பிரஷருக்கு மருந்து பெரிய வெங்காயம்...!!!
சிட்னி : வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிறதோ இல்லையோ.. உடல் பருமன், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இருக்கிறது. ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஆராய்ச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட
சோதனை நடத்தப்பட்டது.
அதிலும் வெற்றி. இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சி யாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும் சர்க்கரை நோய் பாதிப்பு களை குறைப்பதிலும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.
இதுதவிர, கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.
வாழைப்பழம்.
தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன் மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 வீதம் தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக் கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதற்கு முந்திய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்க வாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960ம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
தினசரி உணவில் 1600 மில்லிகிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதயநோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லிகிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது.
நன்றி : தமிழ்க்கதிர்.



