Monday, August 1, 2011

சில ஆச்சர்யங்கள்...!!!

எனக்கு தோன்றிய சில ஆச்சர்யங்களும், சில ரசிப்புகளும்......

௧ : பெண் குழந்தையின் கோபத்தை தூண்டிவிட்டு ரசிக்கும் அம்மாக்கள்.....!!!


௨ : குழந்தைகள் வீட்டில் இல்லாவிட்டால், மனைவி அருகில் இருந்தால் கூட வெறுமையாய் உணர்வது....!!!

௩ : எடியூரப்பா செத்து செத்து விளையாடி, ஒரேயடியாக செத்தது...!!!!


௪ : சில அழகான பெண்கள் மட்டும் என்னை ரசித்து பார்ப்பது [[ஹி ஹி]]...!!!


௫ : அம்மா'வின் தைரியம்......!!! 


௬ : அய்யாவின் கபட [[உண்ணாவிரதம்]] நாடகம்.....!!!


௭ : "கனி"வில்லாத சிறையில் கனிமொழி....!!!


௮ : அண்ணன் சிபி செந்தில்குமாரின் திறமை......!!! [[ஹி ஹி காப்பி பேஸ்ட் இல்லைன்னாலும் அண்ணன் சூப்பர் கில்லாடிதான்]]


௯ : அடுத்த அண்ணன் "விக்கி உலகம்" எழுத்துக்கள்....!!! [[ஏண்டா ராஸ்கல் என் பக்கம் நீ வர்றேதே இல்லைன்னு திட்டாதேய்யா, என் நேரம் அப்பிடி உல்டாவா மாட்டி இருக்கு]]
[[நேற்றுதான் கமெண்ட்ஸ் போட்டு திட்டினான் அவ்வ்வ்வ்]]


௰ : ஆபிசரின், உத்திரவாதமும், நட்பை பேணும் பண்பும், அன்பும், பாசமும்.....!!!


௧௧ : தங்கை கல்பனா பாப்பாவின் அன்பும், கரிசனையும்.......!!!


௧௨ :  கணவன் எவ்வளவு அசிங்கியமாக திட்டினாலும், அடித்தாலும் அன்புடன் உணவூட்டும் மனைவிகள்....!!! [[தெய்வங்கள்]]

௧௩ : விதவை தாய்க்கு செலவுக்கு [[சாப்பாட்டுக்கு]] பணம் குடுக்காத மகன் மீது மட்டும் பாசம் காட்டி, பணம் கொடுத்து உதவும் மகனிடம் பாசம் காட்டாத தாய் [[பெரிய ஆச்சர்யம் நான் சிலரை நேரில் பார்க்கிறேன் இப்படி]]....!!!

௧௪ : தாய் என்னதான் குழந்தையை அடித்தாலும் ஓடிபோய் தாயோடு ஒட்டிக்கொள்ளும் குழந்தை.....!!!

௧௫ : ஆம்புலன்ஸ்'சில் டாக்டர் செல்லக்கூடாது என தெரிந்தும் திமிரில், ஆம்புலன்சில் போயி பர்ச்சேஸ் [[மனைவியுடன்]] பண்ணும் சில நாதாரி டாக்டர்கள்....!!! [[டாக்டர் தொழில் என்பதே மக்களுக்கு சேவை செய்யும் தொழில் என்பதை டாக்டர்களே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த வாழ்வில் உங்களுக்கு தெய்வம் தந்த கி ஃ ட் இந்த தொழில், அதை தவறாக பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தை வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்]]


௧௬ : டிவி பார்த்து மெய்மறக்கும் குழந்தைகள்.....!!!


௧௭ : நாங்கெல்லாம் அந்த காலத்துல'ன்னு சொல்லி கொலை வெறி உண்டாக்கும் பெரியவர்கள்.....!!!

௧௮ : அம்பத்தஞ்சி வயசு மகனை போலீஸ் பிடிக்கும் போது, எய்யா அவன் சின்னபுள்ளைய்யா அவனுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு கெஞ்சும் எழுவத்தி அஞ்சு வயசு அம்மா...!!!

௧௯ : தாகம் என்று வந்த வழிபோக்கனுக்கு மோர் [[ரேஸ்னா ஜூஸ்]] குடுக்கும் அன்பு....!!! 


௨௦ : ரெண்டாயிரம் ரூவா சம்பளத்திலும் மும்பையில் சந்தோஷமாக வாழும் குடும்பம்....!!!



டிஸ்கி : மும்பையில் கடும் மழை.....!!!

டிஸ்கி : இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கு ஒன்னொன்னா சொல்றேன் ஹி ஹி....!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!