ரஜினி : கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்....
மனோ : படையப்பா....படையப்பா....படையப் பா...அதுல பத்துபேரா கூட்டமா வருவீங்களே அது என்னா கூட்டம்...?
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------------------
ரெஸ்டாரண்டில் ரசித்து சாப்பிட போனால் அங்கே கல்லாவில் ஃபிகர்....! சரி, அடுத்தநாள் வேறே ரெஸ்டாராண்ட் போகலாமுன்னு போனேன், கல்லாவில் ஒரு சிறுவன், அப்பாடா நிம்மதியா சாப்பிடலாம்னு எதிரே இருக்கும் டேபிளில் போய் அமர்ந்தேன்.
இலை வந்தது, கூட்டுகள் பரிமாறப்பட்டது ஒரு பெரிய பொறித்த மீன் வைத்துவிட்டு சாதமும் பரிமாறி சாம்பார் ஊற்றியதும், "சேச்சி" என அந்த சிறுவன் கூப்பிட, வந்தது ஒரு ஃபிகர் கல்லாவை நோக்கி.......[[கொய்யால அடங்குங்கடா எங்கே போனாலும் நிம்மதி இல்லை]] மீன் முள்ளை கடிக்க முடியவில்லை, பப்படத்தை கடிக்க முடியவில்லை, பின்னே கருக் முருக்குன்னு சத்தம் கேட்டதும், ஃபிகர் என்னை திரும்பி திரும்பி பார்க்குது முடியல...!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -
சகுனி படத்தை பற்றி தெளிவா தெரிஞ்சிகிட்டும், தைரியமா அதை பார்க்கபோனார் எங்க அண்ணன் டைரக்டர் செல்வகுமார், தலைவலி பின்னி எடுத்தும் கூட தலையில் உருமாவை இருக்க கட்டிகிட்டு அந்த படத்தை முழுசும் பார்த்துட்டு, தலையில் உருமாவை வைத்து முகத்தை மூடிகிட்டே ஆட்டோ கூட பிடிக்காமல் [[கார் இருந்தும்]] தெரு தெருவா ஓடி வீடு வந்து சேர்ந்தார். அவ்வ்வ்வ்வ்வ்....! [[அண்ணே மன்னிச்சு]]
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------
நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்.........திமுக'வின் "குண்டாஸ்" சிறை நிரப்பும் போராட்டம் பற்றி நினைக்கும் போது கண்ணுல தண்ணியா ஊத்துது, இதில் தெரியும் நீதி என்னான்னா....."உடன்பிறப்புகள் மீது ஒலக தலீவனுக்கு நம்ம்பிக்கை இல்லை" அதான் வேதனை ச்சே ச்சீ சோதனை செஞ்சு பாக்குறார்"ன்னு உடன்பிறப்பு ஒன்னு முனுமுனுப்பது கேக்குது...!?
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------------------
பேஸ்புக்கில் என் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டுட்டார் திரிஷா, ம்ம்ம்ம் நம்மளை பற்றி நல்லா தெரிஞ்சிதான் போட்டாங்களா...?! விக்கிக்கும், விஜயனுக்கும், ஆபீசருக்குமே வெளிச்சம்...!
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------------------
மலையாளிகள் ஆமை"யை ஆம என்றுதான் சொல்லுவார்கள் அதுபோல, தலைவனை தலவன் என்றே கூறுவார்கள், என்னை மனோஜ் [[இங்கே என் பெயர் அதுதான்]] என்று சொல்லாமல் மனோஜே என்றே கூப்பிடுவார்கள் அப்பிடி இருக்க ஒரு மிருககாட்சிசாலையில் ஒரு தமிழனும் மலையாளிக்கும் நடந்த ஒரு விரிசல்.
முதலையை பார்த்து ஒரு மலையாளி : அய்......முதலை முதலை.....
அருகில் நின்ற தமிழன் : ஆமா []ஆம ஆம]] ஆமா....[[ஆம ஆம]]
மலையாளி : ஆம இல்லை முதலை முதலை...
தமிழன் : ஆமா ஆமா [[ஆம ஆம]]
கடுப்பான மலையாளி, நம்ம அண்ணாச்சியை தாக்கிட்டு, ஏண்டா முதலையை ஆம ஆம'ன்னு சொல்லறன்னு சொல்லி அடி பின்னிட்டானாம்.
