Friday, April 22, 2011

பதிவர் அறிமுகம் 2

சின்ன குழந்தையாக இருந்தபோது நாம் அம்புலிமாமா கதைகள் படிச்சு ரசிச்சிருக்கோம், அதே மாதிரி இப்போ உள்ள சூழ்நிலைக்கேற்ப எளிமையான எழுத்தில் கதை எழுதி அதில் சூப்பரான அறிவுள்ள கருத்துகளை மனதில் பதிக்கும் விதமாக எழுதி வருகிறார் நான் கீழே சொல்லும் பதிவர். 

அவர் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எனது அங்கலாயிப்பாக இப்போதும் இருக்கிறது.....!!!! 

அவருடைய பதிவுக்கு எப்போ  நான் கமெண்ட்ஸ் போட்டாலும், உடனே நன்றி சொல்லி மெயில் அனுப்பும் பண்பு எனக்கு இன்னும் அவங்க மீது மரியாதையை ஏற்படுத்தியது....

பாருங்க அவருடைய அறிமுகமே எவ்வளவு அக்கறையாக இருக்கிறது என்று..


எதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், 
வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே
 உங்கள் பாட்டியின் குறிக்கோள்.. 
 இப்படிக்கு 
ருக்மணி சேஷசாயி

இவர்கள் லிங்க் : http://chuttikadhai.blogspot.com/2011/04/65th.html

65th தன் கையே தனக்குதவி

தன் கையே தனக்குதவி.
ஒரு கிராமத்தில் கந்தசாமி  என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப் படித்து வந்தான்.

அவர்களுக்கு அந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. கந்தசாமி அந்த நிலத்தில் பயிரிட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வடிவேலுவும் பயிரைப் பாதுகாக்க வயலுக்குச் செல்வது வழக்கம்.அந்த வருடம் நல்ல மழை பெய்ததால் கந்தசாமியின் நிலத்தில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது. தினமும் காலைவேளையில் தன் மகன் வடிவேலுவை அழைத்துக் கொண்டு விளைந்து கதிர் முற்றிய பயிரைப் பார்த்துச் செல்வார். வடிவேலுவும் பயிர் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்பான் கந்தசாமியும் மகிழ்ச்சியுடன் அவனது கேள்விகளுக்குப் பதிலுரைப்பார்.

      தினமும்வயல் வரப்பில் நின்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வயலில் விளைந்த பயிர்களுக்கிடையே ஒரு குருவி கூடு கட்டித் தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. தினமும் அப்பாவும் மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குஞ்சுகள். மாலையில் வீடு திரும்பும் தங்களின் தாயிடம் வடிவேலுவும் கந்தசாமியும் பேசிக்கொண்டதைச் சொல்லும்.

      அன்று தாய்க் குருவி வழக்கம்போல இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் தன் குஞ்சுகளிடம் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைக் கவனித்துத் தன்னிடம் கூறும்படிக் கூறிவிட்டுச் சென்றது. வழக்கம்போல கந்தசாமி தன் வயலுக்கு வந்து பார்வையிட்டார். 

      அந்த வயல் முழுவதும் கதிர் முற்றித் தலை சாய்ந்திருந்தது. கந்தசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
"வேலு, நம்ம வயலில் கதிர் முற்றித் தலை சாய்ஞ்சிடுச்சு. இனிமேல் அறுவடை செய்திடலாம். நீ நாளைக்கு நம்ம கதிரை அறுக்க ஆளுங்களைக் கூட்டி வந்துடு." என்று கூறியபோது வடிவேலுவும் "சரி அப்பா" என்று கூறினான். 

அன்று மாலையில் தங்களின் தாய்க் குருவி வந்தவுடன் குஞ்சுகள் கீச் கீச்சென்று கத்தித் தங்களின் அச்சத்தைத் தெரிவித்தன. செய்தி என்ன என்று கேட்டபோது குஞ்சுகள் அழுது கொண்டே அறுவடை நடக்கப் போவதைத் தெரிவித்தன.

அந்தத் தாய்க் குருவியோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் குஞ்சுகளுக்கு தைரியம் கூறிற்று."குழந்தைகளே, நிலத்துக்கு உரியவர் தன் மகனிடம் தானே சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படாமல் இருங்கள்."

