Friday, February 18, 2011

கலியுகம் தினேஷ் அன்ட் நாஞ்சில் மனோ


 ......................கலியுகம் தினேஷ் அன்ட் நாஞ்சில் மனோ........................
 
சி பி செந்தில் குமாரின்  வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் பதிவர் சந்திப்பை பற்றி சொல்லலாம்னு
இருக்கேன். இங்கே பஹ்ரைன் கலவர காடாய் கிடக்கிறது. அதன் காரணம் நாம் எல்லோரும் அறிந்ததே புதன் அன்று அங்காங்கே கலவரம் நடந்து கொண்டிருந்த வேளையில், நண்பன் தினேஷிடம் [கலியுகம்]இருந்து போன். அண்ணே இங்கே ஒரு வேலையாய் வந்தேன் அப்பிடியே உங்களையும் பார்த்துட்டு போகலாமுன்னு வந்துட்டு இருக்கேன்னு சொன்னார். நான் யோவ் இப்போ அங்கே [அவர் ஏரியாவில்] கலவரம் நடந்துட்டு இருக்கும் போது வெளியே ஏன் வந்தீர் என லேசா கடிந்து கொண்டு சரி வாங்க என்றேன். வந்தே விட்டார். வந்து நலம் விசாரித்து விட்டு போட்டோவும் எடுத்து கொண்டு, கொஞ்ச நேரம் அளவளாவிட்டு, தண்ணி மாத்திரம்தான் குடிக்க கொடுத்தேன் நான் கொஞ்சம் கஞ்சூஸ் [[ஹி ஹி ஹி]] அப்பிடி இப்பிடி பதிவர்களை பற்றி பேசினோம். தினேஷுக்கு பெண் பார்க்கும் படலம் தீவிரமா நடந்துட்டு இருக்கு அதை தலைமை ஏற்று  நடத்தி கொண்டிருப்பவர் நண்பன் இதயசாரல் அவர்கள் [[நண்பன்னா சும்மாவா]] அப்புறமா நாளை வியாழன் என்பதால் வெள்ளி அவருக்கு லீவு என்பதாலும் வியாழன் நாம் மீட் பண்ணலாம் என முடிவு செய்தோம். எனக்கு ஒரு சந்தேகம் இவர் வேலை விஷயமாக வெளியே வரவில்லை என்னை பார்க்கவே வந்துருக்கார் [[நண்பேண்டா]]
அடுத்த நாள் ஏழரை மணிக்கே வந்து விட்டார். வந்து தோழி மதுரை பொண்ணோடு கொஞ்சம் சாட் செய்து பேசி விட்டு, இதயசாறலுக்கு போன் செய்தார். இதயசாரல்   செம டோஸ் விட்டார் எனக்கும் தினேஷுக்கும். அங்கே கலவரம் பெருசா நடந்துட்டு இருக்கும் போது ஏன்யா அங்கே இங்கே சுத்திட்டு இருக்கீங்கன்னு அவரை சமாதான படுத்திட்டு [[ஆத்தீ]]  எனக்கு டியூட்டி முடியும் வரை என்னோடு இருந்து விட்டு கூடவே என்னோடு ரூமுக்கு வந்தார். கலவரம் பெரிதாக நடப்பதால் அவரை ராத்திரி என்னோடு தங்கி காலையில் போக சொன்னேன். இரவு உணவு ஆர்டர் கொடுத்து விட்டு கோல்ட் ஸ்டோர்ல [[மளிகை கடை]] அரிசி வகைகள் ஆர்டர் பண்ணினோம். ஆர்டர் வந்ததில் ஒரு சாமான் வரவில்லை என்ன என்று கேட்கும் போது டெலிவரி பாய் சொன்னார், ஒரு கடையிலும் காய்கறிகள் கிடைக்கவில்லை என்று. காரணம் கலவரம் காரணமாக மக்கள் மொத்த மொத்தமாக வாங்கி ஸ்டாக்செய்ததுதான்.
பின்பு சாப்பாடு வந்தது. சிக்கன் சில்லி, மஸ்ரூம் சில்லி, பரோட்டா.....சாப்பிடுமுன் தினேஷுக்கு விக்கல் வந்து விட்டது. விக்கல்னா விக்கல் நிக்காத விக்கல்!!! என்ன மக்கா ஆச்சுன்னு கேட்டா சொல்றார் வீட்ல நினைக்கிறாங்க போலன்னு [[அப்பிடியா]] விக்கல் நிக்கவே இல்லை சுடு தண்ணி காய்ச்சி [நமக்கு தெரிந்த சமையல் அதுதான் ஹே ஹே ஹே]] குடுத்தேன் நிக்கவே இல்லை. அப்புறம் என் கைவசம் இருந்த என் அப்பா எனக்கு கொடுத்த டிரீட்மென்ட் நியாபகம் வர....அந்த சூப்பர் ஐடியாவை யூஸ் செய்தேன் பயபுள்ள ஷாக் ஆகிட்டாரு. விக்கலும் உடனே  நின்னுருச்சி.....ஹா ஹா ஹா என்ன டிரீட்மென்ட்ன்னு   அவருகிட்டே கேட்டுகோங்க.....சாப்பிட்டு தூங்கிட்டு காலையிலே கிளம்பி போனார். இது ஒரு புது அனுபவம் நெகிழ்ச்சியா இருக்கு.
அடுத்து என் வாழ்க்கையில் முதன் முதலாக மறக்க முடியாத நாள் நேற்று. அமெரிக்காவில் இருந்து போன்!!!!! ஒபாமாகிட்டே இருந்து  அடிக்கடி போன் வந்தாலும் [[உனக்கே ஓவரா தெரியலை மனோ] என் தோழி, என்னை உரிமையோடு அங்கிள் என்று அழைக்கும் நிவேதா.....!!!! எனக்கு ஆச்சர்யம்!!!! அவர்கள் உரிமையோடு நான் பாதுகாப்பா இருக்கேனான்னு கேட்டு விசாரித்தார்கள் பத்திரமாக இருங்கள் என அட்வைஸ் சொன்னார்கள் என்னோடு எப்போதும் பேஸ்புக்'கில் தொடர்பில் இருங்கள் என்று சொல்லி அன்பை பொழிந்தார்கள். இன்று எனக்கு அவர்களுக்கு போன் செய்ய வேண்டும் என ஆவலாய் இருந்தது ஆனால் தப்பாக நினைச்சிர  கூடாதுன்னு அடக்கி கொண்டேன். வலை உலகம் நண்பர்கள் என்று சொல்வதை விட என் சொந்தங்கள் என்று சொன்னால்தான் தகும். அதுவே பொருந்தும் இல்லையா.....
 