நீதி : இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணும்.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -----
ஒரு நாள் காலையில் ரெஸ்டாராண்ட் போயி உப்புமா சாப்பிட போனேன். போற வழியில் ஒரு பழக்கடையில் ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கி சென்றேன், உப்புமாவோடு பழத்தை மிக்ஸ் பண்ணி சாப்பிடுவதற்கு [[ ஹோட்டலில் பழம் கிடையாது, நண்பனின் ஹோட்டலும் கூட]] நான் பழம் வைத்து சாப்பிடுவதை பார்த்த ஒரு சேட்டன், தனக்கும் உப்புமா வித் ஒரு பழம் என்று ஆர்டர் செய்ய, சர்வர் பழம் இங்கே இல்லை என்று சொல்ல........ஒரே களேபரம் ஆகிவிட்டது, நான் கிரேட் எஸ்கேப்....!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, பவர்ஸ்டார், சூப்பர் குட் பிலிம்ஸ் வாரிசுகள், பாக்கியராஜ் வாரிசு, இன்னும் பலபேரை வெள்ளித்திரையில் நான் இன்னும் பார்க்கவே இல்லை....?!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---
என் பிளாக்கில் விளம்பரம் இட்டால் மாசம் 599$ டாலர் சம்பாதிக்கலாம்னு கூகுள் காட்டுது, ஆனால் எப்பிடி விளம்பரம் போடுறதுன்னு தெரியலை...!!! இப்பதான் புரியுது சிபி அண்ணன் ஒரு நாளைக்கு பத்து பதிவு ஏன் போடுறான்னு, அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிஞ்சி, ரகசியமா என்னமோ பண்ணிகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்...!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
கலவரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன...!
மனோ"தத்துவம்.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
சகுனி'யை பார்த்ததும் பார்த்தேன் அன்னையில் இருந்து சனியன் பிடிச்சுருச்சு, வெட்டி பிளாக்கர்ஸ் வேதனை...!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
இப்போதெல்லாம் காதல் தானா உருவாகிறதில்லை, உருவாக்கப்படுகிறது....!
[[எவம்லேய் அங்கே கல்லை தேடுறது..?]]
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---
காதல்"ன்னு சொன்னாலே வாந்தி எடுக்கும் என் சில நண்பர்கள்....! [[எல்லாம் இவிங்களுக்கு கிடைக்கலையே'ங்ற கடுப்புதான், சொன்னா சண்டைக்கு வந்துருவாங்க ஹி ஹி, போகட்டும் வாந்தி எடுக்கட்டும், நல்லா இருங்கடே மக்கா...!]]
காதலிக்கும் போது அவளிடம் கொஞ்சி குலவி ஒரு முத்தம் வாங்கிவிட்டு, அந்த நினைவில் நான்குநாள் தூங்கமுடியாமல் படும் இன்பம் இருக்கே அடடா.........அது இந்த லகுடபாண்டிகளுக்கு தெரியாது...!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---
வலைத்தளம் வைத்திருக்கும் வாத்திகளின் [[பேஸ்புக் உட்பட]] அன்பான கவனத்திற்கு................. தமிழ் எழுத்துகளை முடிந்தவரை சரியாக எழுதவும், உங்களை கவனிக்க தனி தமிழ் அமைப்பு தயாராகிறது....!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ----
அழகான பாப்பா : அங்கிள் ரெண்டு ரூபாய்க்கு மிக்சர் தாங்க.
கடைக்காரன் காசை வாங்கிவிட்டு : அந்த பாட்டலை திறந்து உன் கையால் அள்ளிக்கொள்.
பாப்பா : இல்லை அங்கிள் உங்க கையால் அள்ளி குடுங்க.
கடைகாரர் அள்ளி கொடுக்க, பாப்பா தன் கை பத்தாது என அவளுக்கு புரிந்ததும், தன் மடி துணியில் வாங்கி சென்றாள்...!!!
பாருங்க இந்த காலத்து பிள்ளைகளின் அறிவை, இவள் கை சின்ன கை, அள்ளுனா கொஞ்சமாதான் மிக்சர் வரும், கடைக்காரன் கை பெரிய கை....எப்பூடீ...!!!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -
வாழ்க்கையில் நம்பிக்கையின்மை தோன்றும் போதுதான் விவாகரத்தும் தன் பல்லை வெளியே குரூரமாக காட்டுகிறது...!
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -
எழுகடல் தாண்டி
வந்தேன் முத்தமிட்டாய்
முத்தமிட்டேன்....நேரில்....!
எழுகடல் தாண்டி
வந்தேன் முத்தமிட்டேன்
முத்தமிட்டாய்....போனில்....!
இன்னும் உன்
முத்தத்தின் ஈரம்
காயவில்லை என் இதழில்...!
-------------------என்றும் உன் நினைவில் உன்னவன்-----------------------















