Monday, December 29, 2014

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...!

முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் !
http://nanjilmano.blogspot.in/2014/12/blog-post.html

நண்பர்கள் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது காற்று வர லேசாக ஜன்னலை திறந்து வைத்திருந்தோம், அப்படியே அவர்கள் போனதும், தெரியாமல் ஜன்னலை அடைக்காமல் தூங்கி விட்டோம், சென்னை கொசு பற்றி தெரிந்தும்...அப்பாடா என்னா கடி என்னா கடி...! 

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி [[கொசு தொல்லை]] வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன் மும்பையில் இருந்து வந்த களைப்பு வேற, நாளைய புரோகிராம் எல்லாம் சிவா, பால கணேஷ் அண்ணன், கே ஆர் பி செந்தில் அண்ணன் மற்றும் ஸ்கூல் பையன் சரவணனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சரி எப்படியும் பத்து பதினோரு மணி ஆகிவிடும் நன்றாக தூங்கி விடலாம் என்று போயி தூங்கினதுதான் தெரிஞ்சிது, காலை ஏழரை மணிக்கே மெட்ராஸ் பவன் சிவா வந்து கதவை தட்ட...

எழும்பி பரபரவென்று குளித்து முடித்துவிட்டு கிளம்புமுன் சிவா பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார், "வாங்க மனோ பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு சாப்புட்டுட்டு வருவோம்" என்றதும் போனோம்.

"இந்தியன் குளம்பியகம்" என்று போர்டு இருந்துச்சு, என்னய்யா பெயர் இது என்றேன், காப்பி கடையை இப்படியும் சொல்வதுண்டு என்று சொன்னார் சிவா...!

சாப்பாடு சூப்பராக இருந்தது, கணேஷ் அண்ணன் வர கொஞ்சம் லேட் ஆகும் என்பதால், சிவா அருகில் இருக்கும் அவர் வீட்டுக்கு அழைக்கவே, நான் டவுசர் போட்டிருந்ததால் துணி மாற்றி செல்லலாம் என்றேன், இல்லை மனோ அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க லேட்டாதான் வருவாங்க என்றதும் அவர் வீட்டிற்கு சென்றேன்.

கொஞ்சநேரம் அளவளாவி விட்டு வெளியே வந்ததும், அப்படியே நடக்கலாம் வாங்க மனோ என்று அவர் கூட்டி சென்றது சென்னையின் உயிர்நாடியான மவுண்ட் ரோடு, கிளீனாக இருக்கிறது ஆனால் தூசு ரொம்ப இருக்கிறது, எதிரில் ஒய் எம் சி ஏ காம்பௌண்டையும் காட்டி தந்தார் பச்சை பசேல் என்று இருக்கிறது !
சென்னை மவுன்ட் ரோடும், எதிரில் ஓய் எம் சி ஏ'யும், அருகில் மெட்ராஸ் பவன்"சிவாவும் நானும்.

கணேஷ் அண்ணன் ரெடி என்றதும், அப்படியே காலை சென்னை பித்தன் "தல" வீட்டிற்கு போவதாக பிளான் போட்டிருந்தார்கள், சிவா நான் ஹோட்டல் போயி பேன்ட் சர்ட் மாற்றிட்டு போகலாம் என்றதும் சிவா, "அண்ணே மனோ ட்ரெஸ் குறைவா போட்டுருக்காராம் அதனால ஹோட்டல் போயி துணி மாற்றி ரெடியாகுறோம் நீங்க ஹோட்டல் வந்துருங்க"

நாங்கள் ஹோட்டல் வந்து சேரவும் கணேஷ் அண்ணனும் வந்துவிட்டார், மனோ ட்ரெஸ் குறைச்சல் என்று இழுக்குமுன் "இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்" என்று டைமிங் பஞ்ச் சொல்ல சிரித்து அப்படியே கிளம்பினோம், சிவாவுக்கு தல வீட்டிற்கு போக வழி சொல்லி குடுத்து விட்டு அண்ணன் கிளம்பினார் புல்லட்டில் எங்களுக்கு முன்பாக.

அடையாறு பக்கம் என்பதால் எப்பவோ படித்த அந்த ஆலமரத்தை தேடினேன் அம்புடல, குறிப்பிட்ட இடத்தில் கணேஷ் அண்ணன் காத்திருக்க ஆட்டோவில் போயி இறங்கினோம்.

கணேஷ் அண்ணன், அவர் எழுதிய சிரிப்பு யாணம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய இரண்டு புஸ்தகம் பரிசளித்து விட்டு தல வீட்டுக்கு அழைத்து சென்றார் அங்கே.....

தொடரும்.....

9 comments:

  1. அந்த ஆலமரம் போன வருஷமே சாய்ஞ்சுடுச்சு மனோ. தெரியாதா நோக்கு...? சிவா வூட்டாண்ட இந்தியன் குளம்பியகம் எங்களோட ஃபேவரைட் காபி ஸ்பாட். தலயுடன் பேசிய அனுபவ விவரிப்பை உன் எழுத்தில் பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  2. இதையே மேலும் சில பாகங்கள் எழுதி புத்தக கண்காட்சிக்கு நாவலாக கொண்டு வந்து விடுங்கள். எழுத்தாளர் மனோ ஆகி விடலாம். மினிமம் 10,000 புத்தகங்கள் விற்கும்

    ReplyDelete
  3. நண்பர்களின் சந்திப்பும்... சென்னை சுற்றலும்... ம்... பயணக் கட்டுரை தயாராகிறது. அடுத்த புத்தகத் திருவிழாவில் மனோ அண்ணனின் பயணக் கட்டுரை புத்தகமாக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு சென்னைப் பயணத்திலும் நானும் வாத்யாரை சந்திக்கிறேன். அனைத்துமே இனிய சந்திப்புகள்! உங்கள் சந்திப்பு பற்றி படிக்கும்போது அடுத்த சந்திப்பு எப்போது என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஆமாம் மறக்க முடியாத நினைவுகள்தான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. சுவையான பகிர்வு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!