டிஸ்கி : சி பி செந்தில், உங்களோடு பேச இதயசாரல் முயற்சி செய்கிறார்.போனை யாரும் எடுக்க வில்லை என சொன்னார் ஆகவே அவர் நம்பரை நான் உங்களுக்கு மெயில் பண்ணுறேன் பேசுங்க.....
 
டிஸ்கி : இதயசாரல், செந்திலுக்கு மிரட்டல் அதிகமாக [[சினிமாவை இப்பிடி குண்டக்க மண்டக்க விமர்சித்தால் ஹா ஹா ஹா]] வருவதால் அவரே உங்களுக்கு போன் செய்வார்.
 
டிஸ்கி : என் உயிரில் கலந்து அன்பை ஆர்ட்டீசியன் ஊற்றை போல பொழியும் என் இனிய நண்பர்களே உங்களை வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்

117 comments:

 1. >>>டிஸ்கி : சி பி செந்தில், உங்களோடு பேச இதயசாரல் முயற்சி செய்கிறார்.போனை யாரும் எடுக்க வில்லை என சொன்னார் ஆகவே அவர் நம்பரை நான் உங்களுக்கு மெயில் பண்ணுறேன் பேசுங்க.....

  ஏற்கனவே சொன்னபடி எனக்கு ஃபோன் செய்பவர்கள் முதலைல் மெசேஜ் அனுப்பி விட்டு ஃபோன் பண்ணவும்.. ஹி ஹி ஆளாளுக்கு மிரட்டுவதால் புது நெம்பர் வந்தால் எடுப்பதில்லை..(இப்படிக்கு வீட்டுல எலி வெளிலயும் எலி)

  ReplyDelete
 2. கலியுகம் தினேஷ் அன்ட் நாஞ்சில் மனோ.......

  நல்ல நேரம் சொன்னேங்க.. நான் கூட ரெண்டு வில்லன் தான் உக்காந்து இருக்காங்களோன்னு நினச்சுட்டேன்..

  ReplyDelete
 3. யோவ், தினேஷ்.. என்னய்யா எம் ஜி ஆர் கணக்கா இருக்கிங்க.. அடடா..

  ReplyDelete
 4. nalla sandhippu ...
  vaazthukkal sir...
  konjam paarthu irunga rendu perum ...

  ReplyDelete
 5. தினேஷ் பார்த்தா உங்க பாஸ் மாதிரி இருக்கரே..

  ReplyDelete
 6. வந்து நலம் விசாரித்து விட்டு போட்டோவும் எடுத்து கொண்டு, கொஞ்ச நேரம் அளவளாவிட்டு, தண்ணி மாத்திரம்தான் குடிக்க கொடுத்தேன் நான் கொஞ்சம் கஞ்சூஸ் [[ஹி ஹி ஹி]] அப்பிடி இப்பிடி பதிவர்களை பற்றி பேசினோம்//

  என்னக்கி தான் உண்மைய சொல்லி இருக்கீங்க.. ஹிஹி

  ReplyDelete
 7. நீங்க பாசத்துல முதல் ஆளு மனோ..இப்படிஎல்லாம் கஞ்சூஸ் ன்னு சொல்ல படாது..

  ReplyDelete
 8. //சி.பி.செந்தில்குமார் said...
  முத வெட்டு//

  செம வெட்டு...

  ReplyDelete
 9. அந்த சூப்பர் ஐடியாவை யூஸ் செய்தேன் பயபுள்ள ஷாக் ஆகிட்டாரு. விக்கலும் உடனே நின்னுருச்சி.....ஹா ஹா ஹா என்ன டிரீட்மென்ட்ன்னு அவருகிட்டே கேட்டுகோங்க.//

  டாம்னு முதுகுல ஒரு அடி குடுத்து இருப்பீங்களே..

  ReplyDelete
 10. //அரசன் said...
  naan thaan first//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 11. //சி.பி.செந்தில்குமார் said...
  >>>டிஸ்கி : சி பி செந்தில், உங்களோடு பேச இதயசாரல் முயற்சி செய்கிறார்.போனை யாரும் எடுக்க வில்லை என சொன்னார் ஆகவே அவர் நம்பரை நான் உங்களுக்கு மெயில் பண்ணுறேன் பேசுங்க.....

  ஏற்கனவே சொன்னபடி எனக்கு ஃபோன் செய்பவர்கள் முதலைல் மெசேஜ் அனுப்பி விட்டு ஃபோன் பண்ணவும்.. ஹி ஹி ஆளாளுக்கு மிரட்டுவதால் புது நெம்பர் வந்தால் எடுப்பதில்லை..(இப்படிக்கு வீட்டுல எலி வெளிலயும் எலி)//

  ரைட்டு....

  ReplyDelete
 12. //மதுரை பொண்ணு said...
  கலியுகம் தினேஷ் அன்ட் நாஞ்சில் மனோ.......

  நல்ல நேரம் சொன்னேங்க.. நான் கூட ரெண்டு வில்லன் தான் உக்காந்து இருக்காங்களோன்னு நினச்சுட்டேன்..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 13. //சி.பி.செந்தில்குமார் said...
  யோவ், தினேஷ்.. என்னய்யா எம் ஜி ஆர் கணக்கா இருக்கிங்க.. அடடா..//

  கேட்டா அரபி ஸ்டைல்னு சொல்றாரப்பூ....

  ReplyDelete
 14. //அரசன் said...
  nalla sandhippu ...
  vaazthukkal sir...
  konjam paarthu irunga rendu perum ...//

  நன்றி அரசன்...

  ReplyDelete
 15. ஒரு நாள் இரண்டு லட்டு தின்ன ஆசையா..

  வந்தாச்சி..

  படிச்சாச்சி..

