Saturday, October 1, 2011

தக்காளி [விக்கி அல்ல] சட்னி...

நான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

என்னோடு மூன்று எத்தியோப்பியன், இரண்டு பிலிப்பைன்ஸ், ஒரு மொரோக்கோ வெயிட்டர்ஸ்[பெண்கள்] வேலை செய்து வந்தார்கள். இவர்கள் வேலை என்னவென்றால் டியூட்டிக்கு வந்ததும் எல்லா டேபிளையும் சுத்தம்  செய்து, கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டில், உப்பு, மிளகு இப்பிடிபட்ட இன்னும் பிற அயிட்டங்களையும் கிளீன் செய்ய வேண்டும். இவர்கள் நான் டியூட்டிக்கு வரும் முன்னரே வந்து விடுவார்கள்.

   அப்படி ஒரு நாள் நான் அரை மணி நேரம் முன்பே டியூட்டிக்கு வரும் ஒரு சூழ்நிலை நேர்ந்ததால், பாரினுள் யாருமில்லை. அப்பிடியே கமுக்கமாக பார் கவுண்டரை எட்டி பார்த்தேன். அங்கே நீனா என்கிற பிலிப்பைன்ஸ் வெயிட்டர்ஸ் எனது சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். [பார்மேன் சேரில் வெயிட்டர்ஸ் அமர அனுமதி கிடையாது இருப்பினும் நான் கண்டு கொள்ளமாட்டேன் பெண் அல்லவா]

  மெதுவாக சென்று [அங்கே என்னமோ தப்பாக நடக்கிறது என என் உள்மனம் சொன்னதால்] அவள் என்ன செய்கிறாள் என்று அவள் அறியாமல் உற்று பார்த்தேன்......................அவள் கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டிலை ஒப்பன் பண்ணி அவள் விரலில் ஏதோ காயம் பட்டு வந்த ரத்தத்தை அந்த குப்பியினுள் பிழிந்து சொட்டு சொட்டான ரத்தத்தை உள்ளே திணித்து கொண்டிருந்தாள்.....!!! அதிர்ச்சி ஆன நான், கோபத்தின், ஆத்திரத்தின் உச்சத்தில்..... 


நீனா...................என்று கத்தினேன். இந்த நேரத்தில் என்னை எதிர்பாராத அவளுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன காரியம் செய்கிறாய் நீ என எவ்வளவு சத்தம் போடணுமோ அவ்வளவு திட்டி விட்டு, கச்சப்பை தூர எறிந்தேன். அவளும் ஒன்றும் சொல்லாமல் கஸ்டமர் டேபிளை கவனிக்க போய் விட்டாள்.

   நாமதான் டியூப் லைட் ஆச்சே....!!! ஒரு மணி நேரம் கழிச்சிதான்  என் மூளைக்கு மின்னல் வெட்டியது................சம்திங் ராங், நேரே முதலாளிக்கு போன் செய்தேன். [ஜி எம் ஒரு காசுக்கும் ஆகாதவன் அதான் முதலாளிக்கு போன்] முதலாளி சொன்னார் நான் வரும் வரை யாரிடமும் சொல்லாதேன்னு சொன்னார். நான் தூரப்போட்ட பாட்டிலை எடுத்து வைத்தேன் பத்திரமாக, முதலாளி செக்யூரிட்டி அடக்கம் வந்தார்கள். அந்த பெண்ணை நேராக ஹாஸ்பிட்டல் கொண்டு போனார்கள்...

 ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

      இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.


டிஸ்கி : அப்பாடா  ஏதோ நம்மளால முடிஞ்சது.....

இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.

டிஸ்கி : கடந்த பதிவில் யாழ்பாணத்தில் இருந்து வந்த மெயில் பற்றி பதிவு போடுறதா சொல்லி இருந்தேன், சிபி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பிரசுரிக்க வில்லை ஸாரி.


ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பதிவை வாசிக்க விரும்புவர்கள், மேலே செலக்ட் லாங்குவேஜ் என இருக்கும் பாரை கிளிக் செய்யவும்.


60 comments:

 1. இது மாதிரி துரோகம் செய்பவர்கள் சும்மா விடக்கூடாது மனோ...

  என்ன அநியாயம். கொஞ்ச உஷாராத்தான் இருக்கனும்...

  அதை கஷ்டமர்ஸ் சாப்பிட்டு இருந்தா என்ன ஆகுறது...

  சபாஷ் மனோ....

  ReplyDelete
 2. ஓட்டல் பக்கமே தலை வைத்து படுக்காதே என்று எச்சரித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. பாதுகாப்பான எச்சரிக்கை பதிவு பாராட்டுகள் நம்மவர்களுக்கு சிறந்த பதிவை தந்து இருக்கிறீர்கள் உண்மையில் இப்படி பட்ட ஊழியர்களை கண்டதும் நாட்டைவிட்டு விரட்டி அவர்களுக்கு முறையான மருந்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .

  ReplyDelete
 4. கவிதை வீதி... // சௌந்தர் // said... 1 2
  This post has been removed by the author.//

  ஆஹா ஆரம்பமே சரியில்லையே....

  ReplyDelete
 5. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  இது மாதிரி துரோகம் செய்பவர்கள் சும்மா விடக்கூடாது மனோ...

  என்ன அநியாயம். கொஞ்ச உஷாராத்தான் இருக்கனும்...

  அதை கஷ்டமர்ஸ் சாப்பிட்டு இருந்தா என்ன ஆகுறது...

  சபாஷ் மனோ....//

  ஹா ஹா ஹா ஹா கவிதைவீதி இப்பிடி அலறுது....

  ReplyDelete
 6. suryajeeva said...
  ஓட்டல் பக்கமே தலை வைத்து படுக்காதே என்று எச்சரித்தமைக்கு நன்றி//

  பாதுகாப்பாக சாப்பிடுவது நல்லது.

  ReplyDelete
 7. மாலதி said...
  பாதுகாப்பான எச்சரிக்கை பதிவு பாராட்டுகள் நம்மவர்களுக்கு சிறந்த பதிவை தந்து இருக்கிறீர்கள் உண்மையில் இப்படி பட்ட ஊழியர்களை கண்டதும் நாட்டைவிட்டு விரட்டி அவர்களுக்கு முறையான மருந்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.//


  அப்பிடிதான் பண்ணினார்கள், காரணம் எம்பசி மூலமா அனுப்பினதினால் கண்டிப்பாக பிலிப்பைன்ஸ்'ல மருத்துவமனை'யில் செர்த்திருப்பார்கள்.

  ReplyDelete
 8. எச்சரிக்கையான பதிவு

  இன்று என் வலையில்
  கருத்துரைகளை சுருக்க விரிக்க

  ReplyDelete
 9. எச்சரிக்கையான பதிவு

  இன்று என் வலையில்
  கருத்துரைகளை சுருக்க விரிக்க

  ReplyDelete
 10. கடவுளே, இப்படி செய்கிறவர்களும் உண்டா??? பகிர்வுக்கு மிக்க நன்றி, ஆனால் அந்த பெண் அவ்வாறு செய்தது முதல் தடவையா என்பது சந்தேகமே... இந்த பதிவை facebook இல் பகிர நீங்கள் அனுமதி தர வேண்டும்..

  ReplyDelete
 11. வைரை சதிஷ் said...
  எச்சரிக்கையான பதிவு //

  எச்சரிக்கை...

  ReplyDelete
 12. இராஜராஜேஸ்வரி said...
  ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்./

  அதிர்ச்சியளிக்கும் எச்சரிக்கைப் பகிர்வு!//

  கூடுமானவரை பாக்கெட் கச்சாப் சாப்பிடுங்கள்...

