Monday, June 20, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...2....

என் தங்கச்சி"பாப்பா" கல்பனா என்னா பேசினாள்....??? 


என்னை ஊக்குவித்து படிப்படியாக ஆதரவளித்து என்னை நெல்லை வரை கொண்டு சேர்த்தது என் அண்ணன் இம்சை அரசனும், அண்ணன் மனோ'வும்தான் என்று சொன்னார்.

இம்சை அரசனுக்கும் கல்பனாவுக்கும் நடந்த சண்டையையும், அதன் பின் அண்ணன் இம்சை சமாதான படுத்தி அவரை கூட்டி வந்ததையும் சொன்னார். ஏன்னா நான் பஹ்ரைன்ல இருக்கும் போது தங்கச்சியை நெல்லை கூப்பிட்டபோது சில பிரச்சினையை நாசுக்காக சொன்னார், நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....


எனக்கு மனசுக்கு என்னவோ உறுத்தவே என்ன பிள்ளை பிரச்சினைன்னு கொஞ்சம் கோபமாகவே கேட்டேன், என் செல்ல பாப்பா, இம்சை அண்ணன்தான்னு எனக்கு சொல்லவே இல்லை [[அன்பு + பாசம்]] ரெண்டு பேருமே அண்ணனாச்சே...? அந்த பண்பு என் செல்ல பாப்பாகிட்டே இருந்து பிடிச்சது எனக்கு, ஏன்னா பதிவர் சந்திப்பில்தான் பாப்பாவும் இம்சையும் அதை ஒத்து கொண்டார்கள்....


ஆனாலும் என் பாப்பா'ம்மாவும், என் தம்பியும் [[இம்சை]] ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்கவே வில்லை என்பது பாசத்தின் உச்சம்...!!! 


ம்ஹும் என்ன செய்ய, ஒரு அண்ணனுக்கு கவிதைய படிச்சா வாந்தி வருது, ஹே ஹே ஹே ஹே இன்னொரு அண்ணனுக்கு தேனாய் [[இனிக்குது]] இருக்கு கவிதை.... ஹா ஹா ஹா என்னா செய்ய எல்லார் வீட்டிலும் உள்ளதுதானே...?

[[இம்சையை பைரமுத்து வீட்டுல கொஞ்ச நாள் அடைச்சி வையுங்கப்பா ம்ஹும்]] 

என் தம்பி இம்சை, ஒரு நல்ல உத்தரவாதமாக செயல் படுபவன் என்பது நான் பஹ்ரைனில் இருக்கும் போதே எனக்கு தெளிவு படுத்தினான் [[ஆபீசருக்கு ஏற்ற ஆள்தான் போல]]....!!! அவர் பேச்சில் அது தெரியும்...!!! எதுன்னாலும் முகம் நோக்கி நேரே பேசும் ஆள்...[[மூதேவி சிபி நோட் பண்ணுடா டுபுக்கு]]

டேய் ராஸ்கல் விடுடா விடுடா, விக்கி உன்னை சுட்டு போட்டுட போறான்.....!!! [[ம்ஹும் என்னா சிரிப்பு]]


கல்பனா பாப்பாகிட்டே சொல்லி இருந்தேன் இரவு எட்டு மணிக்குள் வீடு போய் சேரணும்னு, இம்சை வீட்டில் ஒரு பங்ஷன் இருந்ததால், தம்பியே சொன்னான் அண்ணே நானே பாப்பாவை சைக்கிளில் [[கார்]] விருதுநகர் கொண்டு போயி விட்டுர்றேன்னு சொன்னான்.

நானும் செல்வாவும், சிபி'யும் என் மாப்பிளையும் குற்றாலம் போயி கொண்டிருக்கும் போதே பாப்பாவுக்கும் தம்பிக்கும் போன் பண்ணிட்டே இருந்தேன். பாப்பா போயாச்சான்னு...? அண்ணே கவலை படாதீங்க பாப்பாவை சூப்பரா ஊர் அனுப்புறேன்னு சொன்னான் தம்பி....


அப்புறம் எட்டரை மணிக்கு பாப்பா'மாகிட்டே இருந்து போன் வந்துச்சு. அண்ணா நான் வீடு வந்து செர்ந்துட்டேன்னு, சிபி'கிட்டேயும் செல்வாகிட்டேயும்  சொன்னேன். அவனுக சந்தோசமாகிட்டானுங்க...எங்கள் சைக்கிள் [[கார்]] ஆலங்குளத்தை நெருங்கிட்டு இருந்தது...