  கவனிக்க வேண்டிதை கவனிச்சாச்சி..

  அப்படியே ஊரப்பக்கம் கிளம்பியாச்சி..

  ReplyDelete
 16. //சி.பி.செந்தில்குமார் said...
  தினேஷ் பார்த்தா உங்க பாஸ் மாதிரி இருக்கரே.. //

  எப்பவும் நீங்கல்லாம் எனக்கு பாஸ்'தான்....

  ReplyDelete
 17. சி.பி.செந்தில்குமார் said...
  முத வெட்டு

  பாஸ் எதுக்கு அருவாளை எடுக்குறீங்க .........

  ReplyDelete
 18. யோவ் பஹ்ரைன்ல இப்போ பரவால்லன்னு சொனாங்களே? (போலீஸ் எல்லாரையும் அடிச்சி விரட்டீட்டாங்களாமே?)

  ReplyDelete
 19. //சி.பி.செந்தில்குமார் said...
  பில் யார் கட்னது?//

  கிண்டல் பண்ணாதீங்க பாஸ்....

  ReplyDelete
 20. உங்க ரெண்டுபேரையும் பாத்தா நீங்க ரெண்டு பேருமே போயி கலவரத்த அடக்கிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன்....!

  ReplyDelete
 21. //மதுரை பொண்ணு said...
  வந்து நலம் விசாரித்து விட்டு போட்டோவும் எடுத்து கொண்டு, கொஞ்ச நேரம் அளவளாவிட்டு, தண்ணி மாத்திரம்தான் குடிக்க கொடுத்தேன் நான் கொஞ்சம் கஞ்சூஸ் [[ஹி ஹி ஹி]] அப்பிடி இப்பிடி பதிவர்களை பற்றி பேசினோம்//

  என்னக்கி தான் உண்மைய சொல்லி இருக்கீங்க.. ஹிஹி//

  அட பாவி மக்கா....

  ReplyDelete
 22. மதுரை பொண்ணு said...
  கலியுகம் தினேஷ் அன்ட் நாஞ்சில் மனோ.......

  நல்ல நேரம் சொன்னேங்க.. நான் கூட ரெண்டு வில்லன் தான் உக்காந்து இருக்காங்களோன்னு நினச்சுட்டேன்..///

  என்னது வில்லனா ரெண்டுபேருமே காமடிபீசுங்க சகோ ....

  ReplyDelete
 23. அப்புறம் சாப்பாரு மெனு எல்லாம் கரக்ட்டா சொல்லிட்டு முக்கியமானதை மட்டும் விட்டுட்டா எப்பிடி?

  ReplyDelete
 24. //மதுரை பொண்ணு said...
  நீங்க பாசத்துல முதல் ஆளு மனோ..இப்படிஎல்லாம் கஞ்சூஸ் ன்னு சொல்ல படாது..//

  ஹைய்யோ ஹைய்யோ.....

  ReplyDelete
 25. //////கொஞ்ச நேரம் அளவளாவிட்டு, தண்ணி மாத்திரம்தான் குடிக்க கொடுத்தேன் நான் கொஞ்சம் கஞ்சூஸ் [[ஹி ஹி ஹி]] அப்பிடி இப்பிடி பதிவர்களை பற்றி பேசினோம்.//////

  கஞ்சூஸ்னா, ஏன் ஒரு பெக் மட்டும்தான் கொடுத்தீங்களா? பரவால்ல, தினேஷ் புல்லா அடிச்சிட்டு கெளம்பியே இருப்பாரு.....

  ReplyDelete
 26. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நாங்களும் வந்துட்டம்ல.....//

  வந்து குந்துங்க எசமான் குந்துங்க....

  ReplyDelete
 27. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  உங்க ரெண்டுபேரையும் பாத்தா நீங்க ரெண்டு பேருமே போயி கலவரத்த அடக்கிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன்....!

  வணக்கம் கவுண்டரே கண்டிப்பா நாளைக்கு பேச்சுவார்த்தைக்கு போலாம்னு இருக்கோம் இருந்தாலும் நீங்க வரமா நாங்க யாரும் நாட்டாமை பன்னமாட்டோம்னு சொல்லிட்டோம்

  ReplyDelete
 28. //தினேஷ்குமார் said...
  சி.பி.செந்தில்குமார் said...
  முத வெட்டு

  பாஸ் எதுக்கு அருவாளை எடுக்குறீங்க .........//

  என்னாது அருவாளா எங்கே எங்கே.....

  ReplyDelete
 29. /////////தினேஷ்குமார் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  உங்க ரெண்டுபேரையும் பாத்தா நீங்க ரெண்டு பேருமே போயி கலவரத்த அடக்கிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன்....!

  வணக்கம் கவுண்டரே கண்டிப்பா நாளைக்கு பேச்சுவார்த்தைக்கு போலாம்னு இருக்கோம் இருந்தாலும் நீங்க வரமா நாங்க யாரும் நாட்டாமை பன்னமாட்டோம்னு சொல்லிட்டோம்/////

  என்னது,இப்பிடி வாட்டசாட்டமா, ஓங்குதாங்கா இருந்துக்கிட்டு பேச்சு வார்த்தையா.......? ஒரு ஆஃப்பைக் கவுத்திட்டு இன்னேரம் கெளம்பி இருக்க வேணாம், கலவரத்தை பைசல் பண்ண......?

  ReplyDelete
 30. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் பஹ்ரைன்ல இப்போ பரவால்லன்னு சொனாங்களே? (போலீஸ் எல்லாரையும் அடிச்சி விரட்டீட்டாங்களாமே?)//


  முழுக்க மிலிட்டரி கண்ட்ரோல்'ல வந்துருச்சி மக்கா ஆனாலும் பதட்டமாதான் இருக்கு...

  ReplyDelete
 31. ///////அப்புறம் என் கைவசம் இருந்த என் அப்பா எனக்கு கொடுத்த டிரீட்மென்ட் நியாபகம் வர....அந்த சூப்பர் ஐடியாவை யூஸ் செய்தேன் பயபுள்ள ஷாக் ஆகிட்டாரு. விக்கலும் உடனே நின்னுருச்சி.....ஹா ஹா ஹா என்ன டிரீட்மென்ட்ன்னு அவருகிட்டே கேட்டுகோங்க.....///////////

  அது என்னய்யா அப்பிடி ஒரு ட்ரீட்மெண்ட்டு? ஒருவேள ஒட்டகச்சாணிய கரைச்சி மூஞ்சில அடிச்சிருப்பாரோ?