சமாதானம் கூறிய தாய்க் குருவி மீண்டும் மறுநாள் இரைதேடப் புறப்பட்டது.அன்றும் கந்தசாமி வயலுக்கு வ்ந்தார்.
தன் மகனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்."வேலு, நாளைக்கு நீயே போய் ஆட்களை அறுவடைக்குக் கூட்டிவா." என்று கடுமையாகக் கூறினார்.அவனும் "சரி அப்பா" என்று அச்சத்துடன் பதிலளித்தான்.

அன்று மாலை வழக்கம்போலத் தாய்க்குருவி தன் கூட்டிற்கு வந்தது. அன்றும் கந்தசாமியும் வடிவேலுவும் பேசிக் கொண்டதைக் கூறின குஞ்சுகள்.அவற்றைப் பார்த்துத் தாய்க் குருவி "பயப்படாதீர்கள். அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் அறுவடை செய்வதாகத் தெரிந்தால் நான் வீடு மாற்றிவிடுவேன்." என்று கூறித் தைரியமாக இருக்கும்படிக் கூறியது தாய்க் குருவி.

மறுநாள் காலையும் இரைதேடப் புறப்பட்டது தாய்க் குருவி. வழக்கம்போல கந்தசாமி என்ன பேசுகிறான் என்பதைக் கேட்டுத் தன்னிடம் கூறும்படி கூறிச் சென்றது தாய் குருவி. அன்று கந்தசாமி வடிவேலுவுடன் வராமல் தனியே வ்ந்தார். கதிர்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார்.

பின் தனக்குள் பேசிக் கொண்டார்."சே, என்ன பையன் இவன். ஒரு ஏற்பாடும் செய்யாமல் விட்டு விட்டானே. இனி அவனை நம்பிப் பயனில்லை.நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்." என்று புலம்பியவாறே வீடு நோக்கி நடந்தார்.  

மாலையில் வீடு திரும்பிய தாய்க் குருவியிடம் குஞ்சுகள் முறையிட்டன. நாளைக்கு அவரே களத்தில் இறங்கப் போகிறார். இச் செய்தியைக் கேட்ட தாய்க் குருவி" நான் வேறு இடம் பார்த்து வரும் வரை பத்திரமாக இருங்கள். நாம் வேறு வீடு கட்டிக்கொண்டு போய்விடலாம்." என்று கூறிச் சென்றது.

இப்போது வேறு வீட்டுக்குக் குடிவந்து விட்டது அந்தக் குருவிக் குடும்பம். அப்போது அந்தக் குருவிக் குஞ்சுகளில் சற்று கெட்டிக்காரக் குஞ்சு கேட்டது."அம்மா, மூன்று நாட்களாக இடம் மாற்றாத நீ இப்போது மட்டும் ஏன் மாற்றினாய்." 

"அதுவா, மூன்று நாட்களாக அந்த முதலாளி மற்றவர் உதவியை நாடினார். அதனால் அவர் வேலை நடக்காது என்று தெரிந்து  கொண்டேன். ஆனால்  இப்போது தானே அந்த வேலையைச் செய்வதாகக் கூறியபோது இனி அந்தவேலை முடிந்துவிடும் எனப் புரிந்து கொண்டேன். இனியும் நாம் அங்கிருப்பது நமக்கு ஆபத்து அதனால் வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்துவிட்டேன்."

"அம்மா, தன் கையே தனக்குதவி என்பதை அந்தப் பெரியவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் இல்லையா?" என்று கூறிச் சிரித்தது அந்தப் பொல்லாத புத்திசாலிக் குருவி.

தாய்க் குருவியும் சிரித்தபடியே "அவர் புரிந்து கொண்டாரோ இல்லையோ நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்"என்று கூறித் தன் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.


டிஸ்கி : உங்கள் கனிவான ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடருவேன்....


94 comments:

 1. ருக்மணி சேஷசாயி என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. விட்டா புதிய வலைச்சரம் ஒன்று ஆரம்பித்து விடுவீர்கள் போல....

