Monday, August 1, 2011

சில ஆச்சர்யங்கள்...!!!

எனக்கு தோன்றிய சில ஆச்சர்யங்களும், சில ரசிப்புகளும்......

௧ : பெண் குழந்தையின் கோபத்தை தூண்டிவிட்டு ரசிக்கும் அம்மாக்கள்.....!!!


௨ : குழந்தைகள் வீட்டில் இல்லாவிட்டால், மனைவி அருகில் இருந்தால் கூட வெறுமையாய் உணர்வது....!!!

௩ : எடியூரப்பா செத்து செத்து விளையாடி, ஒரேயடியாக செத்தது...!!!!


௪ : சில அழகான பெண்கள் மட்டும் என்னை ரசித்து பார்ப்பது [[ஹி ஹி]]...!!!


௫ : அம்மா'வின் தைரியம்......!!! 


௬ : அய்யாவின் கபட [[உண்ணாவிரதம்]] நாடகம்.....!!!


௭ : "கனி"வில்லாத சிறையில் கனிமொழி....!!!


௮ : அண்ணன் சிபி செந்தில்குமாரின் திறமை......!!! [[ஹி ஹி காப்பி பேஸ்ட் இல்லைன்னாலும் அண்ணன் சூப்பர் கில்லாடிதான்]]


௯ : அடுத்த அண்ணன் "விக்கி உலகம்" எழுத்துக்கள்....!!! [[ஏண்டா ராஸ்கல் என் பக்கம் நீ வர்றேதே இல்லைன்னு திட்டாதேய்யா, என் நேரம் அப்பிடி உல்டாவா மாட்டி இருக்கு]]
[[நேற்றுதான் கமெண்ட்ஸ் போட்டு திட்டினான் அவ்வ்வ்வ்]]


௰ : ஆபிசரின், உத்திரவாதமும், நட்பை பேணும் பண்பும், அன்பும், பாசமும்.....!!!


௧௧ : தங்கை கல்பனா பாப்பாவின் அன்பும், கரிசனையும்.......!!!


௧௨ :  கணவன் எவ்வளவு அசிங்கியமாக திட்டினாலும், அடித்தாலும் அன்புடன் உணவூட்டும் மனைவிகள்....!!! [[தெய்வங்கள்]]

௧௩ : விதவை தாய்க்கு செலவுக்கு [[சாப்பாட்டுக்கு]] பணம் குடுக்காத மகன் மீது மட்டும் பாசம் காட்டி, பணம் கொடுத்து உதவும் மகனிடம் பாசம் காட்டாத தாய் [[பெரிய ஆச்சர்யம் நான் சிலரை நேரில் பார்க்கிறேன் இப்படி]]....!!!

௧௪ : தாய் என்னதான் குழந்தையை அடித்தாலும் ஓடிபோய் தாயோடு ஒட்டிக்கொள்ளும் குழந்தை.....!!!

௧௫ : ஆம்புலன்ஸ்'சில் டாக்டர் செல்லக்கூடாது என தெரிந்தும் திமிரில், ஆம்புலன்சில் போயி பர்ச்சேஸ் [[மனைவியுடன்]] பண்ணும் சில நாதாரி டாக்டர்கள்....!!! [[டாக்டர் தொழில் என்பதே மக்களுக்கு சேவை செய்யும் தொழில் என்பதை டாக்டர்களே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த வாழ்வில் உங்களுக்கு தெய்வம் தந்த கி ஃ ட் இந்த தொழில், அதை தவறாக பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தை வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்]]


௧௬ : டிவி பார்த்து மெய்மறக்கும் குழந்தைகள்.....!!!


௧௭ : நாங்கெல்லாம் அந்த காலத்துல'ன்னு சொல்லி கொலை வெறி உண்டாக்கும் பெரியவர்கள்.....!!!

௧௮ : அம்பத்தஞ்சி வயசு மகனை போலீஸ் பிடிக்கும் போது, எய்யா அவன் சின்னபுள்ளைய்யா அவனுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு கெஞ்சும் எழுவத்தி அஞ்சு வயசு அம்மா...!!!

