Saturday, October 8, 2011

கண்ணீர் வராது....!!!ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
ஓயாமல் பொங்குதடி உன் நினைவு....

அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி...

அதுவும் உன்னோடு 
ஏன் "எரிந்து" போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா...


ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ.....

விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....

இன்று என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை....

அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!

அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு 
வர முடியவில்லை....

காரணம் நான் அழக்கூடாது என 
நீ வாங்கி கொண்ட சத்தியம்....!!!!!!!!

உனக்காக கண்ணீரை உள்வாங்கும் காதலன், பனிரெண்டு வருஷம் கழித்தும் மறுபடியும் சொல்கிறேன் என் தேவதையே, என் கண்ணில் கண்ணீர் வெளியே வராது உனக்காக.......!!!!
என் இதயம் உன்னை இன்று தேடுகிறது வா.........


நீ ஒரு சுயநலவாதியாடி....?
நம் காதலுக்காக 
உன்னை மட்டும் எரித்து
என்னை கொன்றாய்....?!!!

அந்த சத்தியத்தை 
திரும்ப வாங்குடி
அழமுடியாமல் 
நெஞ்சு முட்டுகிறது...!!!

தினம் நீ வரும்  
கனவிலாவது
அதை வாபஸ் வாங்கு
மனசு நாள் முழுவதும் எரிகிறது உன் நினைவில்...!!!
36 comments:

 1. வலைபூ மாறி வந்துவிட்ட ஒரு பீலிங், அழ மாட்டேன் என்று கூறி எங்களை அழ வைத்து விட்டீர்கள் மனோ

  ReplyDelete
 2. முதல் கண்ணீர்

  ReplyDelete
 3. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...


  எல்லோர் மனதிலும் ஒளிந்திருக்கும் ஆட்டோகிராப்....

  ReplyDelete
 4. எனக்கு போட்டியா கவிதை..
  அப்ப நான் என்ன போடுறது...

  ReplyDelete
 5. அண்ணே அழாதீங்க நாங்க இருக்கோம்...ஹூம் ஹூம்!

  ReplyDelete
 6. காதலி சொல் மிக்க மந்திரம் இல்லை...

  காதலுக்கு இருக்கும் தைரியம் வேறெதுக்கும் இல்லை....

  காலைப்பனிப்போல் விலகிச் செல்ல
  காதல் என்ன ஒன்றும் அவ்வளவு எளிதல்ல.....

  ReplyDelete
 7. கவிதையில இறங்கி விட்டீர்களோ

  சூப்பர் கவிதை

  ReplyDelete
 8. எனக்கு தெரியாது.நண்பா ஆனால் எனக்கு நண்பர் ஆஷிக் அஹமத்சொல்லி தந்தார்

  வோட் எண்ணுக்கு கீழே உள்ள "இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டுங்கள். உங்கள் username, password கேட்கும். கொடுங்கள்..அவ்வளவுதான், உங்கள் ஒட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.  "இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டினாலே உங்கள் வோட்டு பதிவு செய்யப்பட்டு விடும்,
  நன்றி,

  ReplyDelete
 9. டோன்ட் ஒர்ரி'ய்யா இதுவும் கடந்து போகும்...

  ReplyDelete
 10. உன் நெஞ்சம் படும் வேதனை புரியுதுய்யா...!!!

  ReplyDelete
 11. ஆட்டோகிராப் கண்ணீர்....!!!

  ReplyDelete
 12. என்னடே இன்னைக்கு சோகம் பிளியுது, நேற்றைக்கு அமெரிக்கா'காரி ஃபீலிங் பண்ணிவிட்டதின் அட்டாக்காடா இது, கொன்னேபுடுவேன் மரியாதையா டுட்டியை பாரு, எத்தியோப்பியா'காரியை அனுப்பி இருக்கேன் சால்வ் பண்ணு.....