என் மச்சினன் [[என் வீட்டம்மாவின் தம்பி]] எங்களை குற்றாலம் கூட்டி போன சாரதி....!!!

ஏன் இதை சொல்றேன்னா, பதிவர்களின் அன்பு பாசம் எப்பிடி இருக்குன்னு இந்த உலகமும் தெரிஞ்சிகிடட்டுமே அதான்....!!!


பதிவர் சந்திப்பில் சில காரியங்களை பாப்பா'ம்மா சொன்னாள், அதை நீங்கள் ஆபீசர் அவர்களின் வீடியோ கிளிப்பிங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்வது அன்பு பாசத்தை பற்றி மட்டுமே....!!!

டிஸ்கி : அன்பு + பாசத்துல ஆபீசர் என்னா குறஞ்சவரா...??? சித்ரா மேடம் என்னா குறஞ்சவங்களா....??? கவுசல்யா தோழி என்னா குறஞ்சவங்களா...??? ரத்னவேல் அய்யா, சீனா அய்யா, பாலாபட்டரை, தமிழ் வாசி, வெரும்பய' ஜெயந்த் இன்னும் இருக்காயிங்க அவங்க எல்லாம் அன்புக்கு குறஞ்சவங்க இல்லை என்பதை ஒவ்வொரு பதிவர் பேர் போட்டு சொல்றேன் உண்மையாக.........[[ டேய் சிபி, டுபுக்கு, தம்பி நான் உண்மையை சொல்வேன் வர்றியாடா  என் கூட ஒண்டிக்கு ஒண்டி ராஸ்கல் ஹா ஹா ஹா ஹா]]

டிஸ்கி : இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! 

இவர்களை பற்றி அடுத்த பதிவில்..................!!!!

 தொடரும் காதல்..........!!!!!

டிஸ்கி : தயவு செய்து இம்சை அரசன் பாபு, கவுசல்யா தோழி போட்டோவை நண்பர்களே நீங்கள் தங்கள் பதவிகளில் போட்டு விடாமலிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......[[யாரோ தம்பி போட்டோ'வை போட்டுட்டாயிங்களாம் தம்பி ரூம் போட்டு அழுதுட்டு இருக்காம்]]


66 comments:

 1. அட அட அட என்ன ஒரு பாசப்பிணைப்பு! பதிவர்களுக்குள் இப்படி ஒரு அன்பும், பாசமுமா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு மனோ!

  மிக அழகாக அனுபவித்து இப்பதிவை எழுதி இருக்கீங்க! படிக்கப் படிக்க இன்பம்!

  கலக்கீட்டீங்க மனோ!

  ReplyDelete
 2. எனது கம்பியோட்டரில் சிறு பிழை இருப்பதால், இண்ட்லியில் ஓட்டுப் போட முடியவில்லை! நாளைகாலை 11 மணிக்குப் பிறகு போடுகிறேன்!

  ReplyDelete
 3. நல்லாத்தான் ஜமாய்ச்சு இருக்கீங்க.. இப்பத் தான் தமிழ்நாட்டை எவ்ளோ மிஸ் பண்றோம் என்பதை என்னால் உணர முடியுது சகோ. அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது அந்த நாள் ஞாபகம் வந்து வந்து போகுது.

  பதிவர் கூட்டத்தில் எதாவது தீர்மானங்கள் நிறைவேற்றினீர்களா ?


  ******************************'

  குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

  ReplyDelete
 4. மக்கா... இம்புட்டு டீடெயிலா பதிவு போட்டிருக்கிங்களே.... ஆனா சந்திப்புல அம்புட்டு அமைதியா இருந்திங்க....

  ReplyDelete
 5. அருமை மனோ.
  உங்கள் பதிவை ரசிக்கிறேன். அடுத்து பதிவர் சந்திப்பு பற்றி எழுதுவதை எதிர்பார்க்கிறேன்.
  நீங்கள் ஜாலியான ஆளாக தோன்றினாலும் 'மிகவும் சீரியசான மனிதர்' என்பதை உங்களிடம் கொஞ்ச நேரம் பேசியதில் தெரிந்து கொண்டேன். சிபியும் அப்படித்தான். நீங்கள் எல்லோரும் உங்கள் தொழிலிலும் நன்கு முன்னேற பேரும் புகழுடன் வாழ நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
  நன்றி.