  ReplyDelete
 13. Vinodhini said...
  கடவுளே, இப்படி செய்கிறவர்களும் உண்டா??? பகிர்வுக்கு மிக்க நன்றி, ஆனால் அந்த பெண் அவ்வாறு செய்தது முதல் தடவையா என்பது சந்தேகமே... இந்த பதிவை facebook இல் பகிர நீங்கள் அனுமதி தர வேண்டும்..//

  தாராளாமாக போடுங்கள் வினோதினி, இது எல்லாருக்கும் போய் சேரவேண்டும்...

  ReplyDelete
 14. உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன், http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_02.ஹ்த்ம்ல் - முடிந்த போது பார்க்கவும்

  ReplyDelete
 15. middleclassmadhavi said... 33 34
  உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன், http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_02.ஹ்த்ம்ல் - முடிந்த போது பார்க்கவும்//

  என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மிக்க நன்றி மாதவி, நம்ம ஜெயலானியை கொஞ்சம் வருத்துருந்தா நல்லா இருந்துருக்கும் ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 16. கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? கொடுமை

  உங்கள் தளத்தில் முதன் முதலில் நான் படித்த பதிவே இது தான் :-)
  மீள்பதிவிட்டதுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 17. ஆமினா said... 37 38
  கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? கொடுமை

  உங்கள் தளத்தில் முதன் முதலில் நான் படித்த பதிவே இது தான் :-)
  மீள்பதிவிட்டதுக்கு மிக்க நன்றி//

  என்னத்தை சொல்ல....

  ReplyDelete
 18. சே.குமார் said...
  என்ன அநியாயம்??????????????//

  அக்கிரமம்....

  ReplyDelete
 19. இப்படியெல்லாம் நடக்குதா.. கொடூரமா இருக்கே பாஸ்!!

  ReplyDelete
 20. அய்யய்யோ அப்பிடியா...??

  ReplyDelete
 21. அண்ணே இனி வாழ்க்கையில சோஸ் சாப்புடமாட்டேன் என் கண்ணை திறந்துட்டீங்க...

  ReplyDelete
 22. யோவ் கமென்ட் எண்ணிக்கைய அதிகமா காட்ட இப்படி செட் பண்ணி வச்சிருக்கியா... ஹா ஹா...

  ReplyDelete
 23. ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

  இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.

  அருமையான எச்சரிக்கைப் பகிர்வு மிக்க நன்றி மனோ சார் .இப் பகிர்வுக்கு மட்டும் அல்ல என் ஆக்கத்தை உங்கள் பிற தளங்களில் பகிர்ந்துகொண்டமைக்கும் என் தளத்தினைப் பின்தொடர்ந்து கருத்திட்டமைக்கும் .வாழ்த்துக்கள் உங்கள் நட்புத் தொடர .............

  ReplyDelete
 24. குடிமகன் said... 45 46
  இப்படியெல்லாம் நடக்குதா.. கொடூரமா இருக்கே பாஸ்!!//

  என்னத்தை சொல்ல...

  ReplyDelete
 25. துரைராஜ் said...
  அய்யய்யோ அப்பிடியா...??//

  ஆமாண்டா.....

  ReplyDelete
 26. kumarapuram anil said...
  அண்ணே இனி வாழ்க்கையில சோஸ் சாப்புடமாட்டேன் என் கண்ணை திறந்துட்டீங்க...//

  ம்ம்ம்ம்....

  ReplyDelete
 27. சசிகுமார் said... 51 52
  யோவ் கமென்ட் எண்ணிக்கைய அதிகமா காட்ட இப்படி செட் பண்ணி வச்சிருக்கியா... ஹா ஹா...//

  எல்லாம் நீங்க குடுத்த யானை யானை ஸாரி ஞானம்'தான்....

  ReplyDelete
 28. அம்பாளடியாள் said...
  ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

  இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.

