காலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிருந்தாலும், வீட்டு சாவியும் என்னிடமிருந்தது, இரவு சரியாக தூக்கம் வரவில்லை, எப்படா விடியும்ன்னு காத்திருந்து...
காலையிலேயே ஆபீஸருக்கு போன் போட்டு, சீக்கிரமா கிளம்புறேன்னு அவரை அலற வச்சு...காலையிலேயே ஆபீசர் ஜம்மென்று வந்துவிட்டார் ஹோட்டலுக்கு...அதற்குள்ளாக குளித்து முடித்து நானும் தயாராக, இனிதே திருநெல்வேலி பேரூந்துநிலையத்தில் வழியனுப்பி விட்டார் ஆபீசர், நான் எம்புட்டோ சிரமம் கொடுத்தாலும் ஒரு தாயைப்போல தாங்கிக்கொண்டார் ஆபீசர்...[மறுபடியும் மிக்க நன்றி ஆபீசர்...]
ஒன்னாம் தேதி மும்பைக்கு டிக்கெட் போட விஜயனும் நண்பன் கூடல்பாலாவும் முயற்சியில் [சீசன் டைம் என்பதால் டிக்கெட் எளிதாக கிடைக்காது] இருக்க...அதே ஒன்னாம் தேதி ஆஸ்வின் ஸ்டான்லி அக்கா குஜராத்திலிருந்து ஊர் வருவதாக விஜயன் பீதியை கிளப்பினார்.
எப்பிடியாவது அக்காகிட்டேயிருந்து தப்பிரலாம்ன்னு [இம்சை அரசன் பாபுவும்தான், ஆனால் விதி வலியது] நினைச்சா...ஒன்னாம் தேதி டிக்கெட் கிடைக்கலை, அண்ணே ரெண்டாம் தேதிதான் கிடைக்கும்ன்னு கூடல்பாலா சொல்ல...ஒன்னாம் தேதி அக்காவை சந்திக்க முடிவெடுத்தேன்.[மிக்க நன்றி கூடல்பாலா...]
அக்கா வந்தாச்சுன்னு விஜயன் போன் வந்ததுமே நான் கிளம்பினாலும்...பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது, அக்கா ஐந்து மணிக்கு வெளியூருக்கு டூர் போறாங்க சீக்கிரமா வாரும் ஓய்ன்னு விஜயன் மிரட்டல் வேறு...எங்க ஊர் கோவில் [சாமிதோப்பு பதி] திருவிழா நடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கூடுதலாக இருந்தது...
அடிச்சுப்பிடிச்சு [விஜயன் ஆபீஸ் முன்புதான் பஸ்டாப்பும் இருக்கு] வந்தால் ஆபீசில் விஜயனில்லை அவர் முதலாளியம்மாதான் இருந்தார், விஜயன் எங்கென்னதும் அவர் ஆஸ்வின் அக்கா தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கிறார் என்றதும், விஜயனுக்கு போன் பண்ணி இதோ நான் வடசேரிக்கு பஸ் பிடிச்சு வருகிறேன்னு பஸ்ஸுக்கு காத்திருக்க...இருங்க மனோ இதோ நானே வந்து உம்மை பிக்கப் பண்ணுறேன்னு பறந்து வந்தார்.
வடசேரி பேருந்து நிலையம் அருகில் சஹானா கேஸ்டில் ஹோட்டலில் அக்காவும் நண்பர்களும் இருந்தார்கள்...தோவாளை பக்கமாக டூர் புரோகிராம் போல, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆளு வாட்டசாட்டமான ஆறரையடி உயரம்ன்னு நினைச்சா...ஆளு நேரெதிரா இருக்க சற்று அதிர்ச்சி...விஜயன் மகள் மோனிஷா அக்காவோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு இருந்தாள், அக்கா ஊர்வந்தால் அவளுக்கு செம ஜாலின்னு விஜயன் சொன்னார், அக்காவோடு அவர் நண்பர்களும் வந்திருந்தார்கள்...அவர்களையும் அறிமுகப்படுத்தினார்.
ஆஸ்வின் அக்கா...மாங்குரோவ் காடுகளின் ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி, கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மாங்குரோவ் காட்டு மத்தியில் ஆராய்ச்சியின் போது !
அக்காவின் நண்பர்களோடு விஜயனும் நானும் மோனிஷாவும்...சுட சுட எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல் மிட்டாயுடன் அக்கா !
சஹானா கேஸ்டில் ஹோட்டல் முன்பு லேசான மழை தூறல்களுடன்...
அக்காவுடன் மோனிஷா...
மனோ அண்ணே போயிறாதீங்க கரெக்ட்டா ஆறுமணிக்கு அங்கே இருப்பேன்னு சொன்னார், பஞ்சுவாலிட்டி ஆளு போல, இன்னும் அரைமணி நேரம்தானே இருக்குன்னு காத்திருந்தோம்...
"பஞ்சுவாலிட்டியை" பதம் பார்த்துட்டு வந்து சேர்ந்தார்...அவர் வந்தது பெரிய விஷயமில்லே...மறுபடியும் அன்றே ஆஸ்வின் அக்காகிட்ட [அவரும்] மாட்டி அலப்பறையாவோம்ன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை மூவரும்...
தொடரும்...
போட்டோக்கள் அக்காவிடமிருந்தும் விஜயனிடமிருந்து சுட்டது !
அக்காவைப் பற்றிய மேட்டர் ரொம்ப குறைவா இருக்கே.
ReplyDeleteஇனிதானே இருக்கு.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.
ReplyDeleteமகிழ்ச்சி. செந்திலுடன் உங்க நட்பு அருமை!
ReplyDelete