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  உங்க ரெண்டுபேரையும் பாத்தா நீங்க ரெண்டு பேருமே போயி கலவரத்த அடக்கிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன்....!//

  யோவ நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா உமக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 33. ////////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் பஹ்ரைன்ல இப்போ பரவால்லன்னு சொனாங்களே? (போலீஸ் எல்லாரையும் அடிச்சி விரட்டீட்டாங்களாமே?)//


  முழுக்க மிலிட்டரி கண்ட்ரோல்'ல வந்துருச்சி மக்கா ஆனாலும் பதட்டமாதான் இருக்கு...////////

  ஆமா, நேத்து நைட்டு நியூஸ்ல பாத்தேன், புல்லா ஆர்மி டேங்குகளா நிக்குது, பட் ஆஃபீசஸ்லாம் ஒர்க் ஆகுதுல்ல?

  ReplyDelete
 34. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////கொஞ்ச நேரம் அளவளாவிட்டு, தண்ணி மாத்திரம்தான் குடிக்க கொடுத்தேன் நான் கொஞ்சம் கஞ்சூஸ் [[ஹி ஹி ஹி]] அப்பிடி இப்பிடி பதிவர்களை பற்றி பேசினோம்.//////

  கஞ்சூஸ்னா, ஏன் ஒரு பெக் மட்டும்தான் கொடுத்தீங்களா? பரவால்ல, தினேஷ் புல்லா அடிச்சிட்டு கெளம்பியே இருப்பாரு.....


  கவுண்டரே நாந்தேன் தண்ணின்னா புல்லா குடிப்பேனே ஐயம் எ வாட்டர் பாய்... ஐயம் எ வாட்டர் பாய்... நோ பார் குவாட்டர் பாய்....

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்புறம் சாப்பாரு மெனு எல்லாம் கரக்ட்டா சொல்லிட்டு முக்கியமானதை மட்டும் விட்டுட்டா எப்பிடி?//

  எதோ பக்கார்டி,பிராண்டி எல்லாம் கடை விரிச்சி வச்ச மாதிரி சொல்லுதீரு ஹா ஹா ஹா...

  ReplyDelete
 36. ////வலை உலகம் நண்பர்கள் என்று சொல்வதை விட என் சொந்தங்கள் என்று சொன்னால்தான் தகும். அதுவே பொருந்தும் இல்லையா....///////

  உண்மைதான் மக்கா?

  ReplyDelete
 37. உண்மைதான் மக்கா....! தப்பா கேள்விக்குறி போட்டுட்டேன்................:(

  ReplyDelete
 38. February 18, 2011 6:11 AM
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் பஹ்ரைன்ல இப்போ பரவால்லன்னு சொனாங்களே? (போலீஸ் எல்லாரையும் அடிச்சி விரட்டீட்டாங்களாமே?)//


  முழுக்க மிலிட்டரி கண்ட்ரோல்'ல வந்துருச்சி மக்கா ஆனாலும் பதட்டமாதான் இருக்கு...////////

  ஆமா, நேத்து நைட்டு நியூஸ்ல பாத்தேன், புல்லா ஆர்மி டேங்குகளா நிக்குது, பட் ஆஃபீசஸ்லாம் ஒர்க் ஆகுதுல்ல?

  எதுவாயிருந்தாலும் நாளைக்குத்தான் தெரியும் அப்புறம் போன் கால்ஸ் எல்லாம் ரெகார்ட் ஆகுது கவுண்டரே

  ReplyDelete
 39. //கஞ்சூஸ்னா, ஏன் ஒரு பெக் மட்டும்தான் கொடுத்தீங்களா? பரவால்ல, தினேஷ் புல்லா அடிச்சிட்டு கெளம்பியே இருப்பாரு.....//

  ஃபுல்லா ஒரு கப் டீ குடிச்சிட்டுதான் போனார்....

  ReplyDelete
 40. ///////டிஸ்கி : இதயசாரல், செந்திலுக்கு மிரட்டல் அதிகமாக [[சினிமாவை இப்பிடி குண்டக்க மண்டக்க விமர்சித்தால் ஹா ஹா ஹா]] வருவதால் அவரே உங்களுக்கு போன் செய்வார்.///////

  இன்னும் போன்லதான் மெரட்டுறானுங்களா? டேய்ய்ய் யார்ராவன் இப்பிடி பண்றவன்? தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கைய வெச்சிப் பாருங்கடா......!

  ReplyDelete
 41. //என்னது,இப்பிடி வாட்டசாட்டமா, ஓங்குதாங்கா இருந்துக்கிட்டு பேச்சு வார்த்தையா.......? ஒரு ஆஃப்பைக் கவுத்திட்டு இன்னேரம் கெளம்பி இருக்க வேணாம், கலவரத்தை பைசல் பண்ண......?//

  ரப்பர் புல்லட் திங்காம விட மாட்டீரோ மக்கா...

  ReplyDelete
 42. ///////தினேஷ்குமார் said...
  February 18, 2011 6:11 AM
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் பஹ்ரைன்ல இப்போ பரவால்லன்னு சொனாங்களே? (போலீஸ் எல்லாரையும் அடிச்சி விரட்டீட்டாங்களாமே?)//


  முழுக்க மிலிட்டரி கண்ட்ரோல்'ல வந்துருச்சி மக்கா ஆனாலும் பதட்டமாதான் இருக்கு...////////

  ஆமா, நேத்து நைட்டு நியூஸ்ல பாத்தேன், புல்லா ஆர்மி டேங்குகளா நிக்குது, பட் ஆஃபீசஸ்லாம் ஒர்க் ஆகுதுல்ல?

  எதுவாயிருந்தாலும் நாளைக்குத்தான் தெரியும் அப்புறம் போன் கால்ஸ் எல்லாம் ரெகார்ட் ஆகுது கவுண்டரே////

  பார்ப்போம், இங்கேயும் கொஞ்சம் போலீஸ் கெடுபிடி அதிகமாயிருக்குன்னு பசங்க சொல்றாங்க (2 நாளா வெளிய எங்கேயும் போகல.........)