  அருமையான எச்சரிக்கைப் பகிர்வு மிக்க நன்றி மனோ சார் .இப் பகிர்வுக்கு மட்டும் அல்ல என் ஆக்கத்தை உங்கள் பிற தளங்களில் பகிர்ந்துகொண்டமைக்கும் என் தளத்தினைப் பின்தொடர்ந்து கருத்திட்டமைக்கும் .வாழ்த்துக்கள் உங்கள் நட்புத் தொடர .............//

  மிக்க நன்றி உங்கள் அன்புக்கு....

  ReplyDelete
 29. kumarapuram anil said...
  துரைராஜ் said...
  அய்யய்யோ அப்பிடியா...??//

  ஆமாண்டா.....//

  டேய் இதென்ன மூதேவி சிபி பிளாக்குன்னு நினைச்சியா ராஸ்கல் எங்கே அந்த அருவா எங்கே வச்சேன்...? மரியாதையா பேசி தொலைங்கப்பூ...

  ReplyDelete
 30. //இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.//


  கொய்யாலே.....நல்லா திட்டாலாமுன்னு வந்தேன் ....இட் பார்த்துட்டு சும்மா போறேன் ஹி....ஹி...

  இறைவா.....இந்த மீள் பதிவு கொடுமையிலிருந்து பதிவுலகத்தை காப்பாத்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ....அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 31. தக்காளி போட்டோ இருக்கு ..ஓகே...பிலிபைனி போட்டோ எங்கே...???? இல்லாட்டி நாங்க நம்ப மாட்டோமே ஹா..ஹா... :-)))))))))

  ReplyDelete
 32. இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
  சாதாரணமா சொல்லிப்புட்டீங்களே
  அந்த பெண் மனரீதியாக அதிகம்
  பாதிக்கப் பட்டவராக இருப்பார்
  பழிவாங்கும் எண்ணத்தில் இப்படிச்
  செய்வார் என நினைக்கிறேன்
  அப்பா இனி சிவப்பா இருக்குமெதையும்
  தொடக் கூடாது போலயே
  பயனுள்ள பதிவு
  பயமுறுத்தும் பதிவும் கூட
  த.ம 7

  ReplyDelete
 33. ஐயையே...
  இத்தனை நாளா சாப்பிட்டது...

  இனிமே உஷார் தேவை...

  மனோ sir...
  உங்களுக்கு...இறைவன்...மேலும் மேலும்...அருள் புரிவானாக...

  ReplyDelete
 34. என்ன மனோ சார் நீங்க எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறிங்க எவ்வளவு பேர் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க.. ஆனா உங்களுக்கு யாரும் எந்த பட்டமும் தரவில்லை. நீங்க அமெரிக்காவில் இருந்த உங்களுக்கு ஹீரோ பட்டம் தந்திருப்பாங்க. இப்ப ஓன்னும் நீங்க குறைஞ்சு போகவில்லை/ யாரும் கொடுக்காத அந்த ஹீரோ பட்டத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.இன்று முதல் நீங்கள் ஹீரோ நாஞ்சில் மனோ என்று அழைக்கப்டுவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க செலவில் இங்கு வந்து அந்த பட்டத்தை வாங்கி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  ( உங்களின் நற் செயலுக்கு எனது வாழ்த்துக்கள்)

  ReplyDelete
 35. நீனா மனோ நாற்காலியில் அமர்ந்து அந்த வேலையை செய்தது ஏனோ ? அதை விசாரிச்சீங்களா?
  சிபி யின் வேண்டுகோள் என்ன ?

  ReplyDelete
 36. ஜெய்லானி said...
  //இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.//


  கொய்யாலே.....நல்லா திட்டாலாமுன்னு வந்தேன் ....இட் பார்த்துட்டு சும்மா போறேன் ஹி....ஹி...