  பதிவர்கள் அறிமுகம்...
  மனோவை அனுகவும்...

  ReplyDelete
 3. என்னை தமான்னாவுக்கு அறிமுகம் செய்யனும் முடியுமா...

  ReplyDelete
 4. தங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
 5. சரிங்க அய்யா!

  ReplyDelete
 6. புதிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ருக்மணி அவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  பாட்டு ரசிகன் புதுசா 'லடை' ன்னு ஒரு ஐட்டம் கேக்குறார். உங்க நாட்ல கிடைச்சா அனுப்பி வைங்க.

  ReplyDelete
 8. // பாட்டு ரசிகன் said...
  என்னை தமான்னாவுக்கு அறிமுகம் செய்யனும் முடியுமா.//

  அந்த 108 ரூம் கீயை இவர் கிட்ட குடுத்துருங்க..

  ReplyDelete
 9. //பாட்டு ரசிகன் said...
  லடை//  ஐயோ அம்மா இது என்ன புதுசா "லடை"

  ReplyDelete
 10. //பாட்டு ரசிகன் said...
  விட்டா புதிய வலைச்சரம் ஒன்று ஆரம்பித்து விடுவீர்கள் போல....

  பதிவர்கள் அறிமுகம்...
  மனோவை அனுகவும்...//


  அதுக்கெல்லாம் உங்களை மாதிரி டேலன்ட் வேணும் மக்கா....

  ReplyDelete
 11. //பாட்டு ரசிகன் said...
  என்னை தமான்னாவுக்கு அறிமுகம் செய்யனும் முடியுமா...//

  மும்பைக்கு நீர் வந்தால் அவர் வீட்டை காட்டி தாரேன் போதுமா....

  ReplyDelete
 12. //பாட்டு ரசிகன் said...
  தங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்...//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 13. //பாட்டு ரசிகன் said...
  எஸ்கேப்...//


  கவிதைவீதி அண்ணாச்சியை கேட்டதா சொல்லுங்க....

  ReplyDelete
 14. //விக்கி உலகம் said...
  சரிங்க அய்யா!//

  தக்காளி, நான் என்ன இங்கே கட்சியா நடத்துறேன்....

  ReplyDelete
 15. //இராஜராஜேஸ்வரி said...
  புதிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.//

  நன்றிங்க....

  ReplyDelete
 16. //சிவகுமார் ! said...
  // பாட்டு ரசிகன் said...
  என்னை தமான்னாவுக்கு அறிமுகம் செய்யனும் முடியுமா.//

  அந்த 108 ரூம் கீயை இவர் கிட்ட குடுத்துருங்க..//

  அப்பிடியே போலீசுக்கும் போன் பண்ணிருங்க...

  ReplyDelete
 17. //சிவகுமார் ! said...
  ருக்மணி அவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  பாட்டு ரசிகன் புதுசா 'லடை' ன்னு ஒரு ஐட்டம் கேக்குறார். உங்க நாட்ல கிடைச்சா அனுப்பி வைங்க.//


  அது அவசரத்துல டங்கு சிலிப்பாகிருச்சி போல ஹா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 18. அறிமுகபடுத்துங்க.. உங்க டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாப்போம்..

  ReplyDelete
 19. உண்மையிலேயே நல்ல அறிமுகம் மனோ, சின்ன வயசுல பாட்டியோட கதை கேட்டு தூங்கற பழக்கம் எல்லாம் இப்ப எங்க இருக்கு, உண்மையிலெயே சிறந்ந்த அறிமுகம் வாழ்த்துக்கள் உங்களுக்கும், ருக்மணி அம்மாவிற்கும்...

  ReplyDelete
 20. நல்ல அறிமுகம்..சின்ன வலைச்சரமா..நல்லா இருக்கு!

  ReplyDelete
 21. ரொம்ப நன்றி மக்கா ..இப்படி நல்ல ஒரு பதிவரை அடையாளம் காட்டியதற்கு ..(நானும் ஒரு நல்ல பதிவர் தான் ஹி ..ஹி ..ஹி )

  ReplyDelete
 22. வழமை போலவே பதிவர் அறிமுகம்........சூப்பர்.