  ReplyDelete
 43. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கவுண்டரே உங்களுக்கு அரபி தெரியுமில்ல நம்ம கடைல ஒரு நாலுவார்த்த போட்டிருக்கேன் அதை இந்த அரபி பயலுகளுக்கு டிரான்ஷ்லட் பண்ணனும் என்ன சொல்றீக....

  ReplyDelete
 44. //அது என்னய்யா அப்பிடி ஒரு ட்ரீட்மெண்ட்டு? ஒருவேள ஒட்டகச்சாணிய கரைச்சி மூஞ்சில அடிச்சிருப்பாரோ?//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 45. ///////அப்புறமா நாளை வியாழன் என்பதால் வெள்ளி அவருக்கு லீவு என்பதாலும் வியாழன் நாம் மீட் பண்ணலாம் என முடிவு செய்தோம். எனக்கு ஒரு சந்தேகம் இவர் வேலை விஷயமாக வெளியே வரவில்லை என்னை பார்க்கவே வந்துருக்கார் [[நண்பேண்டா///////

  நண்பேண்டா..................... !!!

  ReplyDelete
 46. //////தினேஷ்குமார் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கவுண்டரே உங்களுக்கு அரபி தெரியுமில்ல நம்ம கடைல ஒரு நாலுவார்த்த போட்டிருக்கேன் அதை இந்த அரபி பயலுகளுக்கு டிரான்ஷ்லட் பண்ணனும் என்ன சொல்றீக....//////////

  என்னைய ஊருக்கு முழுசா போய் சேரவிடமாட்டிங்க போல இருக்கே?

  ReplyDelete
 47. //ஆமா, நேத்து நைட்டு நியூஸ்ல பாத்தேன், புல்லா ஆர்மி டேங்குகளா நிக்குது, பட் ஆஃபீசஸ்லாம் ஒர்க் ஆகுதுல்ல?//


  எல்லாம் சவுதில இருந்து வந்த டேங்குகள்....

  ReplyDelete
 48. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////வலை உலகம் நண்பர்கள் என்று சொல்வதை விட என் சொந்தங்கள் என்று சொன்னால்தான் தகும். அதுவே பொருந்தும் இல்லையா....///////

  உண்மைதான் மக்கா?//

  டச்சிங் டச்சிங் மக்கா....

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////தினேஷ்குமார் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கவுண்டரே உங்களுக்கு அரபி தெரியுமில்ல நம்ம கடைல ஒரு நாலுவார்த்த போட்டிருக்கேன் அதை இந்த அரபி பயலுகளுக்கு டிரான்ஷ்லட் பண்ணனும் என்ன சொல்றீக....//////////

  என்னைய ஊருக்கு முழுசா போய் சேரவிடமாட்டிங்க போல இருக்கே?

  கவுண்டரே ஊருக்கே தீர்ப்பு சொல்ற உங்களுக்கு இதுவெல்லாம் சகஜமில்லையா..... வாங்க

  ReplyDelete
 50. //இன்னும் போன்லதான் மெரட்டுறானுங்களா? டேய்ய்ய் யார்ராவன் இப்பிடி பண்றவன்? தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கைய வெச்சிப் பாருங்கடா......!//

  இப்பிடி சவுண்டு விட்டே ஏகப்பட்ட விழுப்புண்......அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 51. //பார்ப்போம், இங்கேயும் கொஞ்சம் போலீஸ் கெடுபிடி அதிகமாயிருக்குன்னு பசங்க சொல்றாங்க (2 நாளா வெளிய எங்கேயும் போகல.........)//

  என்ன மக்கா புது தகவலா சொல்லுதீரு....

  ReplyDelete
 52. //என்னைய ஊருக்கு முழுசா போய் சேரவிடமாட்டிங்க போல இருக்கே?//

  நாங்க ரெண்டு பேரு பூதம் மாதிரி இருக்குறோம் பயப்படாதீங்க...

  ReplyDelete
 53. வலையுலகம் வானுயர
  படைசூழந்து பாரெல்லாம்
  பவனிவர சொந்தமில்லா
  மண்ணுலகும் சொர்கமாகும்
  காலமிதோ ........

  ReplyDelete
 54. நல்ல பதிவர் சந்திப்பு :-)

  ReplyDelete
 55. முரட்டுதனமான ஆளா இருப்பாரோ.!!!

  இப்பவே கண்ண கட்டுதே.!!

  பாஸ் பதிவர்களை பத்தி பேசுனதா சொன்னீங்களே சி.பி.,யை பத்தி என்ன பேசுனீங்க.???(ஒருவேல குண்டக்க மண்டக்கவா இருக்குமோ.???)

  பாஸ் நானும் கேக்குறன் நல்லா இருக்கீங்கள்ள.??? ஒரு ப்ராப்ளமும் இல்லையே.!! அப்படி ஏதாச்சும் ப்ராப்ளம் ஆகி உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தா உடனே போட்டோ எடுத்து புது பதிவு போடவும்(வெயிட்டிங்...)

  சி.பி.க்கு போன் பண்ணனும்னா மெசேஜ் பண்ணணுமா.??? அது என்னமோ தெரியல பாஸ் என்னுடையதுல காலும் போகல மெசேஜூம் போகல.. நானும் ஒரு ரெண்டு மூணு மாசமா சி.பி.க்கு போன் பண்ண பாக்குறன் ஆனா ஏதோ ரீசார்ஜ் பண்ணினாதான் பேசமுடியும் மெசேஜ் அனுப்பமுடியும்னு சொல்றாங்க.. இதுக்கு வேற வழி இருக்கா.. சி.பி., மற்றும் மனோவிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 56. தம்பி கூர்மதியன் said...
  முரட்டுதனமான ஆளா இருப்பாரோ.!!!

  இப்பவே கண்ண கட்டுதே.!!

  பாஸ் பதிவர்களை பத்தி பேசுனதா சொன்னீங்களே சி.பி.,யை பத்தி என்ன பேசுனீங்க.???(ஒருவேல குண்டக்க மண்டக்கவா இருக்குமோ.???)