௧௯ : தாகம் என்று வந்த வழிபோக்கனுக்கு மோர் [[ரேஸ்னா ஜூஸ்]] குடுக்கும் அன்பு....!!! 


௨௦ : ரெண்டாயிரம் ரூவா சம்பளத்திலும் மும்பையில் சந்தோஷமாக வாழும் குடும்பம்....!!!



டிஸ்கி : மும்பையில் கடும் மழை.....!!!

டிஸ்கி : இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கு ஒன்னொன்னா சொல்றேன் ஹி ஹி....!!

46 comments:

  1. தமிழ் மனம் முதல் வோட் போட்டாச்சு

    ReplyDelete
  2. அருமையான ஆச்சர்யங்கள்

    ReplyDelete
  3. எம்புட்டு நாளாச்சு... மனோ பதிவுல இப்படி கமென்ட் போட்டு!!!

    ReplyDelete
  4. INDLI LA இணைத்துவிட்டேன்

    ReplyDelete
  5. இருங்க படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  6. இதெல்லாம் உங்க சொந்த அனுபவம் போல தெரியுதே????

    ReplyDelete
  7. நல்லா ஆச்சர்யப்பட்டிங்க.....

    ReplyDelete
  8. //தாய் என்னதான் குழந்தையை அடித்தாலும் ஓடிபோய் தாயோடு ஒட்டிக்கொள்ளும் குழந்தை.....!!!//


    அழகான ஆச்சர்யம் தான்

    ReplyDelete
  9. ரெண்டாயிரம் ரூவா சம்பளத்திலும் மும்பையில் சந்தோஷமாக வாழும் குடும்பம்....!!!


    ..... ஆச்சர்யம் மட்டும் இல்லை, அதிசயமும் கூட.... :-)

    ReplyDelete
  10. ஐயய்யோ தமிழ்வாசி என்னை கொல்லுறான் ஓடி வாங்க ஓடி வாங்கோ.....

    ReplyDelete
  11. நன்றி பிரகாஷ் மக்கா, எல்லா இணைப்பிலும் இணைத்தமைக்கு, இங்கே கடுமையா நெட் கட்டாகி கட்டாகி போகுது மழையினால்....

    ReplyDelete
  12. //ரெண்டாயிரம் ரூவா சம்பளத்திலும் மும்பையில் சந்தோஷமாக வாழும் குடும்பம்....!!!//

    மும்பை ஜிந்தாபாத் :-)))))))

    ஆச்சரிய முத்துக்கள் அசத்தல். நேத்து அடைமழை பெஞ்சதால ரூம்போட்டு யோசிக்கிறீங்கன்னு புரியுது :-))

    ReplyDelete
  13. me the firstu

    indiavukku ஜிந்தாபாத் :-)))))))

    ReplyDelete
  14. very beautiful post..and photos also.

    ReplyDelete
  15. சூப்பரப்பு இன்னும் சொல்லுங்க

    ReplyDelete
  16. நல்ல தொகுப்பு தான்..இந்தியா வந்து குளிக்கும் ஆட்களை விட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  18. இப்படியெல்லாம் அண்ணனுக்கு ஆச்சர்யம் வருதா ?

    சரி நல்லாத்தான் இருக்கு :))

    ReplyDelete
  19. FOOD said...
    அநேகமாக இன்று மாலை நெல்லையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு இருக்கும். சென்னையிலிருந்து, இயக்குனர் மற்றும் பதிவர் செல்வா வருகிறார். மதுரையிலிருந்து சீனா அய்யா, சரவணன் வாராக, குமரியிலிருந்து விஜயன் வாராக, நாங்க நெல்லைப் பதிவரெல்லாம் இருக்கோம்.நீங்க எப்படி ஃப்ளைட் புடிச்சி வாறீங்களா///


