Monday, July 16, 2012

தமிழனை காக்க பிறந்த தலீவன் பெயர் "டெசோ"...!!!???


உலக சரித்திர வரலாற்றில் தன் பெயர் "துரோகி" என்று வந்துவிட்டதே அதை எப்படியாவது, என்ன செய்தாவது மாற்றிவிட துடிக்கும் யானை தலைவன் ச்சே தானை தமிழ் தலைவன் [[அப்பிடிதான் அல்லக்கைங்க சொல்றாங்க]] தான் நடத்தவிருந்த மாநாட்டின் தலைப்பையே மாற்றி, ஈழத்தமிழருக்காக, அவர்கள் மேம்பாட்டுக்கான மாநாடு என்று அறிவித்திருப்பது, மேலும் அவர் பெயர் வரலாற்றில் ஈனத்தனமாக பேச வைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை...!

ஈழத்து தமிழனை காப்பாத்தனும்னா இவர் அவர்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது, இவர் போராட, பேசவேண்டிய நேரம், காலம் எல்லாம் கடந்து, குடி மூழ்கிய பின்னர் மாநாடு நடத்தி கிழிக்கப்போறாராம், ஒரு மனைவி, துணைவியை அருகில் வைத்து கொண்டு, ஒருசட்டி இட்லியை காலையில் முழுங்கிவிட்டு மதியம் வரை உண்ணாவிரதம் இருந்த தலைவன்...... உலக வரலாற்றுலயே இவர் ஒருவர்தான்....!


இந்த மாநாட்டுக்கு வருகிறவர்கள் யாருமே ஈழத்தமிழனை நேசிப்பவர்கள் அல்லவே அல்ல, மாறாக பணத்துக்காக, அதிகாரத்திற்காக  தானை தலைவனை அடிவருடும் அல்லக்கை கூட்டம் என்றே சொல்வேன்...!


ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, தலீவனுக்கு நெஞ்சில் நல்லாவே சூடு பட்டுவிட்டது, கறை பட்டுவிட்டோம் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் என்பது அவர் உளரும் பேச்சுகளில் நன்றாகவே புரிகிறது....!


ஈழ தமிழர்கள் விஷயத்தில் இவர் செய்ததுக்கும், முரளிதரன் என்ற கருணா செய்த துரோகத்துக்கும், காங்கிரஸ் தலைமை செய்த அநியாயத்துக்கும்  ஒரு வித்தியாசமும் இல்லை இல்லை இல்லை என்பதே உண்மை...!


உண்மையான தமிழன், தமிழன் வாழவேண்டும் என நினைப்பவன் யாரும் இந்த "டெசோ" மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதை காலம் சொல்லட்டும், தலீவன் தன் இழந்து போன செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என நினைக்கிறார், இனி அது அவருக்கு கனவாகவே இருக்கும் இதுதான் நிதர்சனம்....!

இந்த மாநாட்டை ஈழத்தமிழன் நலனுக்காக இவர் செய்யவில்லை, மாறாக  தன் சுயநலத்துக்காகவும், கட்சி நாறிப்போனதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கவுமே இந்த மாநாடு, சிறைநிரப்பும் போராட்டம் வெங்காயம் வெந்தயம் எல்லாம்...!!!

தெரியாமதான் கேக்குறேன், ஜனாதிபதி ஆகணும்னு ஆதரவு கேக்க வந்தாங்களே ரெண்டுபேர் டெல்லியில் இருந்து, அவர்களிடம் மரண தண்டனை கைதிகளாக இருக்கும் மூன்று தமிழர்களின் விடுதலை பற்றி ஏதேனும் பேசினாரா இந்த தமிழின காவலன்....? ம்ஹும் மாநாடாம் மாநாடு போங்கய்யா போங்க....!

அடுத்து "அம்மா" இருக்கும், [[தாம்பரம், குன்னூர்]] போகும் இடமெல்லாம் இலங்கை ராணுவம் பயிச்சிக்காக போகுதுன்னு செம பேஜாரா அறிக்கைகள் பறக்குது, ம்ம்ம்ம் எப்பிடியா இருந்தாலும் சிங்களன் இங்கே பயிற்சி எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!

நிறைவாக......

என்னுயிர் தேன்தமிழ் வாழ்க............ வாழவேண்டும், தமிழன் வாழ்க........ வாழவேண்டும், எம்மை நம்பியோர் வாழ்க............. வாழவேண்டும், எம்மை அண்டியோர் வாழ்க........... வாழவேண்டும் இதுவே எம் மறத்தமிழனின் எண்ணமும் ஆசைகளும்...!

22 comments:

 1. கடைசியாக......

  என்னுயிர் தேன்தமிழ் வாழ்க............ வாழவேண்டும், தமிழன் வாழ்க........ வாழவேண்டும், எம்மை நம்பியோர் வாழ்க............. வாழவேண்டும், எம்மை அண்டியோர் வாழ்க........... வாழவேண்டும் இதுவே எம் மறத்தமிழனின் எண்ணமும் ஆசைகளும்...!//


  அருமையான பதிவு
  இறுதியாக எனச் சொல்வது கூட
  வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறது
  நிறைவாக எனச் சொல்லலாமோ எனப் பட்டது
  படங்கள் பதறச் செய்து போகிறது
  தக்க சமயத்தில் தக்க பதிவைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 2. சரியாகச்சொன்னீர்கள்...இவர்ககள் அரசியல் வியாபாரத்திற்காய் தமிழனின் உயர்வுகளை விலை பேசுபவர்கள்.திருந்வே மாட்டா◌ார்கள்.நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும்.!

  ReplyDelete
 3. TESO - Tamil Eelam Supporters Organization . அப்படியே டேசொக்கு அர்த்தம் என்னவென்று உங்க தலைவருக்கு ட்யுஷன் எடுங்க .

