Friday, January 27, 2012

உன் துணையின்றி நான்.....!!!

தேனும் தெளிதேனும் இருந்தும்
அது எனக்கு இனிக்கவில்லையடி 
என்னவளே நீ என்னருகில் இல்லாமல்...

பஞ்சணையும் சுக
தலையனையும் கந்தவர்க்க
மணமிருந்தும்.....

மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட 
மெல்லிய மெத்தை 
வெள்ளைப்போளம் இருந்தும்....


மதிமயங்கும் மது இருந்தும்
நம்மை காண நிலா காத்திருந்தும்
இருளின் மேகங்கள் சுற்றி வந்தும்...

திரளான கப்பல்கள் 
தினம்தோறும் வந்து என்னை பார்த்து
கேலி செய்கிறது...


ஆயிரம் நறுமணம் 
கமழும் பூக்கள் இருந்தும் 
என் மஞ்சம் அந்த பூக்களை நெருங்க விடவில்லை...

உன்னைப்போல பெண்ணை 
நான் இதுவரை கண்டதில்லை 
என்றேன்....

உன் கண்கள் அழகாக 
இருக்கிறது என்றாய் 
என் கண் மூலம் காதலை கண்டவளே....

வெண்ணிலவே என்றேன்
நிலவில் கருப்பாக 
தெரிவது நீ என்றாய்....


தென்றலே என்றேன்
அதில் ஆடும்
மரம் நீ என்றாய்....

தேன்மொழியே என்றேன்
அங்கே பேசும்மொழி
நீ என்றாய்...

கனியே கனியமுதே
என்றேன்
அதின் விதை நீ என்றாய்...

எப்போதும் என் கனவில் 
நீ என்றேன்
அந்த கனவே நீ என்றாய்...


இனிக்கும் மாம்பழமே என்றேன்
அதுதான்
நீ வண்டாக வந்துவிட்டாயோ என்றாய்...

நீயில்லாமல் கண்ணீரின்
துணை கொண்டு வாழ்கிறேன் என்றேன்
அந்த கண்ணீரே நான்தான் என்றாய்...

எத்தனையோ சுகங்கள்
என்னருகில் என்னை மயங்க வைத்து இருந்தும்
என் மஞ்சம் வெறுமையாக, நீ இல்லாமல்......!!!!

டிஸ்கி : ஹா ஹா ஹா ஹா என்னாது யுத்தமா....?  சிப்பு சிப்பா வருது அண்ணே.....நான் சொன்னது ஈராக் அமெரிக்கா யுத்தத்தை ஹீ ஹீ ஹீ ஹீ.....[[எலேய் நீயும் உள்குத்தா டிஸ்கி போடுறியே மனோ]]





32 comments:

  1. எலேய் ஈராக் யுத்தமா எங்க எங்க..ஸ்ஸ் அபா நீயுமா நடத்து!

    ReplyDelete
  2. கவிதை எல்லாம் நாங்க எழுதனும் அண்ணா :))) என்ன இது...???

    ReplyDelete
  3. கவிதை யுத்தம்!
    நெஞ்சத்திலா?
    மஞ்சத்திலா!
    இப்போ இருப்பது வெறும்
    பஞ்சத்திலா?

    ReplyDelete
  4. வணக்கம் பாஸ்
    கவிதையும் பிரமாதமாக எழுதுகின்றீர்கள்
    நான் உங்கள் தளத்தில் படிக்கும் முதல் கவிதை என்று நினைக்கின்றேன் அருமையாக இருக்கு

    ReplyDelete
  5. எத்தனையோ சுகங்கள்
    என்னருகில் என்னை மயங்க வைத்து இருந்தும்
    என் மஞ்சம் வெறுமையாக, நீ இல்லாமல்......!!!!


    arumai arumai

    ReplyDelete
  6. என்னாச்சு பாஸ்?
    ஏன்? எதுக்கு? திடீர்னு இப்பிடி ஒரு முடிவு?
    நாங்கெல்லாம் இருக்கமில்ல? :-)

    ReplyDelete
  7. கவித கவித! ஒரு அருவா கவித எழுதுகிறது! :-)

    ReplyDelete
  8. நல்லா தானே இருந்த மாப்ள என்ன திடீர்னு கவிதை எழுதும் அளவுக்கு என்ன ஆகிடுச்சி...ஹீ ஹீ

    ReplyDelete
  9. மனோ ஜி! மனோ ஜி! பகுத் அச்சா.....