  இலை மறை காயாக வலையுலகில் ஒளிந்திருக்கும் பதிவர்களை அறிமுக்கப்படுத்தும் சகோவிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. //தம்பி கூர்மதியன் said...
  அறிமுகபடுத்துங்க.. உங்க டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாப்போம்..//

  ஹே ஹே ஹே பார்ப்போம் பார்ப்போம்...

  ReplyDelete
 24. //இரவு வானம் said...
  உண்மையிலேயே நல்ல அறிமுகம் மனோ, சின்ன வயசுல பாட்டியோட கதை கேட்டு தூங்கற பழக்கம் எல்லாம் இப்ப எங்க இருக்கு, உண்மையிலெயே சிறந்ந்த அறிமுகம் வாழ்த்துக்கள் உங்களுக்கும், ருக்மணி அம்மாவிற்கும்...//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 25. //செங்கோவி said...
  நல்ல அறிமுகம்..சின்ன வலைச்சரமா..நல்லா இருக்கு!//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 26. //shanmugavel said...
  continue sir.story super//

  நன்றி ஆபீசர்....

  ReplyDelete
 27. //இம்சைஅரசன் பாபு.. said...
  ரொம்ப நன்றி மக்கா ..இப்படி நல்ல ஒரு பதிவரை அடையாளம் காட்டியதற்கு ..(நானும் ஒரு நல்ல பதிவர் தான் ஹி ..ஹி ..ஹி )//

  பாட்டி பதிவுல போயி கமெண்ட்ஸ் போட்டு அசத்திட்டீங்களே சூப்பர்....

  ReplyDelete
 28. இளவயது அம்மாக்களுக்குத் தேவைப்படும் பதிவு. நான் படிச்சிருக்கேன். அவங்க ஃபாலோவர்ஸ் லிஸ்ட் க்யூட்டா இருக்கும்.

  ReplyDelete
 29. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  i welcome that blogger.thanks for the indroduction//

  யோவ் அதுல போயி கமெண்ட்ஸ் போடுய்யா....

  ReplyDelete
 30. //நிரூபன் said...
  வழமை போலவே பதிவர் அறிமுகம்........சூப்பர்.

  இலை மறை காயாக வலையுலகில் ஒளிந்திருக்கும் பதிவர்களை அறிமுக்கப்படுத்தும் சகோவிற்கு வாழ்த்துக்கள்!///

  அவங்க கதைகள் அம்புட்டும் சூப்பரா இருக்கும்ய்யா...

  ReplyDelete
 31. //சாகம்பரி said...
  இளவயது அம்மாக்களுக்குத் தேவைப்படும் பதிவு. நான் படிச்சிருக்கேன். அவங்க ஃபாலோவர்ஸ் லிஸ்ட் க்யூட்டா இருக்கும்.///


  எஸ் எஸ் எஸ் எஸ்.....

  ReplyDelete
 32. அருமையான கதை. மிக சிறந்த அறிமுகம். அவர் பணி மென் மேலும் தொடர வேண்டும்.

  ReplyDelete
 33. அறிமுகம் அருமை.
  புது ரூட்டா?

  ReplyDelete
 34. கதை சூப்பர்...அறிமுகமும் சூப்பர்

  ReplyDelete
 35. இன்று இப்படிக் கதை சொல்பவர்கள் குறைந்து வரும் நிலையில் இவரது அறிமுகம் நன்று !

  ReplyDelete
 36. //தமிழ் உதயம் said...
  அருமையான கதை. மிக சிறந்த அறிமுகம். அவர் பணி மென் மேலும் தொடர வேண்டும்.//

  வாழ்த்துவோம் வாழ்த்துவோம்...

  ReplyDelete
 37. //FOOD said...
  அறிமுகம் அருமை.
  புது ரூட்டா?///

  ஆபீசர் பிசி மாதிரி தெரியுதே....

  ReplyDelete
 38. //April 22, 2011 3:10 AM
  தமிழ்வாசி - Prakash said...
  கதை சூப்பர்...அறிமுகமும் சூப்பர்//

  சரி சரி நன்றி.....