  ReplyDelete
 6. டேய் நல்லவனுங்களே...என்னைப்பத்தி ஒரு நிமிஷமாவது நெனச்சி பாத்தீங்கலாடா ஹிஹி!

  ReplyDelete
 7. கலந்து கொண்டவர்கள் எல்லோரும்
  பதிவர் சந்திப்பு குறித்து பதிவு போடுகிறார்கள்
  அனைத்திலும் உங்கள் பாணி பதிவுதான்
  படங்களுடன் அசத்தலாய் இருக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. //பதிவர் கூட்டத்தில் எதாவது தீர்மானங்கள் நிறைவேற்றினீர்களா ?//

  நல்ல கேட்குராரையா டீடைலு

  ReplyDelete
 9. "ஒரு காதல் ஜோடி"//
  எனக்கு தெரியும் ! எனக்கு தெரியும் !

  ReplyDelete
 10. தம்பியை அழ வேண்டாம் னு சொல்லுங்க. போகஸ் பண்ணி எடுத்த புகைப்படம் போடலைனாலும், ஓரத்தில விழுந்ததை தவிர்க்க முடியாது.

  ReplyDelete
 11. தம்பி.. நீ ரொம்ப நல்லவண்டா.. நீ குற்றாலத்தில் செஞ்ச திலுமுல்லுவை மட்டும் நைஸா மறைச்சுட்டியே ஹா ஹா

  ReplyDelete
 12. //தம்பியை அழ வேண்டாம் னு சொல்லுங்க. போகஸ் பண்ணி எடுத்த புகைப்படம் போடலைனாலும், ஓரத்தில விழுந்ததை தவிர்க்க முடியாது//

  ஹ ஹா ...எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ ..அவ்வளவுக்கு அவ்வளவு வேண்டாம் அம்மா ..

  ReplyDelete
 13. அங்க போயும் காதல் ஜோடிகளை நோட்டம் விடுறேன்னு டிஸ்டர்ப் பண்ணீங்களா..பாவம் அவங்க.

  ReplyDelete
 14. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  அட அட அட என்ன ஒரு பாசப்பிணைப்பு! பதிவர்களுக்குள் இப்படி ஒரு அன்பும், பாசமுமா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு மனோ!

  மிக அழகாக அனுபவித்து இப்பதிவை எழுதி இருக்கீங்க! படிக்கப் படிக்க இன்பம்!

  கலக்கீட்டீங்க மனோ!//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 15. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  எனது கம்பியோட்டரில் சிறு பிழை இருப்பதால், இண்ட்லியில் ஓட்டுப் போட முடியவில்லை! நாளைகாலை 11 மணிக்குப் பிறகு போடுகிறேன்!//

  கூல் மக்கா.....

  ReplyDelete
 16. இக்பால் செல்வன் said...
  நல்லாத்தான் ஜமாய்ச்சு இருக்கீங்க.. இப்பத் தான் தமிழ்நாட்டை எவ்ளோ மிஸ் பண்றோம் என்பதை என்னால் உணர முடியுது சகோ. அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது அந்த நாள் ஞாபகம் வந்து வந்து போகுது.

  பதிவர் கூட்டத்தில் எதாவது தீர்மானங்கள் நிறைவேற்றினீர்களா ?//

  தீர்மானம் ஒன்றும் நிறைவேற்ற வில்லை ஆனால் இந்த சந்திப்பால் சில பல மாற்றங்கள் வந்துருக்கு பதிவுலகில், உதாரணம் சிபி'யின் எழுத்தை கவனித்து பாருங்கள் புரியும்....

  ReplyDelete
 17. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா... இம்புட்டு டீடெயிலா பதிவு போட்டிருக்கிங்களே.... ஆனா சந்திப்புல அம்புட்டு அமைதியா இருந்திங்க....//

  இம்சை அரசனும் என்னிடம் அப்பிடிதான் கேட்டான், நீங்க நோட்ஸ் ஒன்னும் எடுக்கலியான்னு, நான் எல்லாவற்றையும் ஆழமா உள்வாங்கிட்டு இருக்கேன் மனசுல'னு சொன்னேன்....