    அவ்வ்வ்வ் சொல்லவே இல்லை......ஹி ஹி.....இருந்தாலும் வாழ்த்துக்கள், எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க ஆபீசர்....வாழ்த்துக்கள்.....திவானின் மீன் கறியும் வறுவலும் பார்சல் டூ மும்பை ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  20. விதவை தாய்க்கு செலவுக்கு [[சாப்பாட்டுக்கு]] பணம் குடுக்காத மகன் மீது மட்டும் பாசம் காட்டி, பணம் கொடுத்து உதவும் மகனிடம் பாசம் காட்டாத தாய் [[பெரிய ஆச்சர்யம் நான் சிலரை நேரில் பார்க்கிறேன் இப்படி]]....!!!

    மாப்பிள்ள இப்பிடியும் இருக்கலாமல்லவா:- நன்றாக உழைத்து சம்பாதிக்கும் மகன் காச கொடுத்தா சரின்னு நினைக்கிறான்... 
    காசு கொடுக்காதவன் கஸ்ரப்படுகிறான்னு அர்த்தம்..!! ஆனால் தாயோடு பாசமாய் இருக்கிறான் காசுதான் வாழ்கைன்னு.. காசை மட்டுமே எதிர்பார்பவர்கள் இல்லை பெற்றோர்கள் அன்பு வார்தைகளை எதிர்பாக்கிறார்கள்.. அவர்களின் கடைசி காலத்தில் நாங்களும் பாசத்தோடு இருந்து பார்போமே அது என்ன காசா பணமா..!!!!!!

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  21. அட ஆமா ...ஆச்சரியமாதான் இருக்கு ...அதிலும் ௪ ரொம்ப ஆச்சரியம் !

    ReplyDelete
  22. மனோ!இதுக்குத்தான் சி.பி கூடயெல்லாம் சேராதீங்கன்னு சொல்றது!அவரோட சாயல் துணுக்குகள்:)

    ReplyDelete
  23. வாழ்ந்து விட முடியும்ங்கிற தன்னம்பிக்கையை ஊட்டும் நகரம் பம்பாய் எனும் மும்பாய்!

    ReplyDelete
  24. அந்த நடிகை யாரு பாஸ்???முகம் சரியா விளங்கல!

    ReplyDelete
  25. அந்தச் சமயத்தில் ஆச்சர்யங்களாக உணராவிட்டாலும் ஆச்சர்யங்கள்தான் இவைகள்.அசத்தலா யோசிச்சிருக்கீங்க மனோ !

    ReplyDelete
  26. //சில அழகான பெண்கள் மட்டும் என்னை ரசித்து பார்ப்பது //[[ஹி ஹி]].

    ’மட்டும்’ஐ இடம் மாற்றிப் பாருங்களேன். சூப்பராக இல்லை?(சில அழகான பெண்கள் என்னை ’மட்டும்’ ரசித்துப் பார்ப்பது)

    ReplyDelete
  27. அழகான ஆச்சர்யங்கள்!!

    ReplyDelete
  28. //பெண் குழந்தையின் கோபத்தை தூண்டிவிட்டு ரசிக்கும் அம்மாக்கள்...//

    அண்ணே...உண்மையோ உண்மை...

    ReplyDelete
  29. உண்மையிலேயே அழகான ஆச்சர்ய்ங்கள்தான் சகோ

    ReplyDelete
  30. ஆச்சர்யங்கள் ரசிக்கும்படியாக இருந்தது சகோ.... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. ரெண்டாயிரம் ரூவா சம்பளத்திலும் மும்பையில் சந்தோஷமாக வாழும் குடும்பம்....!!!

    ஆச்சர்யம் மட்டும் இல்லை, அதிசயமும் கூட....

    ReplyDelete
  32. உங்களுக்குத் தோன்றும் ஆச்சரியங்கள், எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது.

    உண்மையில், இந்தப் பூமியில் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கமைவாக வாழ்வோரைப் பார்த்து, நானும் ஆச்சரியப்படுவதுண்டு, அதே ரசனை உங்களுக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  33. ஆச்சரியங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!