சென்னை: நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா" என்று கிண்டலடித்தவர்கள் பலர் ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது
சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா, 1687 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்திருப்பது 4048 ஓட்டு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத் தொகுதியில் நோட்டாவுக்கு 1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன
கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 3595.
ஆவடியில் தி.மு.க., வேட்பாளர் நாசர், 1395 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி . இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4994
பர்கூர் தொகுதியில் தி.மு.க., கோவிந்தராசன் 982 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1392 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 1507 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1724
கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிஞ்சி பிராபகரன் 1332 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 3884.
கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 428 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2350.
மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சச்சிதானந்தம் 2222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2715
ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 491 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2612 ஓட்டுக்கள் கி டைத்தன.
பெரம்பூர் தொகுதியில் தி.முக., கூட்டணியில் போட்டியிட்ட தனபாலன், 519 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கு நோட்டாவுக்கு 3167 ஓட்டுக்கள் கிடைத்தன.
பேராவூரணியில் தி.மு.க., வேட்பாளர் அசோக் குமார் 995 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1294 ஓட்டுக்கள் கிடைத்தன.
ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1821 ஓட்டுக்கள் கிடைத்தன.
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 462 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3391 ஓட்டுக்கள் கிடைத்தன.
திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன் 950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 2116 ஓட்டுக்கள் கிடைத்தன.
தி.நகரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.என்.கனிமொழி 3155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3570 ஓட்டுக்கள் கிடைத்தன.
விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 2333 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3897 ஓட்டுக்கள் கிடைத்தன.
இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.
ஆக, இந்தத் தேர்தலில் நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.
ஆக...45'235 ஓட்டுகள்...!!
நன்றி தினமலர்
ஆக நோட்டாதான் வென்று இருக்குது
ReplyDeleteஇனி அவங்களுக்கும் அடிமனசுல கொஞ்சம் பயம் வந்துரும், அடுத்த தேர்தலில் இதன் [[நோட்டா]] தாக்கம் அதிகமாகலாம் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெற்றி பெற்ற வேட்பாளருக்கே அந்த நோட்டா ஓட்டுக்கள் விழவும் வாய்ப்பிருக்கிறதே?அப்படி விழுந்திருந்தால் இன்னும் ஓட்டு வித்தியாசம் கூடியிருக்குமில்லையா?எனி வே.............தாங்க் யூ நோட்டா...........
ReplyDeleteமனசுல கொஞ்சம் கிலி"யும் இருக்கும்ல்ல அண்ணே ?
Deleteஇன்னும் மக்கள் சிந்திக்கட்டும் இந்த அரசியல் வியாபாரிகள் இலவச ஏய்ப்பு பற்றி! இன்னும் 5 ஆண்டு சகிக்கட்டும் நல்லாட்சியில்[[[
ReplyDeleteமாற்றம் விரும்பாத கூட்டம் எல்லாம் ஒப்பாரி வைக்காக்கூடாது அரச இயந்திரம் சரியில்லை என்று!இன்னும் பல வருடம் இருகட்சிக்கு ஓட்டு போட்டே வாழ்க வளர்க வல்லரசு கனவு!
ReplyDeleteNOTA ஓட்டுகள் முழுவதும் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் என எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்..? அப்படி உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இது சாத்தியமில்லை
ReplyDeleteநோட்டா ஓட்டுக்களும் வெற்றியை பாதித்து இருப்பது உண்மைதான்!
ReplyDeleteநோட்டா.... நல்லதொரு மாற்றம் வந்தால் இன்னும் நல்லது.
ReplyDeleteநோட்டோவுடன்
ReplyDeleteகூட்டணி வைத்திருக்கலாமோ ?
விரிவான அருமையான அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையான அலசல் நண்பரே நோட்டோவை இன்னும் செம்மைபடுத்த வேண்டும்
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.