  ReplyDelete
 39. //ஹேமா said...
  இன்று இப்படிக் கதை சொல்பவர்கள் குறைந்து வரும் நிலையில் இவரது அறிமுகம் நன்று !//


  இந்த பாட்டி கதைகளை நாம் நம் குழைந்தைகளுக்கு சொல்லி வளர்க்கலாம்.....

  ReplyDelete
 40. அறிமுகத்திற்க்கு நன்றி!!

  ReplyDelete
 41. //S.Menaga said...
  அறிமுகத்திற்க்கு நன்றி!!//


  வாங்க வாங்க மேனகா மேடம்....

  ReplyDelete
 42. நன்றி பாஸ்! தொடருங்க!

  ReplyDelete
 43. //ஜீ... said...
  நன்றி பாஸ்! தொடருங்க!//

  அடடே வாங்க ஜீ வாங்க.....

  ReplyDelete
 44. அருமையான எழுதும் எத்தனையோ பதிவர்கள் இன்னும் வெளிச்சம் படாமல் இருக்கிறார்கள். அவர்களை தேடிப்பிடித்து அறிமுகம் செய்யும் உங்கள் பணி உண்மையிலேயே சிறந்தது

  ReplyDelete
 45. //ரஹீம் கஸாலி said...
  அருமையான எழுதும் எத்தனையோ பதிவர்கள் இன்னும் வெளிச்சம் படாமல் இருக்கிறார்கள். அவர்களை தேடிப்பிடித்து அறிமுகம் செய்யும் உங்கள் பணி உண்மையிலேயே சிறந்தது//

  மிக்க நன்றி மக்கா.....

  ReplyDelete
 46. மனோ, நல்ல அறிமுகம். இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்க. ஓக்கை.

  ReplyDelete
 47. //உங்கள் கனிவான ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடருவேன்....//
  எங்கள் முழு ஆதரவும் உங்களுக்கே!தொடருங்க!

  ReplyDelete
 48. //vanathy said...
  மனோ, நல்ல அறிமுகம். இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்க. ஓக்கை.///

  கண்டிப்பா சொல்றேன் வானதி....

  ReplyDelete
 49. //சென்னை பித்தன் said...
  //உங்கள் கனிவான ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடருவேன்....//
  எங்கள் முழு ஆதரவும் உங்களுக்கே!தொடருங்க!//


  நன்றி தல.....

  ReplyDelete
 50. அருமையான கதை, அருமையான அறிமுகத்தேர்வு.. . உங்களின் இந்த பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.. மனோ சார்

  ReplyDelete
 51. ////
  ! சிவகுமார் ! said...

  ருக்மணி அவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  பாட்டு ரசிகன் புதுசா 'லடை' ன்னு ஒரு ஐட்டம் கேக்குறார். உங்க நாட்ல கிடைச்சா அனுப்பி வைங்க.
  /////

  எல்லா ஒரு அவசரம் தான்...

  ReplyDelete
 52. ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //பாட்டு ரசிகன் said...
  விட்டா புதிய வலைச்சரம் ஒன்று ஆரம்பித்து விடுவீர்கள் போல....

  பதிவர்கள் அறிமுகம்...
  மனோவை அனுகவும்...//


  அதுக்கெல்லாம் உங்களை மாதிரி டேலன்ட் வேணும் மக்கா....
  /////


  நடத்துங்க..

  ReplyDelete
 53. ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //பாட்டு ரசிகன் said...
  எஸ்கேப்...//


  கவிதைவீதி அண்ணாச்சியை கேட்டதா சொல்லுங்க....
  ////

  என்னப்பத்தி அந்த பரதேசிகிட்டே கேட்காதிங்க..
  நான் சொல்ற பேச்சிய கேட்கவே மாட்டேங்கிறான்...

  கொஞ்சம் எச்சரிச்சி வையுங்க...

  ReplyDelete
 54. ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //சிவகுமார் ! said...
  // பாட்டு ரசிகன் said...
  என்னை தமான்னாவுக்கு அறிமுகம் செய்யனும் முடியுமா.//

  அந்த 108 ரூம் கீயை இவர் கிட்ட குடுத்துருங்க..//

  அப்பிடியே போலீசுக்கும் போன் பண்ணிருங்க...
  ///////

  பப்ளிக்.. பப்ளிக்..

