Friday, April 15, 2016

சாப்பிடும் விதமும் ஒரு கலைதான்...!!!

ஹோட்டல்ல போயி, சதீஷ் சங்கவி ஸ்டைல்ல [[ஒருநாளும் அப்பிடி சாப்பிட்டதில்லை]] ரெண்டு பரோட்டா வாங்கி, பீஸ் பீஸா பிளேட்டில் பிச்சிப் போடும்போதே, அருகில் இருந்தவன் ஒரு மாரியா என்னைப் பார்த்தான் 

[[அதெல்லாம் வெக்கமேப் படப்டாதுன்னு சங்கவி சொல்லிட்டாப்ல]]
ஒரு சிக்கன் சுக்கா'வும் ஆர்டர் பண்ணினேன், கொஞ்சூண்டு சால்னா தந்தான் ஒரு சின்ன பிளேட்ல, இது போதாது இன்னும் ஒரு பிளேட் கேட்டேன் [[ஆக்சுவலி இன்னும் ரெண்டு பிளேட் சால்னா வேணுமா இருந்துச்சு, சங்கவி கணக்குப்படி]] தந்தான்.
பிச்சிப்போட்ட பரோட்டா மீது தோசை மாதிரி சால்னாவை ஊற்றி ஊறவச்சேன்...பக்கத்துல இருந்தவன் மெல்ல இருக்கை நுனிக்கு வந்துவிட்டான்.
எப்பிடியும் சிக்கன் சுக்கா ரெடியாகி வர பத்து நிமிஷமாவது ஆகும், ஊற வைத்த பரோட்டா முன்பு, ராம்தேவ் மாதிரி கண்களை மூடிவாறு அமர்ந்திருந்தேன், லேசா கண்விழித்துப் பார்த்தபோது, பக்கத்திலிருந்தவனைக் காணோம்.
ஆஹா...இனி ஃபிரியா சாப்பிடலாம் என நினைத்தபோதே, என்னருகில் வந்தமர்ந்த இன்னொருத்தன், என் நிலைமை "கண்டு" அடுத்த டேபிளுக்கு ஓடினான்.
சுக்கா சிக்கன் வரவும், பரோட்டாவும் சால்னாவில் நன்றாக ஊறிவிட்டது, அங்கிட்டும் இங்கிட்டுமா லேசா பரோட்டாவை கிளறி விட்டு, ஒவ்வொரு பீஸா சாப்பிடலாம்ன்னா...நன்றாக ஊறி விட்டதால் சாதம் ரேஞ்சிக்குத்தான் வாரி சாப்பிட முடிஞ்சுது, ஏற்கனவே உக்காந்து ஜெர்க்காகி அடுத்த டேபிளுக்கு ஓடினவன் என்னையே பார்த்துட்டு இருக்காப்டி இருந்துச்சு, சடேர்ன்னு திரும்பி முறைத்தேன், அப்புறம் அவனைக் காணவே இல்லை.
ஊறவச்ச பரோட்டா சால்னா இதமாக தொண்டையில் இறங்குச்சு, புதிய ருசி, பரோட்டா மீது இருந்த வெறுப்பும் மாறிப்போச்சு...முன்பு பரோட்டா கண்டாலே ஓடிப்போயிருவேன்...
இனி பரோட்டா அடிக்கடி சாப்பிடனும், சும்மாயில்லை போல, எங்க ஊர் பதி"யில இப்பவும் "பரோட்டா சாமியார்"ன்னு ஒருத்தர் இருக்கார் !!
சாப்பாடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், சாப்பிடும் விதமும் ஒரு கலைதான் இல்லையா...சங்கவி"க்குத்தான் நன்றி சொல்லணும்.


4 comments:

  1. புரோட்டோவிற்கு மதுரையில் சின்ன சின்ன ஹோட்டல்களில் கிடைக்கும் சிக்கன் குருமாதான் நல்ல ஜாய்ஸ் புரோட்டா இங்கே கிடைக்குது ஆனால் மதுரை குருமாதான் இங்கே கிடைக்கமாட்டேங்கிறது ஹும்ம்ம்

    ReplyDelete
  2. Parotta not good for health. Actually anything made of Maida. They use benzoyl peroxide to bleach wheat's yellow part into white maida. These bleaching agents are banned in developed countries. Even in China. They spoil your spleen and cause Diabetes.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதும் சாப்பிடிவதில்லை நண்பரே...நன்றி...

      Delete
  3. நாட்டில் சாப்பிட்ட பரோட்டாச்சுவை இங்கு இல்லை அதுவும் கொழும்பில் பரோட்டாவுக்கு தரும் ஆட்டுக்கறிக்குழம்பு சுவைக்குநிகர் ஏதுமில்லை)))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!