  ReplyDelete
 18. Rathnavel said...
  அருமை மனோ.
  உங்கள் பதிவை ரசிக்கிறேன். அடுத்து பதிவர் சந்திப்பு பற்றி எழுதுவதை எதிர்பார்க்கிறேன்.
  நீங்கள் ஜாலியான ஆளாக தோன்றினாலும் 'மிகவும் சீரியசான மனிதர்' என்பதை உங்களிடம் கொஞ்ச நேரம் பேசியதில் தெரிந்து கொண்டேன். சிபியும் அப்படித்தான். நீங்கள் எல்லோரும் உங்கள் தொழிலிலும் நன்கு முன்னேற பேரும் புகழுடன் வாழ நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
  நன்றி.//

  மிக்க நன்றி அய்யா.....

  ReplyDelete
 19. விக்கியுலகம் said...
  டேய் நல்லவனுங்களே...என்னைப்பத்தி ஒரு நிமிஷமாவது நெனச்சி பாத்தீங்கலாடா ஹிஹி!//

  அட நல்லவனுக்கு பிடிச்ச நல்லவனே எங்க உயிர் நண்பன் நீதானேடா....!!!

  ReplyDelete
 20. Ramani said...
  கலந்து கொண்டவர்கள் எல்லோரும்
  பதிவர் சந்திப்பு குறித்து பதிவு போடுகிறார்கள்
  அனைத்திலும் உங்கள் பாணி பதிவுதான்
  படங்களுடன் அசத்தலாய் இருக்கு
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி குரூ, நல்லா உன்னிப்பாதான் கவனிச்சிட்டு இருக்கீங்க போல.....!!!

  ReplyDelete
 21. ஷர்புதீன் said...
  //பதிவர் கூட்டத்தில் எதாவது தீர்மானங்கள் நிறைவேற்றினீர்களா ?//

  நல்ல கேட்குராரையா டீடைலு//

  ஆமா பெரிய பத்திரிக்கைகாரண மாதிரி நோட்ஸ் எல்லாம் எடுத்தீறேய்யா அந்த நோட்ஸ் எல்லாம் எங்கே....?

  ReplyDelete
 22. நாய்க்குட்டி மனசு said...
  "ஒரு காதல் ஜோடி"//
  எனக்கு தெரியும் ! எனக்கு தெரியும் !//

  அடிச்சும் கேப்பாயிங்க சொல்லி புடாதீங்க என்ன....

  ReplyDelete
 23. நாய்க்குட்டி மனசு said...
  தம்பியை அழ வேண்டாம் னு சொல்லுங்க. போகஸ் பண்ணி எடுத்த புகைப்படம் போடலைனாலும், ஓரத்தில விழுந்ததை தவிர்க்க முடியாது.//

  அந்த படத்தை பார்த்துட்டு ஒபாமா மிலிட்டிரி இம்சையை போட்டு தள்ள ஹெலிகொப்டர் அனுப்பி இருக்காயிங்களாம். அதான் புள்ளை இம்புட்டு பயப்படுது ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 24. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி.. நீ ரொம்ப நல்லவண்டா.. நீ குற்றாலத்தில் செஞ்ச திலுமுல்லுவை மட்டும் நைஸா மறைச்சுட்டியே ஹா ஹா

  நீ என்கிட்டே மிதி வாங்காம திருந்த மாட்டியாடா ராஸ்கல் தோலை உரிச்சிபுடுவேன், ஆமா நீ தங்கி இருந்த ஹோட்டல்ல உன் பெட் ரூம்'ல பெண்களின் தலை முடி கிடந்துச்சே, அது எப்பிடி...???

  ReplyDelete
 25. இம்சைஅரசன் பாபு.. said...
  //தம்பியை அழ வேண்டாம் னு சொல்லுங்க. போகஸ் பண்ணி எடுத்த புகைப்படம் போடலைனாலும், ஓரத்தில விழுந்ததை தவிர்க்க முடியாது//

  ஹ ஹா ...எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ ..அவ்வளவுக்கு அவ்வளவு வேண்டாம் அம்மா ..//

  மேடம், தம்பி நல்லாத்தான் எங்கேயோ வாங்கி கட்டி இருக்கான் போல ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 26. செங்கோவி said...
  அங்க போயும் காதல் ஜோடிகளை நோட்டம் விடுறேன்னு டிஸ்டர்ப் பண்ணீங்களா..பாவம் அவங்க.//

  யோவ் நமக்கு காதல்னா ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே.....!!!

