சுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நானும் ஆபீசரும் சந்திரன் என்னும் நண்பனை பார்க்கக் கிளம்பினோம்.
இடையில் ஆபீசரின் வீட்டிலிருந்து போன் வர, மனோ வந்துருக்கார் கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்னு [அண்ணியேதான்] சொல்லிட்டு கிளம்பினா...நம்ம நண்பன் சந்திரனை நெல்லை சிட்டிக்குள்ளே காணோம், போன் பண்ணி விசாரிச்சா...ஆளு அவுட்டாஃப் சிட்டிலன்னு தெரிஞ்சுது.
ஓகே, எதுக்கும் சாப்பாட்டுருவோம்ன்னு நெல்லை சிட்டியை சுற்றி ஒரு நட்சத்திர ரெஸ்டாரண்டுக்கு கூட்டி சென்றார் ஆபீசர், சுட சுட சாப்பிடலாம் மனோ என்றார், அங்கே வந்த மானேஜர் ஆபீசரைக் கண்டதும் பவ்வியமாக வணக்கம் வைத்தார்.
ரெஸ்டாரண்ட்.... இரவு டெக்கரேஷன் அருமையாக இருந்தது, மிதமான லைட் வெளிச்சம், குடும்பமாக அமர்ந்து சாப்பிட வசதிகள், மிதமான சாதத்தில் பாடல், லைட்டிங் என அருமையாக இருந்தது !
இங்கே அமர்ந்து சாப்பிட வேண்டாம் ஆபீசர், பார்சல் வாங்கி செல்லலாம் என்று சொன்னதும் ஆபீசரும் ஓகே சொல்ல, மேனேஜரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுத்து காத்திருந்தோம், அதற்குள் மானேஜர் ஹோட்டல் முதலாளிக்கு ஆபீசர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லிருப்பார் போல...பதறியடித்து வந்தேவிட்டார்.
நலன்கள் விசாரித்துவிட்டு சாப்பாடு கொடுத்தனுப்பினார், கிளம்பும்போது அவர், திரும்பவும் வருக என்ற ரீதியில் ஒரு வணக்கம் வைத்தார், எப்பிடின்னு கடேசியா சொல்றேன்...
நேரமாகிக் கொண்டிருந்த படியால்...சந்திரன் வீட்டுக்கு போயிருக்க கூடும் என்ற ஐயத்தில், அவர் எங்கேயிருப்பார் என்று செட்டியாருக்கு போன் பண்ணிக் கேட்டார் ஆபீசர்...அவர் அவுட்டாஃப் சிட்டியில் இருக்க, விரைந்தது வாகனம்.
ஒன்பது மணி இரவில் புறநகர் [சிட்டிதான்] சாலைகளில் வாகனங்கள் வந்து போனாலும் ஆள் நடமாட்டம் ரொம்பவே குறைவுதான் ! சின்ன சின்ன ரோடுகளில் ஸ்பீட் பிரேக்கர்களின் தொடர் ஜம்பிங்...கொஞ்சம் கஷ்டம்தான்.
அத்தனை இரவிலும் ஆபீசர் ஹெல்மெட் போட்டுட்டுதான் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தார் ! என்னை சந்திரனை பார்க்க சொல்லிவிட்டு, இப்போ வாரேன்னுட்டு, அவர் வீடு நோக்கி விரைந்தார், காரணம்... நேரமாகிவிட்ட படியால்...வீட்டம்மா பெர்மிஷனுக்காக ஓடிருப்பார்ன்னு நினைக்கிறேன்.
மறுபடியும் என்னை பிக்கப் பண்ணி, அவர் புக் செய்த ஹோட்டல் ஏசி அறைக்குள் கொண்டு வந்து விட்டார்...]நெல்லை பேருந்து நிலையத்திற்கும் ஆபீசர் வீட்டுக்கும் நடுவில்] திடீரென வாழைப்பழம் சாப்பிட ஆசை வந்தபடியால் அவரே வெளியே போயி வாங்கி வந்தார்...கருப்பு கலர் அண்டாத மஞ்சள் கலர் பேயன் பழம், பழுத்து இதமாக இருந்தது...!
சாப்பிட வாழையிலை ஆபீசர் ஆர்டர் பண்ணினார் பாருங்க...அடடா...கொழுந்து வாழையிலை...பவ்யமாக கொண்டு வந்தார் சர்வர்...[அரபிங்க பார்த்தால் வெஜிடபிள் சலாட்ன்னு நினைச்சு தின்னுருப்பாங்க] அம்புட்டு இதமான வாழையிலை...
சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, சுகர் செக்கிங் லேப்பில் இருந்து ஆபீஸருக்கு மெசேஜ் வர...அதிர்ந்து போனார் ஆபீசர்..."மனோ...சுகர் 217 பாயிண்ட் இருக்கு, உடனே மருந்து எடுக்க வேண்டும்" என்றார்..."ஆயுர்வேதிக் மருந்து எடுக்கலாமென்றேன், "இல்லை ஒரு மாசமாவது நீங்கள் ஆங்கில மருந்து சாப்பிட்டே ஆகவேண்டும் இல்லேன்னா கிட்னி சட்னியாகிரும் "என்று கூறிவிட்டு மெசேஜை விஜயனுக்கு ஃபார்வேர்ட் பண்ணிவிட்டார்...[கலவரப்படுத்திட்டாங்க அவ்வ்வ்]
பின்பு...நண்பர்கள் பற்றியும் குடும்பம் பற்றியும் நெல்லை நிலவரங்கள் பற்றியும் [சில வெளியே சொல்ல முடியாத] நெல்லையில் கிரைம் நிலவரங்களை சுவாரஸ்யமாக விவரித்துக்கொண்டே இருந்தார்...நேரமாகிக் கொண்டிருந்தபடியால் சீக்கிரம் கிளம்பு வேண்டியதாப்போச்சு. [அடுத்த முறை லீவு நாள் பார்த்து போகவேண்டுமென்று அப்போவே மனதில் பட்டது]
காலையில் வருவதாக கூறி விடை பெற்றார்...மிக்க நன்றி ஆபீசர்...
அந்த வணக்கம் பற்றி சொல்லணுமில்ல ? [ஆபீசரிடமே கேட்டேன் ]பெரிய மனிதர்கள் சந்தித்து பிரியும் போது, வலது கையை நெஞ்சில் வைத்து சற்று குனிந்து வணங்கி விடை கொடுப்பதை அவதானித்தேன், அந்த நெல்லை மக்களின் பண்பை பார்த்து நெகிழ்ந்து போனேன்...
தொடரும்...
படங்கள் யாவும் கூகுள் அண்ணாச்சி தந்தது.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteCorporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace