Tuesday, July 5, 2011

குற்றாலம் தொடர்ச்சி....

தென்காசியில ரூம் போட்டுட்டு, சாப்பிட்டுட்டு நேரே கிளம்பினோம் குற்றாலம் மெயின் அருவிக்கு, அங்கே போகுமுன் ஒரு செக்போஸ்ட். காரை நிறுத்தினோம் சிபி'யை ஒரு மாதிரி பார்த்த அந்த ஆள்கள் முப்பது ரூபாய் தந்தால்தான் சைக்கிளை உள்ளே விடுவேன் என மிரட்டினார்கள்...


பணத்தை கொடுத்து விட்டு உள்ளே போனோம். செல்வா இன்னும் நல்லா மப்படிச்ச மாதிரியே உறங்கிட்டு இருந்தான் ம்ஹும்....

காரை பார்க்கில் நிறுத்தியதும், பட படவென செல்வாவும் சிபியும் இறங்கி ஓடினார்கள். நான் நினச்சேன் பிள்ளைங்க அருவியை பார்க்கத்தான் இம்புட்டு ஆர்வமா ஒடுரானுங்கன்னு....!!!


நான் துணி மாத்திட்டு இருக்கும் போதே என் மச்சினன் அலறிட்டே ஓடி வந்தான். மச்சான் மச்சான் ஓடி வாங்க ஓடி வாங்க, என்னடா ஆச்சுன்னு நானும் ஓடினேன் அருவி பக்கம்....!!!

அடப்பாவமே ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.....


சிபி மந்தி தலைவனின் காலை பிடிச்சி கதறிட்டு இருந்தான் பார்க்க பரிதாபமாக இருந்தது காரணம், சட்டை பேன்ட் எதுவுமே ரெண்டு பேர் உடம்பிலும் இல்லை மந்திகள் பிச்சி கொதறிடுச்சு....

நான் உடனே ஆபீசருக்கு போனை போட அவர் சைரன் வச்ச கார்லதான் வருவேன்னு அடம்பிடிச்சி வந்து சேர்ந்தார். மந்திக்கூட்டம் அவரை ஒரு மாதிரியா முறைக்க [[என்ன பகையோ]] சமாளித்தவாறே ஆபீசர் சார்ஜ் [[ஜார்ஜ் அல்ல]] என கத்தவும்.....

மந்தி கூட்டம் தலைதெறிக்க ஓடியது. ஆனால் ஒரு மந்தி மட்டும் திரும்பவும் ஓடி வந்து சிபி'யை வல்கரா கடிச்சி வச்சிட்டு போனதுதான் எனக்கு பயங்கர ஆச்சர்யமா போச்சி....


அப்புறமா ஆபீசர் விசாரணையை தொடங்கினார், ஏண்டா உங்க ரெண்டு பேரை மட்டும் குரங்குகள் பிச்சி வச்சிருச்சின்னு, செல்வா சொன்னான், அது வந்து ஆபீசர்'ன்னு ஆரம்பிக்கவும் பன்னாடை சிபி அவனை முறைச்சான் பாருங்க ம்ஹும்....

செல்வா : ஆபீசர் சார் நாங்க அருவியை பார்க்கத்தான் வேகமா சைக்கிள்ள இருந்து இறங்கி மனோ அண்ணனை கூட தனியா விட்டுட்டு ஓடினோம், சம்பவம் என்னான்னா.....


போன தடவை சிபி இங்கே வந்தபோது ஒரு மந்தி ஃபிகரோட பிங்க் கலர் டீசர்ட்டை ஆட்டைய போட்டுட்டானாம், இப்போ மனோ அண்ணன் கூட வந்த தைரியத்துல அதை போட்டுட்டு வந்துருக்கான்..

அதை கண்டு பிடிச்ச மந்திகள் என்னையும் கூட கள்ளன்னு நினச்சி பீஸ் பீஸா பிரிச்சி மேஞ்சிடுச்சி ஆபீசர் அவ்வவ் அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ்......


சிபி எந்த பக்கம் இருந்து எந்த குரங்கு வருமொன்னு போலீஸ் பார்வை பார்த்துட்டு இருந்தான். அப்புறமா ஆபீசர் தகிரியம் சொல்லிட்டு கிளம்பிட்டார்...


அருவியல குளிக்க போனா எல்லாரும் குளிப்பது எங்கே சொல்லுங்க...??? ஆவேசமா பாயும் இடத்துலதானே குளிப்போம்...?? ஆனா இந்த மூதேவி சிபி எங்கே குளிச்சான் தெரியுமா....??? பச்சை பிள்ளைங்க கூட குளிக்காத கொஞ்சூண்டு தண்ணி விழும் இடத்துல நின்னு குளிக்கிறான் ராஸ்கல் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.....[[டேய் நீயெல்லாம் குத்தாலத்துக்கு எதுக்குடா வந்தே டுபுக்கு]]


சரி இவன்தான் பச்சை புள்ளை, செல்வா தம்பியை பார்ப்போம்னு ஆவேசமா பாயும் அருவியில எட்டி பார்த்தா இந்த ராஸ்கலயும் காணோம்....!!! என்னடா ஆச்சு அருவில பாஞ்சி தற்கொலை பண்ணிட்டானா [[சிபி டார்ச்சர் அப்பிடி]] என தேடினேன்...


ஹய்யோ ஹய்யோ ஹய்யோ இந்த படுபாவி நாதாரியும் அதைவிட சொட்டு சொட்டாக விழும் தண்ணியில உக்காந்து உறங்கிட்டு இருக்கான் அட மூதேவிகளா.........!!!!

குளியல் தொடரும் ஹி ஹி ஹி ஹி....

டிஸ்கி : நெட் மிகவும் ஸ்லோவா இருக்கு அதனால போட்டோ கொஞ்சமா போட்டுருக்கேன்.

டிஸ்கி : ஒரு பதிவு போட அஞ்சி மணி நேரம் ஆகிருக்கு அவ்வ்வ்வ்வ்வ் இதே பஹ்ரைன்ல இருந்துருந்தா பத்து பதிவாவது போட்டுருக்கலாம் போல....என்னடா நெட் உலகமிது ம்ஹும்...!!!




நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!