  பாஸ் நானும் கேக்குறன் நல்லா இருக்கீங்கள்ள.??? ஒரு ப்ராப்ளமும் இல்லையே.!! அப்படி ஏதாச்சும் ப்ராப்ளம் ஆகி உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தா உடனே போட்டோ எடுத்து புது பதிவு போடவும்(வெயிட்டிங்...)

  பாக்குரதுக்குத்தான் முரட்டுத்தனமா இருக்கும் முகம் மத்தப்படி பாசக்கார பயபுல்லைங்கங்கோ ....

  எல்லாரும் நல்லாருக்கும் நண்பரே....

  ReplyDelete
 57. அன்பு உள்ளங்களுக்கு தமிழ்க்காதலனின் வணக்கம். உங்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் சற்று கடினமாய் பேசிவிட்டேனோ..?! தம்பியை கொஞ்சம் பத்திரமாப் பார்த்துக்கோங்க.. நீங்களும் அப்படியே.. நண்பர் சி.பி.செந்தில் ’எலி’ங்கிற விசயம் தெரியாமப் போச்சே... அவரை விரைவில் பிடிக்கிறேன்., நல்லாப் போகுது உங்க சந்திப்பு... ராம்சாமி அண்ணாரை விசாரித்ததாக சொல்லவும்.

  ReplyDelete
 58. //நான் கூட ரெண்டு வில்லன் தான் உக்காந்து இருக்காங்களோன்னு நினச்சுட்டேன்.//

  ReplyDelete
 59. //பாக்குரதுக்குத்தான் முரட்டுத்தனமா இருக்கும் முகம் மத்தப்படி பாசக்கார பயபுல்லைங்கங்கோ ..//

  ReplyDelete
 60. //இரவு வானம் said...
  நல்ல பதிவர் சந்திப்பு :-)//  நன்றி மக்கா....

  ReplyDelete
 61. //சி.பி.க்கு போன் பண்ணனும்னா மெசேஜ் பண்ணணுமா.??? அது என்னமோ தெரியல பாஸ் என்னுடையதுல காலும் போகல மெசேஜூம் போகல.. நானும் ஒரு ரெண்டு மூணு மாசமா சி.பி.க்கு போன் பண்ண பாக்குறன் ஆனா ஏதோ ரீசார்ஜ் பண்ணினாதான் பேசமுடியும் மெசேஜ் அனுப்பமுடியும்னு சொல்றாங்க.. இதுக்கு வேற வழி இருக்கா.. சி.பி., மற்றும் மனோவிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்..//


  கால் போகலைன்னா கையை உட்டு முயற்சி பண்ணுங்க பாஸ் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 62. //தமிழ்க் காதலன். said...
  அன்பு உள்ளங்களுக்கு தமிழ்க்காதலனின் வணக்கம். உங்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் சற்று கடினமாய் பேசிவிட்டேனோ..?! தம்பியை கொஞ்சம் பத்திரமாப் பார்த்துக்கோங்க.. நீங்களும் அப்படியே.. நண்பர் சி.பி.செந்தில் ’எலி’ங்கிற விசயம் தெரியாமப் போச்சே... அவரை விரைவில் பிடிக்கிறேன்., நல்லாப் போகுது உங்க சந்திப்பு... ராம்சாமி அண்ணாரை விசாரித்ததாக சொல்லவும்//


  உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு மக்கா.......
  சி பி செந்தில் சொல்லி இப்பதான் தெரியுது அவர் ஒரு எலி'ன்னு ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 63. //பாரத்... பாரதி... said...
  //நான் கூட ரெண்டு வில்லன் தான் உக்காந்து இருக்காங்களோன்னு நினச்சுட்டேன்.//


  போங்க பாஸ் நான் வீட்டுக்கு போறேன் அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 64. //பாக்குரதுக்குத்தான் முரட்டுத்தனமா இருக்கும் முகம் மத்தப்படி பாசக்கார பயபுல்லைங்கங்கோ ..//

  ஆமாய்யா நம்புங்க....

  ReplyDelete
 65. நெகிழ வைக்கும் பதிவு... போட்டோஸ் சூப்பர்!
  பத்திரமாக இருங்க .... இந்த அளவுக்கு சீரியஸ் கலவரம் என்று நினைக்கவில்லை.

  ReplyDelete
 66. //Chitra said...
  நெகிழ வைக்கும் பதிவு... போட்டோஸ் சூப்பர்!
  பத்திரமாக இருங்க .... இந்த அளவுக்கு சீரியஸ் கலவரம் என்று நினைக்கவில்லை//


  மிகவும் நன்றி சித்ரா....

  ReplyDelete
 67. //கால் போகலைன்னா கையை உட்டு முயற்சி பண்ணுங்க பாஸ் ஹா ஹா ஹா ஹா...//

  ஐ சோக்.. ஆஹா சோக்.. சோக் அடிக்கிறாராம்..

  ReplyDelete
 68. //பாக்குரதுக்குத்தான் முரட்டுத்தனமா இருக்கும் முகம் மத்தப்படி பாசக்கார பயபுல்லைங்கங்கோ ....

  எல்லாரும் நல்லாருக்கும் நண்பரே..//

  நான் பாக்குறதுக்கு சாஃப்ட் பொங்குனன்..!!!! டெரர்

  ReplyDelete
 69. தம்பி கூர்மதியன் said...
  //பாக்குரதுக்குத்தான் முரட்டுத்தனமா இருக்கும் முகம் மத்தப்படி பாசக்கார பயபுல்லைங்கங்கோ ....

  எல்லாரும் நல்லாருக்கும் நண்பரே..//

  நான் பாக்குறதுக்கு சாஃப்ட் பொங்குனன்..!!!! டெரர்


  ***பாசத்தோட டெரர் உருவை பார்த்திருக்கீங்களா மக்கா பாசம்னா குடும்ப பாசமில்ல மக்கா பகைவரையும் பாசத்தோடு அணை அதில் மீண்டுவருவானேன் அகங்கொல் அப்ப தெரியும் டெரரோட முழுமுகம்***

  ReplyDelete
 70. மக்கா நம்ம மன்னரிடம் சொல்லி , ராணுவத்தை அனுப்பி வச்சேன வந்தாங்களா?

