Friday, September 19, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி !

மதுரை வலையுலக மாநாட்டில் பதிவர்களை வரவேற்று அவர்கள் அடைமொழி பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.

அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...முதலில் முகத்தில் நான்கு கிலோ பருப்புடன் ஸாரி பவுடருடன் உள்ளே நுழைவது சிபி அண்ணன்...
 "வணக்கம் அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சு எப்பிடி இருக்கே ?"

"நான் நல்லா இருந்தா என்ன நல்லா இல்லாட்டா என்னடா, எனக்கு ஒரு போன் பண்ணுனியா ? இல்ல ஊருக்கு வரும் போகும்போது என்ன வந்து பார்க்க சொன்னியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சு..."

"அதெல்லாம் அப்புறம் பேசலாம் அண்ணே இப்போ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஸைன்மென்ட் என்னன்னா..." இடைமறிக்கிறான்.

"அட்ரா சக்கை"தானே ?"

"ஆமாண்ணே ஆமா"

"அட்ரா"ன்னா சூப்பர் ஃபிகரு, சக்கை"ன்னா சப்பை ஃபிகரு [[ஹிந்தி தெரிஞ்சவிங்க கமுக்கமாக சிரிக்கவும்]] போதுமா ?"ன்னு உள்ளே போறான். [[ம்ஹும் இது திருந்தாது]]

விக்கி அண்ணன் டொம் டொம் என்று தரை அதிர நடக்க முடியாமல் [[அம்புட்டு வெயிட்டு]] நடந்து வருகிறான்...

"வா அண்ணே வா..."

"ஆரம்பமே சரியில்லையே...உன்னை யாருய்யா இங்கே நிப்பாட்டினது ?"

"அது கமிட்டி மெம்பர்ஸ் உத்தரவு அண்ணே"

"அப்போ நானு ?"

"நீயும் உறுப்பினர்தான்"

"அப்போ என்னிடம் கேட்காமல் உன்னை எப்பிடி இங்கே நிறுத்தலாம்"

"தூக்கிப்போட்டு மிதிச்சிபுடுவேன் மிதிச்சு [[தூக்க முடிஞ்சாத்தானே]] மரியாதையா உன் அடைமொழி பெயரை சொல்லிகிட்டு சிபி அண்ணன் பக்கத்துல போயி பம்மிரு"

"அது வந்து அண்ணே....[[விட்டத்தை பார்த்து யோசிக்கிறான்]] எனக்கு விக்கல் வக்கலா ச்சே விக்கலா அடிக்கடி வரும்டா அண்ணே அதான் "விக்கி உலகம்"ன்னு நானா ரோசிச்சு வச்சேன்"

அரங்கத்துக்கு மைக்ல தகவல் போகுது...

"சரவண பவன் ஹோட்டலை காலி [[சாப்பாட்டை]] பண்ணிட்டு விக்கலோடே விக்கி அண்ணன் வாறான் பராக் பராக்" அங்கே எல்லாரும் கலவரமாகிறார்கள்.

கே விஜயன் பவ்யமாக வந்து...
"ஓய் நீர் எப்ப ஓய் இங்கே வந்தீரு என்கிட்ட சொல்லாம ?"

கண்ணீரோடு "மக்கா, சென்னை வாறேன் வாறேன்னு டிமிக்கி குடுதேம்ல்லா அதான் சென்னை பார்டிங்க கூலிப்படை அனுப்பி தனி வி"மான"த்துல தூக்கிட்டு வந்துட்டாவ அவ்வவ்"

"சரி சரி அழாதேயும் ஓய்"ன்னு தொப்பை வயிறு வெளியே தெரியாமல் இருக்க சட்டையை கீழே இழுத்து விடுகிறார்.

"உங்க அடைமொழி பற்றி சொல்லுங்க ?"

"எருமைனாயக்கன் பட்டியில் நடந்த பதிவர் சந்துப்பு மாதிரி ஆகிறாதுல்ல ? அன்னைக்கு சன்னல் ஏறி குதிச்சதுல கால் முறிஞ்சி போச்சு ஓய், இப்போ இங்கே உம்மை பார்க்கும் போதே குலை நடுங்குது ஓய்...

மனதில் நின்றவை" என்பது யாதெனில் "போட்டோவில் நின்றவை" என்றும் சொல்லி சொல்லாமல் நானிருந்தால் இந்த நாடு என்னை கல்லெறியும் தக்காளி எறிஞ்சி  ஆஸ்பத்திரியில் படுத்து சூப்பர் ஸ்டார் கையால பூரிகட்டை..." கமல் போல புலம்ப...இடைமறித்து. 

"சரி சரீஈஈ உள்ளே போரும் ஓய்" நெஞ்சை கையில் பிடித்து செல்கிறார்.

"ஸ்கூல் பையன்" சரவணன்  வெடைப்பாக வேகமாக ஓடி வருகிறார்.


மனோ"வை அலட்சியமாக பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க...

"ஹலோ ஹல்லல்லொ ஸ்டாப் ஸ்டாப்...இங்கே ஒருத்தன் வெறைப்பா நின்னுகிட்டு இருக்கேன்ல ?"

"ஹாங்.... பஹ்ரைன்ல இருந்து உம்மை தூக்கிட்டு வந்ததே நாங்கதான் நியாபகம் இருக்கட்டும்" மேலேயும் கீழேயும் பார்கிறார்.

"மெதுவா சொல்லுய்யா யாரும் கேட்டுற போறாயிங்க அண்ணன் பாவமில்ல"

"இப்போ உமக்கு என்ன வேணும் ?"

