Sunday, April 10, 2016

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...!!!

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...
இன்டர்நெட் ரூம் கனெக்டிங் பிரசினையை பார்க்க சொன்னா...நெட்'காரனைக் கூப்பிடு அங்கேதான் பிரசினை'ன்னான், அடேய்...டவுன்லோட் ஸ்பீடு அளவுக்கும் மீறி இருக்கும்போது...எப்பிடிடா நெட்'காரன் பிரச்சினையா இருக்கப்போகுது ?ன்னு கேட்டா...கூலா போயி உக்காந்துகிட்டு...ஊருக்கு போன்ல பொண்டாட்டிக்கு போன் போட்டு..."பால் குடுத்தியா ?"..............."
"...டி கழுவினியா ? அய்யயோ சின்ன பிள்ளையாச்சே கழுவப்டாது, டிஷு வச்சி தொடைக்கணும்.."
நாறுமேன்னு பதில் வந்துருக்கும் போல, கெக்கேபிக்கேன்னு சிரிக்கான்...
"தம்பி இங்கே தங்கியிருக்கும் ஹோட்டல் விருந்தாளிகள் என்னை பேதி போக வச்சிருவாயிங்க, பிளீஸ் வந்த வேலையை முதல்ல கவனி..."
"அதான் சொன்னேன்ல நெட்'காரன் கனெக்ஷன் பிரச்சினைன்னு..."
நிறைய வாயால வடைசுட்டு அவன் கிளம்பும்போது...வடிவேலு வாய்சில்..தம்பி...உன்னை தப்பா வேலைக்கு சேர்த்துருக்காயிங்க எதுக்கும் நல்ல சீனியராப் பார்த்து கொஞ்சநாள் அசிஸ்டெண்ட் வேலை செய்யப்பாரு"ன்னு சொன்னதுக்கு, அதே மனோபாலா பதில்தான் பார்வையில்..."எனக்குத்தெரியும் போடா"
சரி போகட்டும்ன்னு வேறோருத்தனைக் கூப்பிட்டேன்...அவனும் அவனால முடிஞ்சளவு வாயில வடை சுட்டான்...இவன் கொஞ்சம் வித்தியாசமா சொன்னான்ய்யா...கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்'ன்னான்...[[சம்பளம் பிரச்சினையா இருக்குமோ ?]]
அவனும் போயி உக்காந்துகிட்டு ஏதோ ஒரு நாதாரிக் கூட போன்ல கடலை போட்டுட்டு இருந்தான்...
"தம்பி வந்த வேலையைக் கவனியுங்களேன் பிளீஸ்"
"அதான் சொன்னேன்ல கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்ன்னு ?"
"இல்லியே...இந்த வயர் கனேக்ஷன்ல்லதானே பிரச்சினை போல இருக்கு ?"
என்னை மேலேயும் கீழேயும் பார்த்தான்...போகும்போது..."தம்பி...உன்னை தப்பா...." "தெரியும் போடா " மூவ்மெண்டேதான்...
என்ன செய்ய...? இன்னொருத்தனைக் கூப்பிட்டேன்...வந்தான், பார்த்தான்...ரோசிச்சான்..."ஒரே ஒரு" வயரை கழட்டினான்...இன்னொரு இடத்தில் மாட்டினான், அந்த வயரை இங்கே மாட்டினான்...பிராப்ளம் சால்வ் !!!
"தம்பிக்கு எந்த ஊரு ?"
"நீங்க தமிழா சார் ? எப்பிடி சார் நான் தமிழ்ன்னு கண்டு பிடிச்சீங்க ?"
"அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி வச்சிருக்கே"
"நான் மதுரை சார், உங்களை மலையாளி"ன்னு நினைச்சிட்டேன்" [[அவ்வ்வ்வவ்]]
நம்மாளுங்க நல்ல உத்திரவாதமாத்தான் வேலை செய்யுறாங்க ம்ம்ம்ம்...முதல்ல நான் கூப்பிட்ட ரெண்டு பேரும் மலையாளிங்க...அவங்க வாங்குற சம்பளம், 60 ஆயிரம் ரூபாய், நம்மாளு வாங்குற சம்பளம், 30 ஆயிரம் ரூபாய்...!
இனி முதல் பாராவை மறுபடியும் படியுங்க.

8 comments:

  1. அவ்வளோ நல்லவங்களாவா இருக்காங்க! பாவம் தமிழன் கொஞ்சம் அப்பாவிதான்

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க உழைப்பாளிங்க, கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாம உழைக்குறாங்க !

      Delete
    2. நம்மாளுங்கன்னு உம்மையும் சேர்த்துகிட்டீரு.....அவன் தான் சொன்னான்ல நீர் மலையாளி மாதிரி இருக்கீருன்னு... பய அந்த அர்தத்துல தான் சொல்லியிருக்கான் ஒரு வ்யரை மாற்றி மாட்டத்தெரியாத நீரெல்லாம் எப்படி ஒய் தமிழனா இருக்க முடியும்...30000தின் மைண்ட் வாயஸ்

      Delete
  2. //இனி முதல் பாராவை மறுபடியும் படியுங்க//
    படிச்சேன். அதை வாயில் வடை சுடும் மலையாளிங்க ன்னு மாத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சேக்காளி, மாத்திட்டேன்.

      Delete
  3. அதுதான் அவங்க மாளிகை , ஹோட்டல் என்று சேமிக்கின்றாங்க சொந்த நாட்டில் தமிழன் திருப்பி போக அரசிடம் கையேந்துகின்றாங்க எம்பசியில் தூங்கி!ம்ம்

    ReplyDelete
  4. வாயில வடை சுடுறவங்களுக்கு 60 ஆயிரம் ஐடி வேலை செய்யுறவங்களுக்கு 30 ஆயிரமா? நல்ல கம்பெனியப்பா?

    ReplyDelete
  5. சுவையான தகவல்,நன்றி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!