லிபியாவில் பூமிக்கடியில் நீள நதியாக நல்ல தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்த அமேரிக்கா மற்றும் மேலை நாடுகள், குறி வைத்து கத்தாபி என்ற சர்வாதிகாரியை கொன்றதை நாமறிவோம், இன்னும் பல நாடுகளை குறி வைத்து காய் நகர்த்தி வருவதையும் நாமறிவோம்.
அடுத்த உலக யுத்தம் என்றால் அது தண்ணீருக்காகவே இருக்கும்.
அஞ்சாசிங்கம் செல்வின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த குறும்படமும் அதைதான் சொல்கிறது !
மகேஷ், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் ஆரூர் மூனா, ஷூட்டிங் ஸ்பாட்.
பாலைவனத்தில் தளர்வாக நடந்து வரும் நாயகன்...தாகத்தால் ஒளித்து வைத்திருக்கும் தண்ணீர் பாட்டலை யாரும் பார்கிறார்களா என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஒரு மூடி தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு ஒளித்து வைக்கிறான்.
நானும் ஆரூர் மூனாவும்...
தண்ணீர் களவாணிகள் அதை பார்த்து பிடித்து நாயகனை மிரட்ட, நாயகனோ இவர்கள் பணம் காசுக்காக தன்னை வளைத்து மிரட்டுகிறார்கள் என்று நினைத்து மொபைல், பர்ஸ், லேப்டாப் என கழற்றி வைக்க...
தண்ணீர் களவாணிகள் லேப்டாப் பேக்கை திறந்து பார்த்தாலும் தண்ணீர் இல்லை, நாயகன் பேன்ட் பின்னாடி தண்ணீரை ஒளித்து வைத்திருப்பதை இன்னொரு தண்ணீர் கள்ளன் கண்டு பிடிக்க...
காட்சியை விளக்கும் டைரக்டர் செலவின்.
இடுப்பில் இருக்கும் தண்ணீரை வலுகட்டாயமாக பிடுங்கி எடுத்து அடுத்த தண்ணீர் கள்ளனிடம் கொடுக்க, நாயகன் அந்த தண்ணீர் பாட்டலை பிடுங்கி ஓட முயல...
தண்ணீர் கள்ளனில் ஒருத்தன் நாயகனை சுட்டு கொல்ல...தண்ணீர் பாட்டலை கெட்டியாக பிடித்துக் கொண்டே நாயகன் உயிரை விடுகிறான்.
முதல்ல இந்தாளைதான் போட்டு தள்ளனும்...கேமரா மேன் விமல்...
வில்லன்களுக்கு காசு பணம் முக்கியமில்லை தண்ணீர் மட்டுமே முக்கியம் என்பதாக முதல் பாகம்...[[இதுல மேலே நான் சொன்ன கத்தாபி கதையும் பொருந்தும்]]
திடீர் என நாயகன் கட்டிலில் இருந்து அதிர்சியாக எழும்ப...மேலே சொன்னது கனவாக தெரிய..... லைட்டை போட்டு விட்டு தண்ணீர் பாட்டலை தேட பாட்டல் அங்கே இருக்கிறது.
கதறி கதறி பழவேற்காடு தீவுக்குள் நடந்துவரும் வெங்கடேஷ் மற்றும் மெட்ராஸ் பவன்.
கட்டிலை விட்டு கீழே கால் வைத்ததும் கீழே தண்ணீர், அலட்சியமாக பாத்ரூம் பைப் தண்ணீரை திறந்து வைத்து விட்டதை நினைத்து பைப்பை அடைத்து வைத்துவிட்டு பாட்டல் தண்ணீரை கொஞ்சம் குடித்து விட்டு தூங்குகிறான் நாயகன்.
படத்தை கொஞ்சம் உறிச்சா...
ஒளிப்பதிவு சூப்பர்...[[இதில் மெட்ராஸ் பவன் சிவாவின் பங்கும் உண்டு என்பது ஆச்சர்யம்]]
ஆரூர் மூனா நிஜமான வில்லனாகவே அசத்தி இருக்கிறார்.