  ReplyDelete
 27. அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...2....

  ராஸ்கல் இது தொடர்ச்சி..3.

  யார்யா உங்க கணக்கு வாத்தியாரு?

  ReplyDelete
 28. டிஸ்கி : தயவு செய்து இம்சை அரசன் பாபு, கவுசல்யா தோழி போட்டோவை நண்பர்களே நீங்கள் தங்கள் பதவிகளில் போட்டு விடாமலிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......[[யா
  ரோ தம்பி போட்டோ'வை போட்டுட்டாயிங்களாம் தம்பி ரூம் போட்டு அழுதுட்டு இருக்காம்]]//

  பாபுவோட போட்டோவை பார்த்தா நாங்கதான ரூம் போட்டு அழனும். அவரு ஏன் அழறாரு?

  ReplyDelete
 29. அந்த காதல் ஜோடியே நீங்களும் சிபியும்தான்னு சொல்றாங்களே உண்மையா மனோ சார்...

  ReplyDelete
 30. இண்டரஸ்டிங் பதிவர் சந்திப்பு..

  ReplyDelete
 31. ஹைய்யா ............ எனக்கே எனக்கா ., என்னை பத்தி ஒரு பதிவு .......................... தேங்க்ஸ் அண்ணா ................
  யு ஆர் ரியல்லி கிரேட் ...................................
  :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 32. ஆனா முகமே தெரியாம ., முகமூடி போட்டு திருஞ்ச எனை இப்பிடி போடு குடுத்திடிங்களே அண்ணா..............

  ReplyDelete
 33. நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....////

  இதுவுமா ?? எப்பிடி அண்ணா மறக்காம வச்சு இருக்கீங்க ..........

  ReplyDelete
 34. தங்கச்சியை நெல்லை கூப்பிட்டபோது சில பிரச்சினையை நாசுக்காக சொன்னார், நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....//

  இதுவுமா ?? எப்பிடி அண்ணா மறக்காம வச்சு இருக்கீங்க ..........

  ReplyDelete
 35. ஏலே ..,நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க ..,இருங்களே ,வாரேன் வாரேன்

  ReplyDelete
 36. அந்த பண்பு என் செல்ல பாப்பாகிட்டே இருந்து பிடிச்சது எனக்கு, ஏன்னா பதிவர் சந்திப்பில்தான் பாப்பாவும் இம்சையும் அதை ஒத்து கொண்டார்கள்....///

  என்னை எந்த சூழலையும் விடு கொடுக்காத அண்ணன்கள் ( நீங்க , பாபு அண்ணா & டெரர் அண்ணா )

  ReplyDelete
 37. ஆனாலும் என் பாப்பா'ம்மாவும், என் தம்பியும் [[இம்சை]] ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்கவே வில்லை என்பது பாசத்தின் உச்சம்...!!! ////

  CREDIT ONLY GOES TO BABU ANNA .....

  எந்த அளவுக்கு கோப்படும் மன உண்டே அந்த அளவுக்கு பாசகார மனிதர்

  ReplyDelete
 38. ஒரு அண்ணனுக்கு கவிதைய படிச்சா வாந்தி வருது, ஹே ஹே ஹே ஹே இன்னொரு அண்ணனுக்கு தேனாய் [[இனிக்குது]] இருக்கு கவிதை.... ஹா ஹா ஹா என்னா செய்ய எல்லார் வீட்டிலும் உள்ளதுதானே...?///

  சரி பாதி இன்பம் துன்பம் இருக்கும் வாழ்வு அமிர்தம் அண்ணா .... அதே போல்

  ReplyDelete
 39. சிபி'யும் என் மாப்பிளையும் குற்றாலம் போயி கொண்டிருக்கும் போதே பாப்பாவுக்கும் தம்பிக்கும் போன் பண்ணிட்டே இருந்தேன். பாப்பா போயாச்சான்னு...? ////

  :))))))))))))))))))))))

  ReplyDelete
 40. எட்டரை மணிக்கு பாப்பா'மாகிட்டே இருந்து போன் வந்துச்சு. அண்ணா நான் வீடு வந்து செர்ந்துட்டேன்னு, சிபி'கிட்டேயும் செல்வாகிட்டேயும் சொன்னேன். அவனுக சந்தோசமாகிட்டானுங்க.///

  செம cute யா சொல்லி இருக்கேங்க அண்ணா

  ReplyDelete
 41. இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! ///

  எனக்கும் தெரியுமே., அருமையா ஜோடி

  ReplyDelete
 42. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...2....

