Monday, July 16, 2012

தமிழனை காக்க பிறந்த தலீவன் பெயர் "டெசோ"...!!!???


உலக சரித்திர வரலாற்றில் தன் பெயர் "துரோகி" என்று வந்துவிட்டதே அதை எப்படியாவது, என்ன செய்தாவது மாற்றிவிட துடிக்கும் யானை தலைவன் ச்சே தானை தமிழ் தலைவன் [[அப்பிடிதான் அல்லக்கைங்க சொல்றாங்க]] தான் நடத்தவிருந்த மாநாட்டின் தலைப்பையே மாற்றி, ஈழத்தமிழருக்காக, அவர்கள் மேம்பாட்டுக்கான மாநாடு என்று அறிவித்திருப்பது, மேலும் அவர் பெயர் வரலாற்றில் ஈனத்தனமாக பேச வைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை...!

ஈழத்து தமிழனை காப்பாத்தனும்னா இவர் அவர்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது, இவர் போராட, பேசவேண்டிய நேரம், காலம் எல்லாம் கடந்து, குடி மூழ்கிய பின்னர் மாநாடு நடத்தி கிழிக்கப்போறாராம், ஒரு மனைவி, துணைவியை அருகில் வைத்து கொண்டு, ஒருசட்டி இட்லியை காலையில் முழுங்கிவிட்டு மதியம் வரை உண்ணாவிரதம் இருந்த தலைவன்...... உலக வரலாற்றுலயே இவர் ஒருவர்தான்....!


இந்த மாநாட்டுக்கு வருகிறவர்கள் யாருமே ஈழத்தமிழனை நேசிப்பவர்கள் அல்லவே அல்ல, மாறாக பணத்துக்காக, அதிகாரத்திற்காக  தானை தலைவனை அடிவருடும் அல்லக்கை கூட்டம் என்றே சொல்வேன்...!


ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, தலீவனுக்கு நெஞ்சில் நல்லாவே சூடு பட்டுவிட்டது, கறை பட்டுவிட்டோம் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் என்பது அவர் உளரும் பேச்சுகளில் நன்றாகவே புரிகிறது....!


ஈழ தமிழர்கள் விஷயத்தில் இவர் செய்ததுக்கும், முரளிதரன் என்ற கருணா செய்த துரோகத்துக்கும், காங்கிரஸ் தலைமை செய்த அநியாயத்துக்கும்  ஒரு வித்தியாசமும் இல்லை இல்லை இல்லை என்பதே உண்மை...!


உண்மையான தமிழன், தமிழன் வாழவேண்டும் என நினைப்பவன் யாரும் இந்த "டெசோ" மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதை காலம் சொல்லட்டும், தலீவன் தன் இழந்து போன செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என நினைக்கிறார், இனி அது அவருக்கு கனவாகவே இருக்கும் இதுதான் நிதர்சனம்....!

இந்த மாநாட்டை ஈழத்தமிழன் நலனுக்காக இவர் செய்யவில்லை, மாறாக  தன் சுயநலத்துக்காகவும், கட்சி நாறிப்போனதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கவுமே இந்த மாநாடு, சிறைநிரப்பும் போராட்டம் வெங்காயம் வெந்தயம் எல்லாம்...!!!

தெரியாமதான் கேக்குறேன், ஜனாதிபதி ஆகணும்னு ஆதரவு கேக்க வந்தாங்களே ரெண்டுபேர் டெல்லியில் இருந்து, அவர்களிடம் மரண தண்டனை கைதிகளாக இருக்கும் மூன்று தமிழர்களின் விடுதலை பற்றி ஏதேனும் பேசினாரா இந்த தமிழின காவலன்....? ம்ஹும் மாநாடாம் மாநாடு போங்கய்யா போங்க....!

அடுத்து "அம்மா" இருக்கும், [[தாம்பரம், குன்னூர்]] போகும் இடமெல்லாம் இலங்கை ராணுவம் பயிச்சிக்காக போகுதுன்னு செம பேஜாரா அறிக்கைகள் பறக்குது, ம்ம்ம்ம் எப்பிடியா இருந்தாலும் சிங்களன் இங்கே பயிற்சி எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!

நிறைவாக......

என்னுயிர் தேன்தமிழ் வாழ்க............ வாழவேண்டும், தமிழன் வாழ்க........ வாழவேண்டும், எம்மை நம்பியோர் வாழ்க............. வாழவேண்டும், எம்மை அண்டியோர் வாழ்க........... வாழவேண்டும் இதுவே எம் மறத்தமிழனின் எண்ணமும் ஆசைகளும்...!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!