Showing posts with label என்னை தேடி வந்த உறவு. Show all posts
Showing posts with label என்னை தேடி வந்த உறவு. Show all posts

Sunday, January 23, 2011

என்னை தேடி வந்த உறவு


முந்தா நாள் எனக்கு இமெயிலில் ஒரு பதிவு வந்தது கலியுகம் என்ற பெயரில், வாசித்து விட்டு எதேச்சையாக பார்க்கும் போது ஒரு போன் நம்பர், பார்த்தால் அந்த நம்பர் பஹ்ரைன் நம்பர் அடடா நம்ம பக்கத்துலேயே ஒரு பதிவரானுட்டு!!!!! அவர் தளத்தில் போயி படிச்சி கமெண்ட்ஸ் போட்டுட்டு அந்த நம்பரில் போன் செய்தேன். ஹலோ யார் பேசுறது  தினேஷ்தானே...? மறுமுனை : ம்ம்ம்ம்ம்ம் ஆமா நாந்தான் நீ......ங்.......க......? நான் : நான் நாஞ்சில் மனோ பேசுறேன் எப்பிடி இருக்கீங்க...? ம. முனை : அப்பிடியா [நல்ல உறக்கம்] நான் உங்க பதி......., நான் : என்ன உறக்கமா பரவாயில்லை நான் அப்புறமா பேசுறேன்... ம முனை : ச.....ரி....ங்க... கட்...
 சாயங்காலம் எழு மணிக்கே  தூக்கமா கிழிஞ்சுது போ'ன்னு நினச்சுட்டே என் வேலையில் மூழ்கி விட்டேன்...
அடுத்த நாள் [நேற்று] மறுபடியும் போன் செய்தேன் ஹலோ தினேஷ் எப்பிடி இருக்கீங்க...?
 ம முனை : நான் நல்லாயிருக்கேன் சார் நீங்க எப்பிடி இருக்கீங்க..? நேற்றைக்கு ராத்திரி நான் உங்களுக்கு போன் செய்தேன் வேற யாரோ போன் [கம்பெனி மொபைல்] எடுத்தாங்க....
நான் : ஓ அப்பிடியா, இப்பிடி தொடர்ந்து விசாரிப்புக்கு பின் என் ஹோட்டல் அட்ரஸ் கேட்டார் சொன்னேன். அந்தபக்கம் வந்தால் வருவதாக சொன்னார் காலையில். நானும் ஆமா இவுரு சொன்னதும் வந்துற கிந்துற போறாரு நெனச்சிட்டு போனை வச்சிட்டேன்.
அட சாயங்காலம் மறுபடியும் போன் [[மும்பை பார்ட்டிய போட்டு தள்ள ஆட்டோ விட்டுருவாரோனு பயம்]] ஹலோ சார் ஒரு வேலை விஷயமா மனாமா வந்துருக்கேன் அப்பிடியே அங்கே வரட்டுமான்னு கேட்டார். சரி வாங்கன்னு சொல்லி அட்ரசும் கொடுத்தேன். காரில் வருவதாக சொன்னார் அப்பிடியே ஒரு அரை முக்கால் மணி நேரம் ரோடு கன்பியூஷனாகி ஏழெட்டு நேரம் திரும்ப திரும்ப போனில் மாட்லாடி வந்தே விட்டார்....!!!
ஆளு என்னை மாதிரியே ஆறரை அடி உயரம் [!!!] என்னை மாதிரியே நல்ல செவப்பு [!!!] கலர்'ல இருந்தார்.
[[சரி விடுங்க ஹி ஹி ]] எங்க ஹோட்டலுக்கு வெளியே நின்றுதான் பேச முடிந்தது காரணம் ஜி எம் மற்றும் அரபி பயலுக [கெஸ்ட் தான்] ஆபீசில் இருந்தார்கள் [அந்த நேரம் பாத்தா வரணும்]
பல விஷயங்களை பற்றி பேசினோம், மொக்கையன் செல்வா பற்றி, இம்சை ராஜா பாபு பற்றி, அட்ரா சக்கை, பன்னிகுட்டி, சித்ரா மேடம், ஜெய்லானி, பிரவீன் டெரர், சவுந்தர் இப்பிடி நெறைய பேசினோம். சித்ரா மேடம் பற்றி அவர் பதிவுகள் பற்றி தினேஷ் ரொம்ப சிலாகித்து சொன்னார்...இதேர்கிடையில் அந்த அரபி பயலுக போய் விட, உள்ளே வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு நிறைய பதிவின் நுணுக்கங்கள் சொல்லி தந்தார். நேரமில்லாததாலும் நான் டியூட்டியில் இருப்பதாலும் ரொம்ப நேரம் அளவளாவ முடியவில்லை. வியாழன் அன்று சந்திப்பதாக பிரிந்தோம்.
போகும் போது அவர் சொன்னார். [வியாழன் சந்திப்பு உறுதி ஆகிவிட்டது]
மனோ உங்களை சந்திச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா [எனக்கும்தான்] நம்ம ஊர் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி தனியா இருக்குற நமக்கு வலை தள நண்பர்கள் நட்பு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமான்னு  அவர் நெஞ்சில் கை வைத்து சொல்லும் போது...... என் கண் கசிந்தது....
ஆம் எனக்கும்தான்....
என்னை தேடி வந்த உறவு இது...
 என்னதான் சொந்த பந்தம் இருந்தாலும் நண்பனை போல வருமா என்ன...?
நன்றி மக்கா தினேஷ்....
வியாழன் இரவு ஒன்பது மணிக்கு சந்திப்போம் [எனக்குதான் லீவு கிடையாதே]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!