  ராஸ்கல் இது தொடர்ச்சி..3.

  யார்யா உங்க கணக்கு வாத்தியாரு?///


  ஹே ஹே ஹே ஹே விடுய்யா விடுய்யா......

  ReplyDelete
 43. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  டிஸ்கி : தயவு செய்து இம்சை அரசன் பாபு, கவுசல்யா தோழி போட்டோவை நண்பர்களே நீங்கள் தங்கள் பதவிகளில் போட்டு விடாமலிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......[[யா
  ரோ தம்பி போட்டோ'வை போட்டுட்டாயிங்களாம் தம்பி ரூம் போட்டு அழுதுட்டு இருக்காம்]]//

  பாபுவோட போட்டோவை பார்த்தா நாங்கதான ரூம் போட்டு அழனும். அவரு ஏன் அழறாரு?//

  அடப்பாவிகளா எலேய் அப்போ கொடைக்கானலில் எல்லாரும் ரூம் போட்டுதான் அழுதீன்களா அந்த ராஸ்கல பார்த்துட்டு.....

  ReplyDelete
 44. இரவு வானம் said...
  அந்த காதல் ஜோடியே நீங்களும் சிபியும்தான்னு சொல்றாங்களே உண்மையா மனோ சார்..//

  ஆஹா அருவாளுக்கு வேலை வந்துருச்சே ம்ஹும்.....

  ReplyDelete
 45. வேடந்தாங்கல் - கருன் *! said...
  இண்டரஸ்டிங் பதிவர் சந்திப்பு..//

  சந்திப்புக்கு வராம ஏமாத்திட்டு.......

  ReplyDelete
 46. கல்பனா said...
  ஹைய்யா ............ எனக்கே எனக்கா ., என்னை பத்தி ஒரு பதிவு .......................... தேங்க்ஸ் அண்ணா ................
  யு ஆர் ரியல்லி கிரேட் ...................................
  :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  June 20, 2011 10:59 PM


  கல்பனா said...
  ஆனா முகமே தெரியாம ., முகமூடி போட்டு திருஞ்ச எனை இப்பிடி போடு குடுத்திடிங்களே அண்ணா..............

  June 20, 2011 11:01 PM


  கல்பனா said...
  நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....////

  இதுவுமா ?? எப்பிடி அண்ணா மறக்காம வச்சு இருக்கீங்க ..........

  June 20, 2011 11:21 PM


  கல்பனா said...
  தங்கச்சியை நெல்லை கூப்பிட்டபோது சில பிரச்சினையை நாசுக்காக சொன்னார், நானும் சரிம்மா வரமுடிஞ்சின்னா ஆபீசருக்கு முதல்லயே தகவல் சொல்லிருன்னு சொன்னேன். இல்லை அண்ணா நான் வரமுடியாதுன்னு கண்டிப்பாக சொல்லி விட்டாள்....//

  இதுவுமா ?? எப்பிடி அண்ணா மறக்காம வச்சு இருக்கீங்க ///


  தங்கச்சி பாப்பா ஆச்சே மறக்க முடியுமா...?!!!

  ReplyDelete
 47. கல்பனா said...
  இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! ///

  எனக்கும் தெரியுமே., அருமையா ஜோடி///

  நான் நல்லா ரசிச்சி பார்த்துட்டு இருந்தேன் ஹே ஹே ஹே ஹே ஹே சூப்பர் ஜோடி......!!!

  ReplyDelete
 48. பனங்காட்டு நரி said...
  ஏலே ..,நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க ..,இருங்களே ,வாரேன் வாரேன்//


  ஹே ஹே ஹே ஹே வாலேய் வாலேய் மக்கா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 49. யோவ் என்னையும் கொஞ்சம் நெனச்சாவது பாத்திருக்கலாம்ல? கல் மனசுய்யா உனக்கு...........!