"எண்ணய்தான் வேணும் ச்சே அடைமொழி அர்த்தம் சொல்லுய்யா முதல்ல"

"ஊ....ஊ..... ஒ.... ஒ.... ஒ.... அவ்வவ்...." அழுது தரையில் உருள...

"ஆய்யே அழாதேய்யா அழாம சொல்லுங்க"

"அண்ணே என் பையனை ஸ்கூல் கூட்டிட்டு போகும்போது ஒருநாள் மழை பெய்ய, நான் அப்பிடியே மழையில் நனைஞ்சி சந்தோஷமா உருண்டு புரண்டு ரோட்டுல பாட்டு பாடினதை பார்த்து, பையன் வீட்டுல போட்டு குடுத்துட்டான், வீட்டம்மிணி பூரிகட்டையால சாத்தினது கூட பரவாயில்லை அண்ணே...

"ஸ்கூல் பையன்" மாதிரி ரோட்டுல உருளுவியா உருளுவியான்னு சொல்லி அடிச்சது என் மனசை ரொம்ப பாதிச்சுருச்சு அண்ணே அதான்"ன்னு  விக்கி விக்கி அழுதுட்டே போறார் பாவம்.

குடு குடு"ன்னு நல்லா "சிகப்பான" உருவம் ஒன்று ஹெண்ட் பேக்கை தலையில் வச்சிகிட்டு முகத்தையும் மூடிகிட்டு ஓடிவர...
"ஹல்லோ மேடம் யார் நீங்க ?"

"என்னாது யாரா...?" என்று பேக்"கை நகர்த்த...ஆஆ...செல்வி டீச்சர்...

ஜெர்க் ஆகி கால் கை தலை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்...."டீச்சர் நீங்க இங்கே எப்பிடிலா ?"

ஆள்காட்டி விரலை உயர்த்தி "பிச்சிபுடுவேன் பிச்சி...நானும் பதிவர்தான் ஆமா..."ன்னு சொல்லிட்டு உள்ளே நுழைய...

"பிளீஸ் ஸ்டாப்  உங்க அடைமொழி சொல்லிட்டு போங்க டீச்சர்"

காதில் மெதுவாக.."மனோ அன்னிக்கு பதிவர்கள் சந்திப்பில் நடந்த மாதிரி கலவரம்...?"

"நோ நோ டீச்சர் நம்ம ஆபீசர் இருக்கார் கூடவே பிரகாஷும் இருக்காப்ல"

"அன்னைக்கு கலவரம் ஆனதுக்கே பிரகாஷ்தானே"டா"[[அவ்வவ்]]  காரணம் மனோ ? சரி, அதாவது நான் ஒருகாலும் [[ரெண்டு கால் ஆச்சே]] தரையில், மண்ணில், நிற்பவள் கிடையாது, எனது காலும். கையும். ஏன் மனசும் கூட வானில் பறந்து கொண்டேதான் இருக்கும், அதான் "என் மன வானில்"ன்னு வச்சிருக்கேன், போதுமா ?

"சரி சரி பார்த்துக்கலாம் போங்க டீச்சர்"

 [["யாருலேய் அங்கே வானில் பட்டம்"ன்னு கத்துறது ?]]
தொடரும்...

மனதின் கற்பனைதான் இது தப்பாக எடுக்காமல் நல்லா சிரியுங்க...

12 comments:

 1. சிரிப்பு வெடிக்கு பஞ்சம் இல்லை பாவம் செல்வி டீச்சர் நிலை!ஹீ

  ReplyDelete
 2. இனிய வணக்கம் மக்களே..
  அடைமொழி விளக்கம் ... செம கலாய்ப்பு...

  ReplyDelete
 3. அண்ணே அரிவாளோடு நீங்க...! ஹிஹி....

  ReplyDelete
 4. ப்ளாக்குக்கு உன் பேரையே வெச்சுட்டதால உன்னைக் கலாய்க்க முடியாதுன்றதால எல்லாத்தையும் இப்படியா கலாய்ச்சுக் கும்முறது...? ஆனாலும் படிக்க ஜாலியாத்தேங் இருந்துச்சு. விக்கிக்கும், ஸ்கூல் பையனுக்கும் சொன்ன காரணம்செம.. ஹா... ஹா... ஹா....

  ReplyDelete
  Replies
  1. அண்ணே...என்னை போட்டு தள்ள ஆள் வந்துகிட்டே இருக்கும் பாருங்க இதோ..முதல் ஆளா நீங்களே வந்தாச்சு அவ்வ்வ்வ்...

   Delete
 5. //"ஊ....ஊ..... ஒ.... ஒ.... ஒ.... அவ்வவ்...." அழுது தரையில் உருள...//

  அண்ணே, ஏன் இப்படி? அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 6. ரசித்தேன் மனோ.

  ஸ்கூல் பையன் - :)

  ReplyDelete
 7. எப்படியோ சிலரை கிண்டல் செய்து பலரை சிரிக்க வெச்சுட்டீங்க...

  ReplyDelete
 8. எப்படியோ கூடி கும்மியடிச்சா சரி தான். கலாய்ப்பு நல்ல கல கல.

  ReplyDelete
 9. குடு குடு"ன்னு நல்லா "சிகப்பான" உருவம் ஒன்று ஹெண்ட் பேக்கை தலையில் வச்சிகிட்டு முகத்தையும் மூடிகிட்டு ஓடிவர.../////வன்மையாக கண்டிச்சிக்கிறேன்..’சிகப்பா’ஆனாலும் சிரிக்கிறேன்... வீணாக பஹ்ரையின் ஒரு கொலை விழப்போகுதுலா மனோ.....நன்றி நன்றி

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!