  ReplyDelete
 13. நேற்று அமெரிக்கா.....அமெரிக்கா சத்தம் ஊரே கேட்டுச்சு ராஸ்கல், விளங்குவே நீ, ஸ்ஸ்ஸ் முடியல, எப்பிடிப்பா உன்னால இப்பிடியெல்லாம் முடியுது அவ்வவ்...

  ReplyDelete
 14. கருமாந்திரம் பிடிச்சவனே குளிச்சியாடா...?

  ReplyDelete
 15. என்ன தலைவா....
  போட்டு தாக்குரிங்க ??

  ReplyDelete
 16. நேசித்தவர்களை பிரிந்திருப்பதென்பது மிக துன்பகரமானது தான் ...மனோ மாஸ்டரின் ஆசை நிறைவேற வாழ்த்துகள் ...

  ReplyDelete
 17. பிரிவின் துயரம்
  புரியுது எனக்கு.
  அரிதான கவிதை
  ஆறுதல் உமக்கு.

  ReplyDelete
 18. பிரிவின் வலியை விட
  பிரிந்து போன உயிரின்
  நினைவு தரும் வலிகள் கொடுமை தான்..ஆனாலும் ஆற்றுதல் வேண்டுகிறோம்....

  ReplyDelete
 19. //நீ ஒரு சுயநலவாதியாடி....?
  நம் காதலுக்காக
  உன்னை மட்டும் எரித்து
  என்னை கொன்றாய்....?!!!//

  இந்த வரிகள் செமையா இருக்கு தோழரே


  தீட்டிய வரிகளில்
  உதிர்ந்து விழுகிறது
  பிரிவின் வலிகள்

  ReplyDelete
 20. கவித...கவித...சூப்பர் தம்பி!!

  ReplyDelete
 21. பிரிவின் வலிகள்

  ReplyDelete
 22. மக்கா!
  எனக்கு எதுவும் சொல்லத்தோனல!
  வலி!

  ReplyDelete
 23. காதல்

  பிரிந்தாலும்

  மனதில் வாழும்

  காதல்

  என்றும் மறையா

  காதல்

  வேதனை

  தீரா

  வேதனை

  கலங்கிய கண்களுடன்

  ReplyDelete
 24. செந்தமிழ் கவிதை-துயர்
  சிந்திய வரிகள்
  சிந்தனை மொழிகள்-நீர்
  சிந்திய விழிகள்
  நொந்தது போதும்-மனோ
  நுவன்றிட பேதம்
  வந்ததா இடையில்-மரணம்
  வந்திட தடையில்

  புலவர் சா இராமாநுசம்
  -

  ReplyDelete
 25. அந்த சத்தியத்தை
  திரும்ப வாங்குடி
  அழமுடியாமல்
  நெஞ்சு முட்டுகிறது...//
  அழ வைத்த வரிகள்

  ReplyDelete
 26. அண்ணே...... நைட்டு உக்காந்து கொசுவத்தி சுத்தீட்டீங்க போல?

  ReplyDelete
 27. வணக்கம் மனோ உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்கவில்லை ம்..........!!! எல்லோருக்கும் இன்னுமோர் பக்கம் இருக்கும்போல...!! மனதை கனக்க வைத்த பதிவு..

  ReplyDelete
 28. கவிதை நன்றாக இருக்கிறது.. காதலின் தோல்வியில் தான் அழகான கவிதைகள் பிறக்கின்றன. அப்ப வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்களா? இந்த மாதிரி சோக கவிதைகளை படித்து ரசித்து விட்டு அதற்கு இப்படி கமெண்ட்ஸ் போடுவோமல..
  தை எங்க வீட்டுகாரம்மாவிடம் போட்டு கொடுத்து விடாதிங்க அப்பறம் வலைப்பக்கம் வர முடியாது.

  ReplyDelete
 29. காதல் வலி இங்கே கண்ணீர்க கவிதையாய்...

  ReplyDelete
 30. காதலின் தடமாக, தோல்வியின் நினைவாக இருக்கும் ஒற்றைப் பனை மரத்தடி நினைவுகளைச் சுமந்தபடி கவிதை நகர்ந்திருக்கிறது.
  இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தியிருக்கலாம்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!