  ReplyDelete
 55. என்னை அறிமுகப்படுத்தினா கூட நான் கோச்சிக் மாட்டேன்...

  ஆனா பப்ளிக்கூட்டி எனக்கு பிடிக்காது...

  எஸகேப்...

  ReplyDelete
 56. //சிநேகிதி said...
  அருமையான கதை, அருமையான அறிமுகத்தேர்வு.. . உங்களின் இந்த பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.. மனோ சார்///

  நன்றி சிநேகிதி.....

  ReplyDelete
 57. //கவிதை வீதி # சௌந்தர் said...
  ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //பாட்டு ரசிகன் said...
  எஸ்கேப்...//


  கவிதைவீதி அண்ணாச்சியை கேட்டதா சொல்லுங்க....
  ////

  என்னப்பத்தி அந்த பரதேசிகிட்டே கேட்காதிங்க..
  நான் சொல்ற பேச்சிய கேட்கவே மாட்டேங்கிறான்...

  கொஞ்சம் எச்சரிச்சி வையுங்க...///

  பக்கத்துல ஒரு கல்லையும் காணோமே ஆங்.....

  ReplyDelete
 58. //கவிதை வீதி # சௌந்தர் said...
  என்னை அறிமுகப்படுத்தினா கூட நான் கோச்சிக் மாட்டேன்...

  ஆனா பப்ளிக்கூட்டி எனக்கு பிடிக்காது...

  எஸகேப்...//

  பிரபல பதிவனுக்கு என்னய்யா பப்பிளிகுட்டி வேண்டி கெடக்கு......

  ReplyDelete
 59. ////
  MANO நாஞ்சில் மனோ said...

  //கவிதை வீதி # சௌந்தர் said...
  என்னை அறிமுகப்படுத்தினா கூட நான் கோச்சிக் மாட்டேன்...

  ஆனா பப்ளிக்கூட்டி எனக்கு பிடிக்காது...

  எஸகேப்...//

  பிரபல பதிவனுக்கு என்னய்யா பப்பிளிகுட்டி வேண்டி கெடக்கு......
  ////////

  நான் பிரபல பதிவரா.....
  எனக்கு ஒரு பயலும் சொல்வேயில்ல....

  ReplyDelete
 60. //நான் பிரபல பதிவரா.....
  எனக்கு ஒரு பயலும் சொல்வேயில்ல....//

  சொல்லித்தான் தெரியனுமா....?
  அதான் ஆல்ரெடி ஃபாம் ஆகிட்டீன்களே.....

  ReplyDelete
 61. //கவிதை வீதி # சௌந்தர் said...
  மெயில் செக் பண்ணுங்க...//


  பார்த்தேன் பார்த்தேன், நடத்துங்க நடத்துங்க......
  ஆனால் நான் இந்தியன் டைம் 12noon தான் கம்பியூட்டர்'ல உக்காருவேன், எல்லா நாளும் தெரியும்தானே.....

  ReplyDelete
 62. என்னையும் அப்பிடியே தமன்னாக்கு அறிமுகம் செய்யுங்க??ஹிஹிஹி
  அப்பிடியே ஹன்சிகா,தபசி எண்டு எல்லாருக்குமே!!

  ReplyDelete
 63. //மைந்தன் சிவா said...
  என்னையும் அப்பிடியே தமன்னாக்கு அறிமுகம் செய்யுங்க??ஹிஹிஹி
  அப்பிடியே ஹன்சிகா,தபசி எண்டு எல்லாருக்குமே!!//

  என்ன ரூட்டு மாறுது......

  ReplyDelete
 64. Anne paatiyai arimuga padutthiyathukku nandri

  ReplyDelete
 65. சக பதிவரை அன்புடன் அறிமுகம் செய்து பலரும் அவரது வலைத்தளத்தைப் பார்க்க வைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 66. அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா

  ReplyDelete
 67. //மனோ சாமிநாதன் said...
  சக பதிவரை அன்புடன் அறிமுகம் செய்து பலரும் அவரது வலைத்தளத்தைப் பார்க்க வைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!!//

  மிக்க நன்றி மேடம்....