  ReplyDelete
 50. //////டிஸ்கி : இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! /////////

  அது சிட்டுக்குருவிகளா? (யோவ் நெஜமாவே அது சிட்டுக்குருவிதானேன்னு கேக்குறேன்)

  ReplyDelete
 51. //////MANO நாஞ்சில் மனோ said...
  சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி.. நீ ரொம்ப நல்லவண்டா.. நீ குற்றாலத்தில் செஞ்ச திலுமுல்லுவை மட்டும் நைஸா மறைச்சுட்டியே ஹா ஹா

  நீ என்கிட்டே மிதி வாங்காம திருந்த மாட்டியாடா ராஸ்கல் தோலை உரிச்சிபுடுவேன், ஆமா நீ தங்கி இருந்த ஹோட்டல்ல உன் பெட் ரூம்'ல பெண்களின் தலை முடி கிடந்துச்சே, அது எப்பிடி...???/////////

  யோவ் மேட்டர இப்படி பாதிலேயே விட்டா எப்படி? வெளக்கமா அடுத்த பதிவுல போடுங்கய்யா........

  ReplyDelete
 52. வெயிட்டிங் ஃபார் குற்றாலம் ஸ்டோரி (வித் அவுட் எனி சென்சாரிங்)

  ReplyDelete
 53. ஹலோ!யார் பேசறது?சிபியா!

  லேப்டாப் மனோ இருக்காருங்களா?

  ReplyDelete
 54. நடத்துங்க நடத்துங் எ,...

  ReplyDelete
 55. கலந்து கொண்டவர்கள் எல்லோரும்
  பதிவர் சந்திப்பு குறித்து பதிவு போடுகிறார்கள்
  அனைத்திலும் உங்கள் பாணி பதிவுதான்
  படங்களுடன் அசத்தலாய் இருக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 56. பதிவர்களின் சந்திப்பும் அதன் தொகுப்பும் மிக அருமை சந்தித்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 57. //ஆமா பெரிய பத்திரிக்கைகாரண மாதிரி நோட்ஸ் எல்லாம் எடுத்தீறேய்யா அந்த நோட்ஸ் எல்லாம் எங்கே....?//

  அது சரி நோட்ஸ் எடுக்குற அளவுக்கு பேச்சாளர்களா மாமா நாமெல்லாம்., அது சும்மா வந்தவங்க பேரு லிஸ்ட்

  ReplyDelete
 58. குற்றாலத்தில் ஆயில் மசாஸ் செய்தீர்களா மாப்பூ அருகில் நம்ம பங்காளி உடுப்பை தூக்கிச்சா? நல்ல விடயங்களை எழுதும் போது நமக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வராதா என்று ஏக்கமாக இருக்கு!

  ReplyDelete
 59. சுவாரசியமாக உணர்வுகளை கலந்து எழுதியவிதம் மிக ரசித்தேன்...

  நேச உறவுகளின் சங்கமம் என்று இந்த சந்திப்பை சொல்லலாம் மனோ...

  எல்லோரின் மனமும் குளிர்ந்த அந்த நாள் நினைவில் என்றும் நிற்கும்.

  ReplyDelete
 60. கார்ல உக்காந்துட்டு எதுக்கு ட்ரான்சிஸ்டர்ல பாட்டு கேக்கற மாதிரி போஸ் தர்றீங்க? என்ன பாட்டு அது?

  ReplyDelete
 61. சிபியோட கூலிங் கிளாசினை சைட் கப்பில் ஆட்டையைப் போட்டு,
  மனோ போட்டோவிற்கு போஸ்ட் கொடுக்கிறாராம்.

  ஹி....ஹி....

  ReplyDelete
 62. எல்லா நிகழ்வுகளையும் தவற விடாது சுவாரஸ்யம் கூட்டி, எழுதியிருக்கிறீங்க.
  அடுத்த சந்திப்பிற்கு நானும் வருவேன் பாஸ்.

  ReplyDelete
 63. Very Nice Anna. Wishes to Everyone. Thanks for Sharing....

  ReplyDelete
 64. குற்றாலத்திற்க்கு எல்லோரையும் ஏன் அழைத்து செல்லவில்லை இந்த பாரபட்சம் ஆகாது. திருநெல்வேலி அல்வாவோ?..... ...ரசிக்க தகுந்த பதிவு!!! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 65. மனோஜி - மச்சினன் கூட வந்தது உங்கள் உதவிக்கு அல்ல ! உங்களை வேவு பார்க்கத்தான்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!