Tuesday, February 1, 2011

மக்களை காக்காத அரசு

தன் குடி மக்களை காக்காத அரசும் ஒரு அரசா
மக்கள் போராட்டம் வெடித்தும் அதை ஒரு பொருட்டாக
மதிக்காத அரசும் ஒரு அரசா
தன் மக்களின் பணத்தையே சூறையாடும்[ஊழல்] அரசும் ஒரு அரசா
அதை மூடி மறைக்க ஓராயிரம் வேஷமிடும் அரசும் ஒரு அரசா
கூட்டணி கூட்டணி கூட்டணி என்று அதன் பின்னே ஓடும் அரசும் ஒரு அரசா
கடலில் கொல்லபட்டவனின் நினைவில் கைம்பெண்ணாக வாழும்
தமிழ் பெண்ணின் மனமறியா அரசும் ஒரு அரசா
புலவனும் கவிஞனும் அறம்பாடியும் அதை  செட்டை செய்யாத
அரசும் ஒரு அரசா
தன் குடும்பத்தையே தனத்தால் வளர்த்தெடுக்கும் அரசும் ஒரு அரசா
குடிமக்களின் குடி கெட்டு போகும் என தெரிந்தும்
சோமபான கடைகளை திறந்து விரிவு படுத்தும் அரசும் ஒரு அரசா
கடன் வாங்கி அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களை
பார்த்து மனதுக்குள் கெக்கலிட்டு சிரிக்கும் அரசும் ஒரு அரசா
ஆசனங்களை வெறுத்து மக்கள் தொண்டு செய்தவர்களின் மண்ணில் இப்படியும் ஒரு அரசா
இரவினில் மீனவன் கடலில் செத்து கொண்டிருக்க
இரவினில் விழா கொண்டாடும் அரசும் ஒரு அரசா
கூட்டணிக்காக அடிவருடி வளைந்து கொடுக்கும் அரசும் ஒரு அரசா
நமீதா நமீதா நமீதா மானாட நாயாட கோழிகுஞ்சு ஆட [அதை தூக்கி போட்டு மிதிச்சி  நானாட]
அரசும் ஒரு அரசா
டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் அரசும் ஒரு அரசா.......
 
   காமராஜர் எங்கே, கக்கன் எங்கே, அண்ணா எங்கே, பெரியார் எங்கே, எம்ஜிஆர் எங்கே......!!!! இவர்களின் குடும்பம் எங்கே என்ன செய்கிறார்கள் எப்பிடி ஜீவனம் பண்ணுகிறார்கள் யாருக்காவது  தெரியுமா.......!!!!??????
இன்று, மு க முத்து எங்கே, அழகிரி எங்கே,ஸ்டாலின் எங்கே, செல்வி எங்கே, கனிமொழி எங்கே, சன் குடும்பம் எங்கே....................!!!!!
இனியும் தமிழனின்
 ரத்தம் சிந்தபட்டால்....
அரசே நீ
முக்காடிட்டு கொள்.
தலை முடியை சிரைத்து கொள்........
 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!