Tuesday, June 19, 2012

நம்ம பிரதமருக்கு கோவம் வந்தால்...?

நம்மாளுங்களுக்கு கோவம் வந்தால் எப்பிடியெல்லாம் திட்டுவாங்கன்னு கொஞ்சம் ரிலாக்ஸா பார்ப்போமா...??? [[சீரியசா பார்க்கப்புடாது]]

டெய்லர் - கொய்யால பிரிச்சி பிரிச்சி தைச்சிப்புடுவேன்.

பனை தொழிலாளி : சும்மா ஏறு ஏறுன்னு ஏறிப்புடுவேன் ஜாக்கிரதை.

செருப்பு தொழிலாளி : சும்மா பிய்யி பிய்யின்னு பிச்சிபுடுவேன்.


டிரைவர் : ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிப்புடுவேன் பேமானி.

ஆசாரி : சும்மா தேயி தேயின்னு தேச்சுபுடுவேன் தேச்சி.

கொத்தனார் : செங்கலை கொத்துற மாதிரி கொத்திபுடுவேன் கொத்தி.


ஆட்டோ டிரைவர் : சும்மா டர்ர்ர் டர்ர்ர்ன்னு ஓட்டிருவேன்.

கம்பியூட்டர் இஞ்சினியர் : வைரஸை அனுப்பி உன்னை பார்ட் பார்ட்டா பிரிச்சிருவேன் பிரிச்சி.


பிளாக்கர் [[சிபி அல்ல]] : உன்னை ஹேக் பண்ணி இப்பவே தூக்குறேன் பாரு.

டவுண் பஸ் டிரைவர் : உன்னை சுத்தி சுத்தி அடிக்கலை என் பேரை மாத்திக்கேறேன்.


போலீஸ் : முட்டிக்கு முட்டி பேத்துருவேன் [[இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே]]

முதலாளி : இப்பவே தூக்கிருவேன்.

கலெக்டர் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமா..? [[எல்லாமே ஒன்னுதாம்டி]]


அரசியல்வாதி : இப்பவே உன்னை குண்டாஸ்ல தூக்கி போடல நான் எம் எல் ஏ இல்லைடா.

அடகு கடை செட் : நான் வச்சிக்கிறேன்டா உன்னை.

அக்கவுண்ட்டன்ட் : இப்பவே உன் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு கணக்கு வச்சிருக்கேன்.

மிலிட்டரி [[விக்கி அல்ல]] : சுட்டுபுடுவேன் சுட்டு.


வாத்தியார் : பிரம்பால விளாசிப்புடுவேன் விளாசி.

ஆபீசர் : எலேய் பெல்டை உருவினேன் ரத்த விளார் ஆகிருவே ஜாக்கிரதை.


போஸ்ட் மேன் : வீசிப்புடுவேன் வீசி.

பட்டறைகாரர் : சூடு பண்ணி அடி அடின்னு அடிச்சி நிமித்திருவேன்.

கேஷியர் : எண்ணி எண்ணி அடிப்பேன்.


டீக்கடை : மூஞ்சில வெண்ணியை ஊத்திருவேன்.

சலூன் அண்ணாச்சி : சும்மா வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புடுவேன்.


ஒயின் ஷாப்காரன் : உன் வாயில பினாயில ஊத்திப்புடுவேன்.

மீனவன் : உன்னை இப்பவே கடிச்சி துப்பிருவேன்.

வேட்டைக்காரன் [[விஜய் அல்ல]] : உன்னை வலை விரிச்சி பிடிக்கலைன்னா பார்த்துக்கோ.

மளிகை கடைக்காரன் : இருடி உன்னை இப்பவே பார்சல் பண்ணுறேன்.


திருடன் : இப்பவே உன்னை உடைக்கிறேன் பாரு.

ரயில் ஓட்டுனர் : உன்னை டக்கு புக்குன்னு இப்பவே ஊதல பாரு கொய்யா.

பாக்கு வியாபாரி : இப்பவே உன்னை கடிச்சி குதப்பி துப்பிருவேன்.

டாக்டர் : பிடிச்சி வச்சி குத்து குத்துன்னு குத்திப்புடுவேன்.


கடைசியாக.......

மன்மோகன் சிங் கோவம் வந்தா என்ன சொல்வாரு...?


கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் [[காது கேட்டாதானே]] தீர விசாரிப்பதும் பொய், சோனியா அம்மா சொல்வதே மெய், அய் எனக்கு கோவம் வராதே வராதே வராதே.....!!!

டிஸ்கி : படங்கள் சும்மா உங்கள் ரசனைக்காக [[வேதனை]]...!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!