  இறைவா.....இந்த மீள் பதிவு கொடுமையிலிருந்து பதிவுலகத்தை காப்பாத்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ....அவ்வ்வ்வ்வ்வ்//

  யோவ் ஏதாவது காப்பி பேஸ்ட் போடலாம்னா அதுக்கும் ஆப்பு வச்சிட்டாயிங்க அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 37. ஜெய்லானி said...
  தக்காளி போட்டோ இருக்கு ..ஓகே...பிலிபைனி போட்டோ எங்கே...???? இல்லாட்டி நாங்க நம்ப மாட்டோமே ஹா..ஹா... :-)))))))))//

  இப்பிடி கிடுக்கி பிடி போட்டா நாங்கெல்லாம் பொழைக்கிறது எப்பிடி...!!!

  ReplyDelete
 38. Ramani said...
  இதென்ன படு பயங்கரமா இல்லை இருக்கு
  சாதாரணமா சொல்லிப்புட்டீங்களே
  அந்த பெண் மனரீதியாக அதிகம்
  பாதிக்கப் பட்டவராக இருப்பார்
  பழிவாங்கும் எண்ணத்தில் இப்படிச்
  செய்வார் என நினைக்கிறேன்
  அப்பா இனி சிவப்பா இருக்குமெதையும்
  தொடக் கூடாது போலயே
  பயனுள்ள பதிவு
  பயமுறுத்தும் பதிவும் கூட
  த.ம 7//

  உஷாரா இருங்க குரு, நன்றி....

  ReplyDelete
 39. F.NIHAZA said...
  ஐயையே...
  இத்தனை நாளா சாப்பிட்டது...

  இனிமே உஷார் தேவை...

  மனோ sir...
  உங்களுக்கு...இறைவன்...மேலும் மேலும்...அருள் புரிவானாக...//

  மிக்க நன்றி நிஹாஷா....

  ReplyDelete
 40. Avargal Unmaigal said...
  என்ன மனோ சார் நீங்க எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறிங்க எவ்வளவு பேர் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க.. ஆனா உங்களுக்கு யாரும் எந்த பட்டமும் தரவில்லை. நீங்க அமெரிக்காவில் இருந்த உங்களுக்கு ஹீரோ பட்டம் தந்திருப்பாங்க. இப்ப ஓன்னும் நீங்க குறைஞ்சு போகவில்லை/ யாரும் கொடுக்காத அந்த ஹீரோ பட்டத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.இன்று முதல் நீங்கள் ஹீரோ நாஞ்சில் மனோ என்று அழைக்கப்டுவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க செலவில் இங்கு வந்து அந்த பட்டத்தை வாங்கி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  ( உங்களின் நற் செயலுக்கு எனது வாழ்த்துக்கள்)///

  அதுவும் என் செலவுல வரணுமா...அவ்வ்வ்வ்வ்வ்...  உங்க பிளாக்குல சுவாரஸ்யமான கதைகள் இருக்கே வாழ்த்துக்கள்....!!!!

  ReplyDelete
 41. நாய்க்குட்டி மனசு said...
  நீனா மனோ நாற்காலியில் அமர்ந்து அந்த வேலையை செய்தது ஏனோ ? அதை விசாரிச்சீங்களா?
  சிபி யின் வேண்டுகோள் என்ன ?//

  ஐயோ விட்ருங்க அவன் வேறமாதிரி மேட்டரை உருட்டிருவான் மேடம்....

  ReplyDelete
 42. ஹீ ஹீ ... மாத்தி யோசிட்டீன்களோ....

  ReplyDelete
 43. ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பதிவை வாசிக்க விரும்புவர்கள், மேலே செலக்ட் லாங்குவேஜ் என இருக்கும் பாரை கிளிக் செய்யவும்.///நல்ல விஷயமாக இருக்கிறதே!வாழ்த்துக்கள்,பகிர்வுக்கும் தான்!

  ReplyDelete
 44. யோவ் கமெண்ட்டுக்கு மேல கருப்பா குண்டா என்னமோ வருதே?

