என் தங்கச்சி"பாப்பா" கல்பனா என்னா பேசினாள்....???
என்னை ஊக்குவித்து படிப்படியாக ஆதரவளித்து என்னை நெல்லை வரை கொண்டு சேர்த்தது என் அண்ணன் இம்சை அரசனும், அண்ணன் மனோ'வும்தான் என்று சொன்னார்.
இம்சை அரசனுக்கும் கல்பனாவுக்கும் நடந்த சண்டையையும், அதன் பின் அண்ணன் இம்சை சமாதான படுத்தி அவரை கூட்டி வந்ததையும் சொன்னார். ஏன்னா நான் பஹ்ரைன்ல இருக்கும் போது தங்கச்சியை நெல்லை கூப்பிட்டபோது சில பிரச்சினையை நாசுக்காக சொன்னார், நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....
எனக்கு மனசுக்கு என்னவோ உறுத்தவே என்ன பிள்ளை பிரச்சினைன்னு கொஞ்சம் கோபமாகவே கேட்டேன், என் செல்ல பாப்பா, இம்சை அண்ணன்தான்னு எனக்கு சொல்லவே இல்லை [[அன்பு + பாசம்]] ரெண்டு பேருமே அண்ணனாச்சே...? அந்த பண்பு என் செல்ல பாப்பாகிட்டே இருந்து பிடிச்சது எனக்கு, ஏன்னா பதிவர் சந்திப்பில்தான் பாப்பாவும் இம்சையும் அதை ஒத்து கொண்டார்கள்....
ஆனாலும் என் பாப்பா'ம்மாவும், என் தம்பியும் [[இம்சை]] ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்கவே வில்லை என்பது பாசத்தின் உச்சம்...!!!
ம்ஹும் என்ன செய்ய, ஒரு அண்ணனுக்கு கவிதைய படிச்சா வாந்தி வருது, ஹே ஹே ஹே ஹே இன்னொரு அண்ணனுக்கு தேனாய் [[இனிக்குது]] இருக்கு கவிதை.... ஹா ஹா ஹா என்னா செய்ய எல்லார் வீட்டிலும் உள்ளதுதானே...?
[[இம்சையை பைரமுத்து வீட்டுல கொஞ்ச நாள் அடைச்சி வையுங்கப்பா ம்ஹும்]]
என் தம்பி இம்சை, ஒரு நல்ல உத்தரவாதமாக செயல் படுபவன் என்பது நான் பஹ்ரைனில் இருக்கும் போதே எனக்கு தெளிவு படுத்தினான் [[ஆபீசருக்கு ஏற்ற ஆள்தான் போல]]....!!! அவர் பேச்சில் அது தெரியும்...!!! எதுன்னாலும் முகம் நோக்கி நேரே பேசும் ஆள்...[[மூதேவி சிபி நோட் பண்ணுடா டுபுக்கு]]
டேய் ராஸ்கல் விடுடா விடுடா, விக்கி உன்னை சுட்டு போட்டுட போறான்.....!!! [[ம்ஹும் என்னா சிரிப்பு]]
கல்பனா பாப்பாகிட்டே சொல்லி இருந்தேன் இரவு எட்டு மணிக்குள் வீடு போய் சேரணும்னு, இம்சை வீட்டில் ஒரு பங்ஷன் இருந்ததால், தம்பியே சொன்னான் அண்ணே நானே பாப்பாவை சைக்கிளில் [[கார்]] விருதுநகர் கொண்டு போயி விட்டுர்றேன்னு சொன்னான்.
நானும் செல்வாவும், சிபி'யும் என் மாப்பிளையும் குற்றாலம் போயி கொண்டிருக்கும் போதே பாப்பாவுக்கும் தம்பிக்கும் போன் பண்ணிட்டே இருந்தேன். பாப்பா போயாச்சான்னு...? அண்ணே கவலை படாதீங்க பாப்பாவை சூப்பரா ஊர் அனுப்புறேன்னு சொன்னான் தம்பி....
அப்புறம் எட்டரை மணிக்கு பாப்பா'மாகிட்டே இருந்து போன் வந்துச்சு. அண்ணா நான் வீடு வந்து செர்ந்துட்டேன்னு, சிபி'கிட்டேயும் செல்வாகிட்டேயும் சொன்னேன். அவனுக சந்தோசமாகிட்டானுங்க...எங்கள் சைக்கிள் [[கார்]] ஆலங்குளத்தை நெருங்கிட்டு இருந்தது...
என் மச்சினன் [[என் வீட்டம்மாவின் தம்பி]] எங்களை குற்றாலம் கூட்டி போன சாரதி....!!!
ஏன் இதை சொல்றேன்னா, பதிவர்களின் அன்பு பாசம் எப்பிடி இருக்குன்னு இந்த உலகமும் தெரிஞ்சிகிடட்டுமே அதான்....!!!
பதிவர் சந்திப்பில் சில காரியங்களை பாப்பா'ம்மா சொன்னாள், அதை நீங்கள் ஆபீசர் அவர்களின் வீடியோ கிளிப்பிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்வது அன்பு பாசத்தை பற்றி மட்டுமே....!!!
டிஸ்கி : அன்பு + பாசத்துல ஆபீசர் என்னா குறஞ்சவரா...??? சித்ரா மேடம் என்னா குறஞ்சவங்களா....??? கவுசல்யா தோழி என்னா குறஞ்சவங்களா...??? ரத்னவேல் அய்யா, சீனா அய்யா, பாலாபட்டரை, தமிழ் வாசி, வெரும்பய' ஜெயந்த் இன்னும் இருக்காயிங்க அவங்க எல்லாம் அன்புக்கு குறஞ்சவங்க இல்லை என்பதை ஒவ்வொரு பதிவர் பேர் போட்டு சொல்றேன் உண்மையாக.........[[ டேய் சிபி, டுபுக்கு, தம்பி நான் உண்மையை சொல்வேன் வர்றியாடா என் கூட ஒண்டிக்கு ஒண்டி ராஸ்கல் ஹா ஹா ஹா ஹா]]
டிஸ்கி : இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!!
இவர்களை பற்றி அடுத்த பதிவில்..................!!!!
தொடரும் காதல்..........!!!!!
டிஸ்கி : தயவு செய்து இம்சை அரசன் பாபு, கவுசல்யா தோழி போட்டோவை நண்பர்களே நீங்கள் தங்கள் பதவிகளில் போட்டு விடாமலிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......[[யா ரோ தம்பி போட்டோ'வை போட்டுட்டாயிங்களாம் தம்பி ரூம் போட்டு அழுதுட்டு இருக்காம்]]