  ReplyDelete
 68. //அஞ்சா சிங்கம் said...
  அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா//

  என்ன அம்புட்டு சந்தோசமா....

  ReplyDelete
 69. புலவர்களுக்கு பொண்னும் பொருளும் கொடுத்து (அறிமுகம்) தமிழ்வளர்க்கும் தங்கத்திலகமே! உங்கள் பணி தொடரட்டும். இப்படியும் ஜோசிப்பாங்களா யாத்தே!

  ReplyDelete
 70. //Nesan said...
  புலவர்களுக்கு பொண்னும் பொருளும் கொடுத்து (அறிமுகம்) தமிழ்வளர்க்கும் தங்கத்திலகமே! உங்கள் பணி தொடரட்டும். இப்படியும் ஜோசிப்பாங்களா யாத்தே!//


  நன்றி நேசன்.....

  ReplyDelete
 71. பதிவர் அறிமுகமும், ”தன் கையே தனக்குதவி” என்ற குட்டிக்கதையும் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 72. அருமையான அறிமுகம்.தொடருங்கள்.

  ReplyDelete
 73. MANO நாஞ்சில் மனோ said...
  //FOOD said...
  அறிமுகம் அருமை.
  புது ரூட்டா?///
  ஆபீசர் பிசி மாதிரி தெரியுதே....//
  என்னதான் பிசின்னாலும், உங்கள் வலைபூவில் வலம் வர மறப்பதில்லை.

  ReplyDelete
 74. ஏன்னா, உங்கள் வலைப்பூ வந்தாத்தான் பல ஆயுதங்கள் பெயர் தெரியுது, ஹி ஹி.:))

  ReplyDelete
 75. நல்ல அறிமுகத்திற்கு நன்றி
  தொடருவதை விரும்புகிறோம்

  ReplyDelete
 76. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  பதிவர் அறிமுகமும், ”தன் கையே தனக்குதவி” என்ற குட்டிக்கதையும் அருமை. பாராட்டுக்கள்.///


  மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 77. //ஷர்புதீன் said...
  உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
  :)
  மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!///

  ஓகே ரைட்டு மக்கா....

  ReplyDelete
 78. //ஸாதிகா said...
  அருமையான அறிமுகம்.தொடருங்கள்.//

  மிக்க நன்றி ஸாதிகா......

  ReplyDelete
 79. //FOOD said...
  MANO நாஞ்சில் மனோ said...
  //FOOD said...
  அறிமுகம் அருமை.
  புது ரூட்டா?///
  ஆபீசர் பிசி மாதிரி தெரியுதே....//
  என்னதான் பிசின்னாலும், உங்கள் வலைபூவில் வலம் வர மறப்பதில்லை.//

  ஆபீசர் நம்ம ஆளாச்சே....

  ReplyDelete
 80. //FOOD said...
  ஏன்னா, உங்கள் வலைப்பூ வந்தாத்தான் பல ஆயுதங்கள் பெயர் தெரியுது, ஹி ஹி.:))///


  ஹா ஹா ஹா ஹா ஹா அடபாவி ஆபீசர், ரெய்டு கிய்டு'ன்னு கிளம்பி வந்துராதீங்கய்யா....

  ReplyDelete
 81. நல்ல அறிமுகம். கதையும் நல்லா இருக்கு நண்பரே. தொடருங்கள்.

  ReplyDelete
 82. //Ramani said...
  நல்ல அறிமுகத்திற்கு நன்றி
  தொடருவதை விரும்புகிறோம்//

  மிக்க நன்றி குரு......

  ReplyDelete
 83. //வெங்கட் நாகராஜ் said...
  நல்ல அறிமுகம். கதையும் நல்லா இருக்கு நண்பரே. தொடருங்கள்.//

  வாங்க வாங்க வெங்கட், நன்றி....

  ReplyDelete
 84. ருக்மணி அவர்களுக்கு எம் வந்தனங்கள், அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்..

  ReplyDelete
 85. Nice story , a required one indeed for the the young mothers..and thanks for the introduction ..

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!