  ReplyDelete
 4. சரியாகச்சொன்னீர்கள்..

  ReplyDelete
 5. அஞ்சாசிங்கம் தனது பேஸ்புக் ஸ்டேடஸ்ஸில்....

  Selwin Anand
  கேள்வி :- விடுதலை புலிகளுக்கு தடை நீட்டிக்க பட்டுள்ளதே .?
  புளியமரம்:- தமிழகத்தில் தீவிரவாதத்திற்கு வன்முறைக்கும் தி.மு.க.என்றும் ஆதரவு அளிக்காது .

  கேள்வி :- தனி ஈழம் கேட்டு டெசோ அமைப்பு போராட்டம் செய்யுமா.........?
  புளியமரம்:- தனி ஈழம் கேட்டு போராட்டம்ஆர்பாட்டம் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை .....

  அதாவது நாங்க ஒண்ணுமே செய்ய மாட்டோம்ன்னு சொல்றதுக்கு ஒரு மாநாடு ..எங்கயா போனாங்க இந்த புளியான்கொட்டைகள் உங்க தலைவனின் ராஜதந்திரத்தை புகழ்ந்து ஸ்டேட்டஸ் போடுங்க ....
  TESO - Tamil Eelam Supporters Organization . அப்படியே டேசொக்கு அர்த்தம் என்னவென்று உங்க தலைவருக்கு ட்யுஷன் எடுங்க ...

  ReplyDelete
 6. அருமையான பதிவு
  இறுதியாக எனச் சொல்வது கூட
  வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறது
  நிறைவாக எனச் சொல்லலாமோ எனப் பட்டது
  படங்கள் பதறச் செய்து போகிறது
  தக்க சமயத்தில் தக்க பதிவைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி//

  இப்பவே மாற்றிவிடுகிறேன் குரு....நன்றி.....

  ReplyDelete
 7. பதிவில் இடம்பெற்றப் படங்கள் பதற வைக்கிறது... பாதகச் செயல்களை செய்யும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படக் கூடியவர்கள்..!

  ReplyDelete
 8. //ஜனாதிபதி ஆகணும்னு ஆதரவு கேக்க வந்தாங்களே ரெண்டுபேர் டெல்லியில் இருந்து, அவர்களிடம் மரண தண்டனை கைதிகளாக இருக்கும் மூன்று தமிழர்களின் விடுதலை பற்றி ஏதேனும் பேசினாரா இந்த தமிழின காவலன்....? //
  How these three guys will be released? They played a vital part in killing Prime Minister. This was proved by court. They must have been executed immediately after the judgement. Execution of these three is very much delayed. This will happen only in India. Another example is Bombay attack - Though the culprit was caught and proved, he is enjoying in jail.

  ReplyDelete
 9. மனோ...என்னத்தை பொங்கி என்ன ஆகபோவுது....????

  பூந்தி...காமிச்சத பார்த்துப்புட்டு...
  அவர் இன்னும் பல்லு கூட விளக்களையாம்....

  ReplyDelete
 10. இந்த மனுஷன் இன்னுமும் அதே பூச்சாண்டியை காட்டி ஏமாற்ற பார்க்கிறார். எப்படியாவது தன்னை ஒரு மக்கள் தொண்டன் என்று நிரூபிக்க வேண்டும் என்று மொக்கை ஐடியாக்களை நிறைவேற்றி மேலும் நிறைய பல்பு வாங்குகிறார், அவ்வளவே

  ReplyDelete
 11. தலைவரின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி வருகிறதே..... இன்னொரு படத்திற்கு வசனம் எழுத வேண்டுமோ...?

  ReplyDelete
 12. போர்க்களத்தில் வீர மரணமடைந்த உடல்களைத் தின்ன அலையும் கிழ நரி .....

  ReplyDelete
 13. //இந்த மாநாட்டுக்கு வருகிறவர்கள் யாருமே ஈழத்தமிழனை நேசிப்பவர்கள் அல்லவே அல்ல, மாறாக பணத்துக்காக, அதிகாரத்திற்காக தானை தலைவனை அடிவருடும் அல்லக்கை கூட்டம் என்றே சொல்வேன்...!//
  சரியா சொன்னீங்க .

  ReplyDelete
 14. T for திருடர்கள்
  E for எல்லாம்
  S for சேர்ந்து
  O for ஓட்டுக்காக

  நடத்தும் மாநாடு ... இதுதான் உண்மையான அர்த்தம்

  ReplyDelete
 15. நான் வன்மையாக கண்டிக்கிறேன் அண்ணே ..
  இந்த மாதிரி மென்மையான வார்த்தைகளை கொண்டு இனத்தை அழிக்க வந்த கொடியவரை திட்ட கூடாது என்று ..

  அவர்க்கு வேற வேற வேற தான் வேண்டும் .. அப்பவும் உரைக்காது ...

  பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. உங்க நேர்மையான உணர்வுக்கு என் பாராட்டுகள்.

  ReplyDelete
 17. நன்கு உறைக்கும்படியாகக் கேட்ட கேள்விகளும் மனதை வாட்டும் படங்களும் இப் பகிர்வுக்கு உயிரோட்டத்துடன் கூடிய
  புரட்சியைவெளிக்காட்டியுள்ளது!!....மிக்க நன்றி சகோ எம் மக்கள்மீது தாங்கள் வைத்துள்ள பரிவுக்கும் இப் பகிர்வுக்கும் மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 18. என்ன சொல்வதென்றெ தெரியவில்லை.என்னுள் வார்த்தைகள் எழவில்லை.

  ReplyDelete
 19. அருமையான பதிவு! நெகிழ வைக்கும் புகைப்படங்கள்!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!