Friday, September 23, 2011

பிரஷர் உள்ள கனவான்களே இங்கே வாங்கோ....!!!


பிரஷருக்கு மருந்து பெரிய வெங்காயம்...!!!

சிட்னி : வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிறதோ இல்லையோ.. உடல் பருமன், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இருக்கிறது.  ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஆராய்ச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக  நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட
சோதனை நடத்தப்பட்டது.

அதிலும் வெற்றி. இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சி யாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும் சர்க்கரை நோய் பாதிப்பு களை குறைப்பதிலும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இதுதவிர, கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

வாழைப்பழம்.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன் மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 வீதம் தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக் கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கு முந்திய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்க வாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.


தினசரி உணவில் 1600 மில்லிகிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதயநோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லிகிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது.

நன்றி : தமிழ்க்கதிர்.
35 comments:

 1. வணக்கம் அண்ணா .அட நல்ல தகவலாச்சே .

  ReplyDelete
 2. பயனுள்ள குறிப்புகள் மக்கா..

  நன்றி..

  ReplyDelete
 3. very use full information
  Dr.annachi..

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள்..... கொட்டாவி கொட்டாவியா வருது.??

  ReplyDelete
 5. வெங்காயம், வாழைப்பழம் தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. அடிக்கடி இது மாதிரி நல்ல தகவல்களையும் பகிருங்கள்..

  ReplyDelete
 7. என்ன ஓய் வரவர காபி பேஸ்டில இறங்கிட்டீர் அவ்வ்வ்வ் :-))  இனிமே போய்யா வெங்காயமுனு யாராவது திட்டட்டும் சொல்றேன் :-))

  ReplyDelete
 8. அண்ணே டெய்லி half அடிக்கறவங்க என்னத்த சாப்பிடனும்னு சொல்லலியே ஹிஹி!

  ReplyDelete
 9. காட்டு வெங்காயம் அல்லது நரி வெங்காயம் என்ற ஒன்று ஆரம்ப கட்ட வைத்திய முறையில் ஹார்ட் அட்டாக் நோயாளிகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப் பட்டது...

  ReplyDelete
 10. @ விக்கியுலகம் said...
  //அண்ணே டெய்லி half அடிக்கறவங்க என்னத்த சாப்பிடனும்னு சொல்லலியே ஹிஹி!//

  மாம்ஸ் டெய்லியும் ஹாப் அடிக்க்கும் போது வெங்காயத்தையே சைட் டிஷ்ஷா யூஸ் பண்ணிக்கோங்க :-)

  ReplyDelete
 11. கே. ஆர்.விஜயன் said...
  நல்ல தகவல்கள்..... கொட்டாவி கொட்டாவியா வருது.??//


  உங்க ஆபீசுக்கு கீழே உள்ள பழக் கடையில போயி மூக்கு முட்ட பழம் சாப்பிட்டீராக்கும் ம்ஹும்....

  ReplyDelete
 12. இரவு வானம் said...
  @ விக்கியுலகம் said...
  //அண்ணே டெய்லி half அடிக்கறவங்க என்னத்த சாப்பிடனும்னு சொல்லலியே ஹிஹி!//

  மாம்ஸ் டெய்லியும் ஹாப் அடிக்க்கும் போது வெங்காயத்தையே சைட் டிஷ்ஷா யூஸ் பண்ணிக்கோங்க :-)//


  அடடடடா இது நல்ல ஐடியாவா இருக்கே....

  ReplyDelete
 13. பாரத்... பாரதி... said...
  அடிக்கடி இது மாதிரி நல்ல தகவல்களையும் பகிருங்கள்..//


  சரிங்க சாமியோ...

  ReplyDelete
 14. ஜெய்லானி said...
  என்ன ஓய் வரவர காபி பேஸ்டில இறங்கிட்டீர் அவ்வ்வ்வ் :-))  இனிமே போய்யா வெங்காயமுனு யாராவது திட்டட்டும் சொல்றேன் :-))//


  பெரியார் ஆளுங்க கல்லெடுத்துட்டு வந்துராம ஓய்....

  ReplyDelete
 15. நல்ல பயனுள்ள பதிவு மக்களே....

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. நல்ல உபயோகமான தகவல் டாக்டர் நண்பரே .

  தமிழ் மணம் ,இன்ட்லி தமிழ் 10 வாக்களித்தேன்

  தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 18. ஒவ்வொரு நாளும் மருத்துவ செய்தியாவே கொடுத்து அசத்துறீங்க.

  பயனுள்ள பதிவு சகோ.

  ReplyDelete
 19. நல்ல பயனுள்ள குறிப்புகள் நண்பரே...

  ReplyDelete
 20. அடிக்கடி பீதிய கிளப்புறதே இவர் வேலையா போச்சு!

  ReplyDelete
 21. எனக்குத் தேவையான பதிவு
  நன்றி! மனோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. அண்ணன் திடீர்னு திருந்துன மாதிரியே பண்ணிக்கிட்டு இருக்காரே? என்ன காரணமா இருக்கும்?

  ReplyDelete
 23. பிரசரை குறைக்க முதலில் பண்ண வேண்டியது,
  1. உப்பை குறைக்கனும்
  2. எக்சர்சைஸ் (தினமும் 30 நிமிட நடை, வாரத்தில் குறைந்தது 3 நாள்)

  இது ரெண்டும் வழமையா செஞ்சுட்டு வந்தாலே 90% கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கலாம்....

  ReplyDelete
 24. என்னத்தைச் செய்தும் கடைசியிலை கட்டையிலை போறதுமட்டும்தான் நிச்சயம்

  ReplyDelete
 25. எனக்கு வெங்காய சட்ணி ரொம்பவும் பிடிக்கும்- அதுபோல வழைப்பழங்களில் கதலியே என்னுடைய சொய்ஸ். அப்ப எனக்கு இந்த வருத்தங்கலெல்லாம் வராதா?!

  நன்றி தலைவா பகிர்வுக்கு.

  ReplyDelete
 26. சாரி பாஸ் பிரஷர் உள்ள கனவான்களே இங்க வாங்க என்பதை..பாய்ந்து அடித்துக்கொண்டு பிகர் உள்ள கனவான்களே இங்க வாங்கனு வாசிச்சிட்டு...ஏதோ பிகரு மேட்டருனு வந்தன் சாரி...ஹி.ஹி.ஹி.ஹி..
  வந்தபின் முழுமையாக பதிவை படிச்சன் தகவல் அருமை..

  ReplyDelete
 27. பயனுள்ள தகவல்கள்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 13

  ReplyDelete
 28. அருமையான மருத்துவ தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 29. மக்கா திடீர்னு நல்ல பதிவு போட ஆரம்பிச்சுடிங்களே...

  ReplyDelete
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் திடீர்னு திருந்துன மாதிரியே பண்ணிக்கிட்டு இருக்காரே? என்ன காரணமா இருக்கும்?


  ஹி ஹி நானா இருக்குமோ!

  ReplyDelete
 31. அப்படி வா ராஜா வழிக்கு. சரி!! கொரங்கு மறுபடியும் வாழை மரம் ஏறாம இருந்தா சரிதான். மறுபடியும் மரம் ஏறினா முள்ளு வெச்சிடுவோமுள்ள!!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!