    ReplyDelete
  10. மனோ நீங்க எழுதிய கவிதை நல்லாயிருக்கு.....அடிக்கடி எழுதுங்க!

    ReplyDelete
  11. என்ன மனோசார் வீட்டு நினைப்பு மனசுல வந்துடுச்சா? கவலைபடாதே சகோதரா இளைமையில் கஷ்டத்தை விதைப்பவன் முதுமையில் அதற்கு தகுந்த பலனை அனுபவிப்பான்

    ReplyDelete
  12. தனுசுக்கு ஒரு "கொலைவெறி" அது போல மனோவுக்கு 'துணையின்றி" நல்ல முயற்சி. வாழுத்துக்கள்

    ReplyDelete
  13. மனோ...பிடிச்சிருக்கு கவிதை !

    ReplyDelete
  14. மனோ...கவிதை எனக்கு புரிஞ்சிடுசி...
    ஹி...ஹி...ஹி..

    ReplyDelete
  15. கவித!கவித!

    என்ன உள்குத்து..என்ன யுத்தம்னு ஒன்னுமே புரியல!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் மனோ.

    ReplyDelete
  17. மனோசார் கவிதை அழகு

    ReplyDelete
  18. ம்....நல்லாத்தான் இருக்கு மக்கா

    ReplyDelete
  19. மக்களே,
    கவிதை தூள் கிளப்புது யா...

    பிரிதலின் நிமித்தம் விளைந்த கவிதையோ????
    அழகாக உள்ளது...

    ReplyDelete
  20. மனோ எப்போ கவிஞர் ஆனார்? நல்லா இருக்கு மக்கா...

    டிஸ்கி ரைட்டு.....

    ReplyDelete
  21. மனோ நண்பா,
    கவிதை அருமை.
    யுத்தம் வேண்டாம் சகோ. பொறுமை காப்போம். ப்ளீஸ்...

    ReplyDelete
  22. பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்.. கவிதை மனோ!

    ReplyDelete
  23. கவிதையும் அதற்கான காட்சிப்படங்களும் மிகவும் அருமை மனைவியின் பிரிவில் மஞ்சத்தின் வெறுமையை இனிதாக கவிதை தந்த அருவா மன்னவா இன்னும்
    பலகவிதை புனைக.

    ReplyDelete
  24. ஒத்தமனத்தவரின் இல்லறப்பிரிவு கொடுமைதான் என்ன செய்வது பொருளாதாரம் ஈட்டனுமே அண்ணாச்சி!

    ReplyDelete
  25. Coming Soon...
    http://faceofchennai.blogspot.in/

    ReplyDelete
  26. ரைட்டு.

    அண்ணன் ‘விடுப்பு விண்ணப்பம்’ குடுத்தாச்சி போல. எப்பண்ணே ஊருக்கு?

    ReplyDelete
  27. தேனும் தெளிதேனும் இருந்தும்
    >>
    அண்ணே தேனும், தெளிதேனும் ஒண்ணுதான். பாலும் தெளிதேனும்ன்னு மாத்தி தொலைங்க. உங்க தமிழ் வாத்தியார் பார்த்தால் வாழ்க்கையை வெறுத்து சன்யாசம் வாங்கிடுவார்.

    ReplyDelete
  28. கவிதை எழுததான் நாங்கள்லாம் இருக்கோமில்ல. அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை..?

    ReplyDelete
  29. அடேயப்ப்பா கவிஞரு... சூப்ப்பர், மனோ

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!