செல்வினின் இயக்கமும் நடிப்பும் அருமை...!
இசை இன்னும் அருமை...
விமர்சனம் சிம்பிள்...h2o..."super"
படத்தை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் பண்ணவும்.
https://www.facebook.com/selwin.anand/posts/10204838450374292
வலைத்தளம் பதிவர்கள் இப்போது குறும்படம் பக்கமாக மேலே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது !
அதுல அற்புதமா நடிச்சிருந்த அருவா புகழ், மடிக்கணினி புகழ் மனோங்கற நடிகனைப் பத்தி ஒரு வரியும் குறிப்பிடாததை வன்மையா கண்ணடிக்கிறேன்.. ஸாரி, கண்டிக்கிறேன். முதல் குறும்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான கதை இயக்கம் மற்றும் நடிப்பில் அசத்தியிருக்கும் செல்வின் மற்றும் குழுவினரை மகிழ்வோட கைதட்டி வாழ்த்தறேன்.
ReplyDeleteநம்ம பதிவர்கள் அற்புதமா படம் எடுக்கறதப் பார்த்து சந்தோஷப்படற அதே நேரத்துல என் மாதிரி அற்பமான பதிவர்களுக்கும் இதைப் பார்த்து குறும்படம் எடுக்கற ஆசை வந்துட்டா உன் கதி என்னவாறதுன்னு நினைச்சு கவலையும் படறேன். ஹி.. ஹி... ஹி....
ReplyDeleteஹா ஹா ஹா ஹா எடுங்க அண்ணே எடுங்க...
Deleteஆரம்பிச்சி வைச்சிட்டாரா இனி பதிவுலகில் ஏகப்பட்ட ஹீரோக்களும் வில்லன்களும் டைரக்டர்களும் உருவாகுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ReplyDeleteஅருமையான கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் குறும்படம்.வசனத்துக்கு அவசியமேஇல்லை.அசைவுகள் மூலம் உணர்வை வெளிப்படுத்தும்.நடிகர் சிகரம் மனோ,நடிகர் இமயம் செந்தில் நடிப்பின் உச்சம் அஞ்சா சிங்கம்!அனைவரையும் பாராட்டுகிறேன்.
ReplyDeleteநல்ல குறும்படம்...
ReplyDeleteவில்லன் மனோ அண்ணா கத்தி காட்டி மிரட்டுறாரு... அவரைப் பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறோம்...
சிறப்பான கதையாக இருக்கிறது! சிறந்த குறும்படம் எடுத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநிஜமாவே நான் படத்தைப் பார்த்துட்டு அசந்துட்டேன். ஏதோ பழவேற்காடு பக்கத்தில ஒரு தீவு-ல கஷ்டப்பட்டு போனதா கேட்டதும் ஒரு சின்ன படத்துக்கு எதுக்கு இவ்வளவு மெனக்கிடல்னு நினைச்சேன். ஆனா அது படத்துக்கு மிகப்பெரிய பலமாவே இருக்கு....
ReplyDeleteபதியுலகம் மற்றொரு சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது...
ReplyDeleteசெல்வின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
yarukkum thanni venu enra feeling ille , Aroor moonave miratta use panniyirukkalam, -sari waterworld , The Road movie yoda low cost remake
ReplyDeleteபடம் நல்லா இருக்கு ஆனா கடைசியில் எழுந்து போய் தண்ணியை நிறுத்திட்டு அப்படியே வந்து மல்லாக்க படுத்துட்டாரு. அப்போ அந்த பாத்ரூம்ல எரிஞ்சிட்டு இருக்க லைட்டு, அவரு படுத்து இருக்க இடத்தில் எரியர லைட்டு அல்லாம் ஆரு நிறுத்துவா? இதுக்கா கரண்டை காப்பாத்துங்கனு அடுத்து ஒரு குறும்படம் வருமா.. :)
ReplyDelete