  ReplyDelete
 45. இது மீள்பதிவுதானே? (நாங்கள்லாம் உங்க பழைய பழைய வாசகர்களாக்கும்.........)

  ReplyDelete
 46. Tomato [wiki is] sauce ...
  This is a horrible place to work when I was Farman, in order to stay in this recording will be a warning to men.

  Ettiyoppiyan with me three, two of the Philippines, a Morocco veyittars [women] worked. They all came to the job duty is to clean the table, kaccap [tomato sos] bottle, salt, pepper ippitipatta other item must be clean. Before I came on duty, they will come.

  ReplyDelete
 47. அட... இப்படி வேற நடக்குதா...

  ReplyDelete
 48. எச்சரிக்கை செய்ததுக்கு நன்றிங்க .அந்தப்பெண் மனரீதியாக பாதிக்கபட்டிருப்பார் என்று நினைக்கிறேன் .

  ReplyDelete
 49. மனோ,

  உலகமே ஓட்டல்லதானே சாப்பிட்டு ஜீவிக்குது. !

  அங்க வேலை செய்யிறவங்களே இப்பிடியெல்லாம் குதர்க்கம் பண்ணினா நாங்க எல்லாம் எங்க தான் போறது?

  பாக்கெட் சாஸ் - மைண்ட்ல வெச்சிக்கிறேன். உங்க மீள்பதிவுக்கே பெரிய நன்றி..!

  ReplyDelete
 50. மீள் பதிவென்றாலும் மிக அவசிய பதிவு.

  ReplyDelete
 51. உவ்வே. இப்படியெல்லாமா இருப்பாங்க!

  ReplyDelete
 52. அட கொடுமையே ,அவளுடைய அஜாக்கிரதியால அவள் பெற்றதை அவள் அனுபவிக்காமல் அடுத்தவர்களுக்கு .....

  என்ன கொடுமை நண்பா

  அவளை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தாலும் அங்கேயும் அவள் அதனைதான் செய்வாள்

  ReplyDelete
 53. தமிழ் மணம் 13

  (megalakshmi)

  ReplyDelete
 54. தம்பி... நீ செக் பண்ணிட்டியா? ஹி ஹி

  ReplyDelete
 55. வணக்கம் அண்ணாச்சி,

  நீனாவினை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது,

  நீங்கள் சொல்லிய அறிவுரை நல்லதோர் விழிப்புணர்வினைத் தருகின்றது.

  ReplyDelete
 56. ஐயோ மனோ என்ன இப்படி பயமுறுத்துறீங்க? :( இது பஹரைன்ல மட்டும் தானா? குவைத்லயுமா? (அழும் ஐக்கான் ) ஐயையோ என் பிள்ளைகள் ஹோட்டல்ல சிக்கனுக்கு தொட்டுக்க கெச்சப் தானே முதல்ல எடுக்கும் :(

  எனக்கு ஹோட்டல்ல சாப்பிட பிடிக்காது எப்பவுமே.. வெறும் ரசம் மோர் சாதம் என்றாலும் பரவாயில்லை வீட்டு சாப்பாடு தான்...

  ஆனா பிள்ளைகள் சிக்கன் சிக்கன்னு கேட்பதால் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லும் :(

  இனி இதை சொல்லி தான் பிள்ளைகளை மிரட்டி வைக்கணும்.. என்ன இது கொஞ்ச கூட மனிதத்தன்மையே இல்லாம...நார்மலா பிலிப்பைன்ஸ் சாந்தமா அன்பா அமைதியா நல்லமனசோடு இருந்து தான் பார்த்திருக்கேன்...

  என்னோடு வேலை செய்யும் பிலிப்பைன் ஸ்டாஃப் வெச்சு தான் நான் சொல்வது....

  ரொம்ப ரொம்ப நன்றிகள்பா எங்களுக்கு இப்படி சொல்லி அலர்ட்டா இருக்க சொன்னதுக்கு....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!