Thursday, April 7, 2016

அமேரிக்கா பணமா கொக்கா !முன்பு மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம், காலை எட்டு மணி முதல் மூன்று மணி வரை பிளேன் வரத்துப் போக்கு ரொம்ப குறைவாக இருக்கும், அந்த நேரத்தில் வேலைகள் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் தூங்கலாம் என்று, ட்ரான்சிட் பயணிகள் தூங்கும் இடத்துக்குப் போயி, ஏர்போர்ட் பாஸை கழட்டி பாக்கெட்டுல வச்சிகிட்டு தூங்குவது உண்டு, ஏர்போர்ட் மேனேஜர் செக்கிங் வந்தால் நாங்களும் பயணிகள் என்று போய்விடுவார்.

அன்று [[எப்போவும்]] வழக்கம்போல தூங்குனப்போ, ஏசி குளிர் கொஞ்சம் கூடுதலா இருந்ததால ரெண்டு கையும் குளிர்ல நடுங்கியதும், ஏதாவது இடுக்குகுள்ள கைவிரல்களை சொருகலாம்ன்னு தூக்கத்திலேயே பெட்டில் தடவிய போது, ஒரு இடுக்கில் கைபோனது...

உள்ளே என்னமோ இருக்குபோலன்னு  உணர்ந்தாலும், தூக்கத்தில் தூங்கிவிட்டு எழும்பி போயி முகம் கழுவிகிட்டு இருக்கும்போதுதான், அந்த நினைவு  வந்துச்சு...திரும்பவும் ஓடிப்போயி கைவிட்டுப் பார்த்தால் ஏதோ பேப்பர் சுருட்டுனாப்ல இருக்கவே, வெளியே எடுத்தேன்...அமெரிக்கன் டாலர் மாதிரி தெரியவே...எடுத்து விரித்துப் பார்த்தேன்...ஆத்தி...மூன்று நூறு டாலர் நோட்டுகள்...

அப்போது டாலர் ரேட் 33 ரூபாய்...ஆக மொத்தம் கிடைத்தது 9900 ரூபாய்...

அப்புறம் எங்கே உக்காந்தாலும் இந்தப்பழக்கம் தொத்திகிச்சு, ஏர்போர்ட் என்பதால் அதுவும் செக்கியூரிட்டி செக்கிங் [[முன்பு, இப்போ பிச்சிபுடுவான் மிலிட்டிரிக்காரன்]] நடக்கும் முன்பு பயணிகள் ஆசுவாசமாக அமரும் இடம் என்பதாலும், அடிக்கடி இப்படி காசு கிடைப்பதுண்டு, பென்"கள் நிறைய கிடைக்கும், மலையாளிகள் அதிகம் போகையில் நம்ம ரூபாய் வெளிநாட்டில் செல்லுபடி ஆகாதுன்னு [[அப்போ]] இப்படி ஒளித்து வைத்து செல்வதுண்டு...!

சரி அன்னிக்கு கிடைச்சுதே டாலர், அதை என்ன செய்தாய்ன்னு கேக்குறீங்களா ?

இலவசமா கிடைத்ததை இலவசமாக கொடு பாலிசிதான்...மூன்று மணி நேரத்தில் மும்பை லேடீஸ் நடன பாரில் நண்பர்களோடு என்ஜாய்...பத்தாயிரம் [[அப்போ]] காலி...!

எங்க அண்ணன் இப்பவும் என்னைப் பார்த்து கவலையும்  வேதனையுமாக சொல்லும் டையலாக் "உனக்கு பணத்தோட அருமை இன்னும் தெரியவில்லை மனோ"

இப்போல்லாம் அப்பிடி முடியுமா ஆத்தே...?!!! [[இது கல்யாணத்துக்கு முந்தி நடந்தது சாமிங்களா, போட்டுக் குடுத்துராதீக]]

குடிசையில் பிறந்து வளர்த்தவனே இப்பிடின்னா குபேரனின் பிள்ளைங்க...? ஸ்ஸ்ஸ் அபா...சோடா பிளீஸ்...

2 comments:

  1. கல்யாணத்திற்கு முன்பு மற்றவங்க ஆட நீங்க பார்த்திருப்பீங்க ஆனால் கல்யாணத்தீற்கு அப்புறம் உங்களை ஆட வைக்க ஆள் வந்தாச்சுல்ல அதனாலதான் கல்யாணதிற்கு அப்புறம் ஆடல் பார்க்க போறதில்லை போல

    ReplyDelete
  2. அதானே பாத்தேன்... கல்யாணத்துக்கு முந்தியா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!