கா வண்ணம் அவர் அருகில் போயி ஒளிந்து கொண்டேன்.


அங்கேயும் இங்கேயுமா சுற்றி பார்த்தவர், ஓரிடத்தில் போயி மண்ணை கிளறினார்...ஆஆ...வெளியே வந்தது ஒரு குவாட்டர் பாட்டல் [[ச்சே போன் கொண்டு வந்திருந்தால் போட்டோவே எடுத்துருக்கலாம்]]


மறுபடியும் சுற்றி முற்றி பார்த்தவர், மடியில் இருந்து ஊறுகாய் மட்டையை எடுத்தார், ராவாக மொத்தமும் குடித்து விட்டு ஊறுகாய் மட்டையை நக்கினார், பாட்டலை ஒரு மூலையில் விட்டெறிந்தார்...

சற்று நேரத்தில் என் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்...


"எலேய் மனாசே நீ இங்கே என்னடே பண்ணிகிட்டு இருக்கா ?"


"தா பா தா நா கே போ..." நானு 


"என்னடே இப்பிடி நடுங்குத ?"


"இல்ல இல்ல இந்த பக்கமா ஒரு பாம்பு வந்துச்சா அதை விரட்டிகிட்டு வந்து சத்தங்காட்டாம பம்மி இருக்கேன் ஹி ஹி..."
"என்னாது பாம்பா...? அதை நீ விறட்டுனியா ? யப்போ யப்போ...மனாசே பாம்பை விரட்டிகிட்டு நம்ம விளைக்குள்ளே வந்தானாம் ஹா ஹா ஹா ஹா....[[அவ்வ்வ்வ்]]....வீட்டு வேலிக்குள்ளே பாம்பை பார்த்துட்டு பயந்து மீன் கடைக்கு போன அம்மாவை தேடி ரெண்டு கிலோமீட்டர் அலறி ஓடி வந்தவன்தானே நீயி ஹா ஹா ஹா ஹா...

மாங்கா களவாங்கதானே வந்தே களவாணிப் பயல..... அப்பாகிட்டே கேட்டாதான் பறிச்சு தந்துருப்பாவல்லா [[ஆஹா]] இங்கே வா நானே முறிச்சி தாறேன்"


என்னை விட ஒரு வயது குறைந்தவள், என்னை மிகவும் கிண்டல் பண்ணி விளையாடும் தங்கச்சி, அப்பங்காரர் கள்ள முழி முழிச்சிட்டு இருக்கார் அவ்வவ்...
சரி வந்த வேலை முடிஞ்சிதுன்னு மாங்காயோடு வீடு வந்தாச்சு, வீட்டுல உள்ள மெம்பர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டேன், அன்னைக்கு லீவு அல்லவா ஆகவே அண்ணனும் இருந்தான், நடந்ததை சொன்னதும்...

"என்னை லூசு அரை லூசு முக்கா லூஸு முழு லூசு"ன்னு சொன்னது  பரவாயில்லை, அப்புறம் என்மீதே சந்தேகப்பட்ட அண்ணன், என்னை ஊத சொன்னான் பாருங்க, சீவலபேரி கண்ணில் எரிமலை ..அவ்வ்வ்வ்வ்.


அப்புறம் தோப்புக்கு போகும் போதெல்லாம் அருவாளை எடுத்து மண்ணை கொத்தி பார்க்குறதுதான் வீட்டம்மாவின் வேலையாப்போச்சு...


இதுதான் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுறதோ ?10 comments:

 1. எனக்கும் சந்தகமாகத்தான் இருக்கு அண்ணே உங்கமேல

  ReplyDelete
 2. ஹா ஹா துப்பறியிற வேலையால வந்த வினை

  ReplyDelete
 3. இனி அந்தப்பக்கம் போவீங்க...?

  ReplyDelete
 4. எங்கிட்டு போனாலும் பின்னாடியே சி.ஐ.டி வேலை பார்க்க ஆள் வந்துருதே! # மனோ மைண்ட் வாய்ஸ். :)

  ReplyDelete
 5. ஹஹஹா.. செம்ம காமெடி..

  ReplyDelete
 6. செம காமெடி! இப்படியும் சில நல்லவனுங்க இருக்காங்க!

  ReplyDelete
 7. அடடா குவாட்டர புதைக்கும்போது தெரிந்திருந்தால்?

  ReplyDelete
 8. வித்தியாசமான அனுபவம், நகைச்சுவையுடன். ரசிக்கும்படி உள்ளது.நன்றி.

  ReplyDelete
 9. செம கிக்..... உங்க பதிவச் சொன்னேன் மனோ!

  விளை - அடிக்கடி எனது நண்பர் சொல்லும் சொல்... :)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!