  ReplyDelete
 71. பாருங்கப்பா இந்த புல்லைங்களுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்........எவ்ளோ சமத்தா என்னமோ மாரியம்மா கோயில்ல கூழுத்துரதுக்கு பைனான்ஸ் பண்ண பார்ட்டிங்க மாதிரி போஸு ஹி ஹி!

  நோ நோ பேட் வார்ட்ஸ்!

  ReplyDelete
 72. நான் எப்பவுமே லேட்டு.. என்ன தலைவரே நான் வீட்டிற்கு போனபிறகே பதிவு போடரீங்க.. இருந்தாலும் வந்திட்டோமில்ல...

  ReplyDelete
 73. //டாம்னு முதுகுல ஒரு அடி குடுத்து இருப்பீங்களே.//

  இல்ல தலையில நங்-க்குன்னு ஒரு குட்டு வைத்திருப்பாருன்னு நினைக்கிறேன் :-)

  ReplyDelete
 74. செந்தில் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும் போல. நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கவே மாட்டேங்கிறாரு.. அண்ணே ரொம்ப பயப்படுறாரு

  கவிதை காதலன்

  ReplyDelete
 75. அன்புக்கு அன்னை தெரசா , அறிவுக்கு அப்துல் கலாம், சிரிப்புக்கு சார்லி சாப்ளின் சண்டைக்கு ஜாக்கி சான் ...............
  தொப்பிக்கு எம்.ஜி.ஆர். , மஞ்சள் துண்டிற்கு கலைஞ்சர் , கூலிங் க்ளாஸ்க்கு தமிழ்வாணன் ..................
  அதேமாதிரி அந்த அழுக்கு டை க்கு அண்ணன் நாஞ்சில் மனோ தான் ......................

  ReplyDelete
 76. இப்போ உங்க பூமி எப்படி இருக்கு? அருமையான சந்திப்பு. வாழ்த்துக்கள் இருவருக்கும், வகையாய் மாட்டாமல் இருந்ததற்கு.

  ReplyDelete
 77. // இளம் தூயவன் said...
  மக்கா நம்ம மன்னரிடம் சொல்லி , ராணுவத்தை அனுப்பி வச்சேன வந்தாங்களா? //


  ஒ அப்பிடியா சொல்லவே இல்ல....
  இருந்தாலும் மக்கா எங்களை ரப்பர் புல்லட் திங்காம விடமாட்டீங்க போல....

  ReplyDelete
 78. //விக்கி உலகம் said...
  பாருங்கப்பா இந்த புல்லைங்களுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்........எவ்ளோ சமத்தா என்னமோ மாரியம்மா கோயில்ல கூழுத்துரதுக்கு பைனான்ஸ் பண்ண பார்ட்டிங்க மாதிரி போஸு ஹி ஹி!

  நோ நோ பேட் வார்ட்ஸ்!//

  நாங் ரெண்டு பெரும் அப்பிடியா தெரியுறோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 79. //sakthistudycentre-கருன் said...
  நான் எப்பவுமே லேட்டு.. என்ன தலைவரே நான் வீட்டிற்கு போனபிறகே பதிவு போடரீங்க.. இருந்தாலும் வந்திட்டோமில்ல...//

  காலையிலே பாலோவர் பதிவு படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடுறதுக்குள்ளே சாயங்காலம் ஆகி விடுகிறது எப்பவும் என் பதிவு சாயங்காலம்'தான் வெளி வரும் மக்கா.....

  ReplyDelete
 80. //ஜெய்லானி said...
  //டாம்னு முதுகுல ஒரு அடி குடுத்து இருப்பீங்களே.//

  இல்ல தலையில நங்-க்குன்னு ஒரு குட்டு வைத்திருப்பாருன்னு நினைக்கிறேன் :-)//

  ஹா ஹா ஹா ஹா ஹா அய்யாவுக்கு அனுபவத்தை பாரு.....

  ReplyDelete
 81. //கவிதை காதலன் said...
  செந்தில் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும் போல. நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கவே மாட்டேங்கிறாரு.. அண்ணே ரொம்ப பயப்படுறாரு//

  ஹா ஹா ஹா அதுதான் அவரே சொல்லிட்டாரே "வீட்டுல எலி வெளியிலையும் எலி"ன்னு...

  ReplyDelete
 82. //அஞ்சா சிங்கம் said...
  அன்புக்கு அன்னை தெரசா , அறிவுக்கு அப்துல் கலாம், சிரிப்புக்கு சார்லி சாப்ளின் சண்டைக்கு ஜாக்கி சான் ...............
  தொப்பிக்கு எம்.ஜி.ஆர். , மஞ்சள் துண்டிற்கு கலைஞ்சர் , கூலிங் க்ளாஸ்க்கு தமிழ்வாணன் ..................
  அதேமாதிரி அந்த அழுக்கு டை க்கு அண்ணன் நாஞ்சில் மனோ தான் ......................///


  கப்போட்ல இருக்கும் அந்த நாறிப்போன அஞ்சி டை பார்சல் டூ அஞ்சாசிங்கம்......

  ReplyDelete
 83. //FOOD said...
  இப்போ உங்க பூமி எப்படி இருக்கு? அருமையான சந்திப்பு. வாழ்த்துக்கள் இருவருக்கும், வகையாய் மாட்டாமல் இருந்ததற்கு.//

  நிலைமை அப்பிடியேதான் இருக்கு......
  ரொம்ப நன்றி மக்கா...

  ReplyDelete
 84. //
  தம்பி கூர்மதியன் said...
  //கால் போகலைன்னா கையை உட்டு முயற்சி பண்ணுங்க பாஸ் ஹா ஹா ஹா ஹா...//

  ஐ சோக்.. ஆஹா சோக்.. சோக் அடிக்கிறாராம்..//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 85. சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்னு களத்தில இறங்கிராதீங்க மக்கா. நம்ம பயலுவளையும் கொஞ்சம் பாத்து நடக்கச் சொல்லுங்க.

  ReplyDelete
 86. சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்து இருக்கு போல... நல்லது...

  எஸ் பாஸ்... பஹ்ரைன்-ல பதிவர் சந்திப்பா? சொல்லவே இல்லை :-)

  அப்புறம் இன்றும் உங்களுக்கு விடுமுறை தானா?

  ஹெலிகாப்டர் சத்தம் தான் ஓவரா இருக்கு இன்னைக்கு... :(

  என்றும் உங்கள் அருண் பிரசங்கி

  ReplyDelete
 87. ///ஞாஞளஙலாழன் said...
  சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்னு களத்தில இறங்கிராதீங்க மக்கா. நம்ம பயலுவளையும் கொஞ்சம் பாத்து நடக்கச் சொல்லுங்க.//

  ஹா ஹா ஹா சரிங்க....

  ReplyDelete
 88. கலக்குங்க, கலக்குங்க, பொறாமையா இருக்கு மனோ?

  ReplyDelete
 89. //அருண் பிரசங்கி said...
  சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்து இருக்கு போல... நல்லது...

  எஸ் பாஸ்... பஹ்ரைன்-ல பதிவர் சந்திப்பா? சொல்லவே இல்லை :-)

  அப்புறம் இன்றும் உங்களுக்கு விடுமுறை தானா?

  ஹெலிகாப்டர் சத்தம் தான் ஓவரா இருக்கு இன்னைக்கு... :(

  என்றும் உங்கள் அருண் பிரசங்கி//


  அடப்பாவிகளா இப்போதான் ஒவ்வொரு ஆளா வெளியே வாரீங்களா....தினேஷை தொடர்ந்து, குண்டு பதிவர் ராஜ கோபாலனும் இங்கேதான் இருக்கார். அதை தொடர்ந்து இதோ அருண் பிரசங்கி.....ஹா ஹா ஹா வாங்க மக்கா என் லைனுக்கு....
  மொத்தம் நான்கு பேர் ஆயாச்சு.....

  ReplyDelete
 90. //வசந்தா நடேசன் said...
  கலக்குங்க, கலக்குங்க, பொறாமையா இருக்கு மனோ?//

  நீங்களும் துபாயில இருந்து வந்து கலந்துக்கோங்க மக்கா....

  ReplyDelete
 91. இன்னும் கலவரம் சரி ஆகலையா...இன்னைக்கு டிவில கூட சொன்னாங்க பேச்சு வார்த்தை நடக்க போவதாக...!!!!

  ReplyDelete
 92. அடடா ரெண்டு சிங்க்கக் குட்டீங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  ReplyDelete
 93. அதுக்குள்ள பிரச்சனை வேறயா?

  ReplyDelete
 94. நானும் விராட் கோலியோட சேர்ந்த நொட் அவுட்..
  100
  100
  100
  100

  ReplyDelete
 95. //சௌந்தர் said...
  இன்னும் கலவரம் சரி ஆகலையா...இன்னைக்கு டிவில கூட சொன்னாங்க பேச்சு வார்த்தை நடக்க போவதாக...!!!!//

  இப்போ இதோ சித்ராவுல ஒரு கம்பெனியை கொளுத்திட்டாணுவ....

  ReplyDelete
 96. //February 19, 2011 4:27 AM
  ம.தி.சுதா said...
  அடடா ரெண்டு சிங்க்கக் குட்டீங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா//

  உள் குத்து ஏதும் உண்டோ ஹா ஹா ஹா....

  ReplyDelete
 97. //அதுக்குள்ள பிரச்சனை வேறயா? //

  //99 //

  //நானும் விராட் கோலியோட சேர்ந்த நொட் அவுட்..
  100
  100
  100
  100 ///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 98. //டிஸ்கி : இதயசாரல், செந்திலுக்கு மிரட்டல் அதிகமாக [[சினிமாவை இப்பிடி குண்டக்க மண்டக்க விமர்சித்தால் ஹா ஹா ஹா]] வருவதால் அவரே உங்களுக்கு போன் செய்வார்.///////
  பன்னிக்குட்டி ராம்சாமி said.
  இன்னும் போன்லதான் மெரட்டுறானுங்களா? டேய்ய்ய் யார்ராவன் இப்பிடி பண்றவன்? தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கைய வெச்சிப் பாருங்கடா...///

  >>> அது அப்பறம். மொதல்ல எவனா இருந்தாலும் எங்க அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி மேல கை வைங்கடா...யாரு கிட்ட???

  ReplyDelete
 99. //>>> அது அப்பறம். மொதல்ல எவனா இருந்தாலும் எங்க அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி மேல கை வைங்கடா...யாரு கிட்ட???//

  எவனுக்காவது தைரியம் இருக்கா......

  ReplyDelete
 100. நண்பேண்டா...
  நண்பேண்டா....
  நண்பேண்டா...

  ReplyDelete
 101. நீங்களும் தினேஷும் பாச மலர்களா?

  ReplyDelete
 102. //சே.குமார் said...
  நண்பேண்டா...
  நண்பேண்டா....
  நண்பேண்டா...//

  ஹா ஹா ஹா அதாண்டா அதாண்டா ஹா ஹா....

  ReplyDelete
 103. //பாரத்... பாரதி... said...
  நீங்களும் தினேஷும் பாச மலர்களா?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்....சந்தேகத்தை பாருங்கைய்யா...

  ReplyDelete
 104. கலவரதிளையும் ஒரு கிளுகிளுப்பு சந்திப்பு

  ReplyDelete
 105. இனிய நட்புகள்! என்றும் தொடரட்டும்!

  ReplyDelete
 106. //FARHAN said...
  கலவரதிளையும் ஒரு கிளுகிளுப்பு சந்திப்பு//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 107. //எஸ்.கே said...
  இனிய நட்புகள்! என்றும் தொடரட்டும்!//

  நன்றி எஸ் கே....

  ReplyDelete
 108. இனிய நட்புகள்! என்றும் தொடரட்டும்!

  வாழ்த்துக்கள் இருவருக்கும் :))

  ReplyDelete
 109. ஐயோ பயமா இருக்கு ..

  ReplyDelete
 110. நட்பின் சிறப்பை பெருமிதத்துடனும் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிய விதம் மிக அருமைணெ..!! தொடரட்டும் தங்களது அனுபவ பதிவுகள்.

  ReplyDelete
 111